இயற்கை வழிபாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இயற்கை வழிபாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தமிழர்கள் இயற்கையை வழிபட்டார்களா?

இந்தக்கேள்விக்கு விடைகாணும் முன், இந்த கருத்தை கொண்டவர்கள் யார் யார் என்று பார்ப்போம். 

சார்லஸ் டார்வினின் பரிணாம கொள்கையை அங்கீகரித்தவர்களின் கூற்றே ஆதியில் தமிழர்கள் இயற்கையை வழிபட்டார்கள் என்கிற கருத்தை வலுவாக பற்றிப் பிடித்து இருப்பவர்கள். உதாரணமாக, சமீபத்தில் தமிழக முதலமைச்சரரின் இந்த கருத்துக்கு அடிப்படை என்ன என்று ஆராய்ந்தால், தமிழ் தொன்மையானது என்பது நிதர்சனமாக இருந்தும் டார்வினின் கொள்கை உண்மையானது என நம்புவதே ஆகும். இது தொடர்பாக ஆய்வாளர் மன்னர் மன்னனும் சில காணொளிகளை வெளியிட்டார். கா1 கா2 கா3 கா4


 மனிதன் படைக்கப்பட்டனா அல்லது பரிணமித்தானா என வேறொரு பதிவில் காணலாம். அதற்கு முன் தமிழ் தொன்மையானது என்று அவர் நம்ப காரணமாக இருந்தது தமிழ் நூல்கள் மற்றும் அகழாய்வு முடிவுகள் ஆகும். நமது முயற்சியால் நாம் அடையும் அறிவை நூலோடு ஒருங்கே கொள்ளவேண்டும் என குறள் 636 சொல்வதால், அகழாய்வு முடிவுகளின் விளக்கம் நமது நூல்களுக்கு முரணாக இருக்க முடியாது. எனவே தமிழர் மறை நூல்கள் இயற்கை வணக்கத்தை பற்றி சொல்கிறதா அல்லது இயற்கையின் வரையறையோடு பொருந்தாத "தெய்வம்" என்ற ஒன்று இருப்பதாக சொல்கிறதா என்று பார்ப்போம்.

தொல்காப்பியம்

தெய்வஞ் சுட்டிய பெயர்நிலைக் கிளவியும்
இவ்வென அறியும் அந்தந் தமக்கிலவே
உயர்திணை மருங்கிற் பால்பிரிந் திசைக்கும். - (தொல்காப்பியம்)

 குறிப்பு: தெய்வம் பாலினமற்றது ஆனால் உயர்திணை எனும் தெளிவான வரையறை, இயற்கையின் கூறுகளான காற்று, நீர், சூரியன் போன்ற அஃறிணைகளை தமிழர்கள் தெய்வமாககொள்ளவில்லை என்று ஆணித்தரமாக கூறுகிறது.  

வழிபடு தெய்வம் நிற்புறம் காப்பப்
பழிதீர் செல்வமொடு வழிவழி சிறந்து
பொலிமின் என்னும் புறநிலை வாழ்த்தும் - (தொல்.பொருள்.செய்யுள்422) 

பொருள்: வழிபடுகின்ற தெய்வம் உன்னையும் உன் குடும்பத்தையும், சுற்றத்தையும் பாதுகாக்கட்டும்! குற்றமற்ற செல்வத்துடன் மக்களையும் குடிவழியினரையும், நீ பெற்று, வழிவழி சிறந்து நீடுவாழ்வாயாக!

குறிப்பு - 1) இயற்கை வழிபாடு என்றால் அதில் பன்மைக்கு இடமுண்டு ஆனால் தெய்வங்கள் என்று பன்மையில் இங்கே குறிப்பிடவில்லை. 2) "வழிபடு தெய்வம்" என்றால், தெய்வத்தால் கொடுக்கப்பட்ட வழிகாட்டுதலை பின்பற்றுதல் என்று பொருள். எனவே அஃறிணைகள் உயர்திணையான மனிதனுக்கு வழிகாட்டுதல்களை வழங்கியது என்று பொருள் கொள்ள முடியாது.

தொல்காப்பியத்தில், மாயோன் உட்பட நான்கு பெயர்களை நான்கு திணைகளுக்கான தெய்வங்களாக பொழிப்புரை வழங்கப் பட்டுவருகிறது. ஆனால் அவர்கள் தெய்வங்கள் இல்லை, அவர்கள் வழிநடத்துபவர்கள் என்பதை "மேய" என்ற வாரத்தை கூறுகிறது. இது தனி தலைப்பில் விளக்கப்பட்டுள்ளது. எனவே தொல்காப்பியம் இயற்கை வழிபாட்டை கூறவில்லை.

பரிபாடல்
அன்னவர் பட, அல்லா அவுணர்க்கும் முதல்வன் நீ;
அதனால், ‘பகைவர் இவர்; இவர் நட்டோர்‘ என்னும்
வகையும் உண்டோ, நின் மரபு அறிவோர்க்கே?... (பரிபாடல் 60)

...அவுணர்க்கும் (அசுரர்க்கும்) நீதான் முதலானவன் என்கிற இந்த கருத்து இயற்கை வழிபாட்டை குறிக்காது, ஏனென்றால் அவுணர் உலகின் இயற்க்கை வேறு அன்னவர் (மனிதர்) உலக இயற்க்கை வேறு. இவர் வேண்டியவர் இவர் வேண்டாதவர் என்ற வேறுபாடு உனக்கு இல்லை.  

