From other source லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
From other source லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஜிஹாத் என்றால் என்ன ? சுவாமிஜி ஸ்ரீ லஷ்மி சங்கராச்சார்யா அவர்களின் விளக்கம்..!


அனைத்து சமயங்களும் நல்லதைத்தான் போதிக்கின்றன , ஆனால் அது கயவர்களின் கைகளில் மாட்டி கொள்ளும் போது தான் , மனிதனின் பலகினத்தை பயன்படுத்தி அவனை மதம் என்ற போர்வையில் மாய்த்து அப்பாவி மக்களை ஏவி விட்டு சுகம் காண்கின்றனர் , இருந்தாலும் சில நல்ல பெரியவர்கள் ,மத குருமார்கள் மக்களை பண்படுத்த செய்கிறார்கள் ,அப்படி ஒரு நல்ல சமூக நல்லிணக்கத்தை எதிர் பார்த்து தன் உரையை எடுத்துரைக்கும் அந்த மரியாதைக்குரிய சுவாமிஜி பெரியவரின் பெயர் ஸ்ரீ லஷ்மி சங்கராச்சார்யா அவர்கள்.

அலஹாபாத் பல்கலைக் கழகத்தில் பயின்ற இந்து மத பெரியவர் ஸ்ரீ லஷ்மி சங்கராச்சார்யா அவர்கள் கான்பூர் நகரில் இந்த மாதம் நடந்த ஒரு கருத்தரங்கில் இஸ்லாமிய ஜிஹாதைப் பற்றி கருத்துரையை வழங்கினார்.

அன்புள்ள சகோதர சகோதரிகளே! இங்கு நான் சில எண்ணங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்று வந்துள்ளேன். 15 வருடங்களுக்கு முன்பு குர்ஆனை படித்துள்ளேன். பத்திரிக்கையிலும், நண்பர்கள் மூலமாகவும் இஸ்லாத்தைப் பற்றியும் முகமது நபியைப் பற்றியும் பல தவறான கருத்துகள் என்க்குள் விதைக்கப்பட்டிருந்தது. இந்த மக்களும், பத்திரிக்கைகளும் குர்ஆனைப் பற்றி சொல்வது உண்மைதானா என்பதை தெரிந்து கொள்வதற்காக நான் குர்ஆனை ஆராய ஆரம்பித்தேன். கிராமத்தில் சொல்லப்படும் பழமொழி ஒன்றைப் போல் குர்ஆனில் உள்ள நல்ல விஷயங்களை படிப்பதை விட்டு விட்டு அதிலிருந்து என்ன தவறுகளை உண்டாக்கலாம் என்று சிநதிக்க ஆரம்பித்தேன். சில முஸ்லிம்களின் நடவடிக்கைகளும், குர்ஆனின் சில வசனங்களும் எதிர்மறையாக என்னை ஒரு புத்தகம் எழுதத் தூண்டியது. அதன் தலைப்பு "THE HISTORY OF ISLAMIC TERRORISM". ஆனால் நான் எழுதியவை அனைத்தும் தவறு என்று பின்னாளில் உணர்ந்து கொண்டேன்.

இந்து மக்களில் பெரும்பான்மையோர் இஸ்லாத்துக்கு மறு பெயர் ஜிஹாத் என்றும், ஜிஹாத் என்பது தீவிரவாதம் என்றும் புரிந்து வைத்துள்ளனர். நான் புரிந்து கொண்ட வகையில் இஸ்லாம் என்றால் என்ன என்பது பற்றியும், ஜிஹாத் என்றால் என்ன என்பது பற்றியும் தெரிந்து கொள்ள மஹா பாரத காலத்துக்கு நாம் செல்ல வேண்டும்.

கௌரவர்கள், பாண்டவர்கள், துரியோதனன், அர்ஜூனன் கதைகள் எல்லாம் நமக்கு நன்றாகவே தெரியும்.

"அர்ஜூனா, இந்த சிக்கலான நேரத்தில் இக்களங்கம் எங்கிருந்து உனக்கு வந்தது; பண்புடையவனுக்கு இது தகாதது; மேலுலகுக்கும் வழிகாட்டாதது; இகவாழ்விலோ இழிவைத் தருவது. இது போன்ற தளர்ச்சிக்கு இடம் தராதே. இது உனக்கு ஏற்றதல்ல. இதய பலவீனத்தை விட்டுவிட்டு எழுந்து நில்."

