நந்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நந்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

நந்தி என்பவர் யார்? - தேவரா? பசுவா? சிவனா?

நந்தி என்கிற பாத்திரம் சைவ சமயத்தில் மிக முக்கியமான ஒன்றாகும். 

சிவபுராணம், சிவன்கோவில், சிவஆகமம், பிரதோஷம் போன்ற இன்றைய சிவ மதம் சாந்த கூறுகளில் இந்தப் பாத்திரம் மிக முக்கிய பங்கு வகுக்கிறது. 

  • ஆனால் நந்தி என்கிற இந்த பாத்திரம் சரியாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதா? 
  • அல்லது வேதமும் ஆகமமும் சொன்னபடி நாம் புரிந்து வைத்துள்ளோமா? என்பது ஆய்வுக்குரியது.
  • ஆனால் வேதங்களையும் ஆகமங்களையம் நம்மைப் போன்ற சாதாரண மக்களால் ஆய்வு செய்ய முடியுமா? 

முடியும். ஏனென்றால் சைவமதம் சார்ந்த வேதங்கள் அனைத்தும் தமிழில் மட்டும்தான் உள்ளது. 

தேவாரம், திருவாசகம் மற்றும் திருமந்திரம் போன்றவைகள்தாம் அவைகள். இவைகள் பாடல் வடிவில் இருந்தாலும், சம்ஸ்கிருத வேதங்களை போலல்லாமல் கொஞ்சம் முயற்சி செய்து தொடந்து படித்தால் நிச்சயம் விளங்கிக்கொள்ள முடியும். மேலும் அதில் உள்ள பிழைகளை எவ்வாறு களைவது போன்ற அணுகுமுறைகள் மற்றும் இலக்கணங்கள் தமிழில் மிகத் தெளிவாக குறிப்பிடப் பட்டுள்ளது. அதை வேறு ஒரு தலைப்பில் விளக்கமாக காணலாம். 

நந்தி பற்றி விளக்கமாக திருமந்திரம் என்ன சொல்கிறதென்று பார்ப்போம். 

இந்த கேள்விக்கு நேரடியாக பதில் தரும் முன், சில அடிப்படைகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது அந்த காளை மாட்டை நந்தி என்று மக்கள் குறிப்பிடுகிறார்கள். எனவே நந்தி என்றால் யார்? மக்கள் மத்தியில் நந்தி என்ற பெயருக்கு பொருளாக என்னவெல்லாம் சொல்லப்பட்டு உள்ளது? என்பதை ஆய்வு செய்ய சில இணைய தரவுகளை காண்போம்.

ஆன்மீகம் : இதில் நந்தியை ஒரு மனிதர் போல சித்தரித்து வயது வளர்ச்சி பற்றியெல்லாம் பேசப்படுகிறது. ஆனால் அவர் அமரர் அதாவது தேவர் இனத்தை சேர்ந்தவர் என்று வேறு சில தகவல்கள் கூறுகிறது.

ஆன்மீகம்.இன்: நந்தியின் நிறம் வெண்மை என்பதற்கான ஆதாரம் ஏதுமில்லை. அவர் சிவ பெருமானின் வாகனமாக கூறப்படுகிறது அதற்கும் வேதங்களில் ஆதாரமில்லை. "நம்மை வணங்குவோரை" என்று பன்மையில் போகிற போக்கில் சொல்லப்படுகிறது. "ஒருவனே தேவன்" என்று உறுதியாக கூறுவதில் சைவ ஆகமங்கள் பிரதானமாக உள்ளது.

மாலை மலர்: நந்தி அவர்கள் எந்த தடையையும் விளக்க வல்லவர் அல்ல. அவர் திருமூலர் போன்ற முனைவர்களுக்கு ஆசானாக இருக்கும் பணியை செய்பவர். எனவே இவரிடம் நாம் பிராத்தனை செய்யவோ அல்லது அவரை வணங்குவதோ எந்த பலனையும் தராது.

