செயல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செயல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செயலை இறைவனுக்காக செய்

இந்து மதம்

ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, அர்ப்பணிப்பில் {யோகத்தில்} நிலைபெற்றவனாகி, வெற்றி தோல்வி மீது கொண்ட பற்றை நீக்கி {அவற்றைச் சமமாக நினைத்து}, உன்னைப் பற்றற்ற செயலில் நீ ஈடுபடுத்திக் கொள்வாயாக. இந்த உள்ளச்சமநிலையே (பக்தியே) யோகம் ஆகும். (கீதை 2:48)

ஓ தனஞ்சயா {அர்ஜுனா}, (பலனை விரும்பி செய்யப்படும்) செயல், அர்ப்பணிப்பை விட மிகத் தாழ்ந்ததே. நீ அர்ப்பணிப்பின் {பக்தியின்} பாதுகாப்பை நாடுவாயாக. பலனுக்காகச் செயலில் ஈடுபடுபவர்கள் பரிதாபத்துக்குரியவர்கள் ஆவர். (கீதை 2:49) 

அர்ப்பணிப்பு {பக்தி} கொண்ட ஒருவன், நற்செயல்களையும் {புண்ணியங்களையும்}, தீச்செயல்களையும் {பாவங்களையும்} இவ்வுலகிலேயே விட்டுவிடுகிறான். எனவே, அர்ப்பணிப்பில் {பக்தி என்ற யோகத்தில்} உன்னை நீ பொருத்திக் கொள்வாயாக {ஈடுபடுவாயாக}. (கீதை 2:50)

செயல்பாடுகளில் உள்ள புத்திசாலித்தனமே அர்ப்பணிப்பு {பக்தி} ஆகும். அர்ப்பணிப்பு {பக்தி} உடைய அறிவாளி, செயலினால் உண்டாகும் பலனைத் துறந்து, (மறு) பிறவி என்ற கடமையில் இருந்து விடுபட்டு, துன்பமற்ற நிலையை அடைகிறான். (கீதை 2:51)

தமிழர் சமயம் 

மக்களா லாய பெரும்பயனு மாயுங்கா
லெத்துணையு மாற்றப் பலவானால் - தொக்க
வுடம்பிற்கே யொப்புரவு செய்தொழுகா தும்பர்க்
கிடந்துண்ணப் பண்ணப் படும். நாலடியார் 37

கருத்துரைநீங்கள் உங்கள் உடலுக்குத் தருமத்தைச் செய்யாது சுவர்க்கத்தில் இருந்து அநுபவிக்கத் தருமத்தைச் செய்யுங்கள். 

இஸ்லாம் 

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது மக்களுக்குக் காட்டுவதற்காக தனது செல்வத்தைச் செலவிடுபவனைப் போல், உங்கள் தர்மங்களைச் சொல்லிலி க் காட்டியும், தொல்லை தந்தும் பாழாக்கி விடாதீர்கள்! இவனுக்கு உதாரணம் மேலே மண் படிந்திருக்கும் வழுக்குப் பாறை. அதன் மேல் மழை விழுந்ததும் மேலே ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுகிறது. தாம் பாடுபட்ட எதன் மீதும் அவர்கள் சக்தி பெற மாட்டார்கள். (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்(அல்குர்ஆன் 2:264)

கிறிஸ்தவம் 

நீங்கள் நற்செயல்களைச் செய்யும்பொழுது, அவற்றை மக்களின் முன்னிலையில் செய்யாதபடி எச்சரிக்கையுடன் இருங்கள்! க்கள் காணவேண்டும் என்பதற்காக அவற்றைச் செய்யாதீர்கள். நீங்கள் அவ்வாறு செய்தால், பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதாவிடமிருந்து எந்த வெகுமதியும் கிடைக்காது. - (மத்தேயு 6:6)


பொய்சாட்சி

தமிழர் சமயம் 


வேதாளம் சேருமே வெள்ளெருக்கம் பூக்குமே
பாதாள மூலி படருமே - மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரம் சொன்னார் மனை. (பா-23)

பொருள்: நீதி மன்றத்தில் பொய் சாட்சியம் சொன்னவரின் வீட்டில் வேதாளம் குடியேறும். சூடத்தகாத வெண்மையான எருக்கம் பூக்கள் பூக்கும். படரக் கூடாத பாதாள மூலி படரும். மூதேவி சென்று நிலையாகத் தங்குவாள். பாம்புகள் குடிபுகும். பொய்சாட்சி சொன்னவர்கள், இவ்வாறு தன் சுற்றத்துடன் அழிவர். 
 

