இறைவனின் பெயர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இறைவனின் பெயர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

இறைவனின் பெயர்கள்

கிறிஸ்தவம் & யூத மதம்

புதிய ஏற்பாட்டின் பெயர்கள்

தேவனுடைய பல பெயர்கள் ஒவ்வொன்றும் அவருடைய பல குணாதிசயங்களின் வெவ்வேறு அம்சங்களை விவரிக்கிறது. வேதாகமத்தில் பெருமளவில் அறிந்த சிறப்பு வாய்ந்த பெயர்கள் இங்கே: 

  1. வக்கீல் (1 யோவான் 2:1)
  2. சர்வவல்லமையுள்ளவர் – (வெளிப்படுத்துதல் 1:8)
  3. ஆல்ஃபா – (வெளிப்படுத்துதல் 1:8)
  4. ஆரம்பம் – (வெளிப்படுத்துதல் 21:6)
  5. பகலிரவு – (லூக்கா 1:78)
  6. முடிவு - (வெளிப்படுத்துதல் 21:6)
  7. நித்திய பிதா - (ஏசாயா 9:6)
  8. அடித்தளம் - (ஏசாயா 28:16)
  9. கடவுள் – (யோவான் 1:1)
  10. வழிகாட்டி – (சங்கீதம் 48:14)
  11. நான் - (யாத்திராகமம் 3:14)
  12. யெகோவா - (சங்கீதம் 83:18)
  13. ராஜாக்களின் ராஜா - (1 தீமோத்தேயு 6:15; வெளிப்படுத்துதல் 19:16)
  14. பிரபுக்களின் கர்த்தர் - (1 தீமோத்தேயு 6:15; வெளிப்படுத்துதல் 19:16)
  15. மத்தியஸ்தர் - (1 தீமோத்தேயு 2:5)
  16. வல்லமையுள்ள தேவன் - (ஏசாயா 9:6)
  17. ஒமேகா - (வெளிப்படுத்துதல் 1:8)
  18. மருத்துவர் – (மத்தேயு 9:12)
  19. வல்லமை– (1 தீமோத்தேயு 6:15)
  20. சாந்தப்படுத்துதல் – (I யோவான் 2:2)
  21. அடைக்கலம் – (ஏசாயா 25:4)
  22. நீதி – (எரேமியா 23:6)
  23. இரட்சகர் - (2 சாமுவேல் 22:47; லூக்கா 1:47)
  24. உண்மை – (யோவான் 14:6)

 பழைய ஏற்பாட்டின் பெயர்கள் (ஹீப்ரு ஸ்கிரிப்சர்ஸ் அல்லது டனாச்)