பகவத் கீதை அத்தியாயம் 2 ல் வரும் வசனங்களே இவை. அநியாயத்துக்கும் அக்கிரமத்துக்கும் எதிராக நடக்கும் ஒரு யுத்தம் யுத்தம் அல்ல அது தர்ம யுத்தம் என்கிறது இந்து மத வேதங்கள். அங்கு போரிடுவதற்கோ தயவு தாட்சண்யம் பார்ப்பதற்கோ எந்த முகாந்திரமும் இல்லை என்கிறது கீதை. இந்த யுத்தத்தில் தோற்றாலும் நீ சொர்க்கம் செல்வாய் என்று உபதேசிக்கப்படுகிறது.

இதே போன்றுதான் மெக்கா நகரில் அந்த மக்களின் குடி விபசாரம், சிலை வணக்கம், வட்டி, பெண் கொடுமை, பெண் குழந்தைகளை கொல்லுதல் போன்ற செயல்களை விமரிசித்து 'ஒரே இறைவனை வணங்குங்கள்' என்று உபதேசித்தார் நபிகள் நாயகம். உடனே அங்கிருந்த குரைஷிகள் இவரையும் இவரது ஆதரவாளர்களையும எதிரிகளாக பாவிக்க தொடங்கினர். பலரை கொலை செய்தனர். அவர்களின் பொருட்களை கொள்ளையடித்தனர். ஊர் விலக்கம் செய்தனர். இவர்கள் செய்த கொடுமைகளை கண்டு மனம் வெதும்பி மதினாவை நோக்கி செல்கிறார் நபிகள். அதே குரைஷி கூட்டம் அங்கும் முஸ்லிம்களை பின் தொடர்ந்து வருகிறது. முஸ்லிம்களை அழிக்கப் பார்க்கிறது.

ஒரு வருடம் அல்லது இரு வருடம் அல்ல. 13 வருடங்கள் இது போன்ற கொடுமைகளை முகமது நபியும் அவரது தோழர்களும் அனுபவிக்கின்றனர். இவ்வளவு கொடுமைகள் தினம் தினம் நடந்தும் தனது தோழர்களிடம் 'பொறுமையாக இருங்கள். பொறுமையாளர்களோடு நம்மைப் படைத்த இறைவன் இருக்கிறான்' என்று அமைதியாக உபதேசித்தார். மக்கா குரைஷிகளின் அக்கிரமங்கள் உச்ச கட்டத்தை அடைந்த போதுதான் தங்களை தற்காத்து கொள்ள எதிர்த்து போரிடுகிறார்கள் முஸ்லிம்கள். மதினாவில் பயந்து தஞ்சம் அடைந்த முஸ்லிம்களை கொல்வதற்காக படை திரட்டிக் கொண்டு மக்காவிலிருந்து மதினா நோக்கி குரைஷிகளின் படை வருகிறது. பகவத் கீதையில் எந்த சூழலை நாம் பார்ததோமோ அதே சூழல்தான் இங்கு முஸ்லிம்களுக்கும் உள்ளது. இதுதான் இஸ்லாத்தில் ஜிஹாதாக பார்க்கப்படுகிறது. இதற்கு தீவிரவாதம் என்று பெயரிடுவீர்களா? தங்கள் உயிரை பாதுகாத்துக் கொள்ள ஒருவன் எடுக்கும் தற்காப்பு முயற்சிக்கு தீவிரவாதம் என்ற சொல் சரியாகுமா? பகவத் கீதையில் வரும் சம்பவங்களை நியாயப்படுத்தும் பலர் இஸ்லாமியர்களின் தற்காப்பு போர்களை விமரிசிப்பது ஏன்?

