சாதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சாதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

இந்து மதத்தில் 4 ஜாதிகள் உள்ளதை போல் கிருத்துவ மற்றும் முஸ்லீம் மதத்திலும் 4 பிரிவுகள் உள்ளதாக சொல்கின்றனரே உண்மையா?

கேள்வியில் தெளிவில்லை. ஒவ்வொரு வார்த்தைக்கும் தெளிவான வரையறை அறிந்து இருந்தால் கேள்வியில் தெளிவு இருக்கும்.

* பிரிவு - கொள்கையில் மட்டும் வேறுபடுவது
* ஜாதி - இனத்தால் குலத்தால் வேறுபடுவது
* வர்ண அடுக்கு - இனத்தை குலத்தை கொண்டு உயர்வு தாழ்வு கொள்வது (தரம்)

வர்ண அடுக்கின் ஒவ்வொரு நிலையிலும் சில குறிப்பிட்ட சாதி சேர்க்கப்பட்டுள்ளது எனவே இவை இரண்டும் நடைமுறையில் ஒன்றுக்கொன்று தொடர்புடையது.
வர்ணம் என்றால், ஒவ்வொரு தனிநபரும் தனது செயலை கொண்டு தரம் பிரிக்கப் படுகிறார்கள் என்று பொருள், பிறப்பால் உயர்வுதாழ்வு என்பது இல்லை என்று RSS நபரான துக்ளக் சோ "எங்கே பிராமணன்" என்ற தொடரில் நிருவியிருப்பார். அதன் மூலம் வேதம் வேறு, நடைமுறை வேறு என்பதையும் அவர் அந்த தொடரின் மூலம் நிருவியிருப்பர்.

சரி விடயத்துக்கு வருவோம்,

இந்துமதத்தில் நான்கு அடுக்குகள் என்று சாத்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது ஆனால் நடைமுறையில் அது ஐந்தாக உள்ளது. அடுக்கு என்றால, ஒருவர் மற்றொருவருக்கு கீழ் என்று பொருள். அனைவரும் சமம் என்கிற தத்துவத்தை இந்த அடுக்கு முறை ஏற்பதில்லை.

இஸ்லாத்தில் இந்த சாதி, வர்ண அடுக்கு முறை இல்லை. ஏனென்றால் பிறப்பால் ஏற்றத்தாழ்வு முறை இல்லை என்பது இஸ்லாத்தின் அடிப்படை போதனைகளில் ஒன்று. இஸ்லாத்தை முறையாக பயின்ற, முகமது நபியின் மீதும் குரானின் மீதும் நம்பிக்கை கொண்ட ஒருவர் பிறப்பால் உயர்வு தாழ்வு இருப்பதை ஏற்பதில்லை.
இந்த பிரிவுகள் அனைத்தும் கொள்கை முரண்பட்டால் ஏற்ப்படவைகள். இதில் யாரும் யாரையும் விட உயர்ந்தவராகவோ தாழ்ந்தவராகவோ கருதுவதில்லை. இங்கே பிரிவுகள் மொத்தம் 4-ம் அல்ல, இந்த பிரிவுகள் ஜாதியும் அல்ல.

இயேசு கிறிஸ்து மீனவர் உட்பட பல தர மக்களை தனது சீடராக ஏற்றுக் கொண்டதன் மூலம் கிறிஸ்தவத்தில் இனத்தின், நிறத்தின், பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வு இல்லை என்பது நிரூபணமாகிறது. ஆனால் இன்று நடைமுறையில் கிறிஸ்தவர்கள் மத்தியில் இந்த ஏற்றத்தாழ்வு உள்ளது யாவரும் அறிந்ததே.. ஆனால் அதுவும் 4 சாதி அல்ல. ஏனென்றால் போதகராக யார்வெண்டுமென்றல் ஆகலாம், வியாபாரியாக யார் வேண்டுமென்றாலும் ஆகலாம். கிறிஸ்தவத்தின் சாதி உண்டு ஆனால் இந்து மதத்தை போல நிறுவனமயப்படுத்துவதில் சிக்கல் உண்டு. இந்து மதத்தை போல மிக கடுமையாக ஏற்றத்தாழ்வு ஒரு சில இடங்களைத் தவிர மற்ற இடங்களில் பின்பற்றப் படுவதில்லை.

ஜாதிகள் என்ற கற்களால் எழுப்பட்டுள்ளது ஹிந்து மதம், கற்களை அகற்றி விட்டால் எழும்பிய கட்டடம் சிதைந்து விடுமா அல்லது சிறப்படையுமா?

மனிதர்கள் மத்தியில் உள்ள ஏற்ற இறக்கத்தை மட்டுமே கொண்டு இந்து மதம் கட்டப்பட்டுள்ளது என்பதை ஏற்க முடியாது. கண்ணுக்கு எதிரே மக்கள் உடனுக்குடன் விளைவை பார்ப்பதால் சாதி பூதாகரமாக தெரியலாம்.

சாதி எப்படி கொடுமையானதோ அதைவிட பல தவறான விடயங்களை அடித்தளமாக கொண்டு இந்துமதம் கட்டப்பட்டுள்ளது.

