இசை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இசை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

இசை

தமிழர் சமயம் 


பண்அமை யாழ்குழல் கீதம்என்று இன்னவை
நண்ணி நயப்ப செவிஅல்ல - திண்ணிதின்
வெட்டெனச் சொல்நீக்கி விண்இன்பம் வீட்டொடு
கட்டுரை கேட்ப செவி. - (அறநெறிச்சாராம் - 196)

விளக்கவுரை இசையுடன் பொருந்திய யாழும் குழலும் இசைப் பாட்டும் என்னும் இவற்றை அவை நிகழும் இடங்களுக்குப் போய் அவற்றை விரும்பிக் கேட்பவை செவிகள் ஆகா. உறுதியுடன் பிறர் சொல்லும் கடுஞ்சொற்களைக் கேளாது நீக்கித் துறக்க இன்பத்தையும் வீடுபேற்றையும் தரும் உறுதிமொழிகளைக் கேட்பதே செவிகளாகும்.

நிலையாமை நோய்மூப்புச் சாக்காடென் றெண்ணித்
தலையாயார் தம்கருமம் செய்வார் - தொலைவில்லாச்
சத்தமும் சோதிடமும் என்றாங் கிவைபிதற்றும்
பித்தரின் பேதையார் இல். - (நாலடியார் 52)

வாழ்க்கை நிலை இல்லாதது, நோய் வரும், முதுமை வரும், சாவு வரும் என்று எண்ணிக்கொண்டு தலைமைப் பண்பு உள்ளவர்கள் தம் கடமையை உடனுக்குடன் செய்வர். இடையறாத இசையை சோதிடத்தை பார்த்துப் பிதற்றிக்கொண்டு பேதையர் வாழ்வர். இவர்களைப் போலப் பித்தர் வேறு யாரும் இல்லை.

பாடு அகம் சாராமை; பாத்திலார்தாம் விழையும்
நாடகம் சாராமை; நாடுங்கால், நாடகம்
சேர்ந்தால், பகை, பழி, தீச்சொல்லே, சாக்காடே,
தீர்ந்தாற்போல் தீரா வரும். (ஏலாதி 25)

பொருள்: பாடல் பாடுமிடஞ் சாராதொழிக. விலைமகள்தோன்றும் நாடகங் காணாமை. அவ்வாறு கண்டால், பழியும், பிறர் சொல்லுந் தீச்சொல்லும், சாக்காடுமென்று சொல்லப்பட்ட நான்கு மவர்க்கு நீங்கினபோல நீங்காவாய் வரும்.

இஸ்லாம் 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தினர் தோன்றுவார்கள். அவர்கள் விபச்சாரம், பட்டு, மது, இசைக் கருவிகள் ஆகியவற்றை அனுமதிக்கப்பட்டவையாகக் கருதுவார்கள். இன்னும் சில கூட்டத்தினர் மலை உச்சியில் தங்குவார்கள். அவர்களின் ஆடுகளை இடையன் (காலையில் மேய்த்துவிட்டு) மாலையில் அவர்களிடம் ஓட்டிச் செல்வான். அவர்களிடம் தன் தேவைக்காக ஏழை (உதவிக்காகச்) செல்வான். அப்போது அவர்கள் நாளை எங்களிடம் வா என்று சொல்வார்கள். (ஆனால்) அல்லாஹ் இரவோடு இரவாக அவர்கள் மீது மலையைக் கவிழ்த்து அவர்க(ளில் அதிகமானவர்க)ளை அழித்து விடுவான். (எஞ்சிய) மற்றவர்களை குரங்குகளாகவும், பன்றிகளாகவும் மறுமை நாள் வரை உருமாற்றி விடுவான். அறிவிப்பவர் : அபூமாலிக் அல்அஷ்அரீ (ரலி) (நூல் : புகாரி 5590)

அல் குர்துபி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: புல்லாங்குழல், கம்பி வாத்தியங்கள் மற்றும் டிரம்ஸைப் பொறுத்தவரை, அவற்றைக் கேட்பது தடைசெய்யப்பட்டது என்பதில் கருத்து வேறுபாடு இல்லை. முந்தைய தலைமுறையினர் மற்றும் பிற்காலத் தலைமுறையின் முன்னணி அறிஞர்கள் மத்தியில் யாருடைய கருத்துக்கள் எடைபோடுகின்றனவோ அவர்களில் எவரிடமிருந்தும் அவர்கள் அனுமதித்ததாக நான் கேள்விப்பட்டதில்லை. மது அருந்துவதற்கும், தீய செயல்களுக்குக் கொடுக்கப்பட்டவர்களின் அடையாளமாகவும், ஆசைகளையும், ஒழுக்கக்கேட்டையும், விபச்சாரத்தையும் தூண்டும் போது அது எப்படி ஹராம் ஆகாமல் இருக்கும்? அப்படி எதுவாக இருந்தாலும் அதன் தடை பற்றியோ, அதைச் செய்பவன் தீயவன், பாவி என்பதிலோ எந்த சந்தேகமும் இருக்க முடியாது. (az-Zawaajir 'an Iqtiraaf al-Kabaa'ir (2/337) 

