பாவமன்னிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாவமன்னிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

இறைவன் ஒருவனே என்பதை ஏற்றால் பாவம் மன்னிக்கப்படுமா?

தமிழர் சமயம் 

எல்லார்க்கு மொன்றே சிவமாவ தென்றுணர்ந்த
பல்லோர்க்கு முண்டோ பவம். - (ஞானக்குறள் 124) 
 
கருத்து: உயிர்கள் எல்லாவற்றுக்கும் ஒரே தெய்வம் என்று ஆய்ந்து உணர்ந்த பலருக்கு அவர் முன் செய்த பாவம் அவரது கணக்கில் இருக்குமா? 

இஸ்லாம் 

"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'ஒருவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டால், அவர் முன்பு செய்த ஒவ்வொரு நற்செயலுக்கும் அல்லாஹ் கூலியை விதிப்பான், மேலும் அவர் முன்பு செய்த ஒவ்வொரு பாவமும்  அழிக்கப்படும். அதன் பிறகு கணக்கு உண்டு; ஒவ்வொரு நல்ல செயலுக்கும் பத்து மடங்கு முதல் எழுநூறு மடங்கு வரை வெகுமதி அளிக்கப்படும். வல்லமையும் மேன்மையுமான அல்லாஹ் மன்னிக்காத வரையில் ஒவ்வொரு கெட்ட செயலும் அப்படியே பதிவு செய்யப்படும். (சுனன் அல்-நசயீ)

ஆனால், எவர்கள் நம்பிக்கை கொண்டு, நல்ல செயல்கள் செய்து, முஹம்மது மீது இறக்கி அருளப்பட்ட (வேதத்)தின் மீது - இது அவர்களுடைய இறைவனிடமிருந்து (வந்து)ள்ள உண்மையாக இருக்கிறது என்று நம்பிக்கை கொள்கிறார்களோ, அவர்களுடைய தீமைகளை அவர்களை விட்டும் போக்கி, அவர்களுடைய நிலையையும் சீராக்குகின்றான். (குர்ஆன் 47:2)

 இஸ்லாத்தை ஏற்கும் முறைமை என்ன?

"அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு" (புகாரி 3861)

கருத்து: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர யாரும் இல்லை எனவும் முஹம்மது நபி அவர்கள் அல்லாஹ்வின் தூதர் எனவும் நான் உறுதியாக நம்புகிறேன் என்று மனதால் நம்பி வாயால் மொழிந்தால் ஒருவர் முஸ்லிமாகி விடுவார். 

கிறிஸ்தவம்

 இயேசுவில் நம்பிக்கை வைக்கிற ஒவ்வொரு மனிதனும் தன் பாவங்களிலிருந்து மன்னிக்கப்படுவான். இயேசுவின் பெயரால் தேவன் அம்மனிதனின் பாவங்களை மன்னிப்பார். இது உண்மையென்று எல்லா தீர்க்கதரிசிகளும் கூறுகின்றனர்” என்றான். (அப்போஸ்தலர் 10:43)

இயேசுவின் முக்கிய போதனை என்ன? 

வேதபாரகர்களில் ஒருவன் இயேசுவிடம் வந்தான். அவன் இயேசுவும் சதுசேயர்களும், விவாதிப்பதைக் கேட்டான். இயேசு அவர்களுக்கு நல்ல பதில் கொடுப்பதைப் பார்த்தான். எனவே அவன் இயேசுவிடம், “கட்டளைகளுள் எது மிக முக்கியமானது?” என்று கேட்டான். அதற்கு இயேசு, “‘இஸ்ரவேலின் மக்களே! கவனியுங்கள். நமது தேவனாகிய கர்த்தரே உண்மையான ஒரே கர்த்தர். 30 நீங்கள் அவரிடம் அன்பாய் இருக்க வேண்டும். அவரிடம் நீங்கள் முழு மனதோடும், முழு ஆத்துமாவோடும், முழு இதயத்தோடும் முழு பலத்தோடும், அன்பாய் இருக்க வேண்டும்.’ இது முதல் கட்டளை (மாற்கு 12:28-29)

