மது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மது

தமிழர் சமயம்


துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர். - (குறள் 926)

மணக்குடவர் உரை: உறங்கினார் செத்தாரோடு ஒப்பர், அறிவிழத்தலான்; அதுபோல எல்லாநாளும் கள்ளுண்பார் நஞ்சுண்பவரோடு ஒப்பர், மயங்குதலான். இஃது அறிவிழப்பரென்றது.

மயங்குந் தியங்குங்கள் வாய்மை அழிக்கும்
இயங்கும் மடவார்தம் இன்பமே எய்தி
முயங்கும் நயங்கொண்ட ஞானத்து முந்தார்
இயங்கும் இடையறா ஆனந்தம் எய்துமே. - (திருமந்திரம் 317)

(ப. இ.) மெய்ம்மையினையும் மெய்ப்பொருள் உண்மையினையும் அழித்தொழிக்கும் பழிபடு கள்ளினை யுண்பார் வழி குழி தெரியாது வீழ்ந்து மயங்குவர். தீராப் பெருந்துன்பம் எய்தித் தியங்குதலாகிய கலக்கமுற்றுக் கவலைகூர்வர். மேலும் அவர் பிறப்பு இறப்பு ஆகிய பெருந் துன்பத்துள் வீழ்த்தி இயக்கும் இழிகாமமும் கழிகாமமும் மாறாப் பெண்ணியலாரை நண்ணுவர். அம் மடவார் தரும் சிற்றின்பமே முற்றின்பமாகக் கொண்டு முயங்குவர். இறைவன் திருவடியுணர்வாகிய சிறந்த நயமிக்க சிவஞானஞ்சேர்ந்து முதன்மையடையார். இந் நிலையினால் பிறழா நிகழ்ச்சியாய் என்றும் நிகழும் இடையறா இன்புமாம். திருவடிப்பேற்றினைக் கள்ளுண்பான் எய்தான். எய்துமே : ஏகாரம் எதிர்மறை. முந்தார் முதன்மையடையார். இயங்கும் மடவார்: இயங்கும் பிறவினைப் பொருளில் வந்த தன்வினை; பிறப்பு இறப்புக்களில் உழலச் செய்து இயக்கும் பெண்ணியலார்.

இஸ்லாம்


புத்தியை பேதலிக்கச் செய்து, போதையை ஏற்படுத்தக் கூடிய அனைத்தும் – அது குறைவாக இருந்தாலும் அதிகாமாக இருந்தாலும் – ஹராமாகும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘போதை தரக்கூடியது அதிகமாக இருந்தாலும், குறைவாக இருந்தாலும் ஹராமாகும்’ அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: அபூதாவூத்.

மது மற்றும் சூதாட்டம் பற்றி (முஹம்மதே) உம்மிடம் கேட்கின்றனர்.அவ்விரண்டிலும் பயன்களும் உள்ளன. அவ்விரண்டின் பயனை விட கேடு இவ்வுலகிலும் மறுமையிலும் மிகப் பெரியது எனக் கூறுவீராக! (குர்ஆன் 2:219)

மதுபானத்தையும், அதை பருகுபவரையும், பிறருக்குப் பருகக் கொடுப்பவரையும், அதை விற்பவரையும் அதை வாங்குபவரையும், அதை (பிறருக்கு) தயார் செய்து கொடுப்பவரையும், (தானே) தயார் செய்து கொள்ப வரையும், அதை சுமந்து செல்பவரையும், யாருக்காக அது சுமந்து செல்லப்படுகிறதோ அவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) (நூல்: இப்னு மாஜா 3371)

அதிகம் போதை தரக் கூடிய பொருளில் குறைவானதும் தடுக்கப்பட்டது (ஹராம்) தான் என்று நபிகள் நாயகம் அவர்கள் கூறினார்கள். - அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) (நூல்: திர்மிதீ 1788 நஸயீ 5513. 3725.)

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்: தோல் பையில் தவிர வேறெதிலும் பழச் சாறுகளை ஊற்றிவைக்க வேண்டாம் என உங்களுக்குத் தடை விதித்திருந்தேன். இனி நீங்கள் எல்லாப் பாத்திரங்களிலும் பருகுங்கள். ஆனால் போதை தரக் கூடிய எதையும் பருகாதீர்கள். (முஸ்லிம் 3995)

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் அவர்களிடம் தேனிலிருந்து தயாரிக்கப்படும் பானம் (பித்உ) குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் போதை தரும் ஒவ்வொரு பானமும் தடை செய்யப்பட்டதாகும் என்று பதிலளித்தார்கள். - (முஸ்லிம் 4071)


கிறிஸ்தவம் & யூதமதம் 


கர்த்தர் ஆரோனை நோக்கி: நீயும் உன்னோடேகூட உன் குமாரரும் சாகாதிருக்கவேண்டுமானால், ஆசரிப்புக் கூடாரத்துக்குள் பிரவேசிக்கிறபோது, திராட்சரசத்தையும் (Wine) மதுவையும் (Strong Drink) குடிக்கவேண்டாம். பரிசுத்தமுள்ளதற்கும் பரிசுத்தமில்லாததற்கும், தீட்டுள்ளதற்கும் தீட்டில்லாததற்கும், வித்தியாசம்பண்ணும்படிக்கும், கர்த்தர் மோசேயைக்கொண்டு இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்ன சகல பிரமாணங்களையும் அவர்களுக்குப் போதிக்கும்படிக்கும், இது உங்கள் தலைமுறைதோறும் நித்திய கட்டளையாயிருக்கும் என்றார். - (லேவியராகமம் : 10: 8 - 11)

திராட்சரசம் பரியாசஞ்செய்யும், மதுபானம் அமளிபண்ணும். அதினால் மயங்குகிற ஒருவனும் ஞானவானல்ல. - (நீதிமொழிகள் 20:1)

ஆனாலும் இவர்களும் (Wine) திராட்சரசத்தால்மயங்கி, (Stong Drink) மதுபானத்தால் வழி தப்பிப்போகிறார்கள். ஆசாரியனும் தீர்க்கதரிசியும் மதுபானத்தால் மதிமயங்கி, திராட்சரசத்தால் விழுங்கப்பட்டு, சாராயத்தினால் வழிதப்பி, தீர்க்கதரிசனத்தில் மோசம்போய், நியாயந்தீர்க்கிறதில் இடறுகிறார்கள். - (ஏசாயா 28:7)

அவன் (யோவான் ஸ்னானன்) கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாயிருப்பான், (Wine) திராட்சரசமும் (Stron Drink) மதுவும் குடியான், தன் தாயின் வயிற்றிலிருக்கும்போதே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருப்பான். - (லூக்கா 1:15)

மருத்துவ ஆய்வு வெளியீடு 

புற்றுநோய் ஆபத்து முதல் துளி ஆல்கஹால் தொடங்குகிறது: WHO 

புற்றுநோய்க்கான ஆபத்து முதல் துளி மதுவில் இருந்து தொடங்குகிறது, எந்த அளவு ஆல்கஹால் மனித ஆரோக்கியத்திற்கு பாதுகாப்பானது என்று கூற முடியாது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

தி லான்செட் பப்ளிக் ஹெல்த் இதழில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் “ஆல்கஹால் நுகர்வு என்று வரும்போது, ​​ஆரோக்கியத்தைப் பாதிக்காத பாதுகாப்பான அளவு எதுவும் இல்லை.” என்று குறிப்பிட்டுள்ளது.

யூத பயங்கரவாதிகளின் இரகசிய திட்டம் நூலிலிருந்து - page 7