பகவத்கீதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பகவத்கீதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பகவத்கீதை கூறும் ஓரிறை கொள்கை

ஓரிறைக் கொள்கையில் மக்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டுமென்ற நன்னோக்கில் இந்து மத நூல்களில் மக்களிடையே பிரபலமானதும், புனித மிக்கதுமாகிய பகவத் கீதையின் போதனைகளை ஆதாரமாகக் கொண்டு சமூகங்களிடையே ஏற்பட்டிருக்கும் முரண்பட்ட கடவுள் நம்பிக்கையை நீக்கி ஓரிறைக் கொள்கையில் ஒன்றுபடச் செய்வதே இவ்வெளியீட்டின் நோக்கமாகும்.


பகவத் கீதை

இந்து சமயத்தின் ரிக், யஜூர், சாம, அதர்வன ஆகிய நான்கு வேதங்களைப் போல் மகாபாரதமும் முக்கிய நூல்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. இது நான்கு வேதங்களிலும் காணப்படும் கருத்துக்களின் சுருக்கம். அதேபோல் பகவத்கீதை என்பது நான்கு வேதங்களிலும் கூறப்படுகின்ற ஆன்மீக விடயங்களின் சுருக்கம் என இந்து அறிஞர்கள் கூறுகின்றனர். இவ்வாறு புனிதமிக்க மதிப்புக்குரிய நூலாகிய பகவத் கீதை பின்வருமாறு எமக்கு போதிக்கின்றது. 
 
இந்த அகிலத்தின் தந்தையும், தாயும், காப்பவரும், முன்னோனும் நானே, அறியப்பட வேண்டிய பொருளும் தூய்மைப்படுத்தும் பொருளும் ஓம் எனும் மந்திரமும் நானே என கடவுள் தன்னைப் பற்றிக் கூறுகின்றார். (பகவத் கீதை 9 : 17) 
 
மேற்கண்ட வசனத்திலிருந்து கடவுளை அறிந்து கொள்வதும், அவனை வணங்கி வழிபடுவதும் மனிதர்களாகிய எமது கட்டாயக் கடமை என்பதை புரிந்து கொள்ள முடியும். எனவே நாம் கடவுள் என்பவன் யார்? அவன் எப்படிப்பட்டவன். அவன் எங்கே இருக்கின்றான்? அவனுக்கு இணை துணை உண்டா? அவனை எவ்வாறு நம்பவேண்டும்? அவனை எவ்வாறு தூய்மைப்படுத்துவது? போன்ற அடிப்படை விடயங்களை சரியான முறையில் தெரிந்து கொள்வது எமது கட்டாயக் கடமையாகும். அப்போது தான் நாம் வெற்றி பெற முடியும்.

கடவுள் நம்பிக்கை

கடவுள் பற்றி இந்துக்கள் பல விதமாக நம்பிக்கை கொண்டுள்ளனர். ஆனால் கடவுளை எவ்வாறு நம்பவேண்டும் என்பதை பின்வருமாறு புனித பகவத் கீதை மிகத் தெளிவாகக் கூறுகின்றது.

'எல்லா உலகங்களின் இறைவனாகவும், ஆரம்பம் அற்றவனாகவும், பிறப்பற்றவனாகவும் உள்ள கடவுளாகிய என்னை யாரொருவர் அறிகின்றாரோ, மனிதர்களிடையே தெளிவுற்றவனான அவர் எல்லா பாவங்களிலிருந்தும் விடுதலை பெறுகின்றார். (பகவத் கீதை 10:3)

இன்னும் கடவுள் மரணமற்றவன். அழிவற்றவன். நிலையானவன் (பகவத் கீதை 14 : 27) என கடவுள் தன்னைப்பற்றி கூறுகின்றான். 
 
