தமிழர் சமயம்
வேதாளம் சேருமே வெள்ளெருக்கம் பூக்குமே
பாதாள மூலி படருமே - மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரம் சொன்னார் மனை. (பா-23)
பொருள்: நீதி மன்றத்தில் பொய் சாட்சியம் சொன்னவரின் வீட்டில் வேதாளம் குடியேறும். சூடத்தகாத வெண்மையான எருக்கம் பூக்கள் பூக்கும். படரக் கூடாத பாதாள மூலி படரும். மூதேவி சென்று நிலையாகத் தங்குவாள். பாம்புகள் குடிபுகும். பொய்சாட்சி சொன்னவர்கள், இவ்வாறு தன் சுற்றத்துடன் அழிவர்.
இஸ்லாம்
நபி (ஸல்) அவர்களிடம் பெரும் பாவங்கள் பற்றிக் கேட்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வுக்கு இணை வைப்பது, பெற்றோருக்குத் துன்பம் கொடுப்பது, தற்கொலை செய்து கொள்வது, பொய்சாட்சி சொல்வது ஆகியன (பெரும் பாவங்களாகும்)’ என்று கூறினார்கள் (அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல் : புகாரி-2653)
கிறிஸ்தவம்
நீதிபதிகள், நன்றாக விசாரிப்பதன் மூலம் அந்த நபருக்கு எதிராக பொய்சாட்சி கூறியதாகக் கண்டறிந்தால், அவன் பொய்சாட்சி என்று நிரூபிக்கப்பட்டால், நீங்கள் அவனைத் தண்டிக்கவேண்டும். அவன் மற்றவர்களுக்குச் செய்ய விரும்பியதையே நீங்கள் அவனுக்கு செய்யவேண்டும். - (உபாகமம் 19:18-19)
பொய்சாட்சி சொல்பவன் தண்டிக்கப்படுவான். தொடர்ந்து பொய