தமிழர் சமயம்
வணங்கி, வழி ஒழுகி, மாண்டார் சொல் கொண்டு,நுணங்கிய நூல் நோக்கி, நுழையா, இணங்கியபால் நோக்கி வாழ்வான் - பழி இல்லா மன்னனாய்,நூல் நோக்கி வாழ்வான், நுனித்து. (ஏலாதி 59)
விளக்கம்: பணிந்து, நெறியே யொழுகி, மாட்சிமைப்பட்டார் சொற்களை யுகந்துகொண்டு, நுண்ணிய நூல்களை யோதி, நுண்ணிதாக வறிந்து பொருந்திய பான்மையை நோக்கி யொழுகுவான், குற்றமில்லா வரசனாய் நுண்ணிய நூல்களை யறிந்து மறுமையின்கண் வாழ்வான்.கருத்து: இம்மையில் வணக்கமும், ஒழுக்கமும், சான்றோர் மதிப்பும், ஆராய்ச்சியும் உடையவன், மறுமையில் இக்கல்வியுடன் பொருளும் ஒருங்கெய்தி வாழ்வான்.
கிறிஸ்தவம்
[ விசுவாசமும் நற்செயல்களும் ] எனது சகோதர சகோதரிகளே, ஒருவன் விசுவாசம் கொண்டவனாக தன்னைப் பற்றிக் கூறிக்கொண்டு காரியரீதியாக எதுவும் செய்யாமல் இருப்பானேயானால் அவனது விசுவாசத்தால் எந்த பயனும் இல்லை. அத்தகைய விசுவாசம் யாரையாவது இரட்சிக்குமா? - யாக்கோபு 2:14
இஸ்லாம்
யார் ஈமான் (நம்பிக்கை) கொண்டு, நற் கருமங்களைச் செய்து, தொழுகையை நியமமாகக் கடைப் பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வருகிறார்களோ, நிச்சயமாக அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது; அவர்களுக்கு அச்சமுமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். (குர்ஆன் :277)
நூல் பத்து அறங்கள்
பதிலளிநீக்குமெய்ம்மை பொறையுடைமை மென்மை தவம்அடக்கம்
செம்மைஒன்று இன்மை துறவுஉடைமை - நன்மை
திறம்பா விரதம் தரித்தலோடு இன்ன
அறம்பத்தும் ஆன்ற குணம். அறநெரிச்சாரம் பாடல் - 12
விளக்கவுரை: வாய்மையும், பொறுமையும், பெருமையும் தவமும், அடக்கமும், நடுவுநிலைமையும், தனக்கு என ஒன்று இல்லா திருத்தலும், பற்று அறுதலும், நல்லன செய்தலும், மாறுபடாத நோன்புகளை மேற்கொள்ளுதலுமான இத்தன்மையான அறங்கள் பத்தும் மேலான குணங்களாகும்.
ஆறு அவிநயம்
பதிலளிநீக்குஅவ்விநயம் ஆறும் அகன்றது நற்காட்சி
செவ்விதின் காப்பார் இடை. 39
அவிநயம் இலக்கணம்
நல்லறத்தின் தீர்ந்த வணக்கத்தை நல்லோர்கள்
சொல்வர் அவிநயம் என்று. 40
அவிநயத்தின் வகை
மிச்சை இலிங்கியர் நூல் தெய்வம் அவாவினோடு
அச்சம் உலோபிதத்தோடு ஆறு. 41
அவிநயம் நீக்கும் வழி
இவ்வாறு நோக்கி வணங்கார் அவிநயம்
எவ்வாறும் நீங்கல் அரிது. 42
நற்காட்சியின் இன்றியமையாமை
காட்சி விசேடம் உணர்வும் ஒழுக்கமும்
மாட்சி அதனில் பெறும். 43
https://marainoolkal.blogspot.com/2022/09/blog-post_18.html
எபேசியர் 2:8 ESV / 8 பயனுள்ள வாக்குகள்
பதிலளிநீக்குகிருபையினாலே விசுவாசத்தினாலே இரட்சிக்கப்பட்டீர்கள். இது உங்கள் சொந்த செயல் அல்ல; அது கடவுளின் பரிசு,
90:17. பின்னர் விசுவாசங்கொண்டு பொறுமையைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்தும், (அல்லாஹ்வின் அடியார்களுக்கு) அன்பு செலுத்துமாறு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்துகொண்டும் இருந்தோரில் உள்ளவராக அவர் இருப்பதாகும்.