நமது நாட்டில் தங்களை வளர்த்துக் கொள்ள சிலர் இந்துக்களையும் முஸ்லிம்களையும் நிரந்தரமாக பிரித்து வைக்க முயற்சிக்கின்றனர். இஸ்லாமிய தீவிரவாதம் என்று சொல்லி தங்களை வளமாக்கி கொள்கின்றனர். ஜிஹாதுக்கு தவறான விளக்கத்தை கொடுத்து இந்துக்களை பிரிக்க பார்க்கின்றனர்.நானும் கூட கூட்டத்தில் முன்பு பேசியிருக்கிறேன். ' ஹிந்துக்களின் தலை முடியை பிடித்து இழுத்து அவனது தலையை வெட்டினால் உனக்கு நேராக சொர்க்கம். அதற்கு பெயர்தான் ஜிஹாத். அப்படித்தான் குர்ஆனில் இருக்கிறது' என்று பல கூட்டங்களில் பேசியுள்ளேன். எனக்கு அவ்வாறுதான் சொல்லிக் கொடுக்கப்பட்டது. அவ்வாறு பேசியது என்னுடைய தவறுதான். என்னை விட பெரிய தவறு செய்தது இங்கு அமர்ந்து இருக்கும் முஸ்லிம்கள் தான். இந்த உண்மையை இத்தனை காலம் என்க்கு விளக்காமல் இருந்தது உங்கள் தவறல்லவா?

(போர் சம்பந்தமாக வரும் குர்ஆன் வசனங்களை விளக்கி அது எந்த காலத்தில் யாருக்கு அருளப்பட்டது என்பதை ஆதாரங்களோடு விளக்குகிறார். இஸ்லாத்தில் நிர்பந்தம் இல்லை என்பதற்கும் ஆதாரங்களை வைக்கிறார்)

அலஹாபாத் பல்கலைக் கழகத்தில் படித்து வந்த போது தோழர் அக்ரம் பாய் அவரது வீட்டுக்கு என்னை அழைத்திருந்தார். அவ்வாறு நான் செல்லும் போது வழியில் மாடியில் அமர்ந்திருந்த ஒரு முஸ்லிம் நான் வருவதை பார்த்து என் மீது வெற்றிலை பாக்கு எச்சிலை வேண்டுமென்றே துப்பினார். அருகில் அக்ரமுடைய வீடு. அக்ரமை அழைத்து கொஞ்சம் தண்ணீர் கொண்டு வரச் சொன்னேன். எனது நிலையைப் பார்த்து அக்ரம் பதறி விட்டார். 'என்ன ஆனது' என்று கேட்டார். 'உனது தெருவில் உள்ள ஒரு முஸ்லிம் நான் இந்து என்பதால் என் மீது எச்சிலை துப்பி விட்டார' என்றேன். நான் இதை எதற்கு சொல்கிறேன் என்றால் இது போன்றவர்களால்தான் பிரச்னைகள் ஆரம்பமாகின்றன. இது போன்ற ஆட்கள் இந்துக்களிலும் இருக்கிறர்கள், முஸ்லிம்களிலும் இருக்கிறார்கள். நான் முன்பு அலாவுதீன் கில்ஜியைப் பற்றி ஒரு வரலாற்று சம்பவத்தை படித்தேன். அதாவது இநதுக்கள் முஸ்லிம்களுக்கு அடங்கியிருக்க வேண்டும் என்றும் முஸ்லிம்கள் எச்சில் துப்பினால் ஹிந்துக்கள் கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டும் என்றும் சட்டம் இயற்றியதாக அந்த புத்தகத்தில் எழுதப்பட்டிருந்தது. அது பொய்யான வரலாற்று திரிபு என்பது பின்னாளில் தெரிந்து கொண்டேன்.

ஆனால் என் மேல் எச்சில் துப்பிய அந்த நபரின் செயலைப் பார்த்து அலாவுதீன் கில்ஜி கண்டிப்பாக இப்படி ஒரு சட்டம் இயற்றியிருப்பார் என்று முன்பு நினைத்து கொண்டேன். குர்ஆனின் கட்டளைகளை படித்தவுடன் இதன் சட்டங்களுக்கும்இஸ்லாமியர்களின் நடவடிக்கைகளுக்கும் பெருத்த வேறுபாடு உள்ளதையும் இங்கு சுட்டிக் காட்ட கடமைப் பட்டுள்ளேன்.