மேற்கண்ட வசனங்கள், முழு உலகத்திற்கும் கடவுள் ஒருவன்தான் என்றும், அக்கடவுளே முதலானவன். அவனுக்கு முதல் எதுவுமில்லை. அவனை யாரும் பெறவுமில்லை. அவன் யாராலும் பெறப்படவுமில்லை. பிறத்தல் எனும் பண்பே கடவுளுக்குக் கிடையாது என்றும் கடவுள் மரணமற்றவன், அழிவற்றவன், நித்தியமானவன் என்றும் இப்பண்புகளுக்கேற்ப கடவுளை நம்புவதுதான் தெளிவான அறிவும் பாவங்களிலிருந்து விடுதலை பெறும் வழியுமாகும் எனக் கூறுகின்றது.

கடவுள் அவதாரம்

கடவுளுக்கு அவதாரங்கள் உண்டு என்றும் கடவுள் பல்வேறுபட்ட வேடங்களில் (உருவங்களில்) இவ்வுலகில் தோன்றுகின்றான், பிறக்கின்றான் எனப் பெரும்பான்மையான இந்துக்கள் நம்புகின்றனர். ஆனால் கடவுள் அவதாரம் பற்றி பின்வருமாறு புனித பகவத் கீதை கூறுகின்றது.

'மதியீனர், மாறுபாடில்லாததும் மேம்பட்ட வேறொன்றில்லாததுமான என்னுடைய பரமாத்ம ரூபத்தை அறிய மாட்டாதவர்களாய், தோன்றுதல் இல்லாத என்னை தோற்றத்தை அடைந்தவனாக கருதுகின்றனர்.

நான் யோக மாயையினால் மூடப்பட்டு எல்லோருக்கும் விளங்குவதில்லை. மதியிழந்த இவ்வுலகம், பிறப்பற்றவனும் மாறுபாடற்றவனுமாகிய என்னை அறிவதில்லை. (பகவத் கீதை 7:24, 25)
'கடவுள் புலன் உணர்விற்கும் மனித கற்பனைகளுக்கும் அப்பாற்பட்டவன். இன்னும் கடவுள் மாறுபாடற்றவன். (பகவத் கீதை 12 : 3, 4) 
 
மேற்கண்ட வசனங்கள் கடவுள் மாறுபாடற்றவன். அதாவது கடவுள் எந்த நிலையில் இருக்கின்றானோ அந்த நிலையிலிருந்து எந்தவொரு மாறுபாடும் அற்றவன். அவனுடைய அந்த நிலையிலே என்றென்றும் இருப்பான். மாறாக பாம்பு வேடத்திலோ மனித வேடத்திலோ, மிருகங்களின் வேடத்திலோ, பறவைகளின் வேடத்திலோ எந்தவொரு படைப்பினங்களின் வேடத்திலோ ஒரு போதும் கடவுள் மாறுபடமாட்டான். காரணம் கடவுள் மாறுபாடற்றவன். இன்னும் கடவுள் தோன்றுதல் இல்லாதவன். கடவுள் எந்தவொரு தனிப்பட்ட இடத்திலும் தனிப்பட தோன்றுவது கிடையாது. இன்னும் கடவுள் எந்தவொரு தோற்றத்திலும் யாருக்கும் எதற்கும் பிறக்கவும் மாட்டான். காரணம் கடவுள் பிறப்பற்றவன். கடவுளுக்கு பிறத்தல் எனும் பண்பே கிடையாது என மிகத் தெளிவாக கூறுகின்றது.

ஆகவே கடவுள் எந்தவொரு அவதாரத்திலும் பிறக்கமாட்டான். இன்னும் கடவுள் எந்தவொரு அவதாரத்திலும் தோன்றவுமாட்டான். எந்தவொரு வேடத்திலும் தன்னை மாற்றிக் கொள்ளவும் மாட்டான். அவ்வாறான தேவையும் அவனுக்குக் கிடையாது. காரணம் இந்த முழு உலகமும் அவனுடைய ஆட்சி அதிகாரத்திற்கு உட்பட்டதே என நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும். மாறாக கடவுள் படைப்பினங்களின் தோற்றத்தில் அவதாரம் எடுத்து வருகின்றான் என நம்புவது மேற்கண்ட பகவத் கீதை வசனங்களுக்கு முரணானதாகும்.