விகடன்: நந்தி என்ற சொல்லுக்கு திருமந்திரம் கூறும் பொருள் வேறு. சிவனை வழிபடும் முறையை சிவனின் அறத்தை ஆகாமத்தை சித்தர்களுக்கு உபதேசிக்கும் வேலையை செய்யும் தேவர் அவர். அவர் தனிமனித வளர்ச்சிக்கு எதையும் செய்ய கூடியவராக திருமந்திரம் கூறவில்லை. நந்திகள் நால்வர் என்று திருமந்திரம் தெளிவாக கூறுகையில் ஐந்தாவது நந்தி எங்கிருந்து வந்தார் என்று தெரியவில்லை.

விக்கி: விக்கியில் சொல்லப்படும் சில செய்திகள் திருமந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. ஆனால் காளையாக சித்தரிக்க படுவதாக கூறப்படும் செய்தி திருமந்திரத்தில் இல்லை.

ஆன்மீக மலர்: முற்றிலும் தவறான விளக்கங்கள்.

இவைகள் மட்டுமல்லாமல் பல வகையில் சுவாரஸ்யமாக பல கதைகள் ஆங்காங்கே சொல்லப்படுகிறது. எதார்த்தம் என்னவென்றால் உண்மை இது போல பலவாக இருக்க முடியாது, மாறாக ஒன்றாகத்தான் இருக்க முடியும்.

எனவே மனித கண்களுக்கும் அறிவுக்கும் எட்டாத விடயங்களை புரிந்துகொள்ள நந்தி பற்றி வேதங்கள் என்ன கூறுகின்றது என்று முதலில் நாம் அறிந்து கொள்ளுதல் வேண்டும்.

திருமந்திர ஆகம வேதத்தின் படி நந்தி என்பவர் கீழ்கண்ட பண்புகளை உடையவர்.

நந்தி அருள் பெற்ற நாதரை நாடிடின்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மன்று தொழுத பதஞ்சலி வியாக் ரமர்
என்று இவர் என்னோடு எண்மரும் ஆமே.

நந்தி அருளாலே நாதன் ஆம் பேர் பெற்றோம்
நந்தி அருளாலே மூலனை நாடினோம்
நந்தி அருள் ஆவது என் செயும் நாட்டினில்
நந்தி வழிகாட்ட யான் இருந்தேனே.

நால்வரும் நாலு திசைக்கு ஒன்று நாதர்கள்
நால்வரும் நானாவிதப் பொருள் கைக்கொண்டு
நால்வரும் யான் பெற்றது எல்லாம் பெறுக என
நால்வரும் தேவராய் நாதர் ஆனார்களே.

    • நந்திகள் நால்வர் (சிவயோக மாமுனி, பதஞ்சலி, வியாக்ரமர், எண்மர்). - நந்தி ஒருவல்ல, நால்வர். ஒவ்வொருவருக்கும் தனித்தனி பெயர் உண்டு.
    • நால்வரும் நாலு திசைக்கு ஒன்று நாதர்கள் - ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசைக்கு பொறுப்பாளி. எனவே உலகில் உள்ள அனைத்து திசைகளுக்கும், மொழிகளுக்கும், நாடுகளுக்கும், சமயங்களுக்கும் வேதத்தை கொண்டு சேர்ப்பது இவர்களின் பிரதான வேலை.
    • நால்வரும் தேவராய் நாதர் ஆனார்களே - நந்தி தேவர் இனத்தை சேந்தவர்கள் (மாடு அல்ல)
    • மொழிந்தது மூவர்க்கும் நால்வர்க்கும் ஈசன் - நந்தியின் நாதன் (ஆசிரியன்) சிவன். எனவே நந்தியும் சிவனும் வேறு வேறு.
    • நந்தி அருளாலே நாதன் ஆம் பேர் பெற்றோம் - மனிதர்களுக்கு குருவாய் இருந்த திருமூலர் போன்ற முனிவர்களுக்கு ஆசிரியனாக நந்தி இருந்தார்.

நந்தி வழிகாட்ட யான் இருந்தேனே. - நந்தி என்பது பெயரல்ல, பதவி. இறைவனின் போதனைகளை (வேதத்தை) மனிதரில் உள்ள புனிதர்களுக்கு போதிக்கும் வேலையை செய்யும் தேவர்களுக்கு நந்தி என்று பெயர்.