பதிலளிநீக்கு103:3. விசுவாசங்கொண்டு நற்கருமங்களையும் செய்து, சத்தியத்தை ஒருவருக்கொருவர் உபதேசம் செய்தும், (பாவங்களை விடுவதிலும், நன்மைகளைச் செய்வதிலும் ஏற்படும் கஷ்டங்களைச் சகித்து) பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களே அத்தகையோரைத் தவிர,
எவர் முஃமினாக இருக்கும் நிலையில் நற்செயல்கள், செய்கின்றாரோ அவரின் முயற்சி (எவ்விதத்திலும்) நிராகரிக்கப்பட மாட்டாது. நிச்சயமாக நாம் அவைகளைப் பதிவு செய்து வருகிறோம். (21:94)
3:57. ஆனால், எவர் ஈமான் கொண்டு நற்கருமங்களும் செய்கிறார்களோ, அவர்களுக்குரிய நற்கூலிகளை (அல்லாஹ்) முழுமையாகக் கொடுப்பான்; அல்லாஹ் அக்கிரமம் செய்வோரை நேசிக்கமாட்டான்.
முஹம்மதே!) நீர் விரும்பியோரை உம்மால் நேர் வழியில் செலுத்த முடியாது! மாறாக, தான் நாடியோருக்கு அல்லாஹ் நேர் வழி காட்டுகிறான். அவன் நேர் வழி பெற்றோரை நன்கறிந்தவன் (அல்குர்ஆன் 28 56)
22:50. ஆகவே விசுவாசங்கொண்டு, நற்கருமங்களையும் செய்கிறார்களே அத்தகையோர்-அவர்களுக்கு மன்னிப்பு, மற்றும் கண்ணியமான உணவும் உண்டு.
வணங்கி, வழி ஒழுகி, மாண்டார் சொல் கொண்டு,
பதிலளிநீக்குநுணங்கிய நூல் நோக்கி, நுழையா, இணங்கிய
பால் நோக்கி வாழ்வான் - பழி இல்லா மன்னனாய்,
நூல் நோக்கி வாழ்வான், நுனித்து. (ஏலாதி 59)
பொருள்: பணிந்து, நெறியே யொழுகி, மாட்சிமைப்பட்டார் சொற்களை யுகந்துகொண்டு, நுண்ணிய நூல்களை யோதி, நுண்ணிதாக வறிந்து பொருந்திய பான்மையை நோக்கி யொழுகுவான், குற்றமில்லா வரசனாய் நுண்ணிய நூல்களை யறிந்து மறுமையின்கண் வாழ்வான்.
கருத்து: இம்மையில் தெய்வ வணங்கி, அதன் வழிகாட்டுதலை பின்பற்றி, முன்சென்ற சான்றோர் சொல் கொண்டு, நுட்பமான நூலைப் பார்த்து, ஆராய்ச்சியும் உடையவன், மறுமையில் இக்கல்வியுடன் பொருளும் ஒருங்கெய்தி வாழ்வான்.