(ஆனால் கடவுள் மனிதர்களை நேர்வழிப்படுத்துவதற்காக தன்னுடைய வேத வசனங்களை தன்னுடைய தூதர்கள் மூலமாக அனுப்பி வைத்தான். (பகவத் கீதை 4: 1, 2, 3,) 
 
அந்த தூதர்கள் கடவுளின் வேத வசனங்களை எடுத்துச் சொன்னதனால் அத்தூதர்கள் ஒருபோதும் கடவுளின் அவதாரங்களாக மாட்டார்கள். கடவுள் என்றென்றும் கடவுள்தான். கடவுளின் தூதர்கள் என்றென்றும் தூதர்கள்தான் என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொண்டால் கடவுள் அவதாரம் என்னும் குழப்பம் நீங்கிவிடும். ஆனால் கடவுளால் அனுப்பப்பட்ட தூதர்களையே கடவுள் அவதாரங்களாக இந்துக்கள் நம்புகின்றனர்)

கடவுளின் இருப்பிடம்

கடவுள் தூணிலும், துரும்பிலும், இன்னும் எல்லா இடங்களிலும் இருக்கின்றான் என இந்துக்களால் நம்பப்படுகின்றது. ஆனால் கடவுளின் இருப்பிடம் பற்றி புனித பகவத்கீதை பின்வருமாறு கூறுகின்றது. 
 
தோன்றி மறையும் இந்த ஜட உலகிற்கு மேல் உன்னதமானதும் அழிவற்றதுமான மற்றொரு இயற்கையுண்டு. அது பரமமானது. அழிவடையாதது. இந்த அகிலங்கள் எல்லாம் அழிவடையும் போதும் அப்பகுதி அழியாமல் இருக்கும். அந்த பரமத்தலம் தோற்றமற்றது. அழிவற்றது. அதுவே இறுதி இலக்காகும். அங்கே சென்ற பின் ஒருவன் மீண்டும் வருவதில்லை. அதுவே கடவுளாகிய எனது தெய்வீக வாசத்தலம். (பகவத் கீதை 8 : 20, 21) 
 
எங்கு சென்று எதுவும் திரும்புவதில்லையோ, அதுவே (கடவுளாகிய) என்னுடைய உயர்ந்த உறைவிடம். அதை சூரியன் பிரகாசிக்கச் செய்வதுமில்லை. சந்திரனுமில்லை. அக்கினியுமில்லை. (பகவத் கீதை 15 : 6) 
 
மேற்கண்ட வசனங்கள், கடவுளின் இருப்பிடம் நாம் காணக்கூடிய ஜட உலகிற்கு மேல் உள்ளது. அவ்விடத்தில் சூரியன், சந்திரன், அக்கினி போன்றவைகளின் பிரகாசம் கிடையாது. அங்கு சென்றபின் எதுவும் மீண்டும் திரும்பாது. அவ்விடம் அழிவடையாதது என மிகத் தெளிவாக கூறுகின்றது.
ஆகவே நாம் காணக்கூடிய இப்பிரபஞ்சத்திற்கு அப்பால், கடவுள் அவனுடைய தெய்வீகத் தலத்திலே இருக்கின்றான். நாம் வாழக்கூடிய ஜட உலகிற்குள் கடவுளின் இருப்பிடம் இல்லை என நாம் புரிந்து கொள்ளலாம்.  
 
ஏனெனில் நாம் வாழக்கூடிய ஜட உலகம் அழியக் கூடியது. (பகவத் கீதை 9: 8)  
 
ஆனால் கடவுளின் இருப்பிடம் அழிவற்றது. இன்னும் நாம் வாழக்கூடிய ஜட உலகில் சூரியன், சந்திரன், அக்கினி போன்றவைகளின் பிரகாசமுள்ளது. ஆனால் கடவுளின் இருப்பிடத்தில் சூரியன், சந்திரன், அக்கினி போன்றவைகளின் பிரகாசம் கிடையாது. எனவே கடவுளின் இருப்பிடம் இப்பிரபஞ்சத்திற்கு மேல் உள்ளது எனவும் மேலும் அவன் தன்னுடைய அறிவால் எல்லாவற்றையும் சூழ்ந்திருக்கின்றான் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

கடவுளின் திருநாமங்கள் (பிரம்மா, விஷ்ணு, சிவன்)
பிரம்மா என்பதன் பொருள் படைப்பாளன்.
விஷ்ணு என்பதன் பொருள் பரிபாலிப்பவன்
சிவன் என்பதன் பொருள் அழிப்பவன். 
 
