ஹூருல் ஈன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஹூருல் ஈன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மேலுலகத்தில் குற்றமற்ற மகளிரை மணந்து..!

தமிழர் சமயம்


துடி எறியும் புலைய!

எறிகோல் கொள்ளும் இழிசின!
கால மாரியின் அம்பு தைப்பினும்
வயல் கெண்டையின் வேல் பிறழினும்
பொலம்புனை ஓடை அண்ணல் யானை

இலங்குவால் மருப்பின் நுதிமடுத்து ஊன்றினும்
ஓடல் செல்லாப் பீடுடை யாளர்
நெடுநீர்ப் பொய்கைப் பிறழிய வாளை
நெல்லுடை நெடுநகர்க் கூட்டுமுதல் புரளும்
தண்ணடை பெறுதல் யாவது? படினே,

மாசில் மகளிர் மன்றல் நன்றும்
உயர்நிலை உலகத்து நுகர்ப; அதனால்
வம்ப வேந்தன் தானை
இம்பர் நின்றும் காண்டிரோ வரவே - புறநானூறு 287

சொற்பொருள்:

துடி = ஒருவகைப் பறை
எறிதல் = அடித்தல்
புலையன் = பறை அடிப்பவன்
எறிகோல் = பறையடிக்கும் குறுந்தொடி
இழிசினன் = பறையடிப்பவன்
மாரி = மழை
பிறழ்தல் = துள்ளுதல்
பொலம் = பொன்
புனைதல் = அணிதல், அலங்கரித்தல்
ஓடை = யானையின் நெற்றிப் பட்டம்
அண்ணல் = தலைமை
இலங்குதல் = விளங்குதல்
வால் = வெண்மை
மருப்பு = விலங்கின் கொம்பு (யானையின் தந்தம்)
நுதி = நுனி
மடுத்தல் = குத்துதல்
பீடு = பெருமை
வியன் = மிகுதி
கூடு = நெற்கூடு
தண்ணடை = மருத நிலத்தூர்
யாவது = எது (என்ன பயன்?)
படுதல் = இறத்தல்
மாசு = குற்றம்
மன்றல் = திருமணம்
நுகர்தல் = அனுபவித்தல்
வம்பு = குறும்பு
இம்பர் = இவ்விடம்
காண்டீரோ = காண்பீராக 
மகளிர் - பெண்கள் (பன்மையில்) 
துடி - யானை 
இலங்குவால் - படினே 
மாசில் - வரவே

பொருள்:

துடிப் பறையை அடிக்கும் பறையனே! குறுந்தடியால் பறையடிக்கும் பறையனே! கார்காலத்து மழைபோல் அம்புகள் உடம்பில் தைக்குமாயினும், வயல்களில் பிறழும் கெண்டை மீன்கள் போல வேற்படைவந்து பாயினும், பொன்னாலான நெற்றிப்பட்டம் அணிந்த பெருமை பொருந்திய யானைகள்

விளங்குகின்ற, வெண்மையான தந்தங்களின் நுனியால் குத்தினாலும், அஞ்சிப் புறமுதுகுகாட்டி ஓடாத பெருமைபொருந்திய வீரர்கள் ஆழ்ந்த நீருடைய பொய்கையிலிருந்து கிளர்ந்தெழுந்த வாளைமீன் நெல்வளமிக்க வீட்டின் புறத்தே நிறுத்தப்பட்ட நெற்கூட்டில் புரளும் மருதநிலத்தூர்களைப் பெறுவதால் என்ன பயன்? வீரர்கள் போரில் இறந்தால்,

அவர்கள் மேலுலகத்தில் குற்றமற்ற மகளிரை மணந்து நன்கு இன்பம் அனுபவிப்பார்கள். அதனால், குறும்பு செய்யும் பகைவேந்தனுடைய படைவருவதை இங்கிருந்தே காண்பீராக.

