கர்மா

இந்து மதத்தில் கர்மா என்று அழைக்கப்படும் சொல்லுக்கு தமிழ் சமய நூல்களில் கருமம் என்றும், பைபிளில் கிரியை என்றும், இஸ்லாத்தில் அமல் என்றும் சொல்லப்படுகிறது.

அது அல்லாமல் செயல், வினை, தொழில், வேலை, காரியம் போன்ற வார்த்தைகளாலும் குறிப்பிடப்படுகிறது. ஆங்கிலத்தில் Deeds, Actions, doings போன்ற வார்த்தைகளால் குறிப்பிடப் படுகிறது.

கருமம் இருவகைப்படும் அவை வெவ்வேறு மொழியில் வெவ்வேறு பண்பாடுகளில் வெவ்வேறு சொற்களால் அடையாள படுத்தப்பட்டுளள்து. அவையாவன,

அறம் மறம்
நல்லறம் புல்லறம் 
நன்னெறி தீயநெறி 
நற்செயல் தீச்செயல்
புண்ணியம் பாவம்
நியாயம் அநியாயம்
நீதி அநீதி
கிரமம் அக்கிரமம்
நற்கிரியை துர்க்கிரியை 
ஹலால் ஹராம்
நல்லமல் கெட்டமல் 
அனுமதிக்கப்பட்ட செயல் தடுக்கப்பட்ட செயல்

இவைகள் பெரும்பாலும் அனைத்து பண்பாடுகளிலும் ஒரே அமைப்பில் காணப்படுகிறது. அவைகளின் பட்டியல் ஆதாரங்களுடன் கீழே கொடுக்கப் பட்டுள்ளது.

கொலை, கொள்ளை, கற்பழிப்பு, திருட்டு, பொறாமை, புறம்பேசுதல், மது போன்ற நாம் பிழை என்று அறியும் சில செயல்கள் இருந்தாலும், அவற்றின் வரையறை என்ன? விதிவலக்கு என்ன? விளைவுகள் என்ன? போன்ற செய்திகளை நாம் அறியாமல் இருக்கிறோம். அவைகளை சுருக்கமாக தொகுத்து கூறுவதற்குதான் இந்த பகுதி.

    • றம்

    • பொருள் 

    • இன்பம் 


எந்த சமையத்தை சார்ந்தவராகிலும், எது தனது வேதமென ஆய்ந்து அறிந்து அதன் போதனையின் படி எது சரியோ அதைச் செய்யவும், எது பாவமோ அதை விட்டு விடுவதும் தனக்கும் உலகுக்கும் நன்மை பயக்கும். 

4 கருத்துகள்:

  1. மூன்றாம் தந்திரம் - 2. இயமம் பாடல் எண் : 1

    கொல்லான்பொய் கூறான் களவிலான் எள்குணன்
    நல்லான் அடக்க முடையான் நடுச்செய்ய
    வல்லான் பகுத்துண்பான் மாசிலான் கட்காமம்
    இல்லான் நியமத் திடையில்நின் றானே.

    பொழிப்புரை : கொல்லாமை, பொய்யாமை, விருப்பு வெறுப்புக்கள் இன்மை, கரவாமை, மாசின்மை, கள்ளுண்ணாமை, காமம் இன்மை, என்னும் பத்தனையும் முற்ற உடையவனே இயம யோகம் கைவரப் பெற்றவனாவான்.

    http://thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=10&Song_idField=10302

    பதிலளிநீக்கு
  2. அரசியல் தொடர்பாக எழுத வேண்டும்

    பதிலளிநீக்கு
  3. 4 பாவம் செய்துகொண்டே இருக்கிற ஒவ்வொருவனும் சட்டத்தை மீறி நடக்கிறான். சட்டத்தை மீறுவதுதான் பாவம். (1 யோவான் 3:4)

    பதிலளிநீக்கு
  4. 6:151. “வாருங்கள்! உங்கள் இறைவன் உங்கள் மீது விலக்கியிருப்பவற்றையும் (ஏவியிருப்பவற்றையும்) நான் ஓதிக் காண்பிக்கிறேன்; எப்பொருளையும் அவனுக்கு இணையாக வைக்காதீர்கள்; பெற்றோர்களுக்கு நன்மை செய்யுங்கள்; வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் - ஏனெனில் உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம்; வெளிப்படையான இரகசியமான மானக்கேடான காரியங்களை நீங்கள் நெருங்காதீர்கள்; அல்லாஹ் தடுத்துள்ள எந்த ஓர் ஆத்மாவையும் நியாயமானதற்கு அல்லாமல் - கொலை செய்யாதீர்கள் - இவற்றை நீங்கள் உணர்ந்து கொள்வதற்காக (இறைவன்) உங்களுக்கு (இவ்வாறு) போதிக்கின்றான்.

    பதிலளிநீக்கு