தமிழர் சமயம்
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. (குறள் 127)
விளக்கம்: எவற்றைக் காக்கா விட்டாலும் நாவை காக்க வேண்டு்ம்; காக்கத் தவறினால் சொற்குற்றத்தில் அகப்பட்டுத் துன்புறுவர்.
கிறிஸ்தவம்
மரணமும் வாழ்வும் நாவின் அதிகாரத்தில் உள்ளன, அதை விரும்புவோர் அதன் கனிகளை உண்பார்கள். ( நீதிமொழிகள் 18:21)
இஸ்லாம்
யார் தனது இரு தாடைகளுக்கிடையே உள்ளதை (நாவை)யும், இரு தொடைகளுக்கிடையே உள்ளதை (மர்ம ஸ்தானத்தை)யும் பாதுகாப்பதாகப் பொறுப்பேற்றுக் கொள்கிறாரோ, அவருக்குச் சொர்கம் கிடைத்திட நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என அல்லாஹுவின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ஸஃத் (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்).
நம்பிக்கையாளர்களே, எந்த ஒரு கூட்டத்தினரும், மற்றோரு கூட்டத்தினரைப் பரிகாசம் செய்யவேண்டாம்; (ஏனேனில்) இவர்களைவிட அவர்கள் சிறந்தவர்களாக இருக்கக்கூடும்; எந்தப் பெண்களும் மற்றப் பெண்களை பரிகாசம் செய்யவேண்டாம்; இவர்களைவிட அவர்கள் சிறந்தவர்களாக இருக்கக்கூடும்; இன்னும் உங்களிடையே குறை கூறிக் கொண்டிருக்க வேண்டாம்; (மேலும் கெட்ட) பட்டப் பெயர்களைக் கொண்டு (ஒருவருக்கொருவர்) அழைத்துக் கொள்ளாதீர்கள்; நம்பிக்கை கொண்ட பின்னால் தீய பெயரா(ல் அழைப்பதா)னது மிகக் கெட்டதாகும் – (இத்தகு தீமைகளைக் செய்கின்ற) எவரொருவர் (பாவ மன்னிப்புக் கோரி) மீளவில்லையோ, அத்தகையோர் தாம் அநியாயக்காரர்கள்.
பதிலளிநீக்குநம்பிக்கையாளர்களே, (சந்தேக) எண்ணங்களில் பெரும்பாலானவற்றை நீங்கள் தவிர்த்துக் கொள்ளுங்கள்; நிச்சயமாக அவ்வெண்ணங்களில் சில பாவமாகும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவி ஆராய்ந்து கொண்டிருக்க வேண்டாம்; இன்னும் உங்களில் சிலர் சிலரைப் புறம்பேசிக் கொண்டிருக்க வேண்டாம்; உங்களில் ஒருவர் தம் சகோதரரின் மாமிசத்தை (அவன்) பிணமாயிருக்கும் நிலையில் உண்ணவிரும்புவாரா? அப்போது அதனை நீங்கள் வெறுப்பீர்களே; அல்லாஹ்வை நீங்கள் அஞ்சிக் கொள்ளுங்கள் – நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்புக் கோரலை ஏற்கிறவன்; [அல்குர்ஆன் (அல்ஹுஜுராத்:١١-١٣]
https://vellimedaikal.wordpress.com/2021/02/16/jk/