இஸ்லாம்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூதர் (ரலி) அறிவிப்பதாவது: ‘மூன்று மனிதர்களிடம் இறைவன் பேசவும் மாட்டான், இன்னும் இறுதிநாளில் அவன் அவர்களை கருணையுடன் பார்க்கவும் மாட்டான். அவர்களைப் பரிசுத்தமாக்கவும் மாட்டான். மேலும், அவர்களுக்கு நோவினை மிக்க வேதனையும் உண்டு (திருக்குர்ஆன் 3:77) என்ற வசனத்தை நபி (ஸல்) மூன்று முறை ஓதினார்கள். ‘அல்லாஹ்வின் தூதரே, நஷ்டமடைந்துவிட்ட, தோல்வியடைந்துவிட்ட அம்மக்கள் யார்?’ என அபூதர் (ரலி) கேட்டார்கள். ‘தமது கீழ் ஆடையைக் கரண்டைக் காலுக்குக் கீழே தொங்கவிடுபவர், உபகாரம் செய்து விட்டுச் சொல்லிக் காட்டுபவர், பொய்ச் சத்தியம் செய்து தமது பொருளை விற்பவர்’ என நபி (ஸல்) கூறினார்கள்’. (நூல்:முஸ்லிம்)
கிறிஸ்தவம்
நீங்கள் நற்செயல்களைச் செய்யும்பொழுது, அவற்றை மக்களின் முன்னிலையில் செய்யாதபடி எச்சரிக்கையுடன் இருங்கள்! மக்கள் காணவேண்டும் என்பதற்காக அவற்றைச் செய்யாதீர்கள். நீங்கள் அவ்வாறு செய்தால், பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதாவிடமிருந்து எந்த வெகுமதியும் கிடைக்காது. நீங்கள் ஏழை மக்களுக்கு உதவும்பொழுது, நீங்கள் உதவுவதை விளம்பரம் செய்யாதீர்கள். (மத்தேயு 6:1-2)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக