ஏழைக்கு உதவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஏழைக்கு உதவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஏழைக்கு உதவு

கிறிஸ்தவம் 


ஏழை ஜனங்களுக்கு உதவி செய்பவன், தனக்குத் தேவையான எல்லாவற்றையும் பெற்றுக்கொள்ளுவான். ஆனால் ஏழைகளுக்கு உதவி செய்ய மறுப்பவனுக்கோ அதிகத் தொல்லைகள் வரும். - (நீதிமொழிகள் 28:27)

 22 ஏழைகளிடமிருந்து திருடுவது எளிது. ஆனால் அதனைச் செய்யாதே. வழக்கு மன்றத்தில் ஏழைகளைச் சுரண்டாதே. 23 கர்த்தர் அவர்கள் பக்கம் இருக்கிறார். அவர்களுக்கு அவர் உதவுகிறார். அவர்களிடமிருந்து எடுத்துக்கொண்ட எந்தப் பொருளையும் அவர் திரும்ப எடுத்துக்கொள்கிறார்.  - (நீதிமொழிகள் 22:22-23)

10 பழைய சொத்துக்களின் எல்லையை மாற்றாதே. அநாதைகளுக்குரிய நிலத்தை அபகரிக்காதே. 11 கர்த்தர் உனக்கு எதிராக இருப்பார். கர்த்தர் சர்வ வல்லமையுள்ளவர். அந்த அநாதைகளை அவரே பாதுகாக்கிறார். - (நீதிமொழிகள் 23:10) 


தமிழர் சமயம் 


கிடைத்தவற்றில் சிறிதினை அவ்வப்பொழுது எளியார்க்குதவுக

பெற்றநாள் பெற்றநாள் பெற்றதனுள் ஆற்றுவது ஒன்று
இற்றைநாள் ஈத்துஉண்டு இனிது ஒழுகல் - சுற்றும்
இதனில் இலேசுடை காணோம் அதனை
முதல்நின்று இடைதெரியுங் கால்.  பாடல் - 169

விளக்கவுரை செல்வத்தை அடையுந்தோறும் பெற்ற அச்செல்வத்தில் செய்வதற்குரிய அறத்தை இன்றே செய்வோம் என்று நினைத்து இரப்பவர்க்குத் தந்து, நீயும் உண்டு இனிமை தரும் நன்னெறியில் நின்று ஒழுகுவாயாக! அந்த அறம் செய்ததற்குரிய வழியை முதல் தொடங்கி முழுமையும் ஆராயுமிடத்து எவ்விடத்து; இதைக் காட்டிலும் எளியது வேறொன்றும் இல்லை.

கொடாது இருப்பது அறியாமை 

கொடுத்துக் கொணர்ந்து அறம் செல்வம் கொடாது
விடுத்துத்தம் வீறுஅழிதல் கண்டார் - கொடுப்பதன் கண்
ஆற்ற முடியாது எனினும்தாம் ஆற்றுவார்
மாற்றார் மறுமைகாண் பார். பாடல் - 170

விளக்கவுரை செல்வம் உள்ள காலத்தில் வறியவர்க்கு கொடுத்ததால் (அறம்) கொண்டு வந்து தந்த, செல்வத்தை வவறியவர்க்குக் கொடுக்காமல் தம் பெருமை அழியும் பிறரைக் கண்ட சான்றோர், வறுமை அடைந்து இரந்தவர்க்குக் கொடைத் தன்மையுடன் மிகவும் வழங்க முடியாது என்றாலும் தம் பொருள் நிலைக்கு ஏற்பக் கொடுத்து உதவுவர்; இரந்தவர்க்கு இல்லை எனக் கூறார்.

இஸ்லாம் 


(நம்பிக்கையாளர்களே!) சில ஏழைகள் இருக்கின்றனர். அவர்கள் அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்கென்றே தங்களை (முற்றிலும் அர்ப்பணம் செய்து) ஒதுக்கிக் கொண்டதால் (தங்கள் சொந்த வாழ்விற்குத் தேடக்கூட) பூமியில் நடமாட சாத்தியப் படாதவர்களாக இருக்கின்றனர். (அன்றி, அவர்கள்) யாசிக்காததால் (அவர்களின் வறுமை நிலையை) அறியாதவர்கள். அவர்களை செல்வந்தர்களென எண்ணிக் கொள்கின்றனர். அவர்களுடைய (வறுமையின்) அடையாளங்(களாகிய ஆடை, இருப்பிடம் ஆகியவை)களைக் கொண்டு நீங்கள் அவர்களை அறிந்து கொள்ளலாம். அவர்கள் மனிதர்களிடத்தில் வருந்தியும் கேட்க மாட்டார்கள். (இத்தகைய ஏழைகளுக்கு) நீங்கள் நல்லதில் இருந்து எதைச்செலவு செய்தபோதிலும் நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறி(ந்து அதற்குரிய கூலியை உங்களுக்குத் தரு)வான். (அல்குர்ஆன் : 2:273)