பெரும்பான்மையான இந்துக்கள், ஆக்க ஒரு கடவுள், காக்க ஒரு கடவுள், அழிக்க ஒரு கடவுள் எனக்கூறி, பிரம்மா என்பது ஒரு தனிக்கடவுள், விஷ்ணு என்பது ஒரு தனிக்கடவுள், சிவன் என்பது ஒரு தனிக்கடவுள் என நம்பி வருகின்றனர். இது பற்றி புனித பகவத் கீதை பின்வருமாறு கூறுகின்றது.

'பரமாத்மா பிரிந்திருப்பதாக தோன்றினாலும் என்றுமே பிரிவு பெறாமல் இருக்கின்றார். அவர் ஒருவராகவே நிலைத்திருக்கின்றார். அவரே ஒவ்வொரு உயிர்வாழியின் பாதுகாப்பாளரும் எல்லாவற்றையும் அழிப்பவரும் அபிவிருத்தி செய்பவருமாவார். (பகவத் கீதை 13:17) 
 
மேற்கண்ட வசனத்திலிருந்து படைத்தல், காத்தல், அழித்தல் போன்ற அனைத்தும் ஒரே கடவுள்தான் செய்கின்றான். அந்த ஒரே கடவுளின் பண்புப் பெயர்கள்தான் பிரம்மா, விஷ்ணு, சிவன் போன்றவையாகும். மாறாக பிரம்மா வேறு, விஷ்ணு வேறு, சிவன் வேறு அல்ல. இவை அனைத்தும் ஒரே கடவுளின் பண்புப் பெயர்கள்தான் என்பதை மிகத் தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.

ஆகவே கடவுள் ஒருவன்தான். அவனுக்கு பல திருநாமங்கள் உண்டு. அத்திருநாமங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனித்தனி கடவுள்கள் அல்ல. மாறாக கடவுள் ஒருவன் மட்டுமே என நாம் நம்ப வேண்டும்.

கடவுளுக்கு இணை அல்லது (கடவுள் 10 இணை)

இந்துக்களில் பெரும்பான்மையினர் சிலைகள், மிருகங்கள், மனிதர்கள் இன்னும் பல்வேறுபட்ட படைப்பினங்களை கடவுளுக்கு இணையாக (ஒப்பாக) கருதி அவைகளை வணங்கி, வழிபட்டும் வருகின்றனர். ஆனால் இதுபற்றி புனித பகவத்கீதை பின்வருமாறு மிகத் தெளிவாகக் கூறுகின்றது. 
 
இம்முழுப் பிரபஞ்சத் தோற்றத்தின் தந்தையும், வந்தனைக்குரிய தலைவரும் ஆன்மீக ஆசிரியருமாகிய (கடவுளே) உமக்கு சமமானவர் யாருமில்லை. உம்மைவிட உயர்ந்தவரும் யாருமில்லை. இந்த மூவுலகங்களுக்குள்ளே நீர் அளவிட இயலாதவர். (பகவத் கீதை 11:43) 
 
இன்னும் கடவுள் புலன் உணர்விற்கும் மனித கற்பனைகளுக்கும் அப்பாற்பட்டவன் (பகவத் கீதை 12 : 3, 4) 
 
மேற்கண்ட வசனங்கள், கடவுளுக்கு இணையாக ஒப்பாக, சமமாக யாருமில்லை. இன்னும் மூவுலகங்களுக்குள் எந்தவொன்றிற்கும் கடவுளை ஒப்பிட முடியாது. கடவுள் மனித கற்பனைகளுக்கும் அப்பாற்பட்டவன். ஆகவே கடவுளுக்கு கற்பனையில் கூட இணை வைக்க முடியாது என மிகத் தெளிவாக கூறுகின்றது.