  1. Allah
  2. EL : கடவுள் ("வல்லமையுள்ள, வலிமையான, முக்கிய")
  3. எலோஹிம் : கடவுள் படைப்பாளர், பாதுகாப்பவர், ஆழ்நிலை, வல்லமை மற்றும் வலிமையானவர்
  4. எல் ஷதாய் : சர்வவல்லமையுள்ள கடவுள்
  5. அடோனை : ஆண்டவரே
  6. யேகோவா-ஜிரே : "கர்த்தர் கொடுப்பார்."
  7. யெகோவா-ரோபே : “குணப்படுத்துகிற கர்த்தர்”
  8. ஜெஹோவா-நிஸ்ஸி : "எங்கள் கொடி கர்த்தர்."
  9. ஜெஹோவா-மக்கடேஷ் : “பரிசுத்தப்படுத்துகிற கர்த்தர்”
  10. யெகோவா-ஷாலோம் : “கர்த்தர் நம்முடைய சமாதானம்” .
  11. மேய்ப்பன் : சங்கீதம். 23
  12. நீதிபதி : சங்கீதம். 7:8
  13. ஜெஹோவா எலோஹிம் : "கர்த்தராகிய கடவுள்"
  14. யெகோவா-சிட்கேனு : “கர்த்தர் நம்முடைய நீதி”
  15. யெகோவா-ரோஹி : “நம்முடைய மேய்ப்பராகிய கர்த்தர்” சங்கீதம். 23
  16. யெகோவா ஷம்மா : “கர்த்தர் இருக்கிறார்”
  17. ஜெஹோவா-சபாவோத் : "சேனைகளின் கர்த்தர்").
  18. எல் எலியோன் : 'மிக உயர்ந்தவர்'
  19. அபிர் : 'மைட்டி ஒன்'
  20. BRANCH : (tsemach), கிளை
  21. கடோஷ் : "பரிசுத்தர்"
  22. ஷபாத் : "நீதிபதி"
  23. எல் ரோய் : "பார்க்கும் கடவுள்"
  24. கண்ணா : "பொறாமை" (வெறி கொண்டவர்)"
  25. தட்டு : "வழங்குகிறது"
  26. யேசுவா : (யேசுவா) "இரட்சகர்" ("அவர் காப்பாற்றுவார்")
  27. GAOL : "மீட்பர்"
  28. MAGEN : "கவசம்"
  29. கல் : (சரியாக)
  30. EYALUTH : "வலிமை"
  31. TSADDIQ : "நீதிமான்"
  32. எல்-ஓலம்: "நித்திய கடவுள்" (நித்திய காலத்தின் கடவுள்)
  33. எல்-பெரித் : "உடன்படிக்கையின் கடவுள்"
  34. எல்-கிபோர் : வல்லமையுள்ள கடவுள்
  35. சூர் : "கடவுள் எங்கள் பாறை"
  36. மெலேக் : "ராஜா"
  37. அப்பா : அப்பா
  38. புதிய ஏற்பாட்டு வேதங்கள் (கிரேக்கம்)
  39. எது : (இது) "இறைவன்"
  40. டெஸ்போட்ஸ் : (சர்வாதிகாரிகள்) "இறைவன்"

தியோஸ் : (யோஸ்) "கடவுள்" (எபிரேய எலோஹிமுக்கு சமம்)

இஸ்லாம்

அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன ; அவற்றைக் கொண்டே நீங்கள் அவனைப் பிரார்த்தியுங்கள், அவனுடைய திருநாமங்களை தவறாக பயன்படுத்துவோர்களை    புறக்கணித்து  விட்டு விடுங்கள் - அவர்களுடைய செயல்களுக்காக அவர்கள் ( தக்க ) கூலி கொடுக்கப்படுவார்கள் - (அல்குர்ஆன் : 7:180)

இறைத்தூதர் ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் : அல்லாஹ்வுக்கு நூறில் ஒன்று போக தொண்ணூற்றொன்பது திருப்பெயர்கள் உள்ளன . அவற்றை அறிந்து ( அதன் மீது நம்பிக்கை வைத்து அதை நினைவில் ) கொள்பவர் சொர்க்கத்தில் நுழைவார் . என அபூ ஹுரைரா ( ரலி ) அறிவித்தார். - (ஸஹீஹ் புகாரி : 2736)