இஸ்லாம் 


நபி (ஸல்) அவர்களிடம் பெரும் பாவங்கள் பற்றிக் கேட்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வுக்கு இணை வைப்பது, பெற்றோருக்குத் துன்பம் கொடுப்பது, தற்கொலை செய்து கொள்வது, பொய்சாட்சி சொல்வது ஆகியன (பெரும் பாவங்களாகும்)’ என்று கூறினார்கள் (அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல் : புகாரி-2653)

கிறிஸ்தவம்


நீதிபதிகள், நன்றாக விசாரிப்பதன் மூலம் அந்த நபருக்கு எதிராக பொய்சாட்சி கூறியதாகக் கண்டறிந்தால், அவன் பொய்சாட்சி என்று நிரூபிக்கப்பட்டால், நீங்கள் அவனைத் தண்டிக்கவேண்டும். அவன் மற்றவர்களுக்குச் செய்ய விரும்பியதையே நீங்கள் அவனுக்கு செய்யவேண்டும். - (உபாகமம் 19:18-19)

பொய்சாட்சி சொல்பவன் தண்டிக்கப்படுவான். தொடர்ந்து பொய்சொல்பவன் அழிக்கப்படுவான். (நீதிமொழிகள் 19:9)

நீ எவரையும் கொலை செய்யாமல் இருப்பாயாக; விபச்சாரம் செய்யாமல் இருப்பாயாக, களவு செய்யாமல் இருப்பாயாக; பொய்சாட்சி சொல்லாமல் இருப்பாயாக; நீ உன் தந்தையையும் தாயையும் மரியாதை செய்வாயாக என்று கட்டளைகள் சொல்வது உனக்குத் தெரியுமா?” என்று கேட்டார். (மாற்கு 10:19)

கடவுள் நாம் செய்யும் தவறுகளைப் பார்த்துக்கொண்டே இருக்கிறாரா?

 ஆம்.

தவறுகளை மட்டுமல்ல நற்செயல்களையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்.

அவரவர் செயலுக்கான கூலி அவருக்கு தவறாமல் வழங்கப்படும் என்று அனைத்து வேதங்களும் கூறுவதின் சாரம் நம் செயல்கள் கண்காணிக்கப் படுகிறது என்பதாம். சொர்கம் நரகம் அவரவர் செயலுக்கு ஏற்றார் போல வழங்கப் பிஸ்ட்டும் என்பதும் நாம் செய்யும் பாவ புண்ணியங்கள் கணக்கெடுக்கப் படுகிறது எனபதற்கான சான்று.

தமிழர் நெறி

கண்காணி இல்லென்று கள்ளம் பல செய்வார்
கண்காணி இல்லா இடம்இல்லை காணுங்கால்
கண்காணி யாகக் கலந்தெங்கும் நின்றானைக்
கண்காணி கண்டார் களவொழிந் தாரே. (7ம் தந்திரம் - 36 கூடா ஒழுக்கம் - பாடல் 1)

பொழிப்புரை: அறிவில்லாதவர் `தங்களை உடன் இருந்து காவல் புரிபவன் எவனும் இல்லை` என்று தவறாகக் கருதிக் கொண்டு தவறான செயல்கள் பலவற்றைச் செய்கின்றனர். உண்மையை உணர்ந்தால் யாவரையும் உடன் இருந்து காவல் புரிகின்ற ஒருவன் எங்கும் இருக்கின்றான். அவன் இல்லாத இடம் இல்லை. (எனவே தவறு செய்பவர் அவனால் ஒறுக்கப்படுதல் திண்ணம்) எவ்விடத்திலும் நிறைந்து காவல் புரிகின்ற அவனை அங்ஙனம் காவல் புரிபவனாக அறிந்தோர் யாவரும் தவற்றை ஒரு ஞான்றும் செய்யாது ஒழிந்திருக்கின்றனர். 

இஸ்லாமிய நெறி

பார்வைகள் அவனை அடைய முடியா; ஆனால் அவனே எல்லோருடைய (எல்லாப்) பார்வைகளையும் (சூழ்ந்து) அடைகிறான். அவன் நுட்பமானவன்; தெளிவான ஞானமுடையவன். - (அன்-ஆனாம் 6:103)

கிறிஸ்தவ நெறி

அவருடைய கண்கள் மனுஷருடைய வழிகளை நோக்கியிருக்கிறது; அவர்களுடைய நடைகளையெல்லாம் அவர் பார்க்கிறார். - (யோபு 34:21)

முடிவுரை

எல்லாமும் கணக்கெடுக்கப் பட்டு அவைகளுக்கான கூலி சிலவற்றுக்கு இம்மையிலும் சிலவற்றுக்கு மறுமையிலும் வழங்கப்படும். வாசிக்க