திருக்குறள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருக்குறள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திருக்குறளை படிப்பவர்கள் எந்த மதத்தை பின்பற்ற வேண்டும்?

 திருக்குறளை படிப்பவர்கள் எந்த மதத்தை பின்பற்ற வேண்டும்?

குறளை வெய்யாற்க்கு மறைவிரி எளிது - முதுமொழிக்காஞ்சி

இதில் மறை என்பது தமிழ் மறையை மட்டும் குறிப்பிடுகிறதா?

இல்லை. எப்படி?

தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை 
திருவாசகமும் திருமூலர் சொல்லும் 
ஒருவா சகம்என்று உணர். (நாலடியார்-40)

குறளும் நான்மறையும் ஒருவாசகம் ஆகும்.

ஆனால் இதில் நான்மறை எனபது என்ன?

ரிக் யஜுர் சாம அதர்வணமா?

இல்லை! நான்மறை என்பது உலகில் இதுவரை அனைத்து மொழியிலும் அனைத்து நிலத்திலும் வந்த அனைத்து வேதங்களையும் குறிக்கிறது.

மேலும் குறளும் திருமூலர் சொல்லும் ஒரு வாசகம் என்கிறது இந்த பாடல்.

அந்தவகையில் திருமந்திரம், ஏழாம் தந்திரம், 13. குருபூசை, பாடல் - 1864 இதற்கான பதிலை தரலாம்.

குறள் என்றால் சுருக்கமாக என்று பொருள். எனவே உலகில் உள்ள வேதங்கள் அனைத்தின் சுருக்கம் திருக்குறள் ஆகும்.

உதாரணம்:

குறளையுள் நட்பு அளவு தோன்றும்; உறல் இனிய
சால் பினில் தோன்றும், குடிமையும்; பால் போலும்
தூய்மையுள் தோன்றும் பிரமாணம்; - இம் மூன்றும்
வாய்மை உடையார் வழக்கு. . . . .[திரிகடுகம் 37]

பொருள்: சுருக்கத்தினால் நட்பின் எல்லை தோன்றும். இனிய செயல்களினால் குடிப் பிறப்பின் தன்மை தோன்றும். மனத் தூய்மையினால் வாழ்வின் அளவு தோன்றும். எனவே இம்மூன்றும் உண்மையான பெரியோரின் குணங்களாகும்.

முடிவுரை:

குறளில் தமிழ் என்ற வார்த்தை பயன்படுத்த பட்டததற்கும், குறளில் இறைவனின் தனிப்பெயர் குறிப்பிட படாததற்கும் காரணம் உண்டு. குறள் தென்னாட்டுக்கு அல்லது தமிழுக்கு மட்டும் உள்ள அற விதிகளை கூறும் நூல் அல்ல. மாறாக உலகில் வேதங்கள் என்று சொல்லப் படுபவைகள் உண்மையில் வேதம்தானா என்று கண்டறியும் அளவுகோலாகவும் பயன்படுத்தலாம். அவ்வாறு கண்டறியப் படுவதில் சமீபத்திய நூல் அதாவது இக்காலத்துக்கு பொருந்தும் சமயம் எதுவோ அதை பின்பற்ற வழிகாட்டும் நூல் குறள் ஆகும்.

உலகின் பொதுமறை என அழைக்கப்படும் திருக்குறளுக்கு இணையான நூல் எதுவும் உள்ளதா?

எமது கோணமும் பதிலும் உங்களுக்கு புதிதாக இருக்கலாம், ஆனால் சத்தியம் நிறைந்தது.

உலகின் பொதுமறை என்று திருக்குறளை யார் முதன் முதலில் அழைத்தது என்று தெரியவில்லை. எந்த சங்க நூலிலும் அவ்வாறு குறிப்பிடவில்லை. தமிழின் மீள் எழுச்சிக்கு பிறகு அதாவது கடந்த நூற்றாண்டில் பலர் இவ்வாறு கூற கேள்விப்படுகிறோம். காரணம் அதில் சொல்லப்படும் அறங்கள் அனைத்தும் ஞாலம், உலகம் முழுமையையும் குறிப்பிட்டு கூறப்படுவதால் இவ்வாறு அழைக்கப்பட்டு இருக்கலாம். மேலும் எந்த கடவுளின் பெயரையும் தனியாக குறிப்பிடாமல் கடவுள், இறைவன், மலர்மிசை யேகினான், வேண்டுதல் வேண்டாமை இலான் என்று பண்புகளை குறிப்பிட்டு பொதுப்படையாக பேசுவதால் கூட இருக்கலாம்.

திருக்குறள் உலகப் பொதுமறை என்றால் குறளின் சுருக்கமான ஆத்திசூடியும், குறளின் விரிவுரையான நாலடியாரும் உலகப் பொதுமறை என்று அழைக்கப்பட வேண்டுமே?

திருக்குறள் உலகப் பொதுமறை என்றால் தேவாரமும், திருவாசகமும், திருமந்திரமும், உலக நான்மறைகள் அனைத்தும், சித்தர்கள் நூல்களும் உலகப்பொதுமறையாக இருத்தல் வேண்டுமே? ஆதாரம்?

தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும்- கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா சகமென் றுணர். - (நல்வழி 40)

திருக்குறள் சிறந்த நூல், மறை நூல் அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் உலகப்பொதுமறை என்று அதை மட்டும் குறிப்பிடுவதை விட உலகில் உள்ள அனைத்து நூல்களையும் உலகப்பொதுமறை என்று அழைப்பதுதன் சரியான வாதம் ஆகும்.

ஆனால் திருக்குறளையும் மேலே குறிப்பிட்டு உள்ள நூல்களையும் மறைநூல்களாக அதாவது வேதமாக ஏற்க்காதோர் பலர் உண்டு. இந்து என்ற பெயரில் அவர்களை பின்பற்றுவோர் தான் இங்கே அதிகமாக உள்ளனர். இவைகள் ஞானம் தரும் மறைநூல்கள்கள், வாழ்க்கையின் பிரச்னைக்கு தீர்வு தரும் நூல்கள், மன அமைதிக்கு வழி தரும் நூல்கள், படித்தால் புரியும் நூல்கள் எனபதை அவர்கள் உணர்வதில்லை.

இதனை நாம் படிக்காததால் ஏற்படும் ஒரே ஒரு நஷ்டத்தை கூறுகிறேன், மற்றதை நீங்களே கணித்து கொள்ளுங்கள். சைவம் தமிழரின் சமயம், சிவன் தமிழின் கடவுள், சிவ ஆகமங்கள் தமிழில் மட்டும்தான் உள்ளது ஆனால் நம்மவர்கள் வடக்கில் உள்ள காசிக்கு செல்கின்றனர். திருமந்திரம் கொண்ட நாம், சிவாகமம் இல்லாத அவர்கள் எழுதிய அமரகோஷ் நாவலை நாம் படித்து கொண்டு இருக்கிறோம். வேடிக்கை.

குறளுக்கு இணையான நூல்கள் தமிழில் மட்டுமல்ல, உலகில் வெவ்வேறு மொழிகளிலும் உண்டு. அதை அறியாமல் (அ) காழ்ப்புணர்வுடன் (அ)  தற்பெருமை கொண்டு நாம் அதை ஏற்பதில்லை, அவ்வளவுதான்.