அடைக்கலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அடைக்கலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தஞ்சம்

தமிழர் சமயம் 

நச்சித் தற் சென்றார் நசை கொல்லா மாண்பு இனிதே,
உட்கு இல்வழி, வாழா ஊக்கம் மிக இனிதே,
எத் திறத்தானும் இயைவ கரவாத
பற்றினில் பாங்கு இனியது இல். (இனியவை நாற்பது 26)

தன்னை, தஞ்சமாக வந்தடைந்தவர் தம் விருப்பத்தை நிறைவேற்றும் மாட்சிமை இனியது. நாணம் இல்லாத வழிச் செல்லாத ஊக்கம் இனியது. உதவ இயன்றவற்றை மறைக்காத தன்மை இனியது. 
 
இஸ்லாம் 

(நபியே!) முஷ்ரிக்குகளில் யாரேனும் உம்மிடம் புகலிடம் தேடி வந்தால், அல்லாஹ்வுடைய வசனங்களை அவர் செவியேற்கும் வரையில் அவருக்கு அபயமளிப்பீராக!. அதன்பின் அவரை பாதுகாப்பு கிடைக்கும் வேறு இடத்திற்கு ( பத்திரமாக) அனுப்பபுவீராக. ஏனென்றால் அவர்கள் நிச்சயமாக அறியாத சமூகத்தினராக இருக்கிறார்கள். (அல்குர்ஆன் 09:6)

கிறிஸ்தவம் & யூதம் 

ஓர் அடிமை உன்னிடம் அடைக்கலம் புகுந்திருந்தால், அவர்களை எஜமானிடம் ஒப்படைக்காதே. அவர்கள் விரும்பும் இடத்திலும், அவர்கள் தேர்ந்தெடுக்கும் எந்த ஊரிலும் அவர்கள் உங்களிடையே வாழட்டும். அவர்களை ஒடுக்க வேண்டாம் (உபாகமம் 23:15-16)

அமானிதம்

தமிழர் சமயம் 


நன்றிப் பயன் தூக்கா நாண் இலியும், சான்றார் முன்
மன்றில் கொடும்பாடு உரைப்பானும், நன்று இன்றி
வைத்த அடைக்கலம் கொள்வானும், - இம் மூவர்
எச்சம் இழந்து வாழ்வார். (திரிகடுகம் 62)

பொருள்: நன்றியறிதல் இல்லாதவனும், பொய் சாட்சி சொல்பவனும், தன்னிடம் அடைக்கலமாக வந்த பொருளை விரும்பியவனும், தம் மக்களை இழந்து வருந்துவார்.

நன்றிப் பயன் தூக்கி வாழ்தல் நனி இனிதே;
மன்றக் கொடும்பாடு உரையாத மாண்பு இனிதே;
'அன்று அறிவார் யார்?' என்று அடைக்கலம் வெளவாத
நன்றியின், நன்கு இனியது இல். 30

மாண்பு - மாட்சிமை
வௌவாத - அபகரியாத

பொருள்: பிறர் செய்த நன்றியின் பயனை மறவாமல் இருப்பது இனியது. நீதிமன்றத்தில் ஒருதலைப்பட்சமாகச் சாட்சி சொல்லாதிருத்தல் இனியது. தம்மிடம் ஒருவர் அடைக்கலமாகக் கொடுத்த பொருளை இன்னொருவர் இல்லாத நேரத்தில் அபகரிக்காமல் இருப்பது இனியது
 
ஈதற்குச் செய்க, பொருளை! அற நெறி
சேர்தற்குச் செய்க, பெரு நூலை! யாதும்
அருள் புரிந்து சொல்லுக, சொல்லை! - இம் மூன்றும்
இருள் உலகம் சேராத ஆறு. 90

பொருள்: செல்வத்தை உரியவனுக்கு ஈதலும், அறநெறிகளைத் தரும் நூலைச் செய்தலும், அருள் தரும் சொற்களைச் சொல்லுதலும், ஆகிய இம்மூன்றும் நரக உலகத்திற்கு செல்லாமைக்குரிய வழிகளாகும்

இஸ்லாம் 

நம்பி உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களை அவற்றின் சொந்தக்காரர்களிடம் நீங்கள் ஒப்புவித்து விடவேண்டுமென்றும், மனிதர்களிடையே தீர்ப்பு கூறினால் நியாயமாகவே தீர்ப்புக் கூறுதல் வேண்டும் என்றும் உங்களுக்கு நிச்சயமாக அல்லாஹ் கட்டளையிடுகிறான்; நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு (இதில்) மிகவும் சிறந்த உபதேசம் செய்கிறான்; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.” (அல்-குர்ஆன்4:58)

கிறிஸ்தவம் & யூதம் 

 7 “ஒரு மனிதன் தனக்குத் தேவையான பணத்தையோ அல்லது பொருட்களையோ அடுத்த வீட்டுக்காரனிடம் கொடுத்து வைக்கச் சொல்லலாம். அவ்வீட்டிலிருந்து அப்பணமோ அல்லது பொருளோ திருடப்பட்டுவிட்டால் திருடனைக் கண்டுபிடிக்க முயற்சி செய்ய வேண்டும். திருடன் அகப்பட்டால் அவன் திருடிய பொருளின் இரண்டு மடங்கு விலையைக் கொடுக்க வேண்டும். 8 ஆனால் திருடன் அகப்படாமல் வீட்டின் எஜமான் குற்றவாளியாக இருந்தால் தேவன் நியாயந்தீர்ப்பார். வீட்டின் எஜமானன் தேவனுக்கு முன்னே செல்லும்போது, அவன் திருடனாக இருந்தால் தேவன் அவனைத் தண்டிப்பார். - (யாத்திராகமம் 22:7-8)