  1. அர் ரஹ்மான் - الرَّحْمٰنُ - அளவற்ற அருளாளன்
  2. அர் ரஹீம் - الرَّحِيمُ - நிகரற்ற அன்புடையோன்.
  3. அல் மலிக் - المَلِكُ - பேரரசன்
  4. அல் குத்தூஸ் - القُدُّوسُ - மிகப் பரிசுத்தமானவன்
  5. அஸ்ஸலாம் - السَّلامُ - சாந்தி மயமானவன்
  6. அல் முஃமின் - المُؤْمِنُ - அபயமளிக்கிறவன்
  7. அல் முஹைமின் - المُهَيْمِنُ - கண்காணிப்பவன்
  8. அல் அஜீஜ் - العَزِيزُ - மிகைத்தவன்
  9. அல் ஜப்பார் - الجَبَّارُ - அடக்கியாள்கிறவன்
  10. அல் முதகப்பிர் - المُتَكَبِّرُ - பெருமைக்குரியவன்
  11. அல் காலிக் - الخَالِقُ - படைப்பவன்
  12. அல் பாரிஉ - البَارِئُ - படைப்பை ஒழுங்கு படுத்துபவன்
  13. அல் முஸவ்விர் - المُصَوِّرُ - உருவமளிப்பவன்
  14. அல் கஃப்ஃபார் - الْغَفَّارُ - மிக்க மன்னிப்பவன்.
  15. அல் கஹ்ஹார் - الْقَهَّارُ - அடக்கி ஆள்பவன்
  16. அல் வஹ்ஹாப் - الْوَهَّابُ - கொடையாளன்
  17. அர் ரஜ்ஜாக் - الرَّزَّاقُ - உணவளிப்பவன்
  18. அல்ஃபத்தாஹ் - الْفَتَّاحُ - தீர்ப்பு வழங்குகிறவன்
  19. அல் அலீம் - اَلْعَلِيْمُ - மிக அறிபவன்
  20. அல் காபிள் - الْقَابِضُ - கைப்பற்றுவோன்
  21. அல் பாஸித் - الْبَاسِطُ - விரிவாக்குபவன்
  22. அல் காஃபிள் - الْخَافِضُ தாழ்த்துவோன்
  23. அர் ராஃபிஃ - الرَّافِعُ - உயர்த்துவோன்
  24. அல் முஇஜ்ஜு - الْمُعِزُّ - கண்ணியப்படுத்துவோன்
  25. அல் முதில்லு - المُذِلُّ - இழிவடையச்செய்பவன்
  26. அஸ்ஸமீஉ - السَّمِيعُ - செவியேற்பவன்
  27. அல் பஸீர் - الْبَصِيرُ - பார்ப்பவன்
  28. அல் ஹகம் - الْحَكَمُ - தீர்ப்பளிப்பவன்
  29. அல் அத்லு - الْعَدْلُ - நீதியுள்ளவன்
  30. அல் லதீஃப் - اللَّطِيفُ - நுட்பமாகச் செய்கிறவன்
  31. அல் ஃகபீர் - الْخَبِيرُ - நன்கறிகிறவன்
  32. அல் ஹலீம் - الْحَلِيمُ - சகிப்புத் தன்மையுடையவன்
  33. அல் அழீம் - الْعَظِيمُ - மகத்துவமிக்கவன்
  34. அல் கஃபூர் - الْغَفُورُ - மிகவும் மன்னிப்பவன்
  35. அஷ் ஷகூர் - الشَّكُورُ - நன்றி பாராட்டுபவன்
  36. அல் அலிய்யு - الْعَلِيُّ - மிக உயர்ந்தவன்
  37. அல் கபீர் - الْكَبِيرُ - மிகப்பெரியவன்
  38. அல் ஹஃபீழ் - الْحَفِيظُ - பாதுகாவலன்
  39. அல் முகீத் - المُقيِت - ஆற்றல் உள்ளவன்
  40. அல் ஹஸீப் - الْحسِيبُ - கணக்கெடுப்பவன்
  41. அல் ஜலீல் - الْجَلِيلُ - கண்ணியமானவன்
  42. அல் கரீம் - الْكَرِيمُ - தயாளன்
  43. அர் ரகீப் - الرَّقِيبُ - கண்காணிப்பவன்
  44. அல் முஜீப் - الْمُجِيبُ - பதிலளிப்பவன்
  45. அல் வாஸிஃ - الْوَاسِعُ - விசாலமானவன்
  46. அல் ஹகீம் - الْحَكِيمُ - ஞானமுடையோன்
  47. அல் வதூத் - الْوَدُودُ - பிரியமுடையவன்
  48. அல் மஜீத் - الْمَجِيدُ - மகிமை வாய்ந்தவன்
  49. அல் பாஇத் - الْبَاعِثُ - உயிர்த்தெழச் செய்பவன்
  50. அஷ் ஷஹீத் - الشَّهِيدُ - சாட்சியாளன்
