கிறிஸ்தவம்
இறந்துபோன பெரியவர்களும் சிறியவர்களும் சிம்மாசனத்துக்கு முன்னால் நிற்பதைப் பார்த்தேன். அப்போது சுருள்கள் திறக்கப்பட்டன. வாழ்வின் சுருள் என்ற வேறொரு சுருளும் திறக்கப்பட்டது. அந்தச் சுருள்களில் எழுதப்பட்டிருக்கிறபடியே, இறந்தவர்கள் தங்களுடைய செயல்களுக்கு ஏற்ப தீர்ப்பு பெற்றார்கள். (வெளிப்படுத்துதல் 20:12)
அப்போது, யெகோவாவுக்குப் பயந்தவர்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டார்கள். யெகோவா அதைக் கவனித்துக் கேட்டார். யெகோவாவுக்குப் பயந்து நடந்து, அவருடைய பெயரை எப்போதும் நினைக்கிறவர்களுக்காக ஒரு நினைவுப் புத்தகம் அவருக்குமுன் எழுதப்பட்டது. (மல்கியா 3:16)
அதேபோல், ஜெயிக்கிறவன் எவனோ அவனுக்கு வெள்ளை உடை போட்டுவிடப்படும். அவனுடைய பெயரை வாழ்வின் புத்தகத்திலிருந்து ஒருபோதும் துடைத்தழிக்க மாட்டேன். அதற்குப் பதிலாக, அவனை எனக்குத் தெரியும் என்று என் தகப்பனுக்கு முன்பாகவும் அவருடைய தூதர்களுக்கு முன்பாகவும் சொல்வேன். (வெளிப்படுத்துதல் 3.5)
"வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும் எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்து கொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது'' (2தீமோ 3:16,17)
இஸ்லாம்
(நபியே!) நாம் எல்லா மக்களையும் அவரவர்களுடைய தலைவர்களுடன் அழைக்கும் நாளை (நீர் நினைவூட்டுவீராக; அந்நாளில்) எவருடைய (செயல் குறிப்பு) ஏடு அவருடைய வலக்கையில் கொடுக்கப்படுகிறதோ, அ(த்தகைய நற்பேறுடைய)வர்கள் தம் ஏடுகளை (நிம்மதியுடன்) படிப்பார்கள்; இன்னும், அவர்கள் அணுவளவும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள். 17:71.
நாம் எந்த ஆத்மாவையும், அதன் சக்திக்கு ஏற்றவாறு அல்லாமல் (அதிகம் செய்யுமாறு) நிர்ப்பந்திக்க மாட்டோம்; மேலும் உண்மையை பேசும் ஒரு (பதிவுப்) புத்தகம் நம்மிடம் இருக்கிறது; இன்னும் அவர்களுக்கு (ஒரு சிறிதும்) அநியாயம் செய்யப்பட மாட்டாது. 23:62.
இன்னும் (பட்டோலையாகிய) புத்தகம் (அவர்கள் முன்) வைக்கப்படும்; அதிலுள்ளதைக் கண்டு குற்றவாளிகள் மிக்க அச்சத்துடன் இருப்பதைக் காண்பீர்; மேலும் அவர்கள், “எங்கள் கேடே! இந்த ஏட்டிற்கு என்ன (நேர்ந்தது)? சிறியவையோ பெரியவையோ எதையும் வரையறுக்காது இது விட்டுவைக்கவில்லையே!” என்று கூறுவார்கள்; இன்னும், அவர்கள்செய்த யாவும் அவர்கள் முன் வைக்கப்படுவதைக் காண்பார்கள்; ஆனால் உம்முடைய இறைவன் ஒருவருக்கும் அநியாயம் செய்யமாட்டான். 18:49.
“இது உங்களைப்பற்றிய உண்மையைக் கூறும் நம்முடைய புத்தகம்; நிச்சயமாக நாம் நீங்கள் செய்து வந்ததைப் பதிவு செய்து கொண்டிருந்தோம்” (என்று கூறப்படும்). 45:29.
(நபியே!) நாம் எல்லா மக்களையும் அவரவர்களுடைய தலைவர்களுடன் அழைக்கும் நாளை (நீர் நினைவூட்டுவீராக; அந்நாளில்) எவருடைய (செயல் குறிப்பு) ஏடு அவருடைய வலக்கையில் கொடுக்கப்படுகிறதோ, அ(த்தகைய நற்பேறுடைய)வர்கள் தம் ஏடுகளை (நிம்மதியுடன்) படிப்பார்கள்; இன்னும், அவர்கள் அணுவளவும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள். 17:71.