சிறப்புக் குறிப்பு: போரில் இறந்தவர்கள் மேலுலகத்திற்குச் செல்வார்கள். அங்குச் சென்று அங்குள்ள மகளிரை மணம்புரிந்து இன்பம் அனுபவிப்பார்கள்.’ என்ற நம்பிக்கை சங்க காலத்தில் இருந்ததாக இப்பாடலிலிருந்து தெரிகிறது.

இந்து மதம் 


Agni, may we, beyond decay, invited, in the third heaven, feast and enjoy the banquet. These women here, cleansed, purified, and holy, I place at rest singly - [Atharva VedaHYMN CXXII:5]

அக்னிசொர்க்கவாசிகளை விருந்துக்கு அழைஅவர்களுக்கு தேவையானதை சாப்பிட கொடுஅவர்கள் பெண்களோடு சந்தோஷமாக இருக்கட்டும்நல்லவிதமாக உறங்கட்டும். மேலும் அந்த பெண்கள் தூய்மையானவர் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

சொற்பொருள்: Women  - பெண்கள் (பன்மையில்)


இஸ்லாம்

"பயபக்தியுடையவர்கள் நிச்சயமாக அச்சமற்ற இடத்தில் இருப்பார்கள். சுவனச் சோலைகளிலும், நீர் ஊற்றுகளிலும் இருப்பார்கள். ஸுன்துஸ், இஸ்தப்ரக் ஆகிய அழகிய பட்டாடைகள், பிதாம்பரங்கள் அணிந்து ஒருவரை ஒருவர் முகம் நோக்கி இருப்பார்கள். இவ்வாறே அங்கு நடைபெறும்; மேலும் அவர்களுக்கு ஹூருல் ஈன்களை நாம் மண முடித்து வைப்போம்" - [திருக்குர்ஆன் 44:51-54]

"மேலும், உன்னதமான விரிப்புகளில் அமர்ந்திருப்பர். நிச்சயமாக ஹூருல் ஈன் என்னும் பெண்களைப் புதிய படைப்பாக, நாம் உண்டாக்கி; அப்பெண்களைக் கன்னிகளாகவும்; தம் துணைவர் மீது பாசமுடையோராகவும், சம வயதினராகவும், வலப் புறத்தோருக்காக ஆக்கி வைத்துள்ளோம்" - [திருக்குர்ஆன் 56:34-38]

"அவற்றில் அடக்கமான பார்வையுடைய அமர கன்னியர் இருக்கின்றனர். அவர்களை இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனும், எந்த ஜின்னும் தீண்டியதில்லை. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் இரு சாராருடைய இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? அவர்கள் வெண் முத்தைப் போன்றும், பவளத்தைப் போன்றும் இருப்பார்கள்" - [திருக்குர்ஆன் 55:56-58]

கிறிஸ்தவம்

 அப்பொழுது பேதுரு அவனுக்குப் பிரதியுத்தரமாக: இதோ, நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு, உம்மைப் பின்பற்றினோம்; அதனால் நமக்கு என்ன கிடைக்கும்? இயேசு அவர்களை நோக்கி: மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன், என்னைப் பின்பற்றிய நீங்கள் மறுபிறப்பில் மனுஷகுமாரன் தம்முடைய மகிமையின் சிங்காசனத்தில் வீற்றிருக்கும்போது, ​​நீங்களும் பன்னிரண்டு சிங்காசனங்களில் அமர்ந்து, இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்ப்பீர்கள். . என் பெயருக்காக வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தகப்பனையோ, தாயையோ, மனைவியையோ, பிள்ளைகளையோ, நிலங்களையோ கைவிட்ட எவனும் நூற்றுக்கு மடங்காகப் பெற்று, நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்வான். ஆனால் முதலில் இருப்பவர்களில் பலர் கடைசியாக இருப்பார்கள்; மற்றும் கடைசியாக முதலில் இருக்கும். (மத்தேயு 19:27 – 29)

குறிப்பு: இது இம்மையை குறிக்கிறது என்று சிலர் வேறு சில வசனங்களை ஆதாரமாக காட்டுவர். ஒரு மனைவியை கர்த்தருக்காக கைவிட்டு நூறு மனைவியைப் பெற்ற நபரை சம காலத்திலோ, வரலாற்றிலோ அல்லது பைபிலிலோ யாரேனும் உண்டோ? மனைவியை விடுங்கள், அவ்வாறு நிலத்தை பெற்றவர் உண்டோ?  மேலும் நித்திய ஜீவன் என்றால் மரணமில்லா வாழ்வு என்று பொருள். எனவே இவையனைத்தும் இம்மையில் அல்ல, மறுமையில் என்று தெளிவாகிறது.

