காலத்துக்கு ஏற்ற கேள்வி. ஏற்கனவே உள்பகுதி எதிர் திசையில் சுழல ஆர்மபித்து விட்டதாம்.
மேலுள்ள செய்தி குறிப்பிட்டு இருப்பது போல மையப்பகுதியின் வேகம் அல்லது திசை மாறுவதற்கான காரணம் என்ன?
உங்களைப் பூமி ஆட்டம் காணச் செய்யாதிருக்க அவன் அதன் மேல் உறுதியான மலைகளை நிறுவினான். (திருக்குர்ஆன் 16:15)
தங்கம், நிலக்கரி, வைரம், லித்தியம் போன்றவைகளுக்காக மலைகளை குடைவதும், கிரானைட் போன்றவைகளுக்காக மலைகளை உடைத்ததும், தொடந்து உடைப்பதும், போட்டி போட்டு ரஷ்யாவும் அமெரிக்காவும் பூமியில் துளையிட்ட ப்ரொஜெக்ட்டும் சில காரணங்களாக இருக்கலாம். ஏனென்றால் மலைகளை உள்ளும் புறமும் சேதப்படுத்துவது அவைகள் எதற்காக ஏற்படுத்தப்பட்டதோ அந்த காரணத்தை வலுவிழக்கச் செய்கிறது.
சரி இதன் பாதிப்புகள் என்னவாக இருக்கும்?
- பூமி சுற்றுவது நின்று மறுபக்கம் முழுவதுமாக சுழல துவங்கும் முன் ஒரு பகலோ அல்லது இரவோ நீண்டு இருக்க வாய்ப்பு உண்டு
- சூரியன் மேற்கிலிருந்து உதிக்கலாம்
- இதுவரை இல்லாத அளவு பூகம்பங்கள் ஏற்படலாம்
- பருவநிலை மாறுபடலாம்
இதை யாராவது முன்பே கணித்து உள்ளார்களா?
ஆம். ஆனால் அதை கணிப்பு என்று சொல்ல முடியாது. அது ஒரு டிவைன் மெசேஜ் என்று கூறலாம். அதாவது தொல்காப்பிய நூல்விதி கூறுவது போல.
- பூமி சுற்றுவது நின்று மறுபக்கம் முழுவதுமாக சுழல துவங்கும் முன் ஒரு பகலோ அல்லது இரவோ நீண்டு இருக்க வாய்ப்பு உண்டு
'தஜ்ஜால் இப்பூமியில் எவ்வளவு காலம் தங்கியிருப்பான்'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நாற்பது நாட்கள். ஒரு நாள் ஒரு வருடம் போன்றும், ஒரு நாள் ஒரு மாதம் போன்றும், ஒரு நாள் ஒரு வாரம் போன்றும் ஏனைய நாட்கள் சாதாரண நாட்களைப் போன்றுமிருக்கும் என்று விடையளித்தார்கள்.
“அல்லாஹ்வின் தூதரே! ஒரு வருடத்தை ஒத்த அந்த நாள், நாம் ஒரு நாளுக்கு உரியதை மட்டும் தொழுதால் போதுமா?". அவர் நபி அவர்கள், "இல்லை, ஆனால் கணக்கிட்டு தொழுங்கள்!" என்றார். (அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் ஸம்ஆன் ரலி)
- சூரியன் மேற்கிலிருந்து உதிக்கலாம்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் –“சூரியன் மேற்கிலிருந்து உதிக்காமல் மறுமைநாள் ஏற்படாது. அதைக் கண்டதும் மக்கள் இறைவனை நம்புவார்கள். ஆனால் ஏற்கனவே இறைவனை நம்பாதிருந்தவரது நம்பிகை்கை எப்பயனுமளிக்காது”அறிவிப்பவர் அபூஹுரைரா(ரழி)நூல் (புகாரி 6506)
- இதுவரை இல்லாத அளவு பூகம்பங்கள் ஏற்படலாம்
பூகம்பங்கள் அதிகரிப்பதும் யுக முடிவு நாளின் அடையாளமாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டுள்ளனர். (நூல்: புகாரி 1036, 7121)
- பருவநிலை மாறுபடலாம்
அரேபியாவின் நிலம் புல்வெளிகளாகவும் ஆறுகளாகவும் மாறும் வரை கடைசி நேரம் வராது." [முஸ்லிம் 157 c]
இந்த பதிவுக்காக மீள் வாசிப்பு செய்யும்பொழுது உள்ளுக்குள் பதட்டம் அதிகரிக்கிறது. உலக அழிவுநாள் மிக அருகில் இருப்பதை உணராமல் இருக்க முடியவில்லை. மேலும் சில முன்னறிவிப்புகள் பட்டியல் உங்களுக்காக.
- விபச்சாரமும், மதுப்பழக்கமும் பெருகும்
- தகுதியற்றவர்களிடம் பொறுப்பு ஒப்படைக்கபப்டும்
- பாலை வனம் சோலை வனமாகும்
- காலம் சுருங்குதல்: அதாவது நாள் மிக வேகமாக ஓடுவது.
- கொலைகள் பெருகுதல்
- பள்ளிவாசல்களை வைத்து பெருமையடிப்பது
- நெருக்கமான கடை வீதிகள்
- பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தல்
- ஆடை அணிந்தும் நிர்வாணம்
- உயிரற்ற பொருட்கள் பேசுவது
- பேச்சைத் தொழிலாக்கி பொருள் திரட்டுதல்
- இறைத்தூதர் என வாதிடும் பொய்யர்கள்
- யூதர்களுடன் மாபெரும் யுத்தம்
- செல்வம் பெருகும்
- மகளின் தயவில் தாய்
- குடிசைகள் கோபுரமாகும்