திருமந்திரம் கூறும் நந்தியின் வரையறைக்கு முரணான கருத்துக்களையே மேலே குறிப்பிட்ட அனைத்து இணையங்களும் பேசுகின்றன. அநேகமாக அவர்கள் கூறும் கருத்துக்கள் சிவபுராணம் அல்லது நந்தி புராணத்தில் இருந்து எடுக்கப்பட்ட செய்திகளாக இருக்கலாம். ஆனால் இந்த புராணங்கள் அடிப்படையிலேயே ஆகமங்களுக்கு முரன்படக் கூடியவைகள் ஆகும்.

தமிழில் தொல்காப்பியம் முதல் திருவாசகம் வரை வந்த நூல்கள் அனைத்தும் வெவ்வேறு முனைவர்கள் மூலம் கொடுக்கப்பட்ட ஆகமங்கள் ஆகும். ஆனால் 18 புராணங்கள் அனைத்தும் ஒரே முனிவரால் எழுதப்பட்டது என்கிற செய்தி அதன் நம்பக தன்மையை கேள்விக்குறியாக ஆக்குகிறது. மேலும் அந்த புராணங்கள் இது போன்ற அடிப்படைகளில் ஆகம வேதங்களுக்கு நேரடியாக முரண்படுகிறது என்கிற செய்தியும் அதை வலுப்படுத்துகிறது. எனவே நந்தி என்பவர் மாடு என்கிற கருத்தை கூறும் புராணங்கள் வாயிலாக நந்தியை கோவிலில் வைக்க எண்ணிய அவர்கள் கோவிலில் கர்பகிரகத்துக்கு எதிராக காளை மாட்டின் சிலை வைத்து இருக்கலாம்.

அது சரி நந்தியின் சிலையை அவர்கள் குறுக்கே வைக்க எண்ணியதன் காரணம் என்ன? நந்தி என்பவர் தான் சிவனுக்கும் திருமூலருக்கும் இடையே இருந்து செய்தி பரிமாறிய வேலையை செய்தவர் ஏனென்றால் மனிதன் நேரடியாக உபதேசங்களை கடவுளிடம் இருந்து பெற முடியாது. அதாவது இறைவனை இவர் மூலம் தான் அறியவும் அடையவும் முடியும் என்று கருதியதால் மனிதர்களுக்கும் சிவனுக்கும் இடையே இந்த நந்தி வைக்கப்பட்டு உள்ளார். இந்த கருத்துக்கள் மீது சந்தேகம் உடையோர் திருமந்திரம் வாசிப்பதொடு பொழிப்புறையை ஆய்வு செய்யத் தொடங்கட்டும். 
 
திருமூலர் போன்ற முனிவர்கள் மட்டுமே நந்தியிடம் இதுபோன்ற உபதேசங்களை பெற முடியும் என்பதும், தமிழர் வேதங்கள் சிலை வழிபாடுகளை அல்லது பல தெய்வ வழிபாடுகளை ஆதரிக்கவில்லை என்பதும் வேறு தலைப்புகள்.

"நந்தி மாதிரி குறுக்க வர" என்று திட்டுவது எவ்வளவு பெரும் பாவம் என்று இதன் மூலம் புலப்படுகிறது.

மேலும் வாசிக்க:

  

சிவபெருமானும் நந்தியும் வேறுவேறா? ஒன்றா?

நந்தி பொறுத்தவரை பல்வேறு கருத்துக்கள் நிலவுகிறது. அதில் சில,

  • நந்தியும் சிவனும் ஒருவரே
  • நந்தி ஒரு தேவர்
  • நந்தி ஒரு மாடு

நந்தி என்கிற பாத்திரம் திருமந்திரம் எனும் சைவ மறைநூல் மூலம் நாம் அறிகிறோம். எனவே அதை ஆராய்வோம் வாருங்கள்.

இவ்வாறு ஆய்வு செய்யும் பொழுது முதன் முதலில் நாம் அறிய வேண்டியது இரண்டு சொற்களுக்குமான வரையறைகளாக அல்லது பண்புகளாக வேதங்கள் சொல்வது என்ன என்று ஆராய்வோம்.

