தாய் தந்தையருக்கு கீழ்ப்படிதல்

கிறிஸ்தவம்


உன்னைப் பெற்ற தகப்பனுக்குச் செவிகொடு; உன் தாய் வயது சென்றவளாகும்போது அவளை அசட்டைபண்ணாதே.  நீதிமொழிகள் 23:22

என் மகனே, உன் தந்தையின் கட்டளையைக் கடைப்பிடி; தாயின் அறிவுரையைப் புறக்கணியாதே. நீதிமொழிகள் 6:20

உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக. - யாத்திராகமம் 20:12   

இஸ்லாம் 


மனிதனுக்கு அவனது பெற்றோரைக் குறித்தும் வ­யுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள். (அல்குர்ஆன் 31:14)

எனக்கும், உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே திரும்பி வருதல் உண்டு. (அல்குர்ஆன் 31:14)

  நபி (ஸல்) அவர்கள், ”மூக்கு மண்ணைக் கவ்வட்டும்; பிறகும் மூக்கு மண்ணைக் கவ்வட்டும்; பிறகும் மூக்கு மண்ணைக் கவ்வட்டும்” என்று கூறினார்கள். ”யார் (மூக்கு), அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், ”தம் பெற்றோரில் ஒருவரையோ அல்லது அவர்கள் இருவரையுமோ முதுமைப் பருவத்தில் அடைந்தும் (அவர்களுக்கு உடலாலும் பொருளாலும் ஊழியம் செய்து, அதன் மூலம்) சொர்க்கம் செல்லத் தவறியவரின் (மூக்குத் தான்)” என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி­) முஸ்லி­ம் 4987) 

தமிழர் சமயம்

தந்தை தாய் பேண் - ஆத்திச்சூடி 20 

பொருள்: தந்தை தாய்- பெற்றோரை;பேண்- ஆதரி  

 

பெற்றோரை திட்டாதீர்கள் 

தமிழர் சமயம் 

பெற்றிருந் தாரையும் பேணார் கயவர்கள்
உற்றிருந் தாரை உளைவன சொல்லுவர்
கற்றிருந் தார்வழி உற்றிருந் தாரவர்
பெற்றிருந் தாரன்றி யார்பெறும் பேறே. - (2ஆம் தந்திரம் - 22. குரு நிந்தை கூடாமை: 1)

பொழிப்புரை: கீழ்மக்களாயுள்ளார் ஏனைப் பெரியோரைப் பேணிக் கொள்ளாமையேயன்றித் தம்மைப் பெற்ற தாய் தந்தையரையும் பேணமாட்டார். மற்றும் உறவினராய் உள்ளவரையும் அவர் மனம் நோகத்தக்க சொற்களைச் சொல்லி இகழ்வர்; தாய் தந்தையரையும், உடன் பிறந்தார் முதலிய சுற்றத்தாரையும் தக்கவாற்றால் பேணுதல் ஆகிய சான்றோர் நெறியில் நிற்பவரன்றி நல்லன பலவும் வேறு யாவர் பெறும் பேறாகும்!


கிறிஸ்தவம்


தன் தகப்பனையாவது தன் தாயையாவது சபிக்கிறவன் நிச்சயமாய்க் கொலை செய்யப்படக்கடவன். - யாத்திராகமம் 21:17

தன் தகப்பனையும் தன் தாயையும் தூஷிக்கிறவனுடைய தீபம் காரிருளில் அணைந்துபோம். - நீதிமொழிகள் 20:20

தன் தகப்பனையும் தன் தாயையும் தூஷிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்கள்; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள். உபாகமம் 27:16

உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்றும்; தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப் படவேண்டும் என்றும், தேவன் கற்பித்திருக்கிறாரே.  (மத்தேயு 15:4)

இஸ்லாம் 


“என்னைத் தவிர வேறு யாரையும் வணங்காதீர்கள்! பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்!” என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும் அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்து விட்டால் அவ்விருவரை நோக்கி “சீ’ எனக் கூறாதீர்! அவ்விருவரையும் விரட்டாதீர்! மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறுவீராக! அன்புடன் பணிவு எனும் சிறகை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக! “சிறுவனாக இருக்கும் போது என்னை இருவரும் பராமரித்தது போல் இறைவா! இவ்விருவருக்கும் அருள்புரிவாயாக!” என்று கேட்பீராக! (அல்குர்ஆன் 17:23,24)

ஒரு மனிதர் தம் தாய் தந்தையரை ஏசுவது பெரும் பாவங்களில் உள்ளதாகும்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது “அல்லாஹ்வின் தூதரே! ஒரு மனிதர் தம் தாய் தந்தையரையே ஏசுவாரா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஆம். ஒருவர் இன்னொருவரின் தந்தையை ஏசுவார். உடனே (பதிலுக்கு) அவர் இவருடைய தந்தையை ஏசுவார். ஒருவர் இன்னொருவரின் தாயை ஏசுவார். உடனே (பதிலுக்கு) அவர் இவருடைய தாயை ஏசுவார். (ஆக, தம் பெற்றோர் ஏசப்படுவதற்கு இவரே காரணமாகிவிடுகிறார்)” என்று கூறினார்கள். (அறிவிப்பவர் : அம்ர் பின் அல்ஆஸ் (ரலி), நூல் : முஸ்லிம் 146)

நபி (ஸல்) அவர்களிடம் பெரும்பாவங்கள் பற்றி கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வுக்கு இணை வைப்பது, பெற்றோருக்கு துன்பம் கொடுப்பதுமாகும் என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ்(ரலி)  நூல்: புகாரி (2653))

 

பெற்றோருக்கு கீழ்ப்படித்தலில் உள்ள விதி விலக்கு என்ன?

கிறிஸ்தவம்

பிள்ளைகளே, உங்கள் பெற்றாருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள், இது நியாயம். - (எபேசியர் 6:1)

"கர்த்தருக்குள்" என்றால் என்ன?

வனாந்திரத்தில் நான் அவர்களது பிள்ளைகளோடு பேசினேன்: “உங்கள் பெற்றோர்களைப்போன்று இருக்க வேண்டாம். நீங்கள் அசுத்த சிலைகளோடு சேர்ந்து அசுத்தமாகவேண்டாம். அவர்களின் சட்டங்களைப் பின்பற்றவேண்டாம். அவர்களது கட்டளைகளுக்குக் கீழ்ப்படியவேண்டாம். நானே கர்த்தர். நானே உங்கள் தேவன். எனது சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள். எனது கட்டளைகளைக் கைக்கொள்ளுங்கள். நான் சொன்னபடி செய்யுங்கள் - (எசேக்கியேல் 20:18-19) 


இஸ்லாம் 

தன் தாய் தந்தையருக்கு நன்மை செய்யும்படியாக நாம் மனிதனுக்கு வஸிய்யத்து செய்திருக்கிறோம்; எனினும், (மனிதனே!) உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணையாக்கும்படி அவ்விருவரும் உன்னை வற்புறுத்தினால், நீ அவ்விருவருக்கும் கீழ்படிய வேண்டாம்; என்னிடமே உங்கள் அனைவரின் மீளுதலும் இருக்கிறது; நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி அப்போது நான் உங்களுக்கு அறிவிப்பேன். 29:8

18 கருத்துகள்:

  1. மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம் - உலக நீதி 1

    https://ta.wikisource.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF

    பதிலளிநீக்கு
  2. உலகநீதி ஒரு தமிழ் நீதி நூல்.
    இதனை இயற்றியவர் உலகநாதர்.
    18ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்நூலில் 13 விருத்தப்பாக்கள் உள்ளன. எனவே மறைநூலாக இது இருக்க வாய்ப்பில்லை.

    பதிலளிநீக்கு
  3. 6 “யாராவது ஒருவன், அது உங்கள் உடன் பிறந்த சகோதரன், உங்கள் மகன், உங்கள் மகள், நீங்கள் நேசிக்கின்ற உங்கள் மனைவி அல்லது உங்கள் உயிர் நண்பன், இவர்களில் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். இவர்களுள் ஒருவர் உங்களிடம் வந்து, ‘நாம் போய் அந்நிய தெய்வங்களுக்கு சேவை செய்யலாம்’ என்று அந்நிய தெய்வங்களை நீங்கள் வழிபட இரகசியமாக கூறலாம். (இந்தத் தெய்வங்கள் உங்களுக்கும், உங்கள் முற்பிதாக்களுக்கும் தெரியவே தெரியாது. 7 அந்தத் தெய்வங்கள் உங்களைச் சுற்றியுள்ள தேசங்களில் வசிக்கின்ற ஜனங்களின் தெய்வங்களாகும். அவைகள் உங்கள் சமீபத்திலும் தூரத்திலும் உள்ளன.) 8 நீங்கள் உங்களைத் திசைத்திருப்பக் கூறியவனின் பேச்சை ஒத்துக்கொள்ளாதீர்கள். அவன் பேச்சைக் கேட்காதீர்கள். அவனுக்கு இரக்கம் காட்டாதீர்கள். அவனை ஒளித்து வைக்காதீர்கள். அவன் தப்பும்படி விட்டுவிடக் கூடாது. 9-10 அதற்குப் பதில் அவனை நீங்கள் கொன்றுவிட வேண்டும்! கற்களால் அவனை அடித்துக் கொல்லுங்கள், அவ்வாறு செய்வதில் நீங்கள் முதன்மையாக இருங்கள். பின் அவன் மரிக்கும்வரை மற்ற எல்லா ஜனங்களும் அவன்மீது கற்களை எறிய வேண்டும். ஏனென்றால் அவன் உங்கள் தேவனாகிய கர்த்தரிடமிருந்து உங்களை விலக்கி இழுக்க முயன்றான். https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%89%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D+13&version=ERV-TA

    பதிலளிநீக்கு
  4. முந்தை எழுத்தின் வரவு உணர்ந்து, பிற்பாடு
    தந்தையும் தாயும் வழிபட்டு, வந்த
    ஒழுக்கம் பெரு நெறி சேர்தல், - இம் மூன்றும்
    விழுப்ப நெறி தூராவாறு. திரிகடுகம் 56


    இளமைப் பருவத்தில் கற்பதும், தந்தை தாயில் சொல்லுக்கு வழிபடுவதும் , பெரியோரைச் சேர்வதும் உயர்ந்த நெறியாகும். http://www.tamilsurangam.in/literatures/pathinen_keezhkanakku/thirikadugam_12.html

    பதிலளிநீக்கு
  5. சாலொமோன் தன் மகனுக்குச் சொன்ன அறிவுரை
    நீதிமொழிகள் 18 என் மகனே! உன் தந்தை உன்னை திருத்தும்போது கீழ்ப்படியவேண்டும். நீ உன் தாயின் போதனைகளையும் தள்ளிவிடவேண்டாம். 9 உனது தாயும் தந்தையும் சொல்லுகிற வார்த்தைகள் உன் தலைக்கு அலங்காரமான கிரீடமாக இருக்கும். அவை உன் கழுத்துக்கு அழகான மாலையாக விளங்கும்.

    பதிலளிநீக்கு
  6. நீதிமொழிகள் 2

    ஞானத்தின் உரையைக் கேளுங்கள்
    2 என் மகனே நான் சொல்லுகின்றவற்றை ஏற்றுக்கொள். என் கட்டளைகளை நினைவில்கொள். 2 ஞானத்தின் குரலைக் கேட்டு உன்னால் முடிந்தவரை புரிந்துகொள்ள முயற்சிசெய். 3 ஞானத்தைக் கூப்பிடு. புரிந்துகொள்ளுவதற்காகச் சத்தமிடு. 4 ஞானத்தை வெள்ளியைப்போல் தேடு, மறைந்துள்ள புதையல்களைத் தேடுவதுபோன்று தேடு. 5 நீ இவற்றைச் செய்தால், கர்த்தரை மதிக்கக் கற்றுக்கொள்வாய். நீ உண்மையிலேயே தேவனைப்பற்றிக் கற்றுக்கொள்ளலாம்.

    6 கர்த்தர் ஞானத்தைக்கொடுக்கிறார். அவரது வாயிலிருந்து அறிவும் புரிந்துகொள்ளுதலும் வருகின்றன. 7 நல்லவர்களுக்கும் நேர்மையானவர்களுக்கும் அவர் உதவி செய்கிறார். 8 மற்றவர்களிடம் நேர்மையாக நடந்துகொள்பவர்களை அவர் காப்பாற்றுகிறார். அவர் தனது பரிசுத்தமான ஜானங்களைக் காக்கிறார்.

