செல்வத்தைப் பெருக்கும் ஆசை!


"நீ ஏழையாக பிறந்தால் அது உன் தவறில்லை, ஏழையாக மறைந்தால் அது உன் தவறு" - பில் கேட்ஸ்

அடிக்கடி வலைதளங்களில் பார்க்கும் வாசகம்.. இது சரியா? பணத்தையே பிரதான குறிக்கோலாக கொண்டு ஒருவன் வாழலாமா?

தமிழர் சமயம்


பொருள் நசை வேட்கையோன் முறை செயல் பொய். - (முதுமொழிக் காஞ்சி 7. பொய்ப் பத்து 9)

பதவுரை முறை செயல் - அறநெறிப்படி முறை செயல்; பொய் - இல்லை

விளக்கவுரை பொருட்பற்றுடையவன் நடுவு நிலைமையில் இருக்க இயலாது.
 

இஸ்லாம்


அவன் செல்வத்தைத் திரட்டி, அதைக் கணக்கிட்டுக் கொண்டிருக்கிறான். நிச்சயமாக தனது செல்வம் தன்னை நிலைத்திருக்கச் செய்யும் என அவன் எண்ணிக்கொன்டிருக்கிறான். அவ்வாறன்று, நிச்சயமாக அவன் "ஹூதமா" வில் வீசப்படுவான். "ஹூதமா" என்றால் என்னவென உமக்கு அறிவித்தது எது.? (அது) உள்ளங்களைச் சென்றடையும் மூட்டப்பட்ட அல்லாஹ்வின் நெருப்பாகும். (அல்-குர்ஆன் 104:2-7
 

பைபிள் 


செல்வத்தைப் பெறுவதற்கு உழைக்காதே; விலகியிருப்பதற்குப் போதுமான விவேகமுள்ளவனாக இரு. - (
நீதிமொழிகள் 23:4-5
 
அப்போது இயேசு சுற்றிலும் பார்த்து, “பணக்காரர்கள் கடவுளுடைய அரசாங்கத்திற்குள் போவது எவ்வளவு கடினம்!” என்று சீடர்களிடம் சொன்னார். இதைக் கேட்டு அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். இயேசு மீண்டும் அவர்களிடம், “பிள்ளைகளே, கடவுளுடைய அரசாங்கத்திற்குள் நுழைவது எவ்வளவு கடினம்! கடவுளுடைய அரசாங்கத்திற்குள் ஒரு செல்வந்தன் நுழைவதைவிட ஊசியின் காதுக்குள் ஓர் ஒட்டகம் நுழைவது சுலபம்” என்றார். (பைபிள் - மாற்கு 10:23-25)
 

இந்து மதம்


நூற்றுக்கணக்கான ஆசைக் கயிறுகளால் கட்டுண்டு காமத்துக்கும் சினத்துக்கும் ஆட்பட்டோராய்க் காம போகத்துக்காக அநியாயஞ்செய்து பொருட்களை சேர்க்க விரும்புகிறார்கள். என்னால் இன்று இன்ன லாபம் அடையப் பட்டது, இன்ன திறமை இனி எய்துவேன், என்னிடம் இந்த செல்வம் உள்ளது, இனி இன்ன பொருளை பெறுவேன். “இது போன்ற பகைவரைக் கொன்று விட்டேன்; இனி மற்றவர்களைக் கொல்வேன்; நான் ஆள்வோன்; நான் போகி; நான் சித்தன்; நான் பலவான்; நான் சுக புருஷன்.” - (கீதை 16 :12-14)

முடிவுரை 


தேவைக்கு பொருள் தேடுவது கூடாது என்பது இதன் பொருளல்ல. கிடைக்கும் செல்வதை கொண்டு விரைவில் நன்மை செய்து விடவேண்டும், நன்மைகளுக்கு செலவிடாமல் சேர்த்து வைத்து கொள்ளுதல், தீமை செய்து அதன் மூலம் சம்பாதித்தல், பொருளை முறையற்ற அல்லது சுக போகங்களுக்கு செலவு செய்வத்தோ வீண் விரையம் செய்வத்தோ கூடாது என்பதுதான் இதன் சாரம்.