  • பல்வேறு நிலத்தில் இருந்த பல்வேறு சமயங்களை, மறை நூல்களை, தத்துவங்களை உள்வாங்கி செரித்து அவைகளின் வரலாற்றை, மொழியை அழித்து அம்மக்களை வரலாறற்ற அனாதைகளாக மாற்றியது இந்து மதம்.
  • ஒவ்வொரு சமயத்துக்கும் மொழிக்கும் வேதம் இருக்கும் பொழுது, யாரும் அறியா சம்ஸ்கிருத வேதத்தை எல்லோருக்கும் பொதுவாக்கி, கற்று ஏற்று பின்பற்ற வேண்டிய நூலை வாசிக்க கூட இயலாமல் வைத்தது இந்து மதம்.
  • தமிழர் சமயமாக இருந்தாலும், இந்து மதமாக இருந்தாலும், ஆப்ரஹாமிய மதமாக இருந்தாலும், பல்வேறு தீர்க்க தர்சிகளால் பல்வேறு காலங்களில் தொடராக வேதங்கள் எழுதப் பட்டது வரலாறு. ஆனால் பல்வேறு புராண நூல்களை எழுதியவர் வேதவியாசர் என்கிற தனி நபர் என்கிற முரண் மட்டுமல்ல வேதங்கள் கூறும் அறநெறிக்கு எதிராக ஒழுக்க சீர்கேட்டை போதிக்கும் இந்த புராணங்களை வேத நூல்களை விட அதி முக்கியமாக ஆக்கியது இந்து மதம்.
  • இறைவன், வேதம், சொர்கம் நரகம், இம்மை மறுமை, நன்மை தீமை, என எல்லாவற்றுக்கும் மாற்று விளக்கம் கூறியதோடு, ஆன்மிகம் என்பதையே கேலிக்கு உரியதாக்கியது இந்து மதம்.
  • இவை அனைத்தின் மூலமும் இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையே பெரும் திரையை ஏற்படுத்தியது இந்து மதம்.

எனவே சாதியை ஒழித்தால் மட்டும் இந்துமதம் சிறப்படையாது. 

இவை அனைத்தையும் ஒழித்தால் இந்து மதமே இருக்காது. 

https://ta.quora.com/ 

சாதி

தமிழர் சமயம் 


சிவவாக்கியர் பாடல்கள்


பறைச்சியாவது ஏதடா பணத்தியாவது ஏதடா
இறைச்சிதோல் எலும்பினும் இலக்கமிட்டு இருக்குதோ
பறைச்சிபோகம் வேறதோ பணத்திபோகம் வேறதோ
பறைச்சியும் பணத்தியும் பகுந்து பாரும் உம்முளே (38)

சித்தம் ஏது சிந்தை ஏது சீவன் ஏது சித்தரே
சத்திஏது சம்புஏது சாதிபேதம் அற்றெது
முத்தி ஏது மூலம் ஏது மூலமந்திரங்கள் ஏது
வித்தில்லாத வித்திலே இன்னதென்று இயம்புமே (43)

சித்தமற்று சிந்தையற்று சீவன்றறு நின்றிடம்
சத்தியற்று சம்புவற்று சாதிபேத மற்றுநன்
முத்தியற்று மூலமற்று மூலமந் திரங்களும்
வித்தை இத்தை ஈன்றவித்தில் விளைந்ததே சிவாயமே (44)

கிரியை விலக்கிச் சாதி ஒன்றெனல்
சாதியாவது ஏதடா சலம் திரண்ட நீரலோ
பூதவாசல் ஒன்றலோ பூதம் ஐந்தும் ஒன்றலோ
காதில் வாளி காரை கம்பி பாடகம் பொன் ஒன்றலோ
சாதிபேதம் ஓதுகின்ற தன்மை என்ன தன்மையே (45)

ஒவ்வையார் பாடல்கள்


சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில்
இட்டார் பெரியோர் இடாதார்இழி குலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி. - (நல்வழி 2)

பதவுரை:
சாதி - சாதி என்பது
இரண்டொழிய (இரண்டு + ஒழிய): இரண்டைத் தவிர
வேறில்லை - வேறு ஏதும் இல்லை
சாற்றுங்கால் (சாற்றும் + கால்): சொல்லும் பொழுது (சாற்றுதல் - சொல்லுதல்)
நீதி வழுவா - நீதி தவறாத (வழுவுதல் - விலகுதல்)
நெறிமுறையின் - நல்வழியில்
மேதினியில் - பூமியில், உலகில் 
இட்டார் - இடுபவர்கள் (வறியவர்களுக்கு உதவி இடுபவர்கள்)
பெரியோர் - உயர்ந்தவர்கள், உயர் சாதியினர்
இடாதார் - இடாதவர்கள் (வறியவர்களுக்கு கொடுக்காதவர்கள்)
இழி குலத்தோர் - இழிந்த குலத்தவர்கள் (சாதியினர்)
பட்டாங்கில் - அற நூல்களில் (பட்டாங்கு - அற நூல்கள்)
உள்ளபடி - இருப்பதின் படி

பொருளுரை:
அற நூல்களில் உள்ளதன்படியும் நீதி தவறாத நெறிமுறையின்படியும் சொல்வதென்றால், இந்த உலகில் இரண்டு சாதியைத் தவிர வேறு இல்லை; அவை, இல்லாதவர்களுக்கு கொடுக்கும் உயர்ந்த சாதியினர், பிறருக்குக் கொடுக்காத தாழ்ந்த  சாதியினர்.

கருத்து: உலகில் இரண்டு சாதிகள் மட்டுமே உண்டு வேறு சாதிகள் இல்லை - அவர்கள் ஒருவர்  கொடுப்பவர்கள் (உயர்குலத்தினர்); மற்றொருவர் கொடுக்காதவர்கள் (இழிகுலத்தினர்). 

திருஞானசம்பந்தர் பாடல்கள்


சாத்தி ரம்பல பேசும் சழக்கர்காள்
கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர்
பாத்திரம் சிவ மென்று பணிதிரேல்
மாத்தி ரைக்குள் அருளுமாற் பேரரே. (தேவாரம் 5.60.3)
  
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமனில்லை நாணாமே
சென்றே புகும்கதி யில்லைநும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர்நினைந்து உய்மினே (திருமந்திரம் 2104)

பதவுரை: ஒன்றே குலமும்: ஒன்றே குலம். உயந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி, உயர்ந்த மதம், தாழ்ந்த மதம் என்று ஒன்றும் கிடையாது - எல்லோரும் ஒரே குலம்.

ஒருவனே தேவனும்: அனைத்து மக்களுக்கும் கடவுள் ஒருவன் தான். கடவுள் இரண்டோ, மூன்றோ, முப்பாத்தது முக்கோடியோ கிடையாது

நன்றே நினைமின்: நன்றே நினைமின். நல்லதே நினைக்க வேண்டும் - நமக்கு மட்டும் அல்ல மற்றவர்களுக்கும்.

நமன் இல்லை: அப்படி எல்லோருக்கும், எப்போதும் நல்லதே நினைத்து வாழ்ந்தால், இறப்பைப் பற்றிய பயம் இல்லாதிருக்கும்..

நாணாமே: வெட்கப் படாமல்

சென்றே புகும்கதி இல்லை: நல்லதை நினைப்பதை தவிர வேறே வேறு கதி இல்லை

நும் சித்தத்து: உங்களுடைய சித்தத்தில்

நின்றே நிலைபெற நீர் நினைந்து உய்மினே: எப்போதும் நல்லதையே நினைத்து நீங்கள் உய்யும் வழியை அடையுங்கள் 

பொழிப்புரை: ஒன்றே குலம். உயந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி, உயர்ந்த மதம், தாழ்ந்த மதம் என்று ஒன்றும் கிடையாது....எல்லோரும் ஒரே குலம். அனைத்து மக்களுக்கும் கடவுள் ஒருவன் தான். இத்தனை கடவுள்கள் கிடையாது. நல்லதே நினைக்க வேண்டும் - நமக்கு மட்டும் அல்ல மற்றவர்களுக்கும். அப்படி எல்லோருக்கும், எப்போதும் நல்லதே நினைத்து வாழ்ந்தால், இறப்பைப் பற்றிய பயம் இல்லாதிருக்கும்.. வெட்கப் படாமல் நல்லதை நினைப்பதை தவிர வேறே வேறு கதி இல்லை. உங்களுடைய சித்தத்தில் எப்போதும் நல்லதையே நினைத்து நீங்கள் உய்யும் வழியை அடையுங்கள். 

நாலடியார் பாடல்கள்


நல்ல குலமென்றும் தீய குலமென்றும்
சொல்வள வல்லாற் பொருளில்லை - தொல்சிறப்பின்
ஒண்பொருள் ஒன்றோ தவம்கல்வி ஆள்வினை
என்றிவற்றான் ஆகும் குலம். (நாலடி.195)

பொருள்: நல்ல குலம்' என்றும் 'தீய குலம்' என்றும் கூறுவதெல்லாம் வெறும் சொல்லளவே ஆகும். அப்படிக் கூறுவதில் ஒரு பொருளும் இல்லை. பழமையான சிறப்புடைய மிக்க பொருளும், தவமும், கல்வியும், முயற்சியும் என்னும் இந்த நான்கினால் நல்ல குலம் அமைவதாகும்.