    9 கர்த்தர் உனக்கு ஞானத்தைக்கொடுப்பார். அப்போது நீ நல்லவற்றையும், நேர்மையானவற்றையும், சரியானவற்றையும் புரிந்துகொள்ளுவாய். 10 ஞானம் உனது இருதயத்திற்குள் வரும். உனது ஆத்துமா அறிவால் மகிழ்ச்சி அடையும்.

    11 ஞானம் உன்னைக் காப்பாற்றும். புரிந்துகொள்ளுதல் உன்னைப் பாதுகாக்கும். 12 ஞானமும் புரிந்துகொள்ளுதலும் கெட்டவர்களைப் போன்று தீயவழியில் செல்வதைத் தடுக்கும். அந்த ஜனங்களின் வார்த்தைகளில்கூட தீமை இருக்கும். 13 அவர்கள் நேர்மையையும், நன்மையையும் விட்டுவிட்டு பாவத்தின் இருளில் வாழ்கிறார்கள். 14 அவர்கள் தீமை செய்வதில் மகிழ்ச்சி அடைகிறார்கள். கெட்ட வழிகளில் செல்வதில் சந்தோஷம் அடைகிறார்கள். 15 அவர்கள் நம்பிக்கைக்குரியவர்களல்ல. அவர்கள் பொய் சொல்லுவார்கள், ஏமாற்றுவார்கள். ஆனால் உனது ஞானமும் புரிந்துகொள்ளுதலும் இவை அனைத்திலுமிருந்து உன்னை விலக்கி வைக்கும்.

    16 அந்நிய பெண்ணிடமிருந்து ஞானம் உன்னைப் பாதுகாக்கும். மென்மையான வார்த்தைகளைப் பேசி உன்னைத் தன்னோடு சேர்ந்து பாவம்செய்யத் தூண்டும் அவளிடமிருந்து ஞானம் உன்னைக் காக்கும். 17 அப்பெண் இளமையில் திருமணமாகித் தன் கணவனைவிட்டு விலகியிருக்கலாம். அவள் தேவனுக்கு முன் செய்த தனது திருமண ஒப்பந்தத்தை மறந்தாள். 18 அவளுடைய வீட்டிற்குள் செல்வது மரணத்திற்கு வழிவகுக்கும். தொடர்ந்து அவளைப் பின்பற்றி நீ சென்றால் அவள் உன்னைக் கல்லறைக்கு அழைத்துச் செல்வாள். 19 அவள் ஒரு கல்லறையைப் போன்றவள். அவளிடத்தில் செல்பவன் ஒருபோதும் திரும்பி வருவதில்லை. அவன் தன் வாழ்வை இழப்பான்.

    20 ஞானம் நீ நல்லவர்களை முன்மாதிரியாகக்கொண்டு பின்பற்றிச் செல்ல உதவிசெய்யும். நல்லவர்களின் வழியில் நீ வாழ ஞானம் உதவி செய்யும். 21 சரியான வழியில் வாழ்கிறவர்கள் தங்கள் நாட்டிலேயே வாழ்வார்கள். எளிமையானவர்களும் நேர்மையானவர்களும் தம் சொந்த ஊரில் தொடர்ந்து வாழலாம்.

    22 ஆனால் பொய்பேசுகிறவர்களும் ஏமாற்றுகிறவர்களும் தம் நாட்டை இழப்பார்கள். தீயவர்கள் தம் சொந்த நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவார்கள்.
    https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%202&version=ERV-TA

    பதிலளிநீக்கு
  7. பெறுதிக்கண் பொச்சாந்து உரைத்தல், உயிரை
    இறுதிக்கண் யாம் இழந்தேம் என்றல், மறுவந்து
    தன் உடம்பு கன்றுங்கால் நாணுதல், - இம் மூன்றும்
    மன்னா உடம்பின் தொழில். திரிகடுகம் 91


    தாய் தந்தையரை மதிக்காமல் இருத்தலும், அவர்கள் காலத்திற்குப் பின் துன்பப்படுவதும், துன்பம் வந்தபோது அறச் செயல்களைச் செய்யாது போனோமே என்று வருத்தப்படுவதும், மூடர்கள் செய்கைகளாகும்.

