ஓய்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஓய்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கடவுளுக்கு ஓய்வு தேவையா? *

 ஓய்வு என்றல் பொதுவாக கலைப்புக்குப்பின் ஏதும் செய்ய இயலாமல் கலைத்தது இருபப்தாக எடுத்து கொண்டால் கடவுளுக்கு ஓய்வு தேவை இலலை. இதை அவனே அவனது நான்மறைகளில் கூறுகிறான்.

இஸ்லாம்

அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன். அவனுக்கு சிறு உறக்கமோ, ஆழ்ந்த உறக்கமோ ஏற்படாது. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அவன் அனுமதித்தால் தவிர அவனிடம் யார் தான் பரிந்து பேச முடியும்? அவர்களுக்கு முன்னேயும் பின்னேயும் உள்ளதை அவன் அறிகிறான். அவன் அறிந்திருப்பவற்றில் எதையும் அவர்களால் அறிய முடியாது, அவன் நாடியதைத் தவிர. அவனது ஆசனம் வானங்களையும், பூமியையும் உள்ளடக்கும். அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமமானதன்று அவன் உயர்ந்தவன், மகத்துவமிக்கவன். (ஆயத்துல் குர்ஸி)

நிச்சயமாக நாம் தாம் வானங்களையும், பூமியையும் அவ்விரண்டிற்குமிடையே உள்ளவற்றையும் ஆறு நாட்களில் படைத்தோம்; (அதனால்) எத்தகைய களைப்பும் நம்மைத் தீண்டவில்லை. (அல்-குர்ஆன் 50:38)

கிறிஸ்தவம்

பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த கர்த்தராகிய அநாதிதேவன் சோர்ந்துபோவதுமில்லை, இளைப்படைவதுமில்லை. இதை நீ அறியாயோ? இதை நீ கேட்டதில்லையோ? அவருடைய புத்தி ஆராய்ந்து முடியாதது. - (ஏசாயா 40:28)

கர்த்தர் சோர்வடையமாட்டார். அவருக்கு ஓய்வு தேவையில்லை. கர்த்தர் தொலைதூர இடங்களை பூமியில் படைத்தார். கர்த்தர் என்றென்றும் ஜீவித்திருக்கின்றார். – ஏசாயா 40:28

குறிப்பு: சில பைபிள் வசனங்களில் கர்த்தர் ஓய்வு எடுத்ததாக குறிப்பிட்டு உள்ளது. இங்கே "ஒய்ந்திருத்தல்" (REST) என்பதன் பொருள் வேலை எதுவும் செய்யாமல் இருப்பதைத்தான் குறிக்கிறது. "களைத்திருத்தல்" (TIRED) என்ற பொருளில் குறிப்பிடவில்லை என்று சிலர் கூறுவதுண்டு. ஆனால் இது தவறான மொழி பெயர்ப்பின் விளைவு அல்லது திட்டமிட்ட யூதர்களின் சாதியாக இருக்கலாம்.

தமிழர் சமயம் *

தொடர்ந்துநின் றானைத் தொழுமின் தொழுதால்
படர்ந்துநின் றான்பரி பாரக முற்றும்
கடந்துநின் றான்கம லம்மலர் மேலே
புணர்ந்திருந் தானடிப் புண்ணிய மாமே. (முதல் தந்திரம் - 1. சிவபரத்துவம் பாடல் எண் : 22)
 
பொழிப்புரை: யாவர்க்கும் இன்பம் அருளி, அவரை விடாது தொடர்ந்து நிற்கின்ற சிவனை வணங்குங்கள்; வணங்கினால் அவனது திருவடி ஞானம் உங்கட்குக் கிடைக்கும்.

குறிப்பு: விடாது தொடர்ந்து நிற்பதால் அவனுக்கு களைப்போ உறக்கமோ ஓய்வோ தேவை இல்லை.