  51. அல் ஹக் - الْحَقُّ - உண்மையானவன்
  52. அல் வகீல் - الْوَكِيلُ - பொறுப்பேற்பவன்
  53. அல் கவிய்யு - الْقَوِيُّ - வலிமை மிக்கவன்
  54. அல் ம(த்)தீன் - الْمَتِينُ - உறுதியானவன்
  55. அல் வலிய்யு - الْوَلِيُّ - பாதுகாவலன்
  56. அல் ஹமீத் - الْحَمِيدُ - புகழுக்குரியவன்
  57. அல் முஹ்ஸி - الْمُحْصِي - கணக்கிட்டு வைப்பவன்
  58. அல் முப்திஉ - الْمُبْدِئُ - துவங்குவோன்
  59. அல் மூஈத் - الْمُعِيدُ - மீளச்செய்பவன்
  60. அல் முஹ்யீ - الْمُحْيِي - உயிர்ப்பிக்கிறவன்
  61. அல் முமீத் - اَلْمُمِيتُ - மரணிக்கச் செய்பவன்
  62. அல் ஹய்யு - الْحَيُّ - நித்திய ஜீவன்
  63. அல் கய்யூம் - الْقَيُّومُ - நிலைத்திருப்பவன்
  64. அல் வாஜித் - الْوَاجِدُ - என்றும் இருப்பவன்
  65. அல் மாஜித் - الْمَاجِدُ - மகிமை வாய்ந்தவன்
  66. அல் வாஹித் - الْواحِدُ - ஏகன்
  67. அல் அஹத் - اَلاَحَدُ - ஒருவன்
  68. அஸ் ஸமத் - الصَّمَدُ - தேவையற்றவன்
  69. அல் காதிர் - الْقَادِرُ - சக்தியுள்ளவன்
  70. அல் முக்ததிர் - الْمُقْتَدِرُ - ஆற்றலுடையவன்
  71. அல் முகத்திம் - الْمُقَدِّمُ - முற்படுத்துவோன்
  72. அல் முஅக்ஃகிர் - الْمُؤَخِّرُ - பிற்படுத்துவோன்
  73. அல் அவ்வல் - الأوَّلُ - முதலாமவன்
  74. அல் ஆகிர் - الآخِرُ - கடைசியானவன்
  75. அழ் ழாஹிர் - الظَّاهِرُ - மேலானவன்
  76. அல் பா(த்)தின் - الْبَاطِنُ - அந்தரங்கமானவன்
  77. அவ்வாலீ - الْوَالِي - உதவியாளன்
  78. அல் முதஆலீ - الْمُتَعَالِي - மிக உயர்ந்தவன்
  79. அல் பர்ரு - الْبَرُّ - நன்மை செய்கிறவன்
  80. அத் தவ்வாப் - التَّوَابُ - பாவ மன்னிப்பை ஏற்பவன்
  81. அல் முன்தகிம் - الْمُنْتَقِمُ - தண்டிப்பவன்
  82. அல் அஃபுவ்வு - العَفُوُّ - மன்னிப்பவன்
  83. அர் ரஊஃப் - الرَّؤُوفُ - இரக்கமுடையவன்
  84. மாலிகுல் முல்க் - مَالِكُ الْمُلْكِ - ஆட்சிக்கு அதிபதி
  85. துல்ஜலாலிவல் இக்ராம் - ذُوالْجَلاَلِ وَالإكْرَامِ - கண்ணியமும் சங்கையும் உள்ளவன்
  86. அல் முக்ஸித் - الْمُقْسِطُ - நீதியானவன்
  87. அல் ஜாமிஃ - الْجَامِعُ - ஒன்று சேர்ப்பவன்
  88. அல் கனிய்யு - الْغَنِيُّ - தேவையற்றவன்
  89. அல் முக்னீ - الْمُغْنِي - தேவையற்றவனாக்குவோன்
  90. அல் மானிஃ - اَلْمَانِعُ - தடுப்பவன்
  91. அள் ளார்ரு - الضَّارَّ - இடரளிப்பவன்
  92. அன் நாஃபிஃ - النَّافِعُ - நற் பயனளிப்பவன்
  93. அன் நூர் - النُّورُ - ஒளியானவன்
  94. அல் ஹாதி - الْهَادِي - நேர்வழி காட்டுபவன்
  95. அல் பதீஉ - الْبَدِيعُ - முன்மாதிரியின்றி படைப்பவன்
  96. அல் பாகீ - اَلْبَاقِي - நிலையானவன்
  97. அல் வாரித் - الْوَارِثُ - அனந்தரம் பெறுவோன்
  98. அர் ரஷீத் - الرَّشِيدُ - நேர்வழி காட்டுவோன்
  99. அஸ் ஸபூர் - الصَّبُورُ - பொறுமையுள்ளவன்  