இஸ்லாத்தைப் பற்றி ஏதும் குறை சொல்ல வந்தீர்கள் என்றால் குர்ஆனை கொண்டு எதையும் பேசுங்கள். தவறாக நடக்கும் முஸ்லிம்களை வைத்து இஸ்லாத்தை எடை போடாதீர்கள் என்று சொல்லி எனது உரையை முடிக்கிறேன்.. என்று தனது உரையை முடித்து கூடியிருந்த அனைத்து மக்களின் மனங்களையும் கவர்ந்தார். உலக நாடுகளையே ஆச்சரியம் பட வைக்கும் நாடு நம் இந்திய நாடு ,வேற்றுமையிலும் ஒற்றுமை என்ற தத்துவத்தை முன் நிறுத்தி மனித நேயத்தை காக்க வேண்டும்
என்பது தான் ஒரு நல்ல மனித பிறவியின் எண்ணமாக இருக்க வேண்டும் ,மக்களை பிரிக்கும் எந்த சூழ்ச்சியிலும் மாய்ந்து விடாமல் சிந்தித்து நியாயத்தின் பக்கமே இருக்க வேண்டும் மனிதனுக்காகவே மதம் ,மதத்திற்காக மனிதன் இல்லை என்பது இந்த கட்டுரையின் நோக்கம் இந்த சுவாமிஜி போன்ற நல்ல எண்ணம் கொண்ட மனிதர்கள் இப்படிமக்களை நல்வழி படுத்தி பண்படுதுவோமானால் நம் இந்தியாவை எந்த சக்திகளாலும் பிரிக்க முடியாது.


இஸ்லாம் இந்தியாவில்..!

