யூதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
யூதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

யூதமும் கிறிஸ்தவமும் ஒன்றா? வேறு வேறா?

இந்த கேள்விக்கு பதிலைப் பெற இரண்டு கோணத்தில் ஆராயப்படவேண்டும். முதலில், ஒரு கிறிஸ்தவரின் கண்ணோட்டத்தில் இதற்கான பதிலை ஆய்ந்து அறிவோம்: 

இன்றைய நடைமுறை ஒருபுறம் இருக்க இயேசு இதைப்பற்றி என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். பைபிளில் பவுலின் கடிதங்கள்தான் மிகையொடி கிடக்கின்றது. அவைகளை விடுத்து இயேசு அவர்களின் நேரடி கூற்றை மட்டும் நாம் ஆய்வு செய்யும் பொழுது உண்மைக்கு நெருக்கமான முடிவை எடுக்க அது வாய்ப்பாக அமையும்.  

பழைய ஏற்பாட்டை அவர் நிராகரித்தாரா? இல்லை.

17,“மோசேயின் சட்டங்களையோ அல்லது தீர்க்கதரிசிகளின் போதனைகளையோ அழிப்பதற்காக நான் வந்துள்ளதாக நினைக்காதீர்கள். அவர்களது போதனைகளை அழிப்பதற்காக நான் வரவில்லை. அவர்களின் போதனைகளின் முழுப் பொருளையும் நிறைவேற்றவே வந்துள்ளேன். 18 நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன். வானமும் பூமியும் உள்ளவரைக்கும் கட்டளைகளில் எதுவும் மறையாது. அனைத்தும் நிறைவேறுகிற வரைக்கும் கட்டளைகளின் ஒரு சிறு எழுத்தோ அல்லது ஒரு சிறு எழுத்தின் பகுதியோ கூட மறையாது. (மத்தேயு 5:17-5:18)

மோசே உட்பட ஏசுவுக்கு முன் வந்த எந்த தீர்க்கதரிசியின் சட்டங்களையும் அவர் நிராகரிக்க வரவில்லை, மாறாக முழுமைப் படுத்தவந்தார். எனவே அவரின் போதனைகள் அனைத்தும் யூத நூல்களின் நீட்சியே ஆகும். யூதர்களின் பத்து கட்டளைக்கு முரணாக எதையும் போதிக்கவில்லை.  

யூதரல்லாதோருக்கு அவர் போதனை அல்லது உதவி செய்தாரா? 

22 அப்பிரதேசத்தைச் சேர்ந்த கானான் ஊர் பெண் ஒருத்தி இயேசுவிடம் வந்தாள். அவள் இயேசுவிடம் கதறியழுது,, “ஆண்டவரே! தாவீதின் குமாரனே! எனக்கு உதவும்! என் மகளைப் பிசாசு பிடித்திருக்கிறது. அவள் மிகவும் துன்பப்படுகிறாள்” என்றாள்.

23 ஆனால் இயேசு அவளுக்கு மறுமொழி கூறவில்லை. எனவே, இயேசுவின் சீஷர்கள் அவரிடம்,, “அந்தப் பெண்ணைப் போகச் சொல்லும். நம்மைத் தொடந்து வந்து கதறுகிறாள்” என்று கெஞ்சினார்கள்.

24 இயேசு,, “தேவன் காணாமல் போன இஸ்ரவேலின் ஆடுகளிடம் மட்டுமே என்னை அனுப்பினார்” என்று கூறினார்.

25 அப்போது அப்பெண் இயேசுவின் முன்னர் வந்து மண்டியிட்டு,, “ஆண்டவரே, எனக்கு உதவும்” எனக் கூறினாள்.

26 இயேசு,, “குழந்தைகளின் அப்பத்தை எடுத்து நாய்களுக்குக் கொடுப்பது சரியல்ல” என்று பதில் சொன்னார்.

27 அதற்கு அப்பெண்,, “ஆம் ஆண்டவரே! ஆனால் எஜமானனின் மேஜையிலிருந்து சிதறும் அப்பத்துண்டுகளை நாய்கள் உண்ணுகின்றனவே” என்றாள்.