இதிலிருந்து நாம் சூரியனையோ, சந்திரனையோ, மனிதர்களையோ, சிலைகளையோ, மிருகங்களையோ எந்தவொரு படைப்பினங்களையோ ஏக இறைவனுக்கு ஒப்பிடக் கூடாது. அவைகளை வணங்கி வழிபடவும் கூடாது. காரணம் இவை அனைத்தும் கடவுளால் படைக்கப்பட்ட அழிவிற்குட்பட்ட படைப்பினங்களாகும். இவைகளை விட்டும் கடவுள் தூய்மையானவன்.

கடவுள் என்றென்றும் கடவுள்தான். படைப்பினங்கள் என்றென்றும் படைப்பினங்கள்தான். கடவுள் ஒருபோதும் படைப்பினங்களாக மாறுவதுமில்லை. படைப்பினங்கள் ஒருபோதும் கடவுளாக மாறுவதுமில்லை. கடவுளுக்கு நிகராக (இணையாக) எதையும் ஒப்பிடவும் முடியாது என்பதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

இன்னும் அழிவற்ற படைப்பாளனை அழிவிற்குட்பட்ட படைப்பினங்களுக்கு ஒப்பிடுவதால் படைப்பாளனின் தகுதிக்கு கழங்கம் ஏற்பட்டு விடுகின்றது. இவ்வாறு கடவுளின் தகுதிக்கு களங்கம் ஏற்படுத்துவது மகா பெரும் பாவமாகும். இதனை பின்வரும் வசனம் மிகத் தெளிவாக கூறுகின்றது.

(கடவுளாகிய) எனது உண்மையான தெய்வீகத் தன்மையை மதிக்காதவர் இழிகின்றனர். (பகவத் கீதை 9:24) 
 
இதிலிருந்து கடவுள் தனித்தவன். அவனுக்கு நிகராக இணையாக யாருமில்லை. எதுவுமில்லை போன்ற தெய்வீகத் தன்மைகளை நாம் நம்பவேண்டும். இல்லையென்றால் நாம் கடவுளின் சாபத்திற்கு ஆளாகி இழிவடைந்தவர்களாகி விடுவோம் என்பதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

வணக்கத்திற்கு தகுதியானவன்

பெரும்பான்மையான மனித சமூகம், கடவுளால் படைக்கப்பட்ட கடவுளின் படைப்பினங்களான சூரியன், சந்திரன், காற்று. நீர், நெருப்பு, மனிதன், மிருகம், சிலைகள், கல் போன்றவற்றையே வணங்கி வழிபட்டு வருகின்றனர். ஆனால் நாம் யாரை வணங்கி வழிபடவேண்டும் என பகவத்கீதை பின்வருமாறு மிகத் தெளிவாக கூறுகின்றது.

(கடவுளே) நீரே பரம புருச பகவான். ஒவ்வொரு உயிர் வாழிகளாலும் வணங்கப்பட வேண்டியவர். (பகவத் கீதை 11 : 44)  
 
எதையெல்லாம் நீ செய்கின்றாயோ எதையெல்லாம் நீ உண்ணுகின்றாயோ எதையெல்லாம் நீ, படைக்கின்றாயோ எதையெல்லாம் நீ கொடுக்கின்றாயோ அவைகளை மட்டுமல்ல எந்தத் தவங்களையெல்லாம் நீ புரிகின்றாயோ, அவை எல்லாவற்றையும் (கடவுளாகிய) எனக்காகவே நீ செய்ய வேண்டும். (பகவத் கீதை 09: 27) 
 
யாகத்தின் ஒரே நோக்கமும், அனுபவிப்பாளனும் நானே. (கடவுளாகிய) எனது உண்மையான தெய்வீகத் தன்மையை மதிக்காதவர் இழிகின்றனர். (பகவத் கீதை 9:24) 
 