   1000 ஆண்டுகள் இருந்த சமண மதத்தை விட்டு சைவராக மாறியவர்கள்தான் உயிருக்கு பயந்து மாறியவர்கள், சைவ சமண வைணவ வரலாறையும் பெரிய புராணத்தையும் புரட்டி பாருங்கள் உண்மை புரியும் ..
    800 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட முகலாயர்கள் பெரும்பாலானோர் நினைப்பது போல் கட்டாய மத மாற்றம் செய்து இருந்தால் இந்தியா இன்று ஹிந்து நாடாக இருந்து இருக்காது என்பதை சிந்திப்பவர்கள் விளங்கி கொள்வார்கள்.
   வேறு நாட்டு அல்லது மொழியில் வந்த மதத்தை பின்பற்ற கூடாது என்றால் வட நாட்டில் இருந்து வந்த சமஸ்கிருதத்தில் உள்ள வேத இதிகாசங்களை பின்பற்றுபவர்கள்தான் முதலில் அதை நிறுத்த வேண்டும்.
    தமிழர்களை குரங்காகவும் அரக்கனாகவும் தீண்ட தகாதவர்களாகவும் சித்தரிக்கும் புத்தகங்களுக்காக ஏன் இப்படி வக்காலத்து வாங்குகின்றீர் என்று எனக்கு புரிய வில்லை..? இன்று தேவர், உடயார் முதலியார் கவுண்டர் என்று மீசையை முறுக்கி கொள்ளலாம் ஆனால் நீங்கள் உங்கள் மதத்தில் சூத்திரன்தான் பிராமினுக்கு தீட்டு பொருள் தான் நீங்கள். சிந்திக்க விடாமல் சாதி வெறி என்னும் திசை நோக்கி மாற்றி வைத்து இருக்கிறார்கள் ஆளும் வர்கத்தினர் ..
    வாருங்கள் இஸ்லாமிற்கு நாட்டின் அரசானையும் மார்க பண்டிதார்களையும் சகோதரனாய் கட்டி தழுவலாம்.. எவ்வளவு பெரிய பணக்காரனாய் இருந்தாலும் அவன் உன்னை விட தகுதியில் உயர்ந்தவனும் இல்லை, ஏழை உன்னை விட தாழ்ந்தவனும் இல்லை.இஸ்லாமிய வேதத்தை படிக்க முஸ்லிம் அல்லாத, அவர் மதத்தில் வேதங்களை கற்றுக்கொள்ள அருகதை அற்ற தாழ்ந்தவராக கருத படுபவருக்கும் உரிமையும் தகுதியும் உண்டு...
    ஹிந்து என்ற சொல் ஏதேனும் வேத புராண இதுகாசங்களில் இருக்கிறதா என்று தேடி பார்க்கவும்.. நமக்கு வெள்ளயன் வைத்த பெயர் ஹிந்து.. குறிப்பிட்ட இடத்தில் வாழும் மக்களுக்கு குறிப்பிடும் சொல் அது, இந்தியாவில் வாழும் மக்கள் இந்துக்கள்.. அது மதம் இல்லை. மதமா இருந்தால் வேத புத்தகங்களில் காட்டுங்கள் பார்கலாம். சைவம் வைணவம் வைதீக மதங்கள் இன்னும் பற்பல வட்டார மதங்கள் மற்றும் கடவுள்களின் கலவைதான் ஹிந்து மதம்.. இதை நான் சொல்லவில்லை இந்து மதத்தின் வேத இதிகாசங்கள் மற்றும் தொல்பொருள் ஆராய்சி மூலமாக கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் இவைகளை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட வரலாற்று ஆராய்ச்சியாளர் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளருமான ரஷ்யாவை சேர்ந்த ஆன்டோநோவா எழுதிய இந்திய வரலாறு என்ற புத்தகம் பதிவு செய்த கருத்து இவைகள்.இது வெறும் உதாரணம்தான், இன்னும் பற்பல ஆதாரபூர்வமான புத்தகங்களையும் ஆராய்ச்சிகளையும் தர முடியும்
   இப்படி கலவையாக இருந்தால் எந்த ஒரு கருத்தை சொன்னாலும் அதற்கு முரணான கருத்தும் அதிலேயே இருக்கும்.