28 பின்னர் இயேசு அவளை நோக்கி,, “பெண்ணே, உனக்கு மிகுந்த விசுவாசம் இருக்கின்றது! நான் செய்ய வேண்டுமென்று நீ விரும்பியதை நான் செய்கின்றேன்” என்று கூறினார். அதே நேரத்தில் அப்பெண்ணின் மகள் குணப்படுத்தப்பட்டாள். (மத்தேயு 15)

தந்து வருகையின் நோக்கத்தை கூறிய இயேசு, அந்த பெண்ணின் நம்பிக்கையை கண்டு உதவி செய்தார். அதன் பிறகு யூதரல்லாதோரை அவர் தேடி சென்று உபதேசம் செய்ததாகவோ உதவி செய்ததாகவோ தெரியவில்லை. 

யூதரல்லாதோருக்கு போதனை செய்ய தன் சீடர்களை அனுப்பினாரா?

மத்தேயு 10: அப்போஸ்தலர்களை அனுப்புதல்

1 இயேசு தமது பன்னிரண்டு சீஷர்களையும் ஒன்றாய் அழைத்தார். தீய ஆவிகளை மேற்கொள்ளும் வல்லமையை இயேசு அவர்களுக்கு வழங்கினார். எல்லா விதமான நோய்களையும் பிணிகளையும் குணப்படுத்தும் வல்லமையையும் இயேசு அவர்களுக்கு வழங்கினார். 2 அந்தப் பன்னிரண்டு அப்போஸ்தலர்களின் பெயர்கள் வருமாறு:

  1. சீமோன் (மற்றொரு பெயர் பேதுரு.)
  2. மற்றும் அவரது சகோதரன் அந்திரேயா,
  3. செபதேயுவின் மகன் யாக்கோபு மற்றும்
  4. அவரது சகோதரன் யோவான்,
  5. பிலிப்பு
  6. மற்றும் பார்த்தலோமியு,
  7. தோமா
  8. மற்றும் வரி வசூலிக்கும் அதிகாரியான மத்தேயு,
  9. அல்பேயுவின் மகன் யாக்கோபு,
  10. ததேயு,
  11. சீலோத்தியனாகிய சீமோன் மற்றும் யூதா ஸ்காரியோத்து.
  12. இயேசுவை அவரது எதிரிகளிடம் காட்டிக் கொடுத்தவன் இந்த யூதாஸ் ஆவான்.
இயேசு இந்தத் தமது பன்னிரண்டு சீஷர்களுக்கும் சில கட்டளைகளைப் பிறப்பித்தார். பின் அவர்களை மக்களுக்குப் பரலோக இராஜ்யத்தைப்பற்றிக் கூறுவதற்கு அனுப்பினார். இயேசு அவர்களிடம்,, “யூதர்களல்லாதவர்களிடம் செல்லாதீர்கள். மேலும் சமாரிய மக்கள் வசிக்கும் நகரங்களுக்கும் செல்லாதீர்கள். 6 ஆனால் இஸ்ரவேல் மக்களிடம் (யூதர்களிடம்) செல்லுங்கள். அவர்கள் காணாமல் போன ஆடுகளைப் போன்றவர்கள். (மத். 10:5-6)

எனவே பழைய ஏற்ப்பாட்டு கட்டளைகளுக்கு முரண்படாமல், அவைகளின் நீட்சியாக இயேசுவின் போதனைகள் உள்ளதோடு, அவரின் பிரதான நோக்கமாக யூதர்கள் மட்டுமே இருந்து வந்துள்ளனர் என்பது இதன்மூலம் நிரூபணம் ஆகிறது. 

ஒருவேளை ஒருசில கிறிஸ்தவர்கள் பழைய ஏற்ப்பாட்டை நிராகரித்து புதிய ஏற்பாட்டை மட்டும் பின்பற்றினால் பல கட்டளைகள் முழுமையாக இருக்காது. பல கேள்விகளுக்கு புதிய ஏற்பட்டுடன் சேர்த்து புரிந்து கொள்ள முயன்றால்தான் முழுமையான பதில் கிடைக்கும். 

யூதர்களின் கோணத்தில் ஆராய்ந்தால் சில அடிப்படை கேள்விகள் உண்டு. 

