சூது

அறநெறிச்சாரம்: சூதால் உண்டாகும் தீமை 

ஓதலும் ஓதி உணர்தலும் சான்றோரால்
 மேதை எனப்படும் மேன்மையும் - சூது
 பொரும் என்னும் சொல்லினால் புல்லப்படுமேல்
 இருளாம் ஒருங்கே இவை. பாடல் -  87

 விளக்கவுரை சூதாடுவான் என்ற சொல்லால் ஒருவன் பற்றப்படுவானானால் அறிவு நூல்களைக் கற்றலும், கற்றவற்றை ஆராய்தலும், அறிவுடையவன் என்னும் பெருமையும் - இவை முழுதும் அவனை விட்டு மறையும்.

திருக்குறள் அதிகாரம் : சூது

சிறுமை பலசெய்து சீரழிக்குங் சூதின்
வறுமை தருவதொன் றில். - 934

பொருள்: சிறுமை பல செய்து சீர் அழிக்கும் சூதின் = தன்னை விழைந்தார்க்கு முன்னில்லாத பல துன்பங்கள் பலவற்றையும் விளைத்து உள்ளபுகழையும் கெடுக்கும் சூதுபோல்; வறுமை தருவது ஒன்று இல்= நல்குரவினைக் கொடுக்கவல்லது பிறிதொன்றில்லை.

ஒருவனுக்குத் துன்பம் பலவற்றையும் உண்டாக்கி அவனுடைய புகழைக் கெடுக்கின்ற சூதைபோல் வறுமை தருவது வேறொன்றும் இல்லை.

ஆத்திசூடி : உயிர்மெய் வருக்கம்

சூது விரும்பேல் / Don't gamble48

 (பதவுரை) சூது-சூதாடலை, விரும்பேல்-(ஒருபோதும்) விரும்பாதே.

(பொழிப்புரை) ஒருபொழுதும் சூதாடுதலை விரும்பாதே.

திருக்குர்ஆன் :

நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும், உங்களிடையே பகமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்; எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா? (அல்குர்ஆன் 5:91)

பைபிள் :

இன்னொருவனுக்குச் சொந்தமான எந்தப் பொருளையும் சூது செய்து எடுத்துக்கொள்ளக்கூடாது.யாத்திராகமம் 20:17


8 கருத்துகள்:


  1. புலை மயக்கம் வேண்டி பொருட்பெண்டிர்த் தோய்தல்,
    கலம் மயக்கம் கள் உண்டு வாழ்தல், சொலை முனிந்து
    பொய்ம் மயக்கம் சூதின்கண் தங்குதல், - இம் மூன்றும்
    நன்மை இலாளர் தொழில். திரிhttp://www.tamilsurangam.in/literatures/pathinen_keezhkanakku/thirikadugam_8.htmlகடுகம் 39


    உடலை விரும்பி வேசியரைச் சேர்தல், மது மயக்கம் வேண்டி கள்ளுண்டல், சூதாடுவது இம்மூன்றும் அறம் இல்லாதவர் செய்யும் தொழில்களாகும்.

    பதிலளிநீக்கு

  2. கழகத்தால் வந்த பொருள் காமுறாமை,
    பழகினும் பார்ப்பாரைத் தீப்போல், ஒழுகல்,
    உழவின்கண் காமுற்று வாழ்தல், - இம் மூன்றும்
    அழகு என்ப வேளாண் குடிக்கு. திரிகடுகம் 42


    சூதாட்டத்தினால் கிடைத்த பொருளை விரும்பாமையும், பிராமணரை அஞ்சி நடத்தலும், பயிர் செய்து வாழ்தலும் வேளாளர்க்கு அழகு.

    பதிலளிநீக்கு

  3. சூது உவவான், பேரான், சுலா உரையான், யார்திறத்தும்
    வாது உவவான், மாதரார் சொல் தேறான், - காது தாழ்
    வான் மகர வார் குழையாய்! - மா தவர்க்கு ஊண் ஈந்தான்-
    தான் மகர வாய் மாடத்தான். ஏலாதி 43


    சூதினைக் காதலியாது, ஒன்றினான் மறைந்து வஞ்சியாது, பயனில்லாவற்றைப் பரக்கவுரையாது, ஒருவர் திறத்து மாறுபட்டுரைத்தலைக் காதலியாது, மாதரார் சொல்லு மின் சொல்லைத் தேறாது, காது தாழச்செய்யா நின்ற வாபரணங்களார் குழையாய்! மாதவர்க் கூணீந்தவன்றான் மகரத் தொழிலையுடைய வாயின் மாடத்து வாழ்வான்.