    உதாரணத்திற்கு கடவுள் ஒன்றே, அவருக்கு உருவம் இல்லை என்று என்று ரிக் வேத ஆரம்ப சுலோகங்கள் சொல்கிறது, 9 மண்டலம் வரை இதையே தான் சொல்கிறது, 10 வது மண்டலத்தில் தான் மற்ற ஆரம்பித்து இருக்கிறார்கள், உருவம் கொடுத்து இருக்கிறார்கள்.. இதில் என்ன இருக்கிறது என்று கேட்டீர்கள் ஆனால், 10 மண்டலங்களும் வெவ்வேறு ரிஷிகள் மூலம் வெவ்வேறு கால கட்டத்தில் எழுதப்பட்டது.. அதிலும் இந்த 10வது மண்டலம் எழுதியவர் யார் என்பது விடை இல்லா கேள்வி... மண்டலம் 10 தான் உருவ வழிபாடு கொள்கையின் முதல் அடியிட்ட வரிகள்.. அதனை அடிப்படையாககொண்டுதான் உருவ வழிபாடு சித்தாந்தங்கள் வளர்ந்து இருக்க வேண்டும். யார் எழுதினார், அவர் சுபாவம் என்ன, நல்லவரா? கெட்டவரா? என்றே தெரியாத கொள்கையைத்தான் நாம் முன்னோர்கள் தொன்றுதொட்டு நம்பி வந்துஉள்ளனர்.
    இதை நான் சொல்லவில்லை ஹிந்து பண்டிதர் ஒருவர் எழுதிய கட்டுரையில் படித்தது. என்றால் முதல் 9 மண்டலம் சொல்வது சரியா இல்லை 10 வது மண்டலம் சொல்வது சரியா?
    நான் ஆதியும் அந்தமும் அற்றவன் என்று இறைவன் கீதையில் சொல்கிறான், ஆனால் க்ரிஷ்ணர் கடவுள் என்கிறீர்கள்? க்ரிஷ்ணர் பிறந்தார் மேலும் இறக்கவும் செய்தார்.. ராமரும் அதே வகைதான்.. இவர்கள் வாழ்ந்து இருக்கலாம், நல்ல மனிதர்களாக, புனிதர்களாக, ரிஷிகளாக, இறைத்தூதர்களாக ஆனால் கடவுள்களாக இல்லை.. இது என் கருத்து இல்லை. மேலே சொல்லிஇருக்கும் கீதையின் கருத்து இதுதான், மேலும்
    படைப்பினங்களை வணங்குவோர் அந்தகார இருளின் ஆழத்தில்
அழுத்தப்படுவர்! - என்று யஜூர் வேதம் 40:9 இல் சொல்லப்பட்டு உள்ளது
      யார் அசம்பூதியை (இயற்கை) வணங்குகிறார்களோ அவர்கள் அறியாமையில் இருக்கின்றார்கள்! - என்று அதர்வவேதம் 40 : 09 இல் சொல்லப்பட்டு உள்ளது
       வெவ்வேறு விருப்பங்களால் கவரப்பட்ட அறிவினையுடையோர், தத்தம் இயற்கையால் கட்டுண்டு, வெவ்வேறு நியமங்களில் நிற்பாராய் வேறு தெய்வங்களை வழிபடுகின்றனர். என்று பகவத்கீதை 7.20 இல் சொல்லப்பட்டு உள்ளது
   இவைகளெல்லாம் சொல்வது என்ன? இயற்கையயும் படைப்பிணங்களாகிய மனிதனையும் விலங்குகளையும் வணங்காதீர்கள் என்றுதானே.. மனிதனை படைத்தது ஆதிபகவான் என்னும் தொடக்கமும் முடிவும் பிறப்பும் இறப்பும் இல்லாத அந்த ஒரு இறைவன் தானே? இவ்வாறு வேதங்கள் சொல்ல மற்ற முரணான கருத்துக்கள் எங்கிருந்து வந்தன?
    நீங்கள் கடவுள்களாக குறிப்பிடுபவர்கள் அனைவரும் இந்தியாவில் பிறந்தவர்களாகவே சொல்லுகிறது புராணங்கள்.. ஆனால் கடவுள் உலகம் அனைத்தையும் படைத்தவர் தானே, இங்கே பிறந்ததாய் சொல்ல படும் கடவுள்கள் ஏன் மற்ற நாடுகளில் மற்ற மொழி பேசும் இடங்களில் பிறக்கவில்லை...? என்றால் அவர் இந்தியாவை மட்டும் தான் படைத்தாரா? ஆம் என்றால் அவர் கடவுளாய் இருக்க வாய்ப்பு இல்லை.. இல்லை என்றால் உங்களின் புரிதலும் செயலும் தவறு.. அடிப்படை அல்லவா இது..?
    மற்ற வேதங்கள் இறைவன் ஒருவனே என்கிறது, அனேகர் அதயே பின் தொடர்கிறார்கள்.. அதை போதித்தவர்களை ரிஷிகள், சித்தர் , தூதுவர் என்று குறிக்கப்படுகிறது, கடவுள் என்று இல்லை.. ஹிந்து மதத்திலும் அதே சொல்ல பட்டு இருக்கிரது, துரதிஷ்டம் என்னவென்றால் இறைவன் ஒருவனே அவன் ஆதியும் அந்தமும் இல்லாதவன், என இஸ்லாம் சொல்லும் அனைத்தையும் ஹிந்துமதமும் சொன்னாலும் இந்த கருத்துக்கு முரணான கருத்தையும் சேர்த்து சொல்கிறது.. இதனை ஆராய வாய்ப்போ ஆர்வமோ எவருக்கும் இல்லை.