கபிலதேவ நயனார் பாடல்கள்


மாரிதான் சிலரை வரைந்து பெய்யுமோ?
காற்றும் சிலரை நீக்கி வீசுமோ
மாநிலம் சுமக்க மாட்டேன் என்னுமோ
கதிரோன் சிலரைக் காயேன் என்னுமோ
வாழ்நான்கு சாதிக்கு உணவு நாட்டிலும்
கீழ்நான்கு சாதிக்கு உணவு காட்டிலுமோ
திருவும் வறுமையும் செய்தவப் பேறும்
சாவதும் வேறுஇலை தரணியோர்க்கே
குலமும் ஒன்றே குடியும் ஒன்றே
இறப்பும் ஒன்றே பிறப்பும் ஒன்றே 
வழிபடுதெய்வமு மொன்றேயாதலால்
முன்னோருரைத்த மொழிதவறாமல்
எந்நாளாயினும் இரப்பவர்க் கிட்டுப்
புலையுங் கொலையுங் களவுந்தவிர்ந்து
நிலைபெற அறத்தில் நிற்பதை யறிந்து
ஆணும்பெண்ணும் அல்லதை யுணர்ந்து
பேணியுரைப்பது பிழையெனப் படாது
சிறப்புஞ்சீலமும் அல்லது
பிறப்பு நலந்தருமோ பேதையீரே. (கபிலர் அகவல் 124 - 133)

வள்ளுவன் வாக்கு


பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான். (குறள். 972

பொருள்எல்லா மக்களுயிர்க்கும் பிறப்பியல்பு சமமானதே; தொழில் வேறுபாட்டால் பெருமை சிறுமை என்னும் சிறப்பியல்புகள் தாம் ஒரு போதும் ஒத்திருப்பதில்லை 

குறிப்பு - இக்குறளை மேற்கோள் காட்டி வருணாசிரமத்தை உண்டென்று வாதிடுவோர் உண்டு.. ஆனால் வருணம்/சாதி என்பது பிறப்பின் அடிப்படையில் வருவது. இங்கே 'தொழில்' என்பது ஒருவர் செய்யும் செயல்/வேலை அறம் சார்ந்ததா இல்லையா என்பதை பொறுத்து வேற்றுமை படும் என்கிறது.

அதே போல, 

பாணன் பறையன் துடியன் கடம்பனென்று
இந்நான் கல்லது குடியுமில்லை – (புறநானூறு 335) 
 
ஒரு சிலர் இதனையும் மேற்கோள் காட்டுவதுண்டு. ஆனால் இது மக்களை இன்னாரென்று குறிப்பிட்டு காட்டவே பயன்படுத்தப்பட்ட ஒரு குறியீடு. இன்று சாதி என்று சொல்லப்படும் அந்த கட்டமைப்புக்கும் ஏற்றதாழ்வுக்கும் இதற்கும் அணு அளவு கூட தொடர்பில்லை.

எனவே சாதியை தூக்கி பிடிப்பது தவறு மட்டுமல்ல அது தமிழர் பண்பாட்டிற்கு மட்டுமல்ல மனித குல பண்பாட்டிற்கே செய்யும் துரோகம்.. ஏனென்றால் அறிவுள்ள பண்பட்ட சமூகம் மொழி கொண்டோ சாதி கொண்டோ நிறம் கொண்டோ பிரிவினைகளை ஏற்காது.. பிரிவுகள் கொள்கையில் ஏற்படுமே தவிர வேறெதிலும் இல்லை.. பண்பட்ட சமூகம் அதிலும் இணக்கம் ஏற்பட வழியை கண்டே தீரும்.. 

 

கீதை 

“சாதுர் வர்ணம் மயா சிருஷ்டம் குண கர்ம விபாகச” (கீதை 18:41-44)

கருத்து: வர்ண அமைப்பினைப் பேசும் எந்த இடத்திலும் குலத்தையோ குல தர்மத்தையோ கீதை குறிப்பிடவே இல்லை. மாறாக குணமும் செயலும் ஒருவரது வர்ணத்தை (தரத்தை) முடிவு செய்கிறது.

வர்ணம் என்பது “வ்ரு” என்ற சம்ஸ்கிருத வேர்ச்சொல்லில் இருந்து வந்தது. “வ்ரு” என்றால் “தேர்ந்தெடு” என்று பொருள்.  
 
எனவே, வர்ணம் என்பதற்கு தன்மை, வகை, தரம் அல்லது பிரிவு எனப் பொருள்படுகிறது.

ப்ராமணன் எனும் தன்மை இறைவனை உணரும் தண்மையை குறிக்கிறது. பொருள்சார்ந்த உலகத்திலேயே கரைந்து விடாமல், விழிப்புணர்வுடன் இறைவனை உணர்பவன் ப்ராம்மணன். இருப்பதிலேயே இதுதான் உயர்ந்த நிலை. தர்மத்தை பரிபாலிப்ப‌து, எது தர்மம் என்பதை வேதாந்த‌ ஆராய்சியால் எடுத்துரைப்பது இவர்கள் கடமை. விழிப்புணர்வை குறிக்கும் சத்வ குணத்தை இது குறிக்கிறது.

சத்ரீயன் என்று சொல்லப்படுகிற தன்மை. ஆளுமையை மற்றும் நிர்வாகத்தை குறிக்கிறது. தர்மத்தை காப்பாற்றுவதும், அதர்மத்தை எதிர்ப்பதும் இவர்களின் தலையாயக் கடமை. சத்வ குணம் கலந்த ரஜோ குணம் அதிகம் உள்ளவர்களை இது குறிக்கிறது.

வைசிய தண்மை நாட்டுக்கும், சமூகத்துக்கும் பொருள் ஈட்டுவதை குறிக்கிறது. இது தமோ குணம் கலந்த ரஜோ குனம் அதிகம் உள்ளவர்களை இது குறிக்கிறது.

சூத்திரன் எனும் தண்மை அடிப்படை வேலைகளை குறிக்கிறது. சூத்திரதாரி என்றால் ஒன்றிற்கு அடிப்படையாய், ஆதாரமாய் இருப்பவன் என்பது பொருள். ஆக சூத்திரன் ஆதாரமான பல வேலைகளை செய்கிறான். மற்ற மூன்று வர்ணத்தாருக்கும் இவன் ஆதாரமாய் இருந்து உதவுகிறான். ரஜோ குணம் கலந்த தமோ குணத்தை அதிகம் உள்ளவர்களை இது குறிக்கிறது.

குறிப்பு: எனவே இது பிறப்பால் ஏற்படுவது அல்ல, ஒவ்வொரு தனி மனிதனின் குணத்தாலும் செயலாலும் ஏற்படுகிறது. இதற்கு மாறாக கீதையை திரித்தவர்கள் நயவஞ்சகர்கள். கீதையின் பொருளை திரித்தும் அதை மகாபாரதம் போன்ற கதையில் திணித்தும் அதுதான் இந்த இந்திய பாரதம் என்கிற அளவுக்கு மார்க்கெட்டிங் செய்யப்பட்ட இந்த கருத்தானது இடிந்து விழும் பொய்யிலே கட்டிய கோட்டை ஆகும். இப் போலி கோட்டையை நம்புவதை விட சாதி ஒழிப்பை நடைமுறை படுத்தும் சமயத்தை தழுவுவதுதான் அறிவுடைமை. சாதி கூடாது என்று அனைத்து மொழியிலும் இறைவன் சொல்லியிருக்க, அதை பின்பற்றுவோரை விரும்புவானா? அல்லது புறந்தள்ளியவரை விரும்புவானா? அது இருக்கட்டும், அவர்களில் மெத்த படித்தவராக அறியப்பட்ட திரு.சோ ராமசாமி சாதியை நடைமுறைப் படுத்துகிறவர்களைப் பற்றி என்ன சொல்கிறார் தெரியுமா?   

சோவின் எங்கே பிராமணன்?


ஜாதிப் பெயரால் பிராமணன் என்று சொல்வதில் உயர்வென்ன தாழ்வென்ன? பிறப்பால் ஒரு ஜாதியில் பிறந்துவிட்டதாலேயே தம்மை உயர்த்திக்கொள்வது பேதைமை. போன்றவை இவர் பேசிய எங்கே பிராமணன் தொடரின் சுருக்கம். இந்த தொடரின் ஆதார செய்திகள் பெரும்பாலும் கீதை, இதிகாசம் மற்றும் வேதங்களை அடிப்படையாக கொண்டது. (எங்கே பிராமணனை வாசிக்க, to download)

சோவும் சாதிப்பற்றுள்ளவர், "சாதி வெறியை மட்டும் அடிப்படயாக கொண்ட, தெய்வ நம்பிக்கை அற்ற" சாவர்க்கரால் வளர்த்தெடுக்கப்பட்ட RSS-ஐ ஆதரித்தார் என்றறிந்த பின் அவரை "கற்க கசடற கற்றவை கற்றபின் நிற்க அதற்கு தக" குறளுடன் உரசிப் பார்த்தால், திரு சோ.ராமசாமி நூல்களை கசடற கற்கவுமில்லை கற்றவைகளின்படி கூட நிற்கவுமில்லை என்று உலகுக்கு முடிவுரைக்கிறது. 

 

இஸ்லாம் 

 
 
முகமது நபி அவர்கள் தனது இறுதிப் பேருரையில்: மக்களே! உங்கள் இறைவன் ஒரே ஒருவன் தான். உங்களுடைய தந்தை ஒருவர் தான். ஓர் அரபியருக்கு அரபியல்லாதவரை விடவும், ஓர் அரபியல்லாதவருக்கு அரபியரை விடவும், ஒரு கருப்பருக்கு சிவப்பரை விடவும், ஒரு சிவப்பருக்கு ஒரு கருப்பரை விடவும் எந்தச் சிறப்பும் இல்லை, இறையச்சத்தைத் தவிர! (நூல்: அஹ்மத் 22391)

மக்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் கருப்பு நிற (அபிசீனிய) அடிமை ஒருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் அவர் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கிடையில் நிலைநிறுத்தும் காலமெல்லாம் (அவரது சொல்லைக்) கேட்டு நடங்கள்; (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள்! (ஸுனன் நஸாயி 4192, ஜாமிவுத் திர்மிதி 1706)

‘இன்னும், வானங்கள் மற்றும் பூமியைப் படைத்திருப்பதும், உங்களது மொழிகளும் உங்களது நிறங்களும் வேறுபட்டிருப்பதும் அவனது அத்தாட்சிகளில் உள்ளவையாகும். நிச்சயமாக இதில் அறிவுடையோருக்கு பல அத்தாட்சிகள் இருக்கின்றன.’ (குர்ஆன் 30:22) 