மேற்கண்ட வசனங்கள், நாம் ஒவ்வொருவரும் கடவுள் ஒருவனையே வணங்க வேண்டும். எமது வணக்கங்களுக்கு தகுதியானவன் கடவுள் ஒருவன் மட்டுமே என்றும் எமது வணக்க வழிபாடுகளான பூஜை, நேர்ச்சை, பிரார்த்தனை, விரதம், சாஷ்டாங்கம், அறுத்துப்பலியிடல், யாத்திரை போன்ற அனைத்து வணக்க வழிபாடுகளையும் கடவுள் ஒருவனுக்கு மட்டுமே செய்ய வேண்டும். அதிலும் கடவுளின் தெய்வீகத் தன்மைகளை நன்கு அறிந்து அவனை வணங்கி வழிபட வேண்டும்.

இல்லாவிட்டால் நாம் கடவுளின் சாபத்திற்கு ஆளாகி இழிவடைந்தவர்களாகி விடுவோம் என மிகத் தெளிவாகக் கூறுகின்றது. ஆகவே கடவுள் ஒருவனே. அவன் பிறப்பற்றவன். அவன் ஜட இயற்கைக்கு அப்பாற்பட்டவன். அவன் இப்பிர பஞ்சத்திற்கு அப்பால் அவனுடைய புனித ஸ்தலத்திலே இருக்கின்றான். படைத்தவன் வேறு படைப்பினங்கள் வேறு. படைப்பினங்கள் படைத்தவனுக்கு சமமாக மாட்டாது. அவனுக்கு நிகராக (சமமாக) ஒப்பாக இணையாக எவருமில்லை. எதுவுமில்லை. அவன் மட்டுமே வணங்கி வழிபடுவதற்கு தகுதியானவன் என்ற கடவுளின் அடிப்படை தெய்வீகத் தன்மைகளை நன்கு அறிந்து அவனை வணங்கி வழிபட வேண்டும்.

இன்னும் கடவுள் அல்லாத தேவி தேவர்கள் பேய்கள், பூதங்கள், முன்னோர்கள், சிலைகள் போன்றவற்றை வணங்கி வழிபடுவது மிகத் தவறான காரியம் என பின்வரும் பகவத் கீதை வசனங்கள் மிகத் தெளிவாக கூறுகின்றது.

தேவர்களை வழிபடுபவர்கள், தேவர்களிடையே பிறப்பார்கள், பேய்களையும், பூதங்களையும் வழிபடுபவர்கள் அத்தகையவர்களிடையே பிறப்பார்கள். முன்னோர்களை வழிபடுபவர்கள் முன்னோர்களிடையே பிறப்பார்கள். (கடவுளாகிய) என்னை வழிபடுபவர்களோ என்னுடன் வாழ்வார்கள் என கடவுள் கூறுகின்றான். (பகவத் கீதை 9:25) 
 
தேவர்களுக்கு எவற்றை எல்லாம் யாகங்களாக ஒரு மனிதன் படைக்கின்றானோ அவை உண்மையில் (கடவுளாகிய) எனக்கு உரியவையே. ஆனால் உண்மையான முழு அறிவின்றி (தேவர்களுக்கு) அவை படைக்கப்படுகின்றன. (பகவத் கீதை 9:23) 
 
ஜட ஆசைகளால் அலைக்கழிக்கப்பட்ட மனத்தை உடையவர்கள் தேவர்களுக்கு சரணடைந்து தங்களது இயற்கைக்கேற்ற வழிபாட்டு முறைகளையும் விதிகளையும் பின்பற்றுகின்றனர். (பகவத் கீதை 7:20) 
 
அழிவில்லாப் பயனைத் தரும் பகவானை (கடவுளை) வழிபடாமல் அழியும்; பயனைத் தரும் பல தேவர்களை வழிபடுவதால் அற்ப மதியுடையவர் ஆகின்றனர். கடவுளை வணங்குபவர்கள் மட்டுமே கடவுளை அடைய முடியும். தேவர்களை வணங்குவதால் தேவர்களை அடைய முடியும். ஆனால் அது அழிவுடையது. (பகவத் கீதை 7:23) (தேவர்களும் அழியக்கூடியவர்களே!) 
 