பதவுரை : நுணங்கிய - நுண்ணிய, நுட்பமான, செறிந்த;
ஏலாதி 59 Elati 59
வணங்கி, வழி ஒழுகி, மாண்டார் சொல் கொண்டு, நுணங்கிய நூல் நோக்கி, நுழையா, இணங்கிய பால் நோக்கி வாழ்வான் பழி இல்லா மன்னனாய், நூல் நோக்கி வாழ்வான், நுனித்து. 59
வணங்கி வழியொழுகி மாண்டார் சொற்கொண்டு
நுணங்கிய நூனோக்கி நுழையா இணங்கிய
பானோக்கி வாழ்வான் பழியில்லா மன்னனாய்
நூனோக்கி வாழ்வான் நுனித்து. 59
வணக்கத்துடன் வாழ்வான்
முன்னோர் வழியைப் பின்பற்றி வாழ்வான்
மாட்சிமை மிக்கார் சொல்லைக் கொண்டு அதன் வழியில் வாழ்வான்
நுட்பமான நூல் கருத்துக்களைப் பின்பற்றி வாழ்வான்.
நுழைந்துகொடுத்து வாழ்வான்
தன்னுடன் இணைந்திருக்கும் ஊழ்வினைப் பாலை உணர்ந்துகொண்டு வாழ்வான்.
இப்படி வாழ்பவன் பழி இல்லாத மன்னனாக நூலோர் வழியில் நுட்பமாக வாழ்வான்
https://vaiyan.blogspot.com/2017/03/59-elati-59.html
1 கொரிந்தியர் 10:31
பதிலளிநீக்கு"ஆகவே, நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், அனைத்தையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்
இவ்வாறே, எவர் தனது இறைவனின் சந்திப்பை நம்புகிறாரோ, அவர் நன்னெறியைச் செய்யட்டும், தனது இறைவனின் வழிபாட்டில் யாரையும் இணைவைக்க வேண்டாம்.
பதிலளிநீக்குசூரத் அல்-கஹ்ஃப் 18:110
ஜேம்ஸ் 2:24
பதிலளிநீக்குஒரு நபர் கிரியைகளினால் நீதிப்படுத்தப்படுகிறார், விசுவாசத்தினால் மட்டும் அல்ல என்பதை நீங்கள் காண்கிறீர்கள்
‘எந்தவொரு ஆன்மாவும் அதன் ஆயுட்காலம் மற்றும் அதன் வாழ்வாதாரத்தை நிறைவு செய்யும் வரை அழியாது, எனவே அல்லாஹ்வை அஞ்சுங்கள், அதை அழகாக தேடுங்கள் என்று பரிசுத்த ஆவி என் சாராம்சத்தில் செலுத்துகிறது. மேலும் அந்த ஏற்பாட்டின் தாமதம் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படியாமல் இருப்பதன் மூலம் அதைத் தேடுவதற்கு காரணமாகி விடாதீர்கள். ஏனெனில் அல்லாஹ்விடம் உள்ளதை அவனுக்குக் கீழ்படிவதன் மூலம் அன்றி பெற முடியாது”. - ஸஹீஹ் அல் ஜாமி’
பதிலளிநீக்குநபி ﷺ அவர்கள் ஏழு செயல்களைச் செய்யும்படி எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்; ஏழு செயல்களிலிருந்து எங்களைத் தடுத்தார்கள். அவை (செய்யும்படிக் கட்டளையிட்ட ஏழு செயல்கள்) இவை தாம்;
பதிலளிநீக்கு1. நோயாளிகளை நலம் விசாரிப்பது.
2. ஜனாஸாவைப் பின்தொடர்ந்து செல்வது.
3. தும்மியவருக்கு அவர், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (‘அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்’ என்று) சொன்னால், ‘யர்ஹமுக்கல்லாஹ்’ (அல்லாஹ் உமக்குக் கருணை புரிவானாக!) என்று பிரார்த்திப்பது.
4. சலாமுக்கு (முகமனுக்கு) பதிலுரைப்பது.
5. அக்கிரமத்திற்குள்ளானவருக்கு உதவுவது.
6. விருந்துக்காக அழைப்பவரின் அழைப்பை ஏற்றுக் கொள்வது.
7. சத்தியம் செய்தவரின் சத்தியத்தை நிறைவேற்ற உதவுவது. [ஸஹீஹ் புகாரி 2445.]