இயேசு யூத பாரம்பரியத்தில் வந்தவரா? 

1 இயேசு கிறிஸ்துவின் குடும்ப வரலாறு பின்வருமாறு: தாவீதின் வழி வந்த வர் இயேசு. தாவீது ஆபிரகாமின் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

2 ஆபிரகாமின் மகன் ஈசாக்கு.
ஈசாக்கின் மகன் யாக்கோபு.
யாக்கோபின் பிள்ளைகள் யூதாவும் அவன் சகோதரர்களும். 
 
3 யூதாவின் மக்கள் பாரேசும் சாராவும் (அவர்களின் தாய் தாமார்.)
பாரேசின் மகன் எஸ்ரோம்.
எஸ்ரோமின் மகன் ஆராம். 
 
4 ஆராமின் மகன் அம்மினதாப்.
அம்மினதாபின் மகன் நகசோன்
நகசோனின் மகன் சல்மோன்.

5 சல்மோனின் மகன் போவாஸ்.
(போவாசின் தாய் ராகாப்.)
போவாசின் மன் ஓபேத்.
(ஓபேத்தின் தாய் ரூத்.)
ஓபேத்தின் மகன் ஈசாய்.

6 ஈசாயின் மகன் அரசனான தாவீது.
தாவீதின் மகன் சாலமோன்.
(சாலமோனின் தாய் உரியாவின் மனைவி.)

7 சாலமோனின் மகன் ரெகொபெயாம்.
ரெகொபெயாமின் மகன் அபியா.
அபியாவின் மகன் ஆசா.

8 ஆசாவின் மகன் யோசபாத்.
யோசபாத்தின் மகன் யோராம்.
யோராமின் மகன் உசியா.

9 உசியாவின் மகன் யோதாம்.
யோதாமின் மகன் ஆகாஸ்.
ஆகாஸின் மகன் எசேக்கியா.

10 எசேக்கியாவின் மகன் மனாசே.
மனாசேயின் மகன் ஆமோன்.
ஆமோனின் மகன் யோசியா.

11 யோசியாவின் மக்கள் எகொனியாவும்
அவன் சகோதரர்களும். (இக்காலத்தில்தான் யூதர்கள் பாபிலோனுக்கு அடிமைகளாகக் கொண்டு செல்லப்பட்டனர்.)

12 அவர்கள் பாபிலோனுக்குக் கொண்டு செல்லப்பட்ட பின்:
எகொனியாவின் மகன் சலாத்தியேல்.
சலாத்தியேலின் மகன் சொரொபாபேல்.

13 சொரொபாபேலின் மகன் அபியூத்.
அபியூத்தின் மகன் எலியாக்கீம்.
எலியாக்கீமின் மகன் ஆசோர்.

14 ஆசோரின் மகன் சாதோக்.
சாதோக்கின் மகன் ஆகீம்.
ஆகீமின் மகன் எலியூத்.

15 எலியூத்தின் மகன் எலியாசார்.
எலியாசாரின் மகன் மாத்தான்.
மாத்தானின் மகன் யாக்கோபு.

16 யாக்கோபின் மகன் யோசேப்பு.
யோசேப்பின் மனைவி மரியாள்.
மரியாளின் மகன் இயேசு. கிறிஸ்து என
அழைக்கப்பட்டவர் இயேசுவே.

17 எனவே ஆபிரகாம் முதல் தாவீதுவரை பதினான்கு தலைமுறைகள். தாவீது முதல் யூதர்கள் அடிமைப்பட்டு பாபிலோனுக்குக் கொண்டு செல்லப்பட்டதுவரைக்கும் பதினான்கு தலைமுறைகள். யூதர்கள் பாபிலோனுக்குக் கொண்டு செல்லப்பட்டதிலிருந்து கிறிஸ்து பிறக்கும்வரை பதினான்கு தலைமுறைகள். (மத்தேயு 1)

யூதர்களுக்கு ஆசிரியராக வர ஒரு யூதர் தான் தேர்வு செய்யப்படுவார், என்கிற கோணத்தில் இயேசு யூதர்தான் என்பதோடு அவர் தாவீதின் வம்சம் என்பதை இங்கு காணமுடிகிறது.