 “மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்ளும் பொருட்டு உங்களை சமூகங்களாகவும், கோத்திரங்களாகவும் அமைத்தோம். உண்மையில், உங்களில் இறைவனிடத்தில் அதிக கண்ணியம் வாய்ந்தவர்கள் அதிக இறையச்சம் கொண்டவர்கள்தாம்“. (குர்ஆன் 49:13)

இஸ்லாத்திலும் பிரிவுகள் இருக்கிறதே என்று கூறுவோர் உண்டு, அவர்கள் கொள்கையின் அடிப்படியில் பிரிந்து நிற்கிறார்கள், அவர்கள் மத்தியில் தீண்டாமையோ ஏற்றத்தாழ்வோ கிடையாது. கம்யூனசித்தில் உள்ள வகைகளை சாதி என்று குறிப்பிட முடியுமா? முடியாது அல்லவா? ஏனென்றால் அவர்கள் கொள்கை அடிப்படையில் பிரிந்து நிற்கிறார்கள் மேலும் தீண்டாமையும் அந்த வகையின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வும் கிடையாது. அது போலத்தான் இஸ்லாத்திலும் சன்னி, ஷியா, காதியானி போன்ற முக்கிய பிரிவுகளும் அதன் உட்பிரிவுகளும் உண்டு ஆனால் தீண்டாமையோ ஏற்றத்தாழ்வோ கிடையாது. பிரிவு அல்லது வகை என்பது குணங்களை அடிப்படையாக கொண்டது, சாதி என்பது பிறப்பை அடிப்படையாக கொண்டது. 

 

 பேதுரு மக்களை நோக்கி. "....எந்த மனிதனையும் ‘தூய்மையற்றவன்’ எனவும், ‘சுத்தமற்றவன்’ எனவும் அழைக்கக் கூடாது....." (அப்போஸ்தலர் 10:28)

“மெய்யாகவே தேவனுக்கு எல்லா மனிதரும் சமமானவர்கள் என்பதை நான் இப்போது புரிந்துகொள்கிறேன். சரியானவற்றைச் செய்து அவருக்கு வழிபடுகிற எந்த மனிதனையும் தேவன் ஏற்றுக்கொள்கிறார்.  (அப்போஸ்தலர் 10:34, 35)


 whatsapp status - வைக்க இதை பயன்படுத்திக் கொள்ளுங்கள்  

தமிழர் சமுதாயம் சாதி இல்லா சமுதாயம்

சாதிக்கு எதிராக தமிழர் மறைகள் 


சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதிவழுவா நெறிமுறையின் - மேதினியில்
இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கி லுள்ள படி.  (நல்வழி)

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமனில்லை நாணாமே
சென்றே புகும்கதி யில்லைநும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர்நினைந்து உய்மினே – (திருமந்திரம் 2104)

"பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.(குறள். 972) 

குறிப்பு - இக்குறளை மேற்கோள் காட்டி வருணாசிரமத்தை உண்டென்று வாதிடுவோர் உண்டு.. ஆனால் வருணம்/சாதி என்பது பிறப்பின் அடிப்படையில் வருவது. இங்கே 'தொழில்' என்பது ஒருவர் செய்யும் செயல்/வேலை அறம் சார்ந்ததா இல்லையா என்பதை பொறுத்து வேற்றுமை படும் என்கிறது. சாதி இல்லை எண்டு கூறும் குறளை சாதிக்கு ஆதரவாக மாற்றுவது அறியாமை அல்லது நயவஞ்சகம்.

பாணன் பறையன் துடியன் கடம்பனென்று
இந்நான் கல்லது குடியுமில்லை” – (புறநானூறு 335)

குறிப்பு: ஒரு சிலர் இத்தனையும் மேற்கோள் காட்டுவதுண்டு. ஆனால் இது மக்களை குறிப்பிட்டு காட்டவே பயன்படுத்தப்பட்ட ஒருக்குறியீடு.. இன்று சாதி என்று சொல்லப்படும் அந்த கட்டமைப்புக்கும் ஏற்றதாழ்வுக்கும் தீண்டாமைக்கு இதற்கும் அணு அளவு கூட தொடர்பில்லை..

நல்ல குலமென்றும் தீய குலமென்றும்
சொல்வள வல்லாற் பொருளில்லை - தொல்சிறப்பின்
ஒண்பொருள் ஒன்றோ தவம்கல்வி ஆள்வினை
என்றிவற்றான் ஆகும் குலம். (நாலடி.195)

பொருள்: நல்ல குலம்' என்றும் 'தீய குலம்' என்றும் கூறுவதெல்லாம் வெறும் சொல்லளவே ஆகும். அப்படிக் கூறுவதில் ஒரு பொருளும் இல்லை. பழமையான சிறப்புடைய மிக்க பொருளும், தவமும், கல்வியும், முயற்சியும் என்னும் இந்த நான்கினால் நல்ல குலம் அமைவதாகும்.

