பல்வேறு காரணங்கள் உண்டு.
- முதல் காரணம், நாம் பெரும் செய்திகளின் உண்மை நிலையை அறிய நாம் சிரத்தை மேற்கொள்வதில்லை. அதற்கு காரணம், நம்முடைய வாழ்க்கை முறை.
- ஒரு காலத்தில் வேலை, குடும்பம் ஆகியவற்றுக்கு செலவிடும் நேரம் போக மீதம் உள்ள பொழுதை போக்க பொழுது போக்கு விடயங்களை கையிலெடுத்தோம். உதாரணமாக விளையாட்டு, tour போன்றவைகள் அதில் அடங்கும். இன்று பொழுது போக்கு அம்சங்கள் போக மீதமுல்ல நேரத்தை வேலைக்கும் குடும்பத்துக்கும் கொடுக்கிறோம். இதில் பெறப்படும் செய்தியின் உண்மை நிலையை அறிய நேரத்தை எங்கே செலவிடுவது? அப்படியே அதற்கு தயாராக இருந்தாலும், அவரவருக்கு விருப்பமான பொழுதுபோக்கு செய்திகளே கொட்டி கிடைக்கும் பொழுது, தனக்கு தொடர்பில்லாத ஒரு சமயத்தினரின் செய்தியை ஆராய்ந்து உண்மையை கண்டறிந்து அவர்கள் மீது வீண் பழி சுமத்த படுகிறது என்று உணரவேண்டிய அவசியம் யாருக்கு இருக்கும்?
- இன்று வாழ்க்கை ஒரு பந்தயம் போல ஆகிவிட்டது, இன்னொருவரை வெல்வதை மட்டுமே முதற்பொருளாக கொண்டு எப்பொழுதும் அதற்காகவே உழைப்பது. பொருளாதாரம் நமக்கு எவ்வளவு தேவை என்பதை அறியாமல் பிறரின் முன்பு தன்னை உயர்வாக காட்டிக்கொள்ள மேலும் மேலும் மேலும் பொருளை சேர்க்க முயற்சித்து கொண்டே இருப்பது. இதில் இது போன்ற செய்திகளின் உண்மை நிலையை நாம் சிந்திப்பது தேவையற்றதாக கருதுகிறோம்.
- இஸ்லாம் அல்லாத சமயத்தை அல்லது தத்துவத்தை நம்பும் சிலர் முஸ்லிம்கள் மீது பொறாமையுடனும் வெறுப்புடனும் இருப்பதால், எடுத்த எடுப்பில் அதை நம்பிவிடுவது அவர்களுக்கு வசதியாக இருக்கிறது. இவர்களுக்கும் இந்த செய்திகளின் உண்மை நிலையை அறியவேண்டிய அவசியம் இல்லை. மேலும் இவர்கள் தான் உலகெங்கும் ஆட்சி பீடத்தில் இருப்பதால் மேலும் இந்த நிலை முடுக்கிவிடப் படுகிறது.
எனவே இதில் எளிதான வழி, மீடியாக்கள் கூறும் "இஸ்லாமியர்கள் தீவிரவாதி" எனும் செய்தியை அப்படியே நம்பிவிட்டு கடந்து போவது.
இதே போல ஒடுக்குமுறைக்கும் வீண்பழிக்கும் உள்ளான, தனது உண்மை வரலாற்றை அறிந்த சமூகம் வேண்டுமென்றால் இச்செய்திகளின் உண்மை நிலையை அறிந்து இருக்கும். உதாரணமாக, தமிழர் சமூகம் மற்றும் சீக்கிய சமூகம்.
ஏன் செய்தி நிறுவனங்கள் இப்படி பொய்யான செய்தியை பரப்ப வேண்டும்? அதில் அவர்களுக்கு என்ன லாபம்? இது திட்டமிட்ட சதியின் ஒரு பகுதி என்றால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம்.
2. இரண்டாவது காரணம், தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதம் இரண்டுக்கும் வேற்றுமையை அறியாதது.
- தீவிரவாதம் என்பது தான் ஏற்கும் தத்துவத்தை எவ்வுயிர்க்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் தீவிரவமாக பின்பற்றுவது. அதை கிழ்கண்ட வசனங்கள் விளக்குகிறது.
'ஏக இறைவனை மறுப்பவர்களே! நீங்கள் வணங்குவதை நான் வணங்க மாட்டேன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோரில்லை. உங்கள் மார்க்கம் உங்களுக்கு. என் மார்க்கம் எனக்கு' என முஹம்மதே கூறுவீராக! (குர்ஆன் 109:1,2,3,4,5,6)
“முஸ்லீம்களே உங்களிடம் போர் புரியாமல், உங்களை உங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்ற நினைக்காமல் உங்களுடன் நட்புடன் இருக்கும் முஸ்லீம் அல்லாதவர்களுடன் நீங்களும் நியாயமாகவும் நல்லவிதமாகவும் நடந்து கொள்ளுங்கள்.”(அல்குர்ஆன் 28:8)
- பயங்கரவாதம் என்பது உயிர் மற்றும் சொத்துக்களை சேதப்படுத்துவது. ஆன்மீகமோ, நாத்தீகமோ எதுவாக இருந்தாலும் இவைகளை பிழை என்றுதான் போதிக்கிறது. எந்த சமய நூல்களானாலும் இன்னொரு சமயம் சார்ந்த மக்களை துன்புறுத்துவதை தடை செய்கிறது. முக்கியமாக இஸ்லாம் எந்த வழிபாட்டு தளமும் சேதப்படுத்த படக்கூடாது என்பதை இவ்வாறு கூறுகிறது.