    ஏனென்றால் சம்ஸ்கிருதம் தெரிந்தவரும் பழந்த்தமிழ் தெரிந்தவரும் வெகு குறைவு. மேலும் பணம் சம்பாதிக்கவும் வசதி வாய்ப்புகளை பெருகி கொள்ள ஆர்வம் கொண்ட நாம் எது உண்மை என்பதை அறிய ஆர்வம் கொண்டவர்களாக இல்லை.
    பாவிஷ்ய புராணம் பகுதி 3 ,3,5 இல் முகமது நபி அவர்களின் பெயருடன் அவரது வருகை பதிவு செய்யப்பட்டு உள்ளது (ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர் அவர்கள் ஒப்புக்கொண்ட உண்மை இது, முடிந்தால் வீதெோவை தேடி பாருங்கள் இல்லயேல் நான் தருகிறேன்). மேலும் 10 அவதாரங்களில் 10வது அவதாரமாக கருத்தப்படும், கல்கி புராணத்தில் குறிக்கப்பட்ட கல்கி அவதாரம் தான் முகம்மது நபி என்று நிரூபிக்கப்பட்ட உண்மை.. நிரூபித்தது இஸ்லாமியர்கள் அல்ல, மாறாக உப்பாத்தேயா என்ற சம்ஸ்கிருத அறிஞர்.
    9 அவதாரங்களை ஏற்றுக்கொண்ட நாம் ஏன் 10-வது அவதாரத்தை ஏற்க்க மறுக்கிறோம்? அவர் வேறு நாட்டை சேர்ந்தவர் என்பதாலா? வேறு மொழியை சேர்ந்தவர் என்பதாலா? வேறு கொள்கை உடயவர் என்பதாலா?
    நாட்டை பற்றி கவலை படுவீர்களானால் நேற்றய திருப்பதி தமிழ்நாடு உடையது, இன்று ஆந்திராவிற்கு.. நாளை? நேற்றய நாடு இன்று பற்பல நாடுகளாக பிளவுகளுடன், நேற்றய பற்பல நாடுகள் இன்று ஒருங்கிணைந்த நாடாக.. இது வரலாறும் புவியியலும் அரசியலும் கட்டித்தந்த பதிவுகள்.. மறுப்பதற்கு இல்லை..
    மொழி ஒரு தடையா? என்றால் முந்தய 9 அவதாரங்களின் மொழி என்னவென்று தெரியும்? சமஸ்கிருததமாக இருந்தாலும் அது நமக்கு அந்நிய மொழியே.. அனைத்து அவதாரங்களின் மொழி சம்ஸ்கிருதம் என்பது அறிவுக்கு பொருத்தமாக இல்லை.. ஏனென்றால் சமஸ்கிருதத்தில் வரலாறு வெறும் ஒரு சில ஆயிரம் ஆண்டுகாள் தான் ஆனால் இந்த அவதாரங்களின் கலகட்டமோ இன்னும் ஆராய்ச்சிக்கு உட்பட்டதாகவே இருக்கிறது.. மேலும் பல ஆய்யிரம் ஆண்டுகாள் என்று சொல்லுவோரும் உண்டு.. எனவே எந்த மொழி அவர்களின் மொழி? அவர்கள் என்ன மொழி பேசினார்கள் என்பதே சர்ச்சைக்கு உரிய விஷயம், இதில் எங்கிருந்து அவர்களின் போதனையை பொய் கலக்காமல் அல்லது மறுவாமல் நாம் உண்மையை அப்படியே அறிவது? மொழி தடை எனில் முதலில் ஒதுக்க வேண்டியது தமிழ் சமணர்களை கழுவேற்றி கொலைசெய்து சைவ வைணவ மதங்களை தமிழ்நாட்டில் பரப்பிய ஆரியர்களின் அந்தணார்களின் சமஸ்கிருத போதனைகளைத்தான் நாம் விட்டு தள்ளவேண்டும்.
    வேறு கொள்கையை கொண்டவரா? தமிழன் நாம் வர்ணங்களை கொண்டவர்கள் இல்லை... இங்கு அந்தணனும் இருந்ததில்லை சூத்திரனும் இருந்ததில்லை.. அனைவரும் இறைவன் பார்வையில் சமமானவர்களே, ஒருவனின் உயர்வு தாழ்வு அவன் செய்த கருமங்களே தீர்மானிக்கும்.. தமிழன் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கை கொண்டவன், என்றால் முகம்மது நம் குலமல்லவா? அவர் போதிப்பதும் ஒன்றே குலம் ஒரே தேவனை