சொற்பொருள்: நூறு மனைவி - மணமுடிக்கும் பெண்கள் பன்மையில் 

முடிவுரை

இஸ்லாத்தில் அதிகம் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்ட விடயம் "ஹூருல் ஈன்". 

    • திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படுகிறது என்பதை புனிதமாக அருளாக வரமாக ஏற்கும் நாம், சுவர்க்கத்தில் அவரவர் தியாகத்துக்கும் ஒழுக்கத்துக்கும் ஏற்ப அழகிய பெண்களை மணமுடித்து வைப்பதாக இறைவன் வாக்களிப்பதை ஏன் இழிவாக பேசுகிறோம்
    • இவ்வுலகில் தான் மணமுடிக்கும் பெண் ஒழுக்கமாக இருக்க விரும்புவோர் அதன் காரணமாக தானும் ஒழுக்கத்தை பேன கருதி (கண், கை, மனம் உட்பட அனைத்து உறுப்புகளும் செய்யும்) விபச்சாரத்தை விட்டு விலகி நிற்கின்றனர். அதே போல மறுமையில் தூய பெண்களை அடைய ஒருவர் இவ்வுலகில் தூய்மையாக இருப்பது அடிபப்டை. அவ்வாறு ஒழுக்கத்தை பேணுவோருக்கு இவ்வாறு பரிசு இறைவனால் கொடுக்கப்படுத்தல் எந்த விதத்தில் பிழை. 
    • அவ்வாறு இவ்வுலகில் ஒழுக்கத்தை பேணுபவர்களுக்கு மறுமையிலும் குற்றமற்ற பாசமுள்ள யாரும் அறிந்திராத யாரும் தீண்டாத அழகுள்ள பெண்களை இறைவன் மனம் முடித்து தருவதாக சொல்வது எப்படி கேவலத்துக்கு உரியதாகும்? 

ஆனால் இது இஸ்லாத்தில் மட்டுமல்ல அனைத்து மறைநூல்களிலும், அனைத்து சமயங்களிலும் சொல்லப்பட்ட செய்தி என்பதை பெரும்பாலானோர் அறிவதில்லை. 

தமிழர்களோ அல்லது இந்துக்களோ அவரவர் மறைநூல் என்ன வென்று ஆய்ந்து அறியாதிருப்பதும், அறிந்தவர்கள் முயன்று கற்காதிருப்பதும் மறை நூல்களை இழித்து பேச வசதி ஏற்படுத்தி தருகிறது. 

பலதாரமணம் பிழையாகவும் ஆபாசமாகவும் இன்று சொல்லப்படுவதால் இந்த நிலை இருக்கலாம். ஆனால் இந்த கருத்து சமீப காலத்தில் ஏற்படுத்தப் பட்டது. 

மேலும் முற்போக்கு சிந்தனை கொண்டவர்களாக தங்களை கருதும் சில தத்துவ பின்புலத்தோரும், தனி நபர்களும் அருவருக்கும் வகையில் இதை விமர்சிப்பதற்கான காரணம் அவர்களின் உள்ளத்தில் உள்ள அருவருப்புகளே. இவ்வாறு முற்போக்கு பேசும் நபர்கள் பெரும்பாலும் ஒன்றுக்கும் மேற்பட்ட உறவில் இருந்து வந்துள்ளனர். இவர்கள் போற்றும் சேகுவேரா, மார்க்ஸ், பெரியார் போன்றோர்கள் சில உதாரணங்கள்.