    பதிலளிநீக்கு
  8. நான் ரஸூலுல்லாஹ்விடம் அமல்களில் சிறந்து எது என்று கேட்டேன் அதற்கவர் தொழுகையை நேரத்தில் தொழுவதாகும் என்று கூறினார் பின்னர் எது என்று கேட்டேன் அதற்கவர் பெற்றோர்களுக்கு உபகாரம் செய்தவதாகும் என்று கூறினார் பின்னர் எது என்று கேட்டேன் அதற்கவர் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதாகும் என்று கூறினார்கள்.».
    (ஆதாரம் முஸ்லிம்).

    பதிலளிநீக்கு
  9. நீதிமொழிகள் 23

    22 உன் தந்தை சொல்வதைக் கவனமாகக் கேள். உன் தந்தை இல்லாவிட்டால் நீ பிறந்திருக்க முடியாது. எவ்வளவுதான் முதியவளாக இருந்தாலும் உன் தாய்க்கு மரியாதை கொடு. 23 உண்மை, ஞானம், கல்வி, புரிந்துகொள்ளுதல் ஆகியவை விலை மதிப்புள்ளவை. இவைகளை விற்கமுடியாது. ஏனெனில் இவை மிகவும் விலையுயர்ந்தவை. 24 நல்லவனின் தந்தை மகிழ்ச்சியாக இருக்கிறார். ஒருவன் அறிவுள்ள பிள்ளையைப் பெற்றால் அப்பிள்ளை மகிழ்ச்சியைத் தருகிறான். 25 எனவே உன் தந்தையையும் தாயையும் உன்னோடு மகிழ்ச்சியாக இருக்கும்படிசெய். உன் தாயை ஆனந்தமாக வைத்திரு.

    https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%2023&version=ERV-TA

    பதிலளிநீக்கு
  10. நீதிமொழிகள் 30
    17 தன் தந்தையைக் கேலிச்செய்கிறவனும் தாயின் ஆணைகளுக்குக் கீழ்ப்படிய மறுப்பவனும் தண்டிக்கப்படுவான். அத்தண்டனை அவனது கண்களைக் காகங்களும், கழுகின் குஞ்சுகளும் தின்னும்படியான பயங்கரமுடையது.

    பதிலளிநீக்கு
  11. 💟 மூன்று பேருடைய பிரார்த்தனை 🤲

    ‘மூன்று பேருடைய பிரார்த்தனை நிராகரிக்கப்படமாட்டாது,

    1) பெற்றோர் தன் பிள்ளைக்கு செய்யும் பிரார்த்தனை

    2) நோன்பாளி

    3) பிரயாணியின் பிரார்த்தனை

    என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

    நூல் : பைஹகி

    பதிலளிநீக்கு
  12. 💟 பெற்றோர்கள் தன் பிள்ளைக்கு செய்யும் சாபம் 🤲

    மூன்று பிரார்த்தனைகள் எந்த சந்தேகமுமின்றி ஏற்றுக் கொள்ளப்படும், அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனை, பிரயாணியின் பிரார்த்தனை, பெற்றோர் தன் பிள்ளைக்கு செய்யும் சாபம் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

    நூல் : திர்மிதி

    பதிலளிநீக்கு

  13. 'ஈன்றார், ஈன்கால் தளர்வார், சூலார், குழவிகள்,
    மான்றார், வளியான் மயங்கினார்க்கு, ஆனார்!' என்று,
    ஊண் ஈய்த்து, உறு நோய் களைந்தார் - பெருஞ் செல்வம்-
    காண் ஈய்த்து வாழ்வார், கலந்து. ஏலாதி 55


    ஈன்றவர், ஈனுங்காலத்து நோயாற் றளர்வார், சூலையுடையார், பிள்ளைகள், பித்தேறினார், வாத நோயா லறிவு கெட்டார், ஓம்புதற் கமைந்தாரென் றூணுதவியுறுநோயைக் களைந்தார், பிறர்க்குத் தனங்களை யீந்து பெருஞ் செல்வங்களை நுகர்ந்து வாழ்வார்.

