தஹஜ்ஜுத் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தஹஜ்ஜுத் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

இரவுத் தவம்

தமிழர் சமயம் 

சந்திரன் சூரியன் தான்வரின் பூசனை
முந்திய பானுவில் இந்துவந் தேய்முறை;
அந்த இரண்டும் உபய நிலத்தினில்,
சிந்தை தெளிந்தார்; சிவமாயி னாரே. (ஏழாம் தந்திரம் - 24. மனவாதித்தன் 2) 
 
பதவுரை: பூசனை - வணங்கு; பானு - சூரியன், ஒளி; இந்து - நிலவு; தேய்முறை - காலைக் கதிரவனால் நிலவொளி தேயும் முறை; உபயம் - இரண்டு, தானம், உரிமையான; சிவம்: செம்மை, முழுமை.

பொழிப்புரை: சந்திரன் சூரியன் சேர்ந்து வானில் வரும் காலத்தில், சூரியன் உதிக்கும் முன் உள்ள ஒளியில் அதாவது விடியற்காலையில் (அ)  சூரியன் உதிக்கும் முன், நிலவு வந்து தேயும் (அ) மறையும் நேரத்தில் அதாவது விடியற்காலைக்கு முன் உள்ள இரண்டு பொழுதும் உரிமையான நிலத்தில் பூசனை அதாவது இறைவனை வணங்குவோருக்கு சிந்தை தெளியும், முழுமை பெறுவார்.

இஸ்லாம் 

நிச்சயமாக இரவில் எழுந்திருந்து வணங்குவது (நாவு, மனம், செவி, பார்வை ஆகியவற்றையும்) ஒருமுனைப்படுத்துவதில் சக்தியானது இன்னும் வாக்கையும் நேர்படச் செய்கிறது. (73:6)

இரவில் பிரார்த்தனை அங்கீகரிக்கப்படுகிறது

நான் நபி(ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். இரவில் ஒரு நேரம் இருக்கிறது அந்நேரத்தில் ஒரு முஸ்லிம் இம்மை மறுமையின் நற்பேறுகளை கேட்பானேயானால் நிச்சயமாக அவனுக்கு அல்லாஹ் கேட்டதை வழங்கி விடுவான். இது அனைத்து இரவிகளிலுமாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: முஸ்லிம்

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நமது இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ்வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும் போது என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிப்பேன். யாரேனும் என்னிடம் கேட்டால் அவருக்கு நான் கொடுக்கிறேன். யாரேனும் என்னிடம் பாவமன்னிப்பு கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன் என்று கூறுவான். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரி

மக்களே முகமன் கூறுவதை விசாலமாக்கி கொள்ளுங்கள் மேலும் (ஏழைகளுக்கு) உணவு வழங்குங்கள், மக்கள் தூங்கி கொண்டிருக்கும் நிலையில் இரவில் (எழுந்து) தொழுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ்பின் ஸலாம்(ரலி) நூல்: திர்மிதி

 ( நபியே) இன்னும் இரவில் (ஒருசில) பகுதியில் உமக்கு உபரியான தஹஜ்ஜத் (அதிகாலை) தொழுகையைத் தொழுது வருவீராக (இதன் பாக்கியத்தினால்) உம்முடைய இறைவன் ' மகாமே மஹ்மூதா' என்னும் (புகழ்பெற்ற) தளத்தில் உம்மை எழுப்ப போதுமானவன் (17:79)

அவர்கள் இரவில் மிகவும் சொற்பநேரமேயன்றித் தூங்கமாட்டார்கள். அவர்கள் விடியற்காலங்களில் (பிரார்த்தனைகளின் போது அறைவனிடம் மன்னிப்புக் கோரிக்கொண்டிருப்பார்கள். (அல்குர்ஆன்: 51:15,16,17,18) 

கிறிஸ்தவம்

அக்காலத்தில் இயேசு பிரார்த்தனை செய்யும்பொருட்டு ஒரு மலைக்குச் சென்றார். இரவு முழுவதும் தேவனிடம் பிரார்த்தனை செய்தவாறே அம்மலையில் இருந்தார். - (லூக்கா 6:12)