இயேசுவை பற்றிய யூத நூல்களில் தீர்க்கதரிசனம் உண்டா?  

 இயேசுவின் பிறப்பைப் பற்றி  
 
13 பிறகு ஏசாயா, “தாவீதின் குடும்பமே, கவனமாகக் கேளுங்கள்! நீங்கள் ஜனங்கள் பொறுமையைச் சோதிக்கிறீர்கள். அது உங்களுக்கு முக்கியமாகப்படவில்லை. எனவே இப்பொழுது என் தேவனுடைய பொறுமையைச் சோதிக்கிறீர்கள்.

14 ஆனால் எனது தேவனாகிய ஆண்டவர் உனக்கு ஒரு அடையாளம் காட்டுவார். இந்த இளம் கன்னிப் பெண்ணைப் பாரும். இவள் கர்ப்பமாக இருக்கிறாள். இவள் ஒரு மகனைப் பெறுவாள் அவள் அவருக்கு இம்மானுவேல் என்று பெயரிடுவாள்.

15 இம்மானுவேல் வெண்ணெயையும் தேனையும் தின்பார், அவர் இவ்வாறு வாழ்வார், நல்லவற்றை எவ்வாறு செய்வது என்றும் பாவத்தை எவ்வாறு செய்யாமல் விடுவது என்றும் வாழ்ந்துக்காட்டுவார்.

16 ஆனால் அக்குழந்தை நன்மை தெரிந்து தீமையை வெறுக்க கற்றுக்கொள்ளும் வயது வரும் முன்னால், எப்பிராயீம் (இஸ்ரவேல்) மற்றும் ஆராம் நாடு காலியாகிவிடும். நீ இப்பொழுது அந்த இரண்டு நாட்டு அரசர்கள் பற்றியும் பயப்படுகிறாய். (ஏசாயா 7)

 10 அவரை நசுக்கிவிட கர்த்தர் முடிவுசெய்தார். அவர் துன்பப்படவேண்டும் என்று கர்த்தர் முடிவு செய்தார். அவன் ஆத்துமா தன்னைத்தானே மீட்டுக்கொண்டால். ஆனால், மிக நீண்ட காலத்திற்குப் புதிய வாழ்க்கை வாழ்வார். அவரது ஜனங்களை அவர் பார்ப்பார். அவர் என்ன செய்ய வேண்டுமென்று கர்த்தர் விரும்பினாரோ அதனை அவர் முழுமையாகச் செய்துமுடிப்பார். (ஏசாயா 53)

 ஏசாயா 9:6 : “நமக்கு ஒரு குழந்தை பிறந்திருக்கிறது, நமக்கு ஒரு மகன் கொடுக்கப்பட்டிருக்கிறார், அரசாங்கம் அவருடைய தோளில் இருக்கும். அவர் அற்புதமான ஆலோசகர், வல்லமையுள்ள கடவுள், நித்திய பிதா, சமாதான இளவரசர் என்று அழைக்கப்படுவார். 

மீகா 5:2 : "பெத்லேகேமில் மேசியா பிறப்பார் 2 எப்பிராத்தா என்று அழைக்கப்படும் பெத்லேகேமே, நீதான் யூதாவிலேயே சிறிய நகரம். உனது குடும்பம் எண்ண முடியாத அளவிற்குச் சிறியது, ஆனால் “இஸ்ரவேலை ஆள்பவர்” எனக்காக உங்களிடமிருந்து வருவார். அவரது துவக்கங்கள் நீண்ட காலத்திற்கு முன்பாகவும் பழங்காலத்திலிருந்தும் இருக்கின்றன.

இயேசுவின் ஊழியம் மற்றும் மரணத்தைப் பற்றி — சகரியா 9:9 : “சீயோன் குமாரத்தியே, மிகவும் சந்தோஷப்படு! எருசலேமின் மகளே, கத்தவும்! இதோ, உன் ராஜா நீதியுள்ளவனும், இரட்சிப்பை உடையவனும், சாந்தகுணமுள்ளவனும், கழுதையின் மீதும், கழுதைக்குட்டியின்மேலும் ஏறி உன்னிடத்தில் வருகிறான்." 