அறநெறிச்சாரம்

ஆதியின் தொல்சீர் அறநெறிச் சாரத்தை
ஓதியும் கேட்டும் உணர்ந்தவர்க்குச் - சோதி
பெருகிய உள்ளத்த ராய் வினைகள் தீர்ந்து
கருதியவை கூடல் எளிது. (பாடல் - 1)

விளக்கவுரை : அனைத்ததின் தொடக்கமுமான தெய்வத்தின் மிக பழமையான சீர்மிகுந்த அறநெறிச்சாரம் என்னும் இந்நூலைக் கற்றும் கேட்டும் புரிந்தவர், ஞான ஒளி மிக்க மனம் உடையவராய், தீய வினைகள் நீங்கப்பெற்று, அவர்கள்

குறிப்பு: ஆதி என்பதன் பொருள் அனைத்தும் தோன்றுவதற்கு முன் என்று பொருளாம், அனைத்தும் என்பதில் இயற்கையும் அடங்கும் எனவே இதும் இயற்கை வழிபாட்டை குறிக்க வில்லை. 

நாலடியார்

வான்இடு வில்லின் வரவறியா வாய்மையால்
கால்நிலம் தோயாக் கடவுளை - யாம்நிலம்
சென்னி யுறவணங்கிச் சேர்தும்எம் உள்ளத்து
முன்னி யவைமுடிக என்று. - (கடவுள் வாழ்த்து)

பொருள்: வானிலே தோன்றும் வானவில்லின் தோற்றமும் மறைவும் அறிதற்காறிது; அதுபோலவே, பிறப்பு இறப்பு ஆகியவற்றின் இயல்புகளை அறிதலும் அரிதாம். இஃது உண்மையாதலால், பாதம் பூமியில் படியாத கடவுளை, 'எமது மனத்திலே நினைத்தவை நிறைவேற வேண்டும்' என்று பக்தியுடன் தரையில் தலை பொருந்துமாறு தாழ்ந்து பணிந்து தொழுவோமாக!  

குறிப்பு: நிலத்தில் கால் படாத இறைவன் என்பதில், சூரியன், காற்று, நீர், மரம், நடுகல், பசு, பாம்பு என எதுவும் அடங்காது. எனவே இதுவும் இயற்க்கை வழிபாடல்ல.

ஏலாதி

அறு நால்வர் ஆய் புகழ்ச் சேவடி ஆற்றப்
பெறு நால்வர் பேணி வழங்கிப் பெறும் நான் -
மறை புரிந்து வாழுமேல், மண் ஒழிந்து, விண்ணோர்க்கு
இறை புரிந்து வாழ்தல் இயல்பு. - (ஏலாதி கடவுள் வாழ்த்து)
 
(இ-ள்.) அறுநால்வர் - ஒவ்வொரு நந்தியும் வழிகாட்ட ஆறு நாதர்களாம், ஆக நான்கு நந்திகளுக்கு இருபத்தி நாலு நாதர்கள்  (நந்திகள் 4 * சமயத்துக்கு ஒரு நாதர் 1 * நந்தி ஒருவருக்கு ஆறு சமயம் 6 = 24),
ஆய் புகழ் - ஆய்ந்து அறியவேண்டிய புகழ் கொண்டவனின்,
சேவடி - பாதம் சேவகம் செய்யும்  
ஆற்றப்பெறு நால்வர் - நான்கு நந்திகளும், 
பேணிவழங்கி - முறையாக வழங்கி, 
பெறும் நால் மறை - பெறப்படும் நான்மறைகளை, 
புரிந்து - விரும்பி,
வாழுமேல் - வழிபடுவானேயானால், 
மண் ஒழிந்து - மண்ணுலகினின்றும் நீங்கி, 
விண்ணோர்க்கு -தேவர்களுக்கு, 
இறை புரிந்து - தலைமைபூண்டு, 
வாழ்தல் இயல்பு - இன்பத்துடன் வாழ்தல் உண்மையாகும்.

பொருள்: ஒவ்வொரு நந்தியும் வழிகாட்ட ஆறு நாதர்களாம், ஆக நான்கு நந்திகளுக்கு இருபத்தி நாலு நாதர்கள் ஆய்ந்து அறியவேண்டிய புகழ் கொண்டவனின்,  பாதம் சேவகம் செய்யும்  நான்கு நந்திகளும், முறையாக வழங்கி பெறப்படும் நான்மறைகளை விரும்பி வழிபடுவானேயானால் மண்ணுலகினின்றும் நீங்கி தேவர்களுக்கு தலைமைபூண்டு இன்பத்துடன் வாழ்தல் உண்மையாகும் 

குறிப்பு: நால்நந்திகள் தரும் நான்மறைகளை வழிபடும் (பின்பற்றும்) ஒருவன் வானுலகத்துக்கு தலைவனான இயல்பு. எனவே ஏலாதியும் இயற்க்கை வழிபாட்டை கூறவில்லை.