சிவம் என்பது,

  • கடவுள்

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் - (திருமந்திரம் 2104)

  • ஈடு இணையற்றவன்

சிவனொடு ஒக்கும்தெய்வம் தேடினும் இல்லை

வனொடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை - (திருமந்திரம் 5)

  • தானாக தோன்றியவன்

ஒன்றவன் தானே - (திருமந்திரம் கடவுள் வாழ்த்து பாடல் 1)

  • ஆதியும் அந்தமும் அற்றவன்

ஆதியோ டந்தம் இலாத பராபரம்

போதம தாகப் புணரும் பராபரை - (திருமந்திரம் - 378)

பொருள்: அவனுக்கு தொடக்கமும் முடிவும் இல்லை

  • சொர்கத்தில் உள்ளான்

ஆறு விரிந்தனன் எழும்பர்ச் சென்றனன் - (திருமந்திரம் கடவுள் வாழ்த்து பாடல் 1)

பொருள்: ஆறு நாட்களில் உலகை விரித்து, ஏழாவது வானத்திற்கு (உம்பர்) சென்றான்.

  • மனிதர்கள் வரையறுத்து கூற முடியாதவன் 

உரையற்றது ஒன்றை உரை செய்யும் ஊமர்காள்

கரையற்றது ஒன்றைக் கரைகாணல் ஆகுமோ (திருமந்திரம் 2915)

  • ஆணுமல்ல, பெண்ணுமல்ல, பேடனல்ல

பெண்ணல்லன் ஆணல்லன் பேடல்லன் - (7ம் தந்திரம், 14 அடியார் பெருமை, 4)

  • முத்தொழிலையும் செய்பவன்

நின்றனன் மூன்றினுள் - (திருமந்திரம் கடவுள் வாழ்த்து)

  • லிங்கத்தில் இல்லை

தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்

கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே. - (திருமந்திரம் - 11 சிவபூசை 1)

நந்தி யார்? என திருமந்திரம் கூறுவது,

நந்தி அருள் பெற்ற நாதரை நாடிடின்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மன்று தொழுத பதஞ்சலி வியாக் ரமர்
என்று இவர் என்னோடு எண்மரும் ஆமே.

நந்தி அருளாலே நாதன் ஆம் பேர் பெற்றோம்
நந்தி அருளாலே மூலனை நாடினோம்
நந்தி அருள் ஆவது என் செயும் நாட்டினில்
நந்தி வழிகாட்ட யான் இருந்தேனே.

நால்வரும் நாலு திசைக்கு ஒன்று நாதர்கள்
நால்வரும் நானாவிதப் பொருள் கைக்கொண்டு
நால்வரும் யான் பெற்றது எல்லாம் பெறுக என
நால்வரும் தேவராய் நாதர் ஆனார்களே.

மந்திரம் பெற்ற வழிமுறை மாலாங்கன்
இந்திரன் சோமன் பிரமன் உருத்திரன்
கந்துருக் காலாங்கி கஞ்ச மலையனோடு
இந்த எழுவரும் என் வழி யாமே.

மொழிந்தது மூவர்க்கும் நால்வர்க்கும் ஈசன்
ஒழிந்த பெருமை இறப்பும் பிறப்பும்
செழும்சுடர் மூன்று ஒளி ஆகிய தேவன்
கழிந்த பெருமையைக் காட்ட கிலானே.

தத்துவ ஞானம் உரைத்தது தாழ்வரை
முத்திக்கு இருந்த முனிவரும் தேவரும்
ஒத்துடன் வேறாய் இருந்து துதிசெயும்
பத்திமையால் இப்பயன் அறியாரே. (திருமந்திரம் 1. குரு பாரம்பரியம் 1–6)