யார்(இவ்வுலகில்) பாட்டுசப்தத்தை கேட்கிறாரோ அவருக்கு சுவர்க்கத்தில் ரூஹானிய்யீன் (சுவனத்துகாரிகளின்) சப்தத்தை கேட்க அனுமதிக்கப்படமாட்டாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்(அறிவிப்பாளர்: அபூமூஸா(ரலி) நூல்: தப்ஸீர் குர்துபி)

பாடகிகளை தன்னுடன் வைத்திருந்த ஒருவர் மரணித்துவிட்டால் அவர்மீது (ஜனாஸா) தொழ வைக்காதீர்கள் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்..(அறிவிப்பாளர்: ஆயிசா(ரலி). நூல்:தப்ஸீர் குர்துபி 

 

கிறிஸ்தவம் 

மூடர்களின் பாடலைக் கேட்பதைவிட , ஞானிகளின் கடிந்துகொள்ளுதலைக் கேட்பது மனுஷனுக்கு நலம். - பிரசங்கி 7:5 

முடிவுரை 


இஸ்லாத்தில் குர்ஆனை அழகாக ராகமாக ஓத ஆர்வமூட்டப் பட்டுள்ளது 

குர்ஆனை அழகிய குரலில் ராகத்துடன் ஓதுவதும் ஓதும் ஒழுங்கு முறைகளைச் சேர்ந்ததே. "அழகிய குரலுடைய ஒரு நபி, குர்ஆனை சப்தமாக-ராகமிட்டு ஓதுவதை அல்லாஹ் கேட்டது போன்று வேறெதையும் கேட்டதில்லை!” (நூல்: புகாரி,முஸ்லிம்)

ஜுபைர் பின் முத்இம் (ரலி)அவர்கள் அறிவிக்கிறர்கள்: “நபி (ஸல்) அவர்கள் மஃரிப் தொழுகையில் அத்தூர் அத்தியாயத்தை ஓதிடக் கேட்டேன். நபி(ஸல்) அவர்களைவிட அழகிய குரலுடைய ஒருவரை அல்லது அழகாக ஓதுபவரை நான் கேட்டதில்லை” (புகாரி. முஸ்லிம்) 

கிறிஸ்தவத்தில் கர்த்தரை பாட இசை அனுமதிக்கப் பட்டுள்ளது

 நான் உயிரோடிருக்கும் வரை கர்த்தரைப் பாடுவேன்: நான் இருக்கும்வரை என் தேவனைப் புகழ்ந்து பாடுவேன் . அவரைப் பற்றிய என் தியானம் இனிமையாயிருக்கும்: நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன். - (சங்கீதம் 104:33-34)

பெரும்பாலான மதச்சார்பற்ற இசை பிலிப்பியர் 4:8 தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்பதை நாம் அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டும்.

இறுதியாக, சகோதர சகோதரிகளே, எது உண்மையோ, எது உன்னதமானது, எது நேர்மையானது, எது தூய்மையானது, எது அழகானது, எது போற்றுதலுக்குரியது எதுவோ, எது சிறந்ததோ, போற்றுதலுக்குரியதோ எதுவாக இருந்தாலும், அது போன்றவற்றைச் சிந்தித்துப் பாருங்கள் - பிலிப்பியர் 4:8 

தமிழர் சமயங்களிலும் மறைநூல்களை பாடல் என்றும் பண் என்றும் அழைக்கும் வழக்கம் உள்ளது. எனவே மறைநூல்களை அழகிய முறையில் ஓத அனுமதி அனைத்து சமயங்களிலும் உண்டு ஆனால் அதுவல்லாமல் வேறு ஒன்றை கருப்பொருளாக எடுத்து இசைப்பது தடை செய்யப் பட்டுள்ளது. குறிப்பாக பல இசை கருவிகளும் பெண்கள் பாடுவதும் தடை செய்யப் பட்டுள்ளது.