"குலமும் ஒன்றே குடியும் ஒன்றே
பிறப்பும் ஒன்றே இறப்பும் ஒன்றே
வழிபடுதெய்வமு மொன்றேயாதலால்" (கபிலர் அகவல்)

 

தொல்பொருள் ஆய்வு  


தென்இந்தியாவிற்கு தோல்பொருள் ஆய்வு பிரிவு 2001-இல் மட்டுமே நிறுவப்பட்டுள்ளது.. அதிலும் தென்இந்தியாவிற்கு என பொதுவான பிரிவு, தமிழரின் தொன்மையை ஆய்வு செய்ய பிரிவு ஏதும் தனியே இதுவரை அமைக்கப்படவில்லை.
வரலாறு என்பது தொல்பொருள் ஆய்வு முடிவு நெறி நூல்கள் மற்றும் இலக்கிய நூல்களில் உள்ள தகவல்களை கொண்டே ஒரு முழு ஆய்வு முடிவை தரமுடியும். இல்லையெனில் கொடுக்கப்படும் ஆய்வு முடிவு பொருளற்றதாக நிறைவுபெறாததாக மட்டுமே கருத முடியும்.

கிமு 600 காலத்தவை என அறியப்பட்ட கீழடி ஆய்வு முடிவுகள் 
    1. சாதிக்கு ஒரு இடுகாடு இருந்து இருக்கவில்லை எனவே சாதி என்ற ஒன்று  நயவஞ்சகர்கள் ஏற்படுத்திய கொடுஞ்செயல்.
    2. மண்ணறையை குறிக்க கற்களை பயன் படுத்தி உள்ளனர். அதனை பூசவோ உயர்த்தி கட்டவோ கல்லறையாக கட்டவோ சுடுகாடோ அமைக்க வில்லை.
தமிழினம் இந்து இல்லை என்பதற்கு சான்றுகள் இன்னும் பல.. சாதி நம்மை பிரித்தாள செய்யப்பட்ட சதி. அறிவுள்ள தமிழன் சாதிச் சதியில் விழமாட்டான். அனைத்து மொழி வேதங்களிலும் இறைவன் பெருமையை வெறுப்பதாக சொல்கிறான். பெருமையின் மாற்று சொல்லான சாதி-யை நம்புபவன் எப்படி கடவுள் நம்பிக்கை உள்ளவனாவான்.  

எனவே இது போன்ற வரலாற்று உண்மைகளை நமது பண்பாடுகளை அறிய தோல் பொருள் ஆய்வு மிக மிக அவசியமான ஒன்று. அதற்க்கு வழிவிடாத மத்திய அரசோ அல்லது தமிழிசையோ துரோகிகள் என்பதில் மாற்றுக கருத்து இல்லை.  

கடலுக்கு அடியில் புதைந்து கிடக்கும் தமிழரின் தொன்மை!

இங்கே 10000 வருடம் என்பது மிகை படுத்தப்பட்ட எண்ணிக்கை என்பது நம் கருத்து. தொல்லியல் துறையின் மூலம் நிரூபிக்கபட்டால் எற்கலாம். ஆனால் பழமையானது என்பதில் மாற்று கருத்து இல்லை. 


 
பத்தாயிரம் ஆண்டு பழமையான துறைமுக நகரம் கண்டுபிடிப்பு!! 
 
சென்னையைச் சேர்ந்தவர் அரவிந்த். இவர் புதுச்சேரியில்டெம்பிள் அட்வென்சர் என்கிற ஸ்கூபா டைவிங் பள்ளியை நடத்திவருகிறார். ஒருமுறை கடலுக்கு அடியில் சென்ற பொழுது யதேச்சையாக தட்டுபட்டதுதான் அந்த சுவர் போன்ற அமைப்பு. ஆரம்பத்தில் அதை இயற்கையான கடல் நிலவியல் அமைப்பு என்று நினைத்து, அதற்கு அரவிந்த் வால்என்று பெயரிட்டேன்என்றார்.

 

இந்த விவரங்கள் ஒருங்கிணைந்த பெருங்கடல் பண்பாட்டு ஆய்வு நிறுவனத்தை நடத்திவரும் ஒரிசா பாலுவின் கவனத்துக்குச் சென்றது. அவர் சில மாதங்களாக அங்கு கிடைத்த தரவுகளின் அடிப்படையில் அந்தச் சுவரில் இருந்து மண்ணையோ கல்லையோ பெயர்க்காமல் மேற்பார்வை ஆய்வுகளை செய்தார். அதில்தான் இது அழிந்துபோன சங்ககால தமிழ் துறைமுகமான எயிற்பட்டினம் என்பது தெரியவந்துள்ளது. ஆய்வு குறித்து அவர் நம்மிடம் பேசினார். 
 
தமிழர்கள் கடல் வழியாக உலக மக்களை எப்படி இணைத்தார்கள் என்பதையும் தமிழர் மற்றும் தமிழின் கலாச்சார தொன்மைகளையும் இதுபோன்ற ஆய்வுகள் மூலம் உலகுக்கு நிரூபிக்கலாம். 
 
மேற்கண்ட சுவரை ஆய்வு செய்ததில் சுவரின் ஒரு பகுதி அரிக்கமேடு முகத்து வாரம் வரையிலும் அடுத்தப் பகுதி புதுச்சேரியின் எல்லையில் இருக்கும் நரம்பை வரை செல்கிறது. அதை ஒட்டி மரக்கலங்கள் சென்று வரும் வகையிலான ஒரு கால்வாய் இருந்ததற்கான தரவுகளும் கிடைத்துள்ளன. அதன்படி இந்த மதில் சுவர் ஒரு கோட்டையின் சுவராக அல்லது கடல் நீர் தடுப்புச்சுவராக இருக்கலாம். 
 