7 கருத்துகள்:

  1. மக்களுக்கு ஒரு காலம் வரும், அந்த காலத்தில் மக்கள் செல்வத்தை சம்பாதிக்க வேண்டும் என்ற வெறியில் இருப்பார்கள். அவர் சம்பாதிக்கக்கூடிய செல்வம் ஹலாலில் இருந்து வருகிறதா? இல்லை ஹராமில் இருந்து வருகிறதா? என்பதைப் பற்றி எல்லாம் அவர் கவலைப்பட மாட்டார். அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1941.

    இவ்வுலக வாழ்க்கையும், கவர்ச்சையும் நாடுவோருக்கு இங்கேயே முழுமையாக கொடுக்கப்படும்.
    مَنْ كَانَ يُرِيْدُ الْحَيٰوةَ الدُّنْيَا وَ زِيْنَتَهَا نُوَفِّ اِلَيْهِمْ اَعْمَالَهُمْ فِيْهَا وَهُمْ فِيْهَا لَا يُبْخَسُوْنَ‏
    எவரேனும் இவ்வுலக வாழ்க்கையையும், அதன் அலங்காரத்தையும் (மட்டுமே) நாடினால் அவர்களுடைய செயல்களுக்குரிய (பலன்களை) இவ்வுலகத்திலேயே நிறைவேற்றுவோம்; அவற்றில், அவர்கள் குறைவு செய்யப்பட மாட்டார்கள். (அல்குர்ஆன்:11:15. )

    பதிலளிநீக்கு
  2. நீதிமொழிகள் 23:4-5: "செல்வத்தைப் பெறுவதற்கு உழைக்காதே; விலகியிருப்பதற்குப் போதுமான விவேகமுள்ளவனாக இரு. உன் கண்கள் அதைக் காணும்போது, ​​அது மறைந்துவிடும், ஏனென்றால் அது திடீரென்று சிறகுகளை முளைத்து, கழுகைப் போல வானத்தை நோக்கிப் பறக்கிறது."

    2 பேதுரு 2:14-15: "அவர்கள் விபச்சாரம் நிறைந்த கண்களை உடையவர்கள், பாவத்தில் திருப்தியடைய மாட்டார்கள், அவர்கள் நிலையற்ற ஆத்துமாக்களை மயக்குகிறார்கள், பேராசையில் பயிற்றுவிக்கப்பட்ட இதயங்களை உடையவர்கள், சபிக்கப்பட்ட பிள்ளைகள், அவர்கள் சரியான வழியை விட்டு, அவர்கள் வழிதவறினர், அவர்கள் வழியைப் பின்பற்றுகிறார்கள். பியோரின் மகன் பிலேயாமின், தவறான செயல்களிலிருந்து ஆதாயத்தை விரும்பினார்.

    உங்கள் பூமிக்குரிய சுபாவத்திற்கு சொந்தமானவை: பாலியல் ஒழுக்கக்கேடு, அசுத்தம், இச்சை, தீய ஆசைகள் மற்றும் பேராசை, இது உருவ வழிபாடு" (கொலோ. 3:5).

    9 மேலும் செல்வந்தராக விரும்புகிறவர்கள் சோதனைக்கு உள்ளாகிறார்கள். அவர்கள் கண்ணிகளில் மாட்டிக்கொள்கிறார்கள். முட்டாள்தனமானதும் ஆபத்தானதுமான ஆசைகளை வளர்த்துக்கொள்கிறார்கள். அவை அவர்களைப் பாதித்து, அழிக்கும். 10 பண ஆசையானது எல்லாவிதமான பாவங்களுக்கும் வழி வகுக்கும். சிலர் மேலும் மேலும் பணத்தை விரும்பி உண்மையான போதனையை விட்டுவிட்டார்கள். அதனால் தம் துன்பத்துக்குத் தாமே காரணமாகிறார்கள். 1 தீமோத்தேயு 6:9-1

    1 தீமோத்தேயு 6:10
    ஏனென்றால் பண ஆசை எல்லாவிதமான தீமைகளுக்கும் வேர். இந்த வேட்கையின் மூலம் சிலர் நம்பிக்கையை விட்டு விலகி, பல வேதனைகளால் தங்களைத் தாங்களே துளைத்துக் கொண்டனர்.

    1 தீமோத்தேயு 6:9
    9 ஆனால், பணக்காரராக வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும் சிக்கிக்கொள்கிறார்கள்;a அதோடு, தீமையான, முட்டாள்தனமான பலவிதமான ஆசைகளுக்கு அடிபணிந்துவிடுகிறார்கள்; இவை மனிதர்களை நாசத்திலும் அழிவிலும்தான் அமிழ்த்துகின்றன.

    பதிலளிநீக்கு
  3. “தன் ஐசுவரியத்தை நம்புகிறவன் விழுவான்”—நீதிமொழிகள் 11:28.

    எபிரெயர் 13:
    5 பண ஆசையில்லாமல் வாழுங்கள்.a உள்ளதை வைத்துத் திருப்தியோடு இருங்கள்.b ஏனென்றால், “நான் ஒருபோதும் உன்னைவிட்டு விலக மாட்டேன், ஒருபோதும் உன்னைக் கைவிடவும் மாட்டேன்” என்று அவர் சொல்லியிருக்கிறார்.

    நீதிமொழிகள் 234 செல்வந்தனாக முயன்று உனது உடல் நலத்தைக் கெடுத்துக்கொள்ளாதே. நீ அறிவுள்ளவனாக இருந்தால் பொறுமையாக இரு. 5 ஒரு பறவை சிறகு முளைத்துப் பறந்துசென்றுவிடுவதைப்போல செல்வம் மிக வேகமாகக் கரைந்துவிடும்.

    மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 19-23

    அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: ``மண்ணுலகில் உங்களுக்கெனச் செல்வத்தைச் சேமித்து வைக்க வேண்டாம். இங்கே பூச்சியும் துருவும் அழித்துவிடும்; திருடரும் அதைக் கன்னமிட்டுத் திருடுவர். ஆனால், விண்ணுலகில் உங்கள் செல்வத்தைச் சேமித்து வையுங்கள்; அங்கே பூச்சியோ துருவோ அழிப்பதில்லை; திருடரும் கன்னமிட்டுத் திருடுவதில்லை. உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும். கண்தான் உடலுக்கு விளக்கு. கண் நலமாயிருந்தால் உங்கள் உடல் முழுவதும் ஒளி பெற்றிருக்கும். அது கெட்டுப் போனால், உங்கள் உடல் முழுவதும் இருளாய் இருக்கும். ஆக, உங்களுக்கு ஒளி தரவேண்டியது இருளாய் இருந்தால் இருள் எப்படியிருக்கும்!''

    வெளிப்படுத்துதல் 3:17 ESV / 411 பயனுள்ள வாக்குகள் உதவிகரமானது உதவியாக இல்லை
    ஏனென்றால், நான் பணக்காரன், நான் செழித்துவிட்டேன், எனக்கு எதுவும் தேவையில்லை என்று நீங்கள் கூறுகிறீர்கள், நீங்கள் பரிதாபகரமானவர், பரிதாபகரமானவர், ஏழை, குருடர், நிர்வாணமானவர் என்பதை உணரவில்லை.https://www.openbible.info/topics/rich_people

    ""இரண்டு எஜமானர்களுக்கு யாரும் சேவை செய்ய முடியாது. ஒன்று நீங்கள் ஒருவரை வெறுத்து மற்றவரை நேசிப்பீர்கள், அல்லது ஒருவருக்கு அர்ப்பணிப்புடன் மற்றவரை இகழ்வீர்கள். நீங்கள் கடவுளுக்கும் பணத்திற்கும் சேவை செய்ய முடியாது” (மத்தேயு 6:24). https://get.tithe.ly/blog/bible-verses-greed

    லூக்கா 12:29-32 ESV / 4 பயனுள்ள வாக்குகள் உதவிகரமானது உதவியாக இல்லை
    நீங்கள் என்ன உண்பது, என்ன குடிப்பது என்று தேடாதீர்கள், கவலைப்படாதீர்கள். ஏனென்றால், உலகத்தின் எல்லா மக்களும் இவற்றைத் தேடுகிறார்கள், உங்களுக்கு அவை தேவை என்று உங்கள் தந்தை அறிந்திருக்கிறார். மாறாக, அவருடைய ராஜ்யத்தைத் தேடுங்கள், இவைகள் உங்களுக்குச் சேர்க்கப்படும். “பயப்படாதே, சிறு மந்தையே, உனக்கு அரசாட்சியைக் கொடுப்பதில் உங்கள் தந்தையின் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  4. செல்வமும் காமமும் விரும்புவோர் மக்கள் ஆகார்

    மக்களும் மக்கள்அல் லாரும் என இரண்டு
    குப்பைத்தே குண்டுநீர் அவையகம் - மக்கள்
    அளக்கும் கருவிமற்று ஒண்பொருள் ஒன்றோ
    துளக்குறு வெள்வளையார் தோள். - (அறநெறிச்சாரம் பாடல் - 92)

    விளக்கவுரை ஆழமான நீரையுடைய கடல் சூழ்ந்த உலகம் மனிதர்களும் மனிதர் அல்லாதவரும் என இரு குவியல்களையுடையது. மக்களை அளவிடுகின்ற கருவிகள் சிறந்த செல்வமும், விளங்கும் சங்கு வளையல்களை அணிந்த மகளிர் தோளும் ஆகும்.

    பதிலளிநீக்கு
  5. லூக்கா 16:11
    உலகச் செல்வங்களிலும் நீங்கள் நேர்மையற்றவர்ளாக இருக்கும்போது உண்மையான (பரலோக) செல்வத்திலும் நீங்கள் நேர்மையற்றவர்களாகவே இருப்பீர்கள்.

    பதிலளிநீக்கு
  6. வெண்பா : 22
    பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக்
    கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் – கூடுவிட்டுங்(கு)
    ஆவிதான் போயினபின் யாரே அனுபவிப்பார்
    பாவிகாள் அந்தப் பணம்
    விளக்கம்:
    அடுத்தவருக்கு துன்பம் விளைவித்து, ஓடி ஓடி பணத்தை தேடும் கேடு கேட்ட மனிதர்களே கேளுங்கள், உங்கள் உயிர் பிரிந்து போகும் வேளையில் பணம் உங்களுடன் வராது, அதை யாரோ அனுபவிப்பார்கள், ஆதலால் உயிர் இருக்கும் போதே பணத்தை நல்ல காரியங்களுக்கு செலவு செய்யுங்கள்

    பதிலளிநீக்கு
  7. பணக்காரனும் இயேசுவும்
    16 ஒரு மனிதன் இயேசுவை அணுகி,, “போதகரே நித்திய ஜீவனைப் பெற நான் என்ன நல்ல செயலைச் செய்ய வேண்டும்?” என்று கேட்டான்.

    17 இயேசு அவனிடம்,, “எது நல்லது என்பதை பற்றி என்னிடம் ஏன் கேட்கிறாய்? தேவன் மட்டுமே நல்லவர். நீ நித்திய ஜீவனைப் பெற விரும்பினால், கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நட” என்று பதிலுரைத்தார்.

    18 ,“எந்தக் கட்டளைகளை” என்று கேட்டான் அம்மனிதன்.

    அதற்கு இயேசு,, “நீ யாரையும் கொலை செய்யக்கூடாது. விபசாரம் செய்யக் கூடாது. திருடக்கூடாது. பொய் சாட்சி சொல்லக் கூடாது. 19 உன் தாய் தந்தையரை மதிக்க வேண்டும். [c] ‘தன்னைப் போலவே மற்றவர்களையும் நேசிக்க வேண்டும்’” [d] என்று பதில் சொன்னார்.

    20 அதற்கு அந்த இளைஞன்,, “இவை அனைத்தையும் கீழ்ப்படிந்து நடந்திருக்கிறேன். வேறென்ன செய்ய வேண்டும்?” என்றான்.

    21 இயேசு அவனிடம்,, “நீ நேர்மையாய் இருக்க விரும்பினால், (போய்) உன் உடமைகள் எல்லாவற்றையும் விற்றுவிடு. இதனால் கிடைக்கும் பணத்தை ஏழைகளுக்குத் தானம் செய்துவிடு. நீ இதைச் செய்தால், நீ பரலோகத்தில் மதிப்பு வாய்ந்த செல்வத்தைப் பெறுவாய். பின் என்னிடம் வந்து, என்னைப் பின்பற்றி நட,” என்றார்.

    22 ஆனால், இதைக் கேட்ட அம்மனிதன் மிகுந்த வருத்தமடைந்தான். மிகச் செல்வந்தனான அவன், தன் செல்வத்தை இழக்க விரும்பவில்லை. எனவே, அவன் இயேசுவை விட்டு விலகிச் சென்றான்.

    23 பிறகு, இயேசு தம் சீஷர்களிடம்,, “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன். பரலோக இராஜ்யத்திற்குள் செல்வந்தர்கள் நுழைவது மிகக் கடினம். 24 ஆம் பரலோக இராஜ்யத்தில் ஒரு பணக்காரன் நுழைவதைக் காட்டிலும் ஒரு ஒட்டகம் ஊசியின் காதுக்குள் நுழைவது எளிது” என்று கூறினார்.

    25 இதைக் கேட்டபோது சீஷர்கள் வியப்புற்றனர். அவர்கள்,, “பின் யார் தான் இரட்சிக்கப்படுவார்கள்?” என்று கேட்டனர்.

    26 இயேசு தம் சீஷர்களைப் பார்த்து,, “மனிதர்களால் ஆகக் கூடியதல்ல இது. ஆனால், எல்லாம் வல்ல தேவனால் ஆகும்” என்று சொன்னார்.

    27 பேதுரு இயேசுவிடம்,, “நாங்கள் பெற்றிருந்த அனைத்தையும் துறந்து உம்மைப் பின்பற்றினோம். எங்களுக்கு என்ன கிடைக்கும்?” என்று வினவினான்.

    28 இயேசு தன் சீஷர்களிடம்,, “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன், புதிய உலகம் படைக்கப்படும்பொழுது, மனிதகுமாரன் தம் பெருமைமிக்க அரியணையில் அமர்வார். என்னைப் பின்பற்றிய நீங்கள் அனைவரும் அரியணைகளில் அமர்வீர்கள். பன்னிரெண்டு அரியணைகளில் நீங்கள் அமர்ந்து, இஸ்ரவேலின் [e] பன்னிரெண்டு இனங்களுக்கும் நீதி செய்வீர்கள். 29 மேலும் என்னைப் பின்பற்றுவதற்காக வீடு, தாய், தந்தை, சகோதரன், சகோதரி, பிள்ளைகள் அல்லது நிலம் ஆகியவற்றைத் துறந்தவன், தான் துறந்ததை விடப் பல மடங்கு பலன் பெறுவான். அவன் நித்திய ஜீவனைப் பெறுவான். 30 உயர்ந்த வாழ்க்கை வாழும் பலர் எதிர்காலத்தில் மிகத் தாழ்ந்த வாழ்வை அடைவார்கள். மிகத் தாழ்ந்த வாழ்வை வாழும் பலர் மிக உயர்ந்த வாழ்வை அடைவார்கள்” என்றார்.

    https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AF%81%2019&version=ERV-TA

    பதிலளிநீக்கு