மேற்கண்ட வசனங்கள் கடவுள் அல்லாத கடவுளின் படைப்பினங்களான தேவி, தேவர்கள், பேய்கள், பூதங்கள், முன்னோர்கள் இன்னும் சூரியன், சந்திரன், சிலைகள் போன்றவற்றை வணங்கி வழிபட்டால் கடவுளை அடையமுடியாது. அவைகளை வணங்கி வழிபடுவது பயனற்றது. அது அழிவடையக் கூடியது. இவ்வாறு பயனற்ற செயல்களை செய்வது அறியாமையுமாகும் என மிகத் தெளிவாக கூறுகின்றது.

ஆகவே அறியாமை எனும் இருளிலிருந்து விடுபட்டு ஏக இறைவனை மட்டும் வணங்கி வழிபடுகின்ற நேர்வழி பெற்ற ஒரே குல மக்களாக சேர்ந்து வணக்கத்திற்குரிய நாயன் ஏக இறைவனாகிய உண்மைக் கடவுளைத் தவிர வேறுயாருமில்லை என்பதை ஏற்று நாமும் வெற்றி பெறும் சமுதாயமாக மாறுவோம்.

கடவுளுக்கு சரணடைந்தவன்.

கடவுளுக்கு சரணடைந்தவன் என்னும் சொல்லின் பொருளானது கட்டுப்படுபவன் கீழ்ப்படிபவன், அதாவது ஏக இறைவனுக்கு கட்டுப்படுபவன் கீழ்ப்படிபவன் என்பதாகும். இவ்வாறு ஏக இறைவனுக்கு கட்டுப்பட்டு நடப்பவர்களே வெற்றி பெறும் சமூகம் என மிகத் தெட்டத் தெளிவாக புனித பகவத்கீதை பின்வருமாறு கூறுகின்றது.

'கடவுளுக்கு முழுமையாக சரணடைவாயாக அவரது கருணையால் நீ தெய்வீக அமைதியையும் பரம நித்தியத் தலத்தையும் அடைவாய். (பகவத் கீதை 18:62)
 
 
இன்னும் எப்போதுமே கடவுளைப் பற்றி நினைத்து கடவுளின் பக்தனாய் ஆவாயாக. கடவுளை வழிபட்டு உனது வணக்கங்களை கடவுளுக்கு மட்டும் சமர்ப்பிப்பாயாக. இவ்வாறு நீ செய்தால் கடவுளிடம் தவறாது வந்து சேருவாய். (பகவத் கீதை 18:65) 
 
மேற்கண்ட வசனங்கள் கடவுளுக்கு முழுமையாக கட்டுப்பட்டு அவனை மட்டுமே வணங்கி வழிபட வேண்டும் என்ற கடவுளின் கட்டளைக்கு கட்டுப்பட்டு நடக்கும் மக்கள் மட்டுமே வெற்றி பெறமுடியும் என மிகத் தெளிவாக கூறுகின்றது. மாறாக கடவுள் அல்லாத தேவி, தேவர்கள், சிலைகள், சூரியன், சந்திரன், காற்று, மிருகங்கள், மனிதர்கள் போன்ற கடவுளின் படைப்பினங்களை வணங்கி வழிப்பட்டால் ஒருபோதும் வெற்றிபெற முடியாது என்பதையும் தெளிவாக கூறுகின்றது.
ஆகவே (ஏகம், சாஸ்திரம், ஏகோ தேவா) ஒன்றே வேதம், ஒருவனே தேவன். என்னும் ஓரிறைக் கொள்கையை ஏற்று அவனுக்கு முழுமையாக கட்டுப்பட்டு அவனை மட்டுமே வணங்கி வழிபட்டு வெற்றி பெறும் சமுதாயமாக நாம் மாற ஒன்றுபடுவோம் வாருங்கள். ஓரிறைக்கொள்கையில்