தமிழர் சமயம்

சேர்ந்திருந் தேன்சிவ போதியின் நீழலில்
சேர்ந்திருந் தேன்சிவன் நாமங்கள் ஓதியே. - (திருமந்திரம்: முதல் தந்திரம் - பாயிரம் - பாடல் 18)

 பொழிப்புரை: ...இங்குச் சிவஞானத் திருவின்கீழ் அவனது திருப்பெயர் பலவற்றையும் ஓதித் துதித்துக்கொண்டிருக்கின்றேன். 


கிபி 6 ஆம் நோற்றான்றில் எழுதப்பட்ட
தமிழின் முதல் நிகண்டு சேந்தன் திவாகரம் 

சிவபெருமானுடைய பெயர்களின் பட்டியல் (வலையுலகத்தில் கிடைக்கப் பெற்றது - ஆய்வுக்கு உட்பட்டது)

அடைக்கலம் காத்தான்
அடைவார்க்கமுதன்
அடைவோர்க்கினியன்
அடல்விடைப்பாகன்
அடல்விடையான்
அடங்கக்கொள்வான்
அடர்ச்சடையன்
அதலாடையன்
அதிர்துடியன்
அதிருங்கழலோன்
அடியார்க்கினியான்
அடியார்க்குநல்லான்
அகண்டன்
அகிலங்கடந்தான்
அகிலம் + உலகம்
அகிலேஷ்+அகிலன்
அளவிலான்
அளவிலி
அளியான்
அமைவு
அமலன்
அமரர்கோ
அமரர்கோன்
அம்பலக்கூத்தன்
அம்பலத்தீசன்
அம்பலவான்
அம்பலவாணன்
அம்மை
அம்மான்
அமுதன்
அமுதீவள்ளல்
அனகன்
அனலாடி
அனலேந்தி
அனலுருவன்
அனல்விழியன்
அணங்கன்
அணங்குறைபங்கன்
அனற்சடையன்
அனற்கையன்
அனற்றூண்
அனாதி
அன்பன்
அன்பர்க்கன்பன்
அன்புடையான்
அன்புசிவம்
அண்டமூர்த்தி
அண்டன்
அண்டவாணன்
அந்தமில்லாரியன்
அந்திவண்ணன்
அனேகன்/அநேகன்
அங்கணன்
அணியன்
அண்ணா
அன்னை
அண்ணாமலை
அன்னம்காணான்
அண்ணல்
அந்தமில்லான்
அந்தமில்லி
அந்தணன்
அந்திரன்
அணு
அஞ்சடையன்
அஞ்சாடியப்பன்
அஞ்சைக்களத்தப்பன்
அஞ்சையப்பன்
அஞ்செழுத்தன்
அஞ்செழுத்து
அப்பனார்
அறையணியப்பன்
அறக்கண்
அறக்கொடியோன்
அரன்
அறநெறி
அரசு
அரத்துறைநாதன்
அரவசைத்தான்
அரவாடி
ஆராவமுதன்
அறவன்
அரவணியன்
அரவஞ்சூடி
அரவரையன்
அரவார்செவியன்
அரவத்தோள்வளையன்
அறவாழிஅந்தணன்
அரவேந்தி
அறவிடையான்
அர்ச்சிதன்
அரிக்குமரியான்
அரிவைபங்கன்
அறிவன்
அறிவு
அறிவுக்கரியோன்
அரியஅரியோன்
அறியஅரியோன்
அரியான்
அரியசிவம்
அரியவர்
அரியயற்க்கரியன்
அரியோருகூறன்
அற்புதக்கூத்தன்
அற்புதன்
அரு
அருள்
அருளாளன்
அருளண்ணல்
அருள்சோதி
அருளிறை
அருள்வள்ளல்
அருள்வள்ளல்நாதன்
அருள்வல்லான்
அறுமலருறைவான்
அருமணி
அரும்பொருள்
அருண்மலை
அருந்துணை
அருட்கூத்தன்
அருட்செல்வன்
அருட்சுடர்
அருத்தன்
அருட்பெருஞ்சோதி
அருட்பிழம்பு
அருவன்
அருவுருவன்
அதிசயன்
அத்தன்
அதிகுணன்
அட்டமூர்த்தி
அவனிமுழுதுடையான்
அவிநாசி
அவிநாசியப்பன்
அவிர்ச்சடையன்
அயவந்திநாதன்
அயிற்சூலன்
அழகுகாதலன்
அழகன்
அழல்வண்ணன்
அழலார்ச்சடையன்
அழல்மேனி
அழற்கண்ணன்
அழற்குறி
ஆ 
ஆவுடையப்பன்
ஆடலரசன் 
ஆயிழையன்பன்
ஆடலழகன்
அடலேற்றன்
ஆடல்வல்லான்
ஆடற்கோ
ஆதி
ஆதிபகவன்
ஆதிபுராணன்
ஆதிரையன்
ஆதியண்ணல்
அடிகள்
ஆடும்நாதன்
ஆகமபோதன்
ஆகமமானோன்
ஆகமநாதன்
ஆலகண்டன்
ஆலாலமுண்டான்
ஆலமரச்செல்வன்
ஆலமர்தேன்
ஆலமர்பிரான்
ஆலமிடற்றான்
