தமிழர் சமயம்
அவனை ஒழிய அமரரும் இல்லைஅவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லைஅவனன்றி மூவரால் ஆவதொன் றில்லைஅவனன்றி ஊர்புகு மாறறி யேனே. - (திருமந்திரம் - தந்திரம் 1 - பாடல் 2)
பொழிப்புரை: அவனது அருளின்றி தேவர் அசுரர் மற்றும் மனிதர்களால் யாதொரு செயலும் நடவாது. அதவாது அவனே அனைத்தையும் செய்கிறான், யார் எதை செய்தாலும் அவனைக் கொண்டுதான் செய்கின்றனர் என்று பொருள்.
கிறிஸ்தவம்
பயனுள்ள வாக்குகள் உதவிகரமானது உதவியாக இல்லை ஆனால் இயேசு அவர்களைப் பார்த்து, "இது மனிதனால் கூடாதது, ஆனால் கடவுளால் எல்லாம் கூடும்" என்றார். - (மத்தேயு 19:26)
யூத மதம்
இறைவனுக்கு ஏதாவது கடினமானதா? குறிப்பிட்ட நேரத்தில், அடுத்த வருடம் இதே நேரத்தில் நான் உங்களிடம் திரும்புவேன், சாராவுக்கு ஒரு மகன் இருப்பான். - (ஆதியாகமம் 18:14)
இஸ்லாம்
அம்மின்னல் அவர்களின் பார்வைகளைப் பறிக்க நெருங்குகின்றது; அது அவர்களுக்கு ஒளி தரும்போதெல்லாம், அதில் நடக்கிறார்கள். மேலும் அது அவர்களுக்கு இருளாகிவிட்டால் நின்றுவிடுகிறார்கள். அல்லாஹ் நாடினால் அவர்களுடைய செவிப் புலனையும், அவர்களுடைய பார்வைகளையும் போக்கிவிடுவான்; நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் மிக்க ஆற்றல் உடையவன் - (குர்ஆன் 2:20)
முயற்சியும் இறைவனின் நாட்டமும்
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்மெய்வருத்தக் கூலி தரும். (குறள் 619)
மணக்குடவர் உரை: "புண்ணியம்" இன்மையால் ஆக்கம் இல்லையாயினும் ஒருவினையின் கண்ணே முயல்வானாயின் முயற்சி தன்னுடம்பினால் வருந்திய வருத்தத்தின் அளவு பயன் கொடுக்கும். இது புண்ணியமில்லையாயினும் பயன் கொடுக்கும் என்றது.
காலிங்கர் குறிப்புரை: தெய்வத்தான் என்றது "விதியினால்" என்றது.
குறிப்பு பொழிப்புரையாளர்கள் சிலர் "தெய்வத்தான்" என்பதை "புண்ணியம் (வினைப்பயன்)" என்றும், சிலர் "தெய்வத்தால் ஏற்படுத்தப்பட்ட விதி" என்றும் கூறுகின்றனர்.
"தெய்வத்தான்" என்பது விதியாக இருக்க வாய்ப்பில்லை ஏனென்றால் "ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினுந் தான்முந் துறும். - 380" குறளுக்கு முரணாகும்.
"தெய்வத்தான்" என்பது புண்ணியமாக இருக்குமா என்றால், அதற்கும் வாய்ப்பில்லை. "தஞ்சாவூரான்" என்பது "தஞ்சாவூரால்" என்று பொருள் படுமா? அல்லது "தஞ்சாவூரைச் சார்ந்தவன்" என்று பொருள் படுமா? ஏனென்றால் "ஆன்" என்பது படர்க்கை யொருமையாண் பால் விகுதி ஆகும். எனவே இந்த சொல் ஒரு நபரை குறிக்கிறது. தெய்வத்து+ஆன் =தெய்வத்தான் என்பது தெய்வத்தை சேர்ந்தவன் என்று பொருள். அதாவது தெய்வத்தை வணங்கி வழிப்படுபவன் என்று பொருள். வழிபடுதல் என்றால் கட்டுப்படுத்தல், உபதேசத்தை பின்பற்றுதல் என்று பொருள்.
ஆனால் சமகாலத்தில் "தெய்வத்தான்" என்பதை "தெய்வத்தால்" என்று திரித்து கூறுவதுடன், குறள் கடவுள் மறுப்பை கூறுகின்றது என்றும் கூறுகின்றனர். அதாவது "தெய்வத்தாலேயே முடியவில்லை என்றாலும் முயற்சியாலும் முடியும்" என்பது போல சித்தரிக்கின்றனர். ஆனால் இது முயற்சியின் முக்கியத்துவத்தை இது கூறுகிறதே தவிர இறைமறுப்பை அல்ல.
ஆகாது எனினும் என்பது கையாளப் பட்ட முறைக்கு மற்றொரு உதாரணம்,
நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்இல்லெனினும் ஈதலே நன்று. (குறள் 222)
மணக்குடவர் உரை: ஒருவன்மாட்டுக் கொள்ளல் நன்மை பயக்கும் நெறியெனினும் கோடல் தீது. ஒருவர்க்குக் கொடுத்தாற் பாவ முண்டெனினும் கொடுத்தல் நன்று. கொள்வோ ரமைதி யறிந்து கொடுக்கவேண்டுமெனினும் இது வரையாது கொடுத்தலாதலால் யாதொருவாற்றானுங் கொடை நன்றென்பது கூறிற்று.
குறிப்பு: ஈகைக்கு பரிசாக சொர்கம் வழங்கப்படும் ஆனால் அது இல்லை என்றாலும் கொடுப்பது தான் சிறந்தது என்று ஈகையின் முக்கியத்தை பேசுகிறது இந்த குறள். அதுபோல தெய்வத்தான் ஆகாதது ஏதுமில்லை ஆனால் அந்த தெய்வத்தான் ஆகாது என்றாலும் முயற்சியால் அதை அடையலாம் என்று கூறுவதன் மூலம் முயற்சியை வலியுறுத்துகிறது.
நமது முயற்சியின் அவசியத்தை நபிகள் நாயகமும் இவ்வாறு கூறுகிறார்,
உழைப்பின் மேன்மை ஒருவர் நபிகள் நாயகத்திடம் வந்தார். “நாயகமே! நான் எனது ஒட்டகத்தைக் கட்டி வைத்து விட்டு (அது ஓடாதிருக்க) இறைவன் மீது நம்பிக்கை வைக்க வேண்டுமா? அல்லது அதனைக் கட்டிப் போடாமல் அவிழ்த்து விட்டு இறைவனிடம் நம்பிக்கை வைக்க வேண்டுமா?” என்று வினவினார். அதற்கு நபிகளார், “அதனைக் கட்டிப் போட்டு விட்டு இறைவன் மீது நம்பிக்கை வைப்பீராக” என்றார்கள். (நூல்: திர்மிதி)
எந்த ஒரு சமூதாயத்தவரும், தம் நிலைமையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களின் நிலையை நிச்சயமாக மாற்றுவதில்லை.. [குர்ஆன் 13:11]
எனவே இறைஅடியானாக இருந்தாலும் ஒரு விளைவை எதிர்பார்த்தால் அதற்கு அவன் புறத்திலிருந்து முயற்சிகள் செய்யப்பட வேண்டும். இறைவனை அடைவதற்கும் முயற்சி நம் புறத்திலிருந்து தான் முதலில் செய்யப்பட வேண்டும்.