பாவமன்னிப்பு

தமிழர் மதம்


அஞ்சினாய் ஏனும் அடைவது அடையுங்காண்
துஞ்சினாய் என்று வினைவிடா - நெஞ்சே
அழுதாய் எனக்கருதிக் கூற்று ஒழியாது ஆற்றத்
தொழுதேன் நிறையுடையை ஆகு. - (அறநெறிச்சாரம் பாடல் - 78)

விளக்கவுரை தீவினைப் பயனைப் பொறுக்காது இறந்தாய் என்று எண்ணிச் செய்த வினைகளால் அடையவேண்டியதை அடையாமல் போகாய். அந்த வினைப்பயனை அஞ்சி அழுதாய் என வந்த காலனும் போகான். (ஆதலால்) வினைப்பயனை ஆற்ற உன்னை வணங்கினேன்! நிறைந்த தன்மையைக் கொண்டவனாதலால்
 

இந்துமதம்


ரிக்வேதத்தில் பாவ மன்னிப்பு துதிகள்

“நாங்கள் எங்களை அன்பாக நேசிக்கும் மனிதனுக்கு எதிராகவோ சகோதரனுக்கு எதிராகவோ, நண்பனுக்கு எதிராகவோ, சகாவுக்கு (கூட்டாளி) எதிராகவோ, எங்களுக்குப் பக்கத்தில் வசிப்பவனுக்கு எதிராகவோ, முன்பின் தெரியாத ஒருவனுக்கு எதிராகவோ பாவம் (தீங்கு) செய்திருந்தால், ஓ வருண பகவானே அவைகளை நீக்குவாயாக. விளையாட்டில் யாரையாவது ஏமாற்றி இருந்தாலோ தெரிந்தோ தெரியாமலோ பாவம் செய்திருந்தாலோ அவற்றையும் நீக்குக இந்த எல்லா பாவங்களையும், கட்டுகளை அவிழ்ப்பது போல அவிழ்த்துவிடு- (RV V, 85, 7&8)

 “எங்கள் தந்தையர் செய்த பாவவங்களில் இருந்து எங்களை விடுவிப்பாயாக; எங்கள் தேகத்தினால் செய்த பாவங்களிலிருந்தும் விடுவி. நாங்கள் திட்டமிட்டு செய்த பாவம் இல்லை; ஓ வருணா! நாங்கள் குடித்த பானமோ, உணர்ச்சிவசமோ, சூதாட்டமோ, சிந்திக்க மறந்ததாலோ தவறான வழியில் செலுத்தப்பட்டுவிட்டோம்; வலுவானவர், பலவீனமானவரை தீய வழிகளில் செலுத்துகின்றனர்; தூக்கம் கூட அதர்மத்துக்கு வழிகோலுகிறது – (7-86)

எவ்வளவு பாவங்களை உங்களுக்கு எதிராகச் செய்தாலும்  எங்களை மன்னித்து விடுக (2-27-14)

எங்கள் வாழ்நாட்க ளை நீட்டியுங்கள் பாவங்களை துடைத்து அழியுங்கள் (1-157-4)

இந்த மானுட உலகத்தில் அறிவீனத்தால் நாங்கள் இழைத்த பாவங்களை பெருமைமிகு அதிதிக்கு முன்னால் அடியோடு அகற்றிவிடு; நாங்கள் செய்த கொடுமைகளைத் துடைத்தொழி (4-12-4)

..நாங்கள் ரஹசியமாகவோ பகிரங்கமாகவோ செய்த எந்த பாவச் செயல்கள் உங்கள் கோபத்தைத் தூண்டிவிட்டது? விரைவாக அவைகளை அழிப்பாயாக - (7-58-5)

செய்த பாவவங்களில் இருந்தும் செய்யாத பாவங்களில் இருந்தும் எங்களைப் காப்பாற்றுங்கள்! இன்று எங்களை எல்லாப் பாவங்களில் இருந்தும் விடுவித்து மகிழ்ச்சியை அருளுக (10-63-8)