ஆலமுண்டான்
ஆலன்
ஆலநீழலான்
ஆலந்துறைநாதன்
அளப்பரியான்
ஆலறமுறைத்தோன்
ஆலவாய்ஆதி
ஆலவாயண்ணல்
ஆலவில்பெம்மான்
ஆல்நிழற்கடவுள்
ஆல்நிழற்குரவன்
ஆலுறைஆதி
ஆமையணிந்தன்
ஆமையாரன்
ஆமையோட்டினன்
ஆனையார்
ஆனையுரியன்
ஆனந்தக்கூத்தன்
ஆனந்தன்
ஆனாய்
ஆண்டகை
ஆண்டான்
ஆண்டவன்
ஆணிப் பொன்
ஆராஅமுது
ஆறாதாரநிலயன்
ஆரணன்
ஆறணிவோன்
ஆரரவன்
ஆர்சடையன்
ஆறேறுச்சடையன்
ஆறேறுச்சென்னியன்
ஆரழகன்
ஆரியன்
ஆத்தன்
ஆரூரன்
ஆறூர்ச்சடையன்
ஆறூர்முடியன்
ஆர்வன்
ஆதிமூர்த்தி
ஆதிநாதன்
ஆதிபிரான்
ஆத்திச்சூடி
ஆட்கொண்டான்
ஆட்டுகப்பான்
அழிவிலான்
ஆழிசெய்தோன்
ஆழி ஈந்தான்
ஆழிவள்ளல்
ஆழியான்
ஆழியர்
ஆழியருள்ந்தான்
இ 
இடபமூர்வான்
இடைமருதன்
இடையாற்றீசன்
இடத்துமையான்
இலக்கணன்
இளமதிசூடி
இளம்பிறையன்
இலங்குமழுவன்
இலங்கேசுவரன்
இல்லான்
இமையாள்கோன்
இமையவர்கோன்
இணையிலி
இனமணி
இன்பன்
இன்பநீங்கான்
இந்துசேகரன்
இந்துவாழ்சடையன்
இனியன்
இனியான்
இனியசிவம்
இறை
இறைவன்
இறையான்
இறையனார்
இராமநாதன்
இறப்பிலி
இராசசிங்கம்
இரவாடி
இரவிவிழியன்
இருவரேத்துரு
இருவர்தேட்டினன்
இசைபாடி
இட்டன்
இயல்பழகன்
இயமானன்
ஈ 
ஈசன்
ஈடிலி
ஈரோட்டினன்
ஈசன்
ஈறிலான்
உ 
உச்சிநாதர்
உடையான்
உடையிலாவுடையன்
உடுக்கையொலியன்
உலகநாதன்
உலகீன்றான்
உலகமூர்த்தி
உள்ளங்கவர்கள்வன்
உமைஅண்ணல்
உமைகாதலன்
உமைகந்தனுடனார்
உமைகேள்வன்
உமைகோன்
உமைகூறன்
உமைக்குநாதன்
உமைபாங்கன்
உமைவிருப்பன்
உமையாகன்
உமையாள்பங்கன்
உமையோடுறைவான்
உமையொருபாகன்
உமாபதி
உறவன்
உறவிலி
உருதருவான்
உருத்திரலோகன்
உருத்திரமூர்த்தி
உருத்திரன்
உருவிலான்
உருவொடுபெயரீவள்ளல்
உத்தமன்
உற்றான்
உவமநில்லி
உய்யக்கொள்வான்
உய்யக்கொண்டான்
உழையீருரியன்
உழுவையுரியன்
ஊ 
ஊனமிலி
ஊழிமுதல்வன்
எ 
எடுத்தபாதம்
எளியசிவம்
எல்லையிலாதான்
எல்லாமுணர்ந்தோன்
எல்லோர்க்குமீசன்
எம்பெருமான்
எண்குணன்
எண்மலர்சூடி
எண்ணத்துனையிறை
எந்நாட்டவர்க்குமிறை
எண்ணுறைவன்
என்னுயிர்
என்றுமெழிலான்
எந்தை
எந்தாய்
எண் தோளர்
எண்டோளன்
எண்டோளவன்
எண்டோளொருவன்
எரிபோல்மேனி
எரியாடி
எரியேந்தி
எருதேறி
எருதூர்வான்
எரும்பீசன்
எயிலட்டான்
எயில்மூன்றெரித்தான்
எழுகதிமேனி
எழுத்தறிநாதன்
ஏ 
ஏடகநாதன்
ஏகப்பன்
ஏகநாதன்
ஏமன்
ஏகம்பன்
ஏகபாதர்
ஏனக்கொம்பன்
ஏனங்காணான்
ஏனத்தெயிறான்
ஏனவெண்மருப்பன்
ஏறமர்கொடியன்
ஏறெறி
ஏற்றன்
ஏறுடைஈசன்
ஏறுடையான்
ஏறூர்கொடியோன்
ஏறுயர்த்தான்
ஏழைபாகத்தான்
ஏழுலகாளி
ஐ 
ஐம்முகன்
ஐந்தாடி
ஐந்துகந்தான்
ஐந்நிறத்தண்ணல்
ஐந்தலையரவன்
ஐந்தொழிலோன்
ஐவண்ணன்
ஐயமேற்பான்
ஐயன்
ஐயர்
ஐயாறணிந்தான்
ஐயாற்றண்ணல்
ஐயாற்றரசு
த 
தாண்டவன்
தாணு
தேவதேவன்
தேவன்
தேனுபுரீஸ்வரர்
ப 
பாகம்பெண்ணன்
பாகம்பெண்கொண்டோன்
பூதப்படையன்
பூதவணிநாதன்
புவன்
புவனங்கடந்தொளி