அல்லவா? அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு என்பதை போதித்த அவதாரம் கல்கி / முகம்மது நபி அவர்கள்.. வார்த்தை பிரயோகங்கள் மாறுபட்டு இருக்கலாம் ஆனால் கருத்து ஒன்றே.. சைவம் தமிழ்நாட்டு வரலாற்றிலும் இலக்கியத்திலும் புகுவதற்கு முன்னால் தமிழனின் கொள்கை வணங்க தகுதி படைத்தவன் உருவமற்ற ஒரேகடவுள், படைத்தவன் அவனே, அதை தான் கல்கி அவதாரமாகிய முகம்மது நபி அவர்கள் போதித்து சென்று உள்ளார்கள்..
     மேலும் இவர்தான் 10 வது அவதாரம் என்று உறுதிசெய்த பின்னர் ஏற்க மறுத்தோமானால், நாம் உண்மையில் நாம் வேதங்கள் (இறைவனின் வார்த்தை) சொல்வதை மீறியவர்கள் ஆகின்றோம்.. பின் நாம் கஷ்ட கலங்களில் "நான் என்ன பாவம் செய்தேன் எனக்கு ஏன் இந்த தண்டனை என்று சொல்ல தகுதி அற்றவர் ஆகி விடுகின்றோம்"
     யூதர்களுக்கும் கிருஸ்தவர்களுக்கும் போதுமான ஆதாரம், ஸாங்க் ஆஃப் சாலமோன் 5:16 இல் முகம்மது அவர்களின் வருகை பெயருடன் குறிக்கப்பட்டு உள்ளது.
     சரி இருக்கிறது அதற்கென்ன என்று கேட்கிறீர்களா? ஆம் நீங்கள் உங்கள் வேதத்தையும் இறைவனையும் நம்பியவர்களாகவும் வணங்கியவர்களாகவும் இருந்தால், உங்கள் வேதம் சொல்லியிருக்கும் முன்னறிவிப்புகள் ஏன் என்று சிந்தியுங்கள்.. முகம்மது அவர்கள் வரும் காலகட்டத்தில் அவரையும் அவரது போதனையையும் ஏற்கவேண்டும் என்பதற்காகவே அன்றி வேறு காரணங்கள் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. முற்சென்ற ரிஷிகளின் போதனைகள் பாழ் படும்போழுது அதனை சரிசெய்ய அடுத்து ஒரு ரிஷி அல்லது தூதரை அனுப்புவது இயற்கை.
    ஆதாரம்?, நான்கு வேதங்களும் வெவ்வேறு ரிஷிகளால் எழுத்த பட்டது, மட்டுமல்ல ஒவ்வொரு வேதத்திலும் ஒவ்வொரு மண்டலமும் வெவ்வேறு ரிஷிகளால் எழுதப்பட்டது . இதுபற்றி கிருஸ்தவர்களுக்கு விளக்கவேண்டிய அவசியம் இருக்காது என்று நினைக்கிறேன், ஏனெனில் ஹிந்துக்களை போல் அன்றி அவர்களுக்கு அவர்களது பழய புதிய ஏற்பாட்டின் கதை தெரிந்து இருக்க அனேக வாய்ப்பு உள்ளது.. ..
     அனைத்து மதங்களின் வேதங்களின் சாரம் படைத்த ஓரிறைவனை மட்டும் வணங்குவது, இஸ்லாம் மட்டுமே அதில் உறுதியாக இருப்பதால் என் மார்கமாக இதனை தேர்ந்தெடுத்துக்கொண்டேன் அல்ஹம்துலில்லாஹ்.
    என் கருத்துடன் உங்கள் கருத்து வேறுபடுகிறதா? ஆம் இறைவன் அவனது வேதத்தில் சொல்லுகிறான்
    மக்கள் முரண் பட்டவற்றில் அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அவர்களுடன் உண் மையை உள்ளடக்கிய வேதத்தை அருளினான். தெளிவான சான்றுகள் அவர் களிடம் வந்த பின்பும் வேதம் கொடுக்கப்பட்டோர்தாம், அதற்கு முரண் பட்டனர். தமக்கிடையே உள்ள பொறாமையே (இதற்குக்) காரணம். அவர்கள் முரண்பட்டதில் எது உண்மை என நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ் தனது விருப்பப்படி வழி காட்டினான். அல்லாஹ் நாடியோரை நேரான வழியில் செலுத்துவான். (அல்குர்ஆன் 2 : 213)
கடவுள் நம்பிக்கை என ஒன்று இருந்தால் சிந்தியுங்கள்.. இது விளையாட்டோ, தேவை அற்றதோ இல்லை, விஷயம் கடுமையான விளைவுகளை கொண்டது.