    பதிலளிநீக்கு
  4. புலை மயக்கம் வேண்டி பொருட்பெண்டிர்த் தோய்தல்,
    கலம் மயக்கம் கள் உண்டு வாழ்தல், சொலை முனிந்து
    பொய்ம் மயக்கம் சூதின்கண் தங்குதல், - இம் மூன்றும்
    நன்மை இலாளர் தொழில். திரிகடுகம் 39

    உடலை விரும்பி வேசியரைச் சேர்தல், மது மயக்கம் வேண்டி கள்ளுண்டல், சூதாடுவது இம்மூன்றும் அறம் இல்லாதவர் செய்யும் தொழில்களாகும்.

    https://marainoolkal.blogspot.com/2022/09/blog-post_13.html

    பதிலளிநீக்கு
  5. குறள் 931:
    வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
    தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று.
    கலைஞர் மு.கருணாநிதி உரை:
    வெற்றியே பெறுவதாயினும் சூதாடும் இடத்தை நாடக்கூடாது. அந்த வெற்றி, தூண்டிலின் இரும்பு முள்ளில் கோத்த இரையை மட்டும் விழுங்குவதாக நினைத்து மீன்கள் இரும்பு முள்ளையே கவ்விக் கொண்டது போலாகிவிடும்.
    மு.வரதராசனார் உரை:
    வெற்றியே பெறுவதாலும் சூதாட்டத்தை விரும்பக்கூடாது, வென்ற வெற்றியும் தூண்டில் இரும்பை இரை என்று மயங்கி மீன் விழுகினாற் போன்றது.

    http://www.thirukkural.com/search/label/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D

    பதிலளிநீக்கு
  6. குறள் 932:
    ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
    நன்றெய்தி வாழ்வதோர் ஆறு.

    மு.வரதராசனார் உரை:
    ஒரு பொருள் பெற்று நூறு மடங்கு பொருளை இழந்து விடும் சூதாடிகளுக்கும், நன்மை பெற்று வாழும் ஒரு வழி உண்டோ.

    குறள் 933:
    உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம்
    போஒய்ப் புறமே படும்.

    மு.வரதராசனார் உரை:
    ஒருவன் உருளுகின்ற கருவியால் வரும் ஒரு பொருளை இடைவிடாமல் கூறி சூதாடினால், பொருள் வருவாய் அவனை விட்டு நீங்கிப் பகைவரிடத்தில் சேரும்.

    குறள் 934:
    சிறுமை பலசெய்து சீரழக்கும் சூதின்
    வறுமை தருவதொன்று இல்.

    மு.வரதராசனார் உரை:
    ஒருவனுக்குத் துன்பம் பலவற்றையும் உண்டாக்கி அவனுடைய புகழைக் கெடுக்கின்ற சூதைபோல் வறுமை தருவது வேறொன்றும் இல்லை.

    குறள் 935:
    கவறும் கழகமும் கையும் தருக்கி
    இவறியார் இல்லாகி யார்.

    சூதாடு கருவியும், ஆடும் இடமும், கைத்திறமையும் மதித்துக் கைவிடாதவர், (எல்லாப் பொருள் உடையவராக இருந்தும்) இல்லாதவர் ஆகிவிடுவார்.

    குறள் 936:
    அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும்
    முகடியான் மூடப்பட் டார்.

    உரை:
    சூது என்று சொல்லப்படும் மூதேவியால் விழுங்கப்பட்டவர், வயிறு நிறைய உணவும் உண்ணாதவராகிப் பல துன்பப்பட்டு வருந்துவர்.

    குறள் 937:
    பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
    கழகத்துக் காலை புகின்.

    உரை:
    சூதாடுமிடத்தில் ஒருவனுடைய காலம் கழியுமானால் அது அவனுடைய பழைமையாய் வந்த செல்வத்தையும் இயல்பான நற்பண்பையும் கெடுக்கும்.

    குறள் 938:
    பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து
    அல்லல் உழப்பிக்கும் சூது.

    மு.வரதராசனார் உரை:
    சூது உள்ள பொருளை அழித்துப் பொய்யை மேற்கொள்ளச் செய்து அருளையும் கெடுத்துப் பலவகையிலும் துன்பமுற்று வருந்தச் செய்யும்.

    குறள் 939:
    உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும்
    அடையாவாம் ஆயங் கொளின்.

    உரை: சூதாடுதலை ஒருவன் மேற்கொண்டால், புகழ், கல்வி, செல்வம், உணவு, உடை ஆகிய ஐந்தும் அவனைச் சேராமல் ஒதுங்கும்.

    குறள் 940:
    இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்
    உழத்தொறூஉம் காதற்று உயிர்.

    உரை:பொருள் வைத்து இழக்க இழக்க மேன்மேலும் விருப்பத்தை வளர்க்கும் சூதாட்டம் போல், உடல் துன்பப்பட்டு வருந்ந வருந்த உயிர் மேன்மேலும் காதல் உடையதாகும்.

    பதிலளிநீக்கு
  7. புலை மயக்கம் வேண்டி பொருட்பெண்டிர்த் தோய்தல்,
    கலம் மயக்கம் கள் உண்டு வாழ்தல், சொலை முனிந்து
    பொய்ம் மயக்கம் சூதின்கண் தங்குதல், - இம் மூன்றும்
    நன்மை இலாளர் தொழில். . . . .[திரிகடுகம் 39]

    விளக்கம்:
    உடலை விரும்பி வேசியரைச் சேர்தல், மது மயக்கம் வேண்டி கள்ளுண்டல், சூதாடுவது இம்மூன்றும் அறம் இல்லாதவர் செய்யும் தொழில்களாகும்.

    பதிலளிநீக்கு