புவியியல் ஆய்வுகளின்படி இந்த இடம் வங்கக் கடல் விழுங்கிய சங்க கால நகரமான எயிற்பட்டினம். அதற்கான ஆதாரங்கள் சங்க இலக்கியமான எட்டுத் தொகையின் பாடல்களில் இருக்கிறது. இந்த தகவல்களைக் கொண்டு தமிழக தொல்லியல் துறையும், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகமும் இந்திய கடல் சார் தொல்லியல் துறையும் தகுந்த ஆய்வுகளை மேற்கொண்டு, இந்தப் பகுதியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
 
தவிர, இந்த சுவருக்கு 10 ஆயிரம் ஆண்டுகள் தொடங்கி 25 ஆயிரம் ஆண்டுகள் வயது இருக்க வேண்டும். அது உறுதிப்படுத்தப்பட்டால் உலகின் முதல் கட்டடக் கலை தமிழர்களுக்குச் சொந்தமானது என்பதும் நிருபிக்கப்படும்என்றார். 
எயிற்பட்டினத்தைப் பற்றி சங்க இலக்கியத்தின் எட்டுத் தொகையின் சிறுபாணாற்றுப்படை நூலில் பாடல் இருக்கிறது. அப்போது எயிற்பட்டனத்தை ஆண்ட ஒய்மானாட்டு நல்லியக்கோடனை, சங்கப்புலவர் இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் புகழ்ந்து அந்தப் பாடலை எழுதியிருக்கிறார். அந்த பாடலில் மதிலொடு பெயரியப் பட்டினம்என்று இந்த ஊரை குறிப்பிடுகிறது. 
 
மதில் என்னும் சொல்லுக்கு எயில்என்றும் பெயர் உண்டு. அதனால், அவ்வூர் எயிற்பட்டினம் ஆயிற்று. அக்காலத்தில் பிரபலமான துறைமுக நகரமாக விளங்கிய இவ்வூருக்கு சீனர்களும் கிரேக்கர்களும் வந்து வணிகம் செய்திருக்கின்றனர். கிரேக்கர்கள் இந்த ஊரை சோபட்மாஎன்று குறிப்பிட்டுள்ளனர். சோஎன்னும் சொல் மதிலைக் குறிக்கிறது. 
 
நத்தத்தனாரின் சங்க இலக்கியப் பாடலில் நெய்தல் நகரமான எயிற்பட்டினத்தில் ஒட்டகங்கள் தூங்குவதுபோன்ற பெரிய மரக்கலங்கள் எயிற்பட்டினத்தில் இருந்து சீறியாழ்பாணன் வரை இருந்ததாகவும் வரிசையாக நின்றதாகவும், எயிற்பட்டினத்தில் அன்னப்பறவைகள் வடிவத்தில் தாழம்பூக்கள் பூத்ததாகவும் அங்கு சுவையான சுட்ட மீனும் பழம்பேடு (பழச்சாற்று கள்) கிடைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். 
 
ஒரிசா பாலு ஏற்கெனவே குமரிக்கடலில் 130 கி.மீ. வரை 100 மீட்டர் ஆழம் வரை தேடியதில் கன்னியாகுமரியில் இருந்து 54 கி.மீ. தொலைவில் கடலின் 40 மீட்டர் ஆழத்தில் 22 கி.மீ. அகலமும் 44 கி.மீ. நீளமும் கொண்ட அழிந்துபோன ஒரு தீவு நகரம் இருப்பதை கண்டுபிடித்துள்ளார். அந்த நகரத்தை கிரேக்கர்கள் மரிக்கனாஎன்று குறிப்பிட்டுள்ளனர். தவிர, பூம்புகார் கடலில் 21 கி.மீ. வரை 65 இடங்களில் அழிந்துபோன நகர இடிபாடுகளையும் கண்டுபிடித்தவர். தவிர அரிக்கமேடு ஆய்விலும் இவரது பங்கு அதிகம்....

மேலும் தொடர.. 

 

முடிவுரை


எனவே சாதியை தூக்கி பிடிப்பது தவறு மட்டுமல்ல அது தமிழர் பண்பாட்டிற்கு செய்யும் துரோகம். இங்கே தமிழையும் நாம் அழுத்தி சொல்லவில்லை மாறாக மனித குல பண்பாட்டிற்கே செய்யும் துரோகம்.. ஏனென்றால் அறிவுள்ள பண்பட்ட சமூகம் மொழி கொண்டோ சாதி கொண்டோ நிறம் கொண்டோ பிரிவினைகளை ஏற்காது. பிரிவுகள் கொள்கையில் ஏற்படுமே தவிர வேறெதிலும் இல்லை.. பண்பட்ட சமூகம்கொள்கைப் பிரிவிலும் இணக்கம் ஏற்பட வழியை கண்டே தீரும்.