'எங்கள் இறைவன் அல்லாஹ்வே! என்று அவர்கள் கூறியதற்காகவே நியாயமின்றி அவர்களின் இல்லங்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர். மனிதர்களில் ஒருவர் மூலம் மற்றவரை இறைவன் தடுத்திருக்கா விட்டால் மடங்களும, ஆலயங்களும், வழிபாட்டுத் தலங்களும் இறைவனின் பெயர் அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளி வாசல்களும் இடிக்கப்பட்டிருக்கும்.' (குர்ஆன் 22:40)
இதன் காரணமாகவே, இஸ்ராயீலின் வழித்தோன்றல்களுக்கு நாம் கட்டளை பிறப்பித்தோம்: “எவனொருவன் ஒரு மனிதனைக் கொலை செய்ததற்குப் பகரமாக அன்றி அல்லது பூமியில் குழப்பத்தைப் பரப்பிய காரணத்திற்காக அன்றி வேறு காரணத்திற்காக மற்றவனைக் கொலை செய்கின்றானோ அவன் மனிதர்கள் எல்லோரையும் கொலை செய்தவன் போல் ஆவான். மேலும், எவனொருவன் பிறிதொருவனுக்கு வாழ்வு அளிக்கின்றானோ அவன் எல்லா மனிதர்களுக்கும் வாழ்வு அளித்தவன் போல் ஆவான்.” ஆனால் அவர்களின் நிலை என்னவெனில், நம்முடைய தூதர்கள் (தொடர்ச்சியாக) அவர்களிடம் தெள்ளத் தெளிவான கட்டளைகள் கொண்டு வந்த பின்னரும் அவர்களில் பெரும்பாலோர் பூமியில் வரம்பு மீறிய செயல்கள் புரிபவர்களாகவே இருக்கின்றனர். (குர்ஆன் 5:32)
3. மூன்றாவது, உலகில் உள்ள பயங்கரவாத அமைப்புகள் மற்றும் பயங்கரவாத தாக்குதல் ஆகியவற்றின் வரலாற்றையும் புள்ளி விபரத்தையும் அறியாதது. இஸ்லாம் 1447 ஆண்டுகளாக உள்ளது, ஆனால் தீவிரவாதம் என்னும் சொல் கடந்த நூறு ஆண்டுகளாகத்தான் பயன்படுத்தப் படுகிறது. இஸ்லாமும் முஸ்லிமும் தான் தீவிரவாதத்துக்கு காரணம் என்றால் 1300 ஆண்டுகளாக தீவிரவாதம் எங்கே போனது?. ஏன் என்று அறிய மேலே உள்ள screen shot ஐ வாசிக்கவும். மேலும் கீழுள்ள புள்ளி விபரங்களையும் உதாரணத்தையும் காண்க.
உதாரணமாக, ISIS என்பது இஸ்லாமிய ஆட்சியை நிறுவ ஏற்படுத்தப்பட்ட பயங்கவாத குழு என்றும் அது மற்ற சமயங்களை சார்ந்த மக்களை கொலை செய்வதை நோக்கமாக கோடனுள்ளது என்றும், அனைத்து நாடுகளிலும் அதன் நீட்சி இருக்கிறது என்றும் செய்திகளில் கூறி வந்தார்கள். இந்தியாவில், தமிழகத்தில் கூட இன்றுவரை அதன் பெயரை குறிப்பிட்டு கைதுகள் நடைபெறுகிறது.
இன்று பாலஸ்தீனத்தில் நடைபெறும் யுத்ததில் அவர்கள் ஏன் கலந்துகொள்ளவில்லை? ஹமாஸ் அரசுடன் இஸ்லாமிக் ஜிஹாத் உட்பட ஷியா பிரிவு ஆயுத குழுவான ஹிஸ்புல்லாஹ் மற்றும் ஹௌதி ஆயுத குழுக்கள் உட்பட பலரும் கலந்து கொள்ளும் பொழுது அருகாமையில் உள்ள சிரியாவில் இருக்கும் ISIS ஏன் கலந்து கொள்ளவில்லை.
ISIS தலைவர் கொல்லப்பட்டதால் அவர்கள் நகர்வு முடங்கிவிட்டது என்று யாரேனும் கூறினால், ஒரு இயக்கம் ஒரு தலைவரை அடிப்படையாக கொண்டு இயங்காது என்று புரிந்து கொள்ளவேண்டும். மேலும் மேற்கத்திய மீடியாக்களும் அரசுகளும் கூட ISIS நிலை பற்றிய அச்சத்தை வெளிப்படுத்தவில்லை. ஏனென்றால் அவர்கள் CIA வால் உருவாக்கப்பட்டவர்கள் என்பதுதான் நிதர்சனம். தலைவரை கொன்றது போல நாடகம் ஆடி அதன் திரைக்கதையை முடித்தது வைத்த அமெரிக்கா அதைப்பற்றி ஏன் பேசப் போகிறது? 150 ஆண்டுகளாகத்தான் அமேரிக்கா உலகத்தை ஆதிக்கம் செய்கிறது. எனவே எங்கெல்லாம் அமெரிக்காவின் தலையீடு இருந்ததோ (ஈராக், ஆஃப்கானிஸ்தான், லெபனான், ஏமன், சிரியா, பாலஸ்தீனம், ஆப்ரிக்கா) அங்கெல்லாம் தான் தீவிரவாதம் என்று வெகுவாக கூறப்படுகிறது. சொந்த நிலத்து மக்களை அடிமைப் படுத்த வரும் ஒருவனுக்கு எதிராக தலை வாழை விருந்து சமைப்பார்களா என்ன?