மேலே உள்ள வசனங்கள் செயல்கள் பதியப்பட்ட ஏடுகளையும் கீழே உள்ளவைகள் அனைத்து வேதங்கள் உள்ளடக்கிய உலகின் அனைத்து நிகழ்வுகளும் அது நடப்பதற்கு முன்னரே எழுதப்பட்ட ஏடு ஆகும்.
(மரணத்திற்குப் பின்) அவர்களிலிருந்து (அவர்கள் உடலை) பூமி எந்த அளவு குறைத்திருக்கின்றதோ அதைத் திட்டமாக நாம் அறிந்திருக்கின்றோம்; நம்மிடம் (யாவும் பதிக்கப் பெற்று) பாதுகாக்கப்பட்ட ஏடு இருக்கிறது. 50:4
80:11. அவ்வாறல்ல! ஏனெனில் (இத்திருக் குர்ஆன் நினைவூட்டும்) நல்லுபதேசமாகும்.
80:12. எனவே, எவர் விரும்புகிறாரோ அவர் அதை நினைவு கொள்வார்.
80:13. (அது) சங்கையாக்கப்பட்ட ஏடுகளில் இருக்கிறது.
80:14. உயர்வாக்கப்பட்டது; பரிசுத்தமாக்கப்பட்டது.
80:15. (வானவர்களான) எழுதுபவர்களின் கைகளால்-
80:16. (லவ்ஹுல் மஹ்ஃபூளிலிருந்து எழுதிய அவ்வானவர்கள்) சங்கை மிக்கவர்கள்; நல்லோர்கள்.(நபியே!) வானத்திலும், பூமியிலும் இருப்பவற்றை நிச்சயமாக அல்லாஹ் அறிவான் என்பதை நீர் அறியவில்லையா? நிச்சயமாக இது (லவ்ஹூல் மஹ்ஃபூல் என்னும்) புத்தகத்தில் இருக்கின்றது, நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு மிக்க சுலபமானதேயாகும். (அல்குர்ஆன் : 22:70)
அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ், வானங்களையும் பூமியையும் படைப்பதற்கு ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, படைப்பினங்களின் விதிகளை எழுதிவிட்டான். (அப்போது) அவனது அரியணை (அர்ஷ்) தண்ணீரின் மேல் இருந்தது. (ஸஹீஹ் முஸ்லிம் : 5160.)
சைவம்
ஆறு அங்கமாய் வரு மாமறை ஓதியைக்கூறு அங்கம் ஆகக் குணம் பயில்வார் இல்லைவேறு அங்கம் ஆக விளைவு செய்து அப்புறம்அஞ்சன மேனி அரிவை ஓர் பாகத்தன்அஞ்சொடு இருபத்து மூன்று உள ஆகமம்அஞ்சலி கூப்பி அறுபத்து அறுவரும்நந்தி அருள் பெற்ற நாதரை நாடிடின்நந்திகள் நால்வர் சிவயோக மாமுனிமன்று தொழுத பதஞ்சலி வியாக் ரமர்என்று இவர் என்னோடு எண்மரும் ஆமே. - (1. குரு பாரம்பரியம் 1)நந்தி அருளாலே நாதன் ஆம் பேர் பெற்றோம்நந்தி அருளாலே மூலனை நாடினோம்நந்தி அருள் ஆவது என் செயும் நாட்டினில்நந்தி வழிகாட்ட யான் இருந்தேனே. - (1. குரு பாரம்பரியம் 2)நால்வரும் நாலு திசைக்கு ஒன்று நாதர்கள்நால்வரும் நானாவிதப் பொருள் கைக்கொண்டுநால்வரும் யான் பெற்றது எல்லாம் பெறுக எனநால்வரும் தேவராய் நாதர் ஆனார்களே. - (1. குரு பாரம்பரியம் 3)
ஏய்ந்த அரிதாரம் ஏட்டின்மே லேபூசி
ஏய்ந்த அகாரம் உகாரம் எழுத்திட்டு
வாய்ந்ததோர் வில்லம் பலகை வசியத்துக்கு
ஏய்ந்தவைத்து எண்பதி னாயிரம் வேண்டிலே. (1001)
எண்ணாக் கருடனை ஏட்டின் அகாரம் இட்டுஎண்ணாப் பொன் ஒளி எழுவெள்ளி பூசிடாவெண் நாவல் பலகையில் இட்டு மேற்கே நோக்கிஎண்ணா எழுத்து எட்டாயிரம் வேண்டிலே. (1002)