யானையுரியன்
யாழ்மூரிநாதன்

இந்துமதம்

ஒரே இறைவனை அழையுங்கள். அந்த இறைவனுக்கு பல பெயர்கள் உள்ளன.' - (ரிக் 1:164:46)
“Sages (learned Priests) call one God by many names”. (Rigveda 1:164:46) 
 
அந்த இறைவனுக்கு 33 பண்புகள் இருப்பதாக அந்த பண்புகளின் பெயர்களை வரிசையாக பட்டியலிடுகிறது. - (ரிக் வேதம் 2 : 1)
Rigveda gives no less than 33 different attributes to Almighty God. Several of these attributes are mentioned (Rigveda Book 2 hymn 1)

முடிவுரை

இறைவனின் திருநாமங்கள் அவனது பண்புகளை உள்ளடக்கியதாக ஒவ்வொரு சமயத்திலும் உள்ள மறை நூல்களில்குறிப்பிடப் பட்டுள்ளது. அவைகளை ஒப்பு நோக்க பார்த்தால் அவைகளுக்கு இடையேயான ஒற்றுமையை நாம் அறிந்துகொள்ளலாம். இதன் மூலம் இறைவனின் வரையறையை ஆய்ந்தறிந்து இறைவன் ஒருவனே என்று உணரலாம்.