கிறிஸ்தவம்


1 கர்த்தாவே, நான் மிகுந்த துன்பத்திற்குள்ளாயிருக்கிறேன், எனவே நான் உதவிக்காக உம்மைக் கூப்பிட்டுக்கொண்டிருக்கிறேன். 2 என் ஆண்டவரே, எனக்குச் செவிகொடும். உதவிக்காக எழுப்பும் என் குரலைக் கேளும். 3 கர்த்தாவே, ஜனங்கள் செய்கிற எல்லாப் பாவங்களுக்காகவும் நீர் அவர்களைத் தண்டித்தால் ஒருவனும் உயிரோடிருக்கமாட்டான். 4 கர்த்தாவே, உமது ஜனங்களை மன்னியும். அப்போது உம்மைத் தொழுதுகொள்வதற்கு ஜனங்கள் இருப்பார்கள். (சங்கீதம் 130)

இஸ்லாம்


அவன்தான் தன் அடியார்களின் பாவமன்னிப்பு கோறுதலை ஏற்றுக்கொள்கின்றான், அவர்களின் குற்றங்களை மன்னிக்கின்றான். இன்னும், நீங்கள் செய்வதை அவன் நன்கறிகிறான்.” (அஷ்ஷுறா 25)

தௌபா: “தௌபா” என்றால் “பாவமன்னிப்பு” என்றாலும். அதற்கு நான்கு நிபந்தனைகள் இருக்கின்றன. அந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு வினவப் படுகின்றபோதே அது ‘தௌபா’வாக கருதப்படும். அவைகளில் மூன்று நிபந்தனைகள் பொதுவானவையாகவும் , ஒரு நிபந்தனை ”ஹுகூகுல் இபாத்” அதாவது மனிதர்களுக்கு மத்தியிலுள்ள உரிமைகளுடன் தொடர்புபட்டதாகும். அவைகளாவன,

முதலாவது: தான் செய்த பாவத்தை நினைத்து பரிதாபப்படுவது.

இரண்டாவது: அப்பாவத்தை விட்டு முழுமையாக நீங்குவது.

மூன்றாவது: அப்பாவத்தை நோக்கி மீண்டும் ஒருபோதும் செல்லமாட்டேன் என்ற உறுதிப்பாடு.

நான்காவது: ஒரு மனிதன் மற்றொரு மனிதனுக்கு தீங்கிழைத்துவிட்டால். பாதிக்கப்பட்ட மனிதனிடம்போய் மன்னிப்புக்கோர வேண்டும். இல்லை என்றால் அதுவரை அல்லாஹுத்தஆலா மன்னிக்க மாட்டான்.

நிபந்தனை

இஸ்திஃபார்: “இஸ்திஃபார்” என்ற சொல்லுக்கும் தமிழில் “பாவமன்னிப்பு” என்றே கூறப்படும். சிலவேலை இஸ்திஃபார் என்பது மேலே கூறப்பட்ட தௌபாவாகவும் இருக்கலாம். சிலவேலை நமது நாவினால் கூறக்கூடிய வார்த்தைகளாகிய “அஸ்தஃபிருல்லாஹ்” (أسْتَغْفِرُ اللهَ) அல்லது ”அல்லாஹும்ம இஃபிர்லீ” (اللَّهُمَّ اغْفِرْ لِي) என்பதாகவும் இருக்கலாம். எனவே, தௌபாவுடைய நிபந்தனைகள் இஸ்திஃபாரிலே ஒன்று சேர்ந்தால் அந்த இஸ்திஃபாரை “தௌபா” என்றும் அழைக்கலாம். அப்படி தௌபாவின் நிபந்தனைகள் இன்றி கேட்கப்படும் பாவமன்னிப்பு “இஸ்திஃபார்” என்று கூறப்படும்.

எனவே, தௌபா என்பது பாவத்திலிருந்து முழுமையாக நீங்கி தனது இறைவனிடத்தில் முழுமையாக மீள்வதையும், இஸ்திஃபார் என்பது அல்லாஹ்விடத்தில் தனது பாவத்திற்கான மன்னிப்பு வேண்டுவதை நாடுவதையும் குறிக்கும்.