சங்கீதம் 22:16-18 : “நாய்கள் என்னைச் சூழ்ந்துள்ளன; ஒரு தீய மனிதர்கள் என்னைச் சூழ்ந்துகொண்டார்கள், அவர்கள் என் கைகளையும் கால்களையும் துளைத்தார்கள். என் எலும்புகள் அனைத்தையும் என்னால் எண்ண முடியும்; மக்கள் என்னைப் பார்த்து மகிழ்கிறார்கள். என் வஸ்திரங்களைத் தங்களுக்குள் பங்கிட்டு, என் ஆடைகளுக்குச் சீட்டுப் போடுகிறார்கள்”

ஏசாயாவின் 53வது அத்தியாயமே இயேசுவைப் பற்றிய தெளிவான தீர்க்கதரிசனமாக இருக்கலாம். ஏசாயா 53:3-7 குறிப்பாக தெளிவாக உள்ளது: “அவர் மனிதர்களால் இகழ்ந்து நிராகரிக்கப்பட்டார், துக்கங்கள் நிறைந்தவர், துன்பங்களை நன்கு அறிந்தவர். மனிதர்கள் தங்கள் முகங்களை மறைத்துக் கொள்ளும் ஒருவரைப் போல அவர் இகழ்ந்தார், நாங்கள் அவரை மதிக்கவில்லை. நிச்சயமாக, அவர் நம்முடைய பலவீனங்களை ஏற்றுக்கொண்டார், நம்முடைய துக்கங்களைச் சுமந்தார், ஆனால் நாங்கள் அவரைக் கடவுளால் அடிக்கப்பட்டார், அவரால் அடிக்கப்பட்டார், துன்பப்பட்டார் என்று கருதினோம். ஆனால் அவர் நம்முடைய மீறுதல்களினிமித்தம் குத்தப்பட்டார், நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தைத் தந்த தண்டனை அவர்மேல் இருந்தது, அவருடைய காயங்களால் நாம் குணமடைந்தோம். நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதவறிப்போய், அவனவன் தன்தன் வழிக்குத் திரும்பினோம்; கர்த்தர் நம் எல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் சுமத்தினார். அவர் ஒடுக்கப்பட்டும், துன்புறுத்தப்பட்டும் இருந்தபோதிலும், அவர் வாய் திறக்கவில்லை; அவன் ஆட்டுக்குட்டியைப்போலக் கொல்லப்படுவதற்குக் கொண்டுபோகப்பட்டான், செம்மறி ஆடு மவுனமாய் இருக்கிறான், அதனால் அவன் வாயைத் திறக்கவில்லை."
 
எனவே இயேசு யூதர் என்பது மட்டுமல்லாமல் அவரின் வருகை ஏற்கனவே பல தீர்க்க தரிசிகள் மூலம் முன்னறிவிக்கப்பட்டு உள்ளது. யூத தீர்க்கதரிசிகள் மூலம் முன்னறிவிக்கப்பட்ட தீர்க்க தரிசி எப்படி யூத மதத்தை சாராதவராக இருப்பார்? 

எனவே இயேசுவின் போதனைகள் யூத மத புத்தகங்களோடு சேர்த்து புரிந்து கொள்ளப்பட வேண்டியவைகள். இயேசு யூதமதத்தை சார்ந்தவர்.
சரி அப்படி என்றால் கிறித்தவம்? அது இயேசுவின் இறப்புக்கு பிறகு ஏறக்குறைய 300 ஆண்டுகளுக்கு பிறகு பவுல் என்பவரால் மோசேயின் இயேசுவின் கொள்கைக்கு முரணாக பல செய்திகளை உள் திணித்து உண்டாக்கிய புதிய பைபிளை கொண்டு உருவாக்கிய மதம் தான் கிறிஸ்தவம். கிறிஸ்த்தவத்துக்கும் கிறிஸ்துவுக்குமே சம்பந்தம் இல்லை. பழைய ஏற்பாட்டோடு இயேசுவின் உண்மை சீடர்கள் எழுதிய சுவிசேஷங்கள் தான் சேர்க்கப்படவேண்டுமே தவிர பவுல் பலருக்கு எழுதிய கடிதங்கள் அல்ல.