  1. நந்திகள் நால்வர் (சிவயோக மாமுனி, பதஞ்சலி, வியாக்ரமர், எண்மர்). - நந்தி ஒருவல்ல, நால்வர். ஒவ்வொருவருக்கும் தனித்தனி பெயர் உண்டு.
  2. நால்வரும் நாலு திசைக்கு ஒன்று நாதர்கள் - ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசைக்கு பொறுப்பாளி. எனவே உலகில் உள்ள அனைத்து திசைகளுக்கும், மொழிகளுக்கும், நாடுகளுக்கும், சமயங்களுக்கும் வேதத்தை கொண்டு சேர்ப்பது இவர்களின் பிரதான வேலை.
  3. நால்வரும் தேவராய் நாதர் ஆனார்களே - நந்தி தேவர் இனத்தை சேந்தவர்கள் (மாடு அல்ல)
  4. மொழிந்தது மூவர்க்கும் நால்வர்க்கும் ஈசன் - நந்தியின் நாதன் (ஆசிரியன்) சிவன்
  5. நந்தி அருளாலே நாதன் ஆம் பேர் பெற்றோம் - மனிதர்களுக்கு குருவாய் இருந்த திருமூலர் போன்ற முனிவர்களுக்கு ஆசிரியன் நந்தி
  6. நந்தி வழிகாட்ட யான் இருந்தேனே. - நந்தி என்பது பெயரல்ல, பதவி. இறைவனின் போதனைகளை (வேதத்தை) மனிதரில் உள்ள புனிதர்களுக்கு போதிக்கும் வேலையை செய்யும் தேவர்களுக்கு நந்தி என்று பெயர்.

முடிவுரை:

  • சிவன் ஈடு இணை அற்றவன் X நந்திகள் நால்வர்.
  • சிவன் ஒரே கடவுள் X நந்தி ஒரு தேவர்.
  • சிவன் தானாக தோன்றியவன் X நந்தி சிவனால் படைக்கப்பட்டவர்.
  • சிவன் முத்தொழிலையும் செய்பவன் X நந்தி சிவன் சொல்வதை செய்பவர்.

எனவே சிவனும் நந்தியும் வேறு வேறு. சிவன் எனபவன் தேவர், அசுரர், மனிதர் என மூன்று இனத்தையும் படைத்த ஒரே கடவுள். நந்தி எனபவர் சிவன் படைத்த தேவர் இனத்தை சேர்ந்தவர்.

ஆன்மிகம் தொடர்பாக ஏற்படும் முரணான கருத்துக்களுக்கு காரணம், நாம் ஆன்மீகவாதி என்று கருதும் ஒருவரின் காட்டுரைகளை அல்லது பேச்சுக்களை கேட்டு நமது கருத்துக்களை கட்டமைத்துக் கொள்கிறோம். ஆனால் அந்த நபரின் வேதம் தொடர்பான அறிவு, அவரின் சிந்தனை ஆகியவற்றை நாம் அறிவதில்லை. இந்த சூழ்நிலையில் நாம் நமது மொழியில் உள்ள நமது வேதத்தை வாசிப்பதுதான் சரியான அணுகுமுறையாக இருக்கும்.

அவ்வேதத்தை வாசிக்கும் பொழுது நமக்கு சொற்களின் பொருள் புரியாமல் இருக்கலாம். அச்சமயத்தில் அந்த ஒரு பாடலுக்கு பலவேறு விளக்க உரையை நீங்கள் வாசிக்க வேண்டும். ஒவ்வொரு விளக்க உரையும் ஒன்றுக்கொன்று முரண்படும், தளர்ந்து விடாதீர்கள். ஒவ்வொரு வார்த்தையும் பிரித்து அந்த சொற்களுக்கான பொருளை தேடுங்கள். அவைகளை பொருத்தி புரிந்துகொள்ள முயலுங்கள்.

இதில் சில நேரங்களில் நமக்கு சிக்கல்கள் ஏற்படும்பொழுது நாம் தொல்காப்பிய நூல் சூத்திரத்தையும், திருமந்திர நான்மறை தத்துவத்தையும் கற்று பின்பற்ற வேண்டும்.

இவ்வளவு சிரமம் ஏன் படவேண்டும்? குறளும், திருமந்திரமும், ஆத்திச்சூடியும், நல்வழியும், திருக்குர்ஆனும், பைபிளும் கூறும் கல்வி இதுதான். இதை கற்றவர்களுக்கு இவ்வுலகில் நிம்மதியும் மறுஉலகில் சொர்க்கமும் கிடைக்க வாய்ப்பு உண்டு.