    கருத்து: ஈன்றார் முதலானவர்களுக்கு உணவு கொடுத்தல், நோய் நீக்குதல் முதலான அறச்செயல்களைச் செய்தல் வேண்டும்.

    பதிலளிநீக்கு
  14. லேவியராகமம் 19:3 “உங்களில் ஒவ்வொருவரும் தங்கள் தாய் தந்தைக்கு மரியாதை செய்யவேண்டும். என் ஓய்வு நாட்களை [a] ஆசரிக்கவேண்டும். நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்!

    https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%B2%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D%2019&version=ERV-TA

    பதிலளிநீக்கு
  15. ...... (மனிதனே!) நீ எனக்கும் உன்னுடைய தாய், தந்தைக்கும் நன்றி செலுத்துவாயாக! (முடிவில் நீ) என்னிடமே வந்து சேர வேண்டியதாயிருக்கிறது. (31:14)

    பொற்றோரின் திருப்தி அல்லாஹ்வின் திருப்தியாகும். பெற்றோரின் வெறுப்பு அல்லாஹ்வின் வெறுப்பாகும் (திர்மிதீ, இப்னுஹிப்பான், ஹாகிம்)

    தாயின் காலடியில் சுவர்க்கமிருக்கிறது என நபி அவர்கள் கூறியுள்ளார்கள் (நஸயீ, இப்னுமாஜா)

    பதிலளிநீக்கு
  16. பெற்றோரைத் துன்புறுத்துதல் – 6:151, 17:23, 46:17

    பதிலளிநீக்கு
  17. யாத்திராகமம் 20:12
    “உங்கள் தந்தை, தாயாரை மதிக்க வேண்டும். உங்கள் தேவனாகிய கர்த்தர் தரும் நாட்டில் நீண்டஆயுள் வாய்ப்பதற்கு இதைச் செய்தல் வேண்டும்.

    https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D%2020&version=ERV-TA

    பதிலளிநீக்கு
  18. மகிழ்வோடு வாழ்வார்-யார்?
    கடம்பட்டார் காப்பில்லார் கைத்தில்லார் தங்கான்
    முடம்பட்டார் மூத்தார்மூப் பில்லார்க் - குடம்பட்
    டுடையரா யில்லுளூ ணீத்துண்பார் மண்மேல்
    படையராய் வாழ்வார் பயின்று.
    (நூலின் 53 ஆவது பாடல்)
    பதவுரை:
    கடம்பட்டார்க்கு - கடன்பட்டவர்களுக்கும், (1)
    காப்பு இல்லார்க்கு - தம்மைக் காப்பவர் எவரும் இல்லாதவர்களுக்கும், (2)
    கைத்து இல்லார்க்கு - செல்வம் இல்லாத வறியவர்களுக்கும், (3)
    தம் கால் முடம்பட்டார்க்கு - தம்முடைய கை கால்களை இழந்த முடம்பட்டவர்களுக்கும், (4)
    மூத்தார்க்கு - வயது முதிர்ந்த முதியவர்களுக்கும் , (5)
    மூப்பு இல்லார்க்கு - பெற்றோரும் மற்றோரும் இல்லாதவர்களுக்கும், (6)
    உடம்பட்டு உடையராய் இல்லுள் - உள்ளமொத்து அன்புடையராய் வீட்டில்,
    ஊண் ஈத்து உண்பார் - உணவுகொடுத்து உண்பவர்,
    மண்மேல் பயின்று வாழ்வார் - உலகத்தில் உறவினருடன் அளாவி மகிழ்ச்சியோடு வாழ்வார்கள்.

    பொழிப்புரை:
    கடன் பட்டவர்களுக்கும், தம்மை ஆதரிப்பவர் யாருமில்லாத அனாதைகளுக்கும், செல்வமில்லாத வறியவர்களுக்கும், தம் கைகால்களை இழந்த முடமானவர்களுக்கும், வயது முதிர்ந்த முதியவர்களுக்கும், பெற்றவர்களும் மற்றெவரும் இல்லாதவர்களுக்கும், உள்ளம் ஒத்து அன்புடையவர்களாய் வீட்டில் உணவளித்து உண்பவர் உலகில் உறவினர்களுடன் மகிழ்வோடு வாழ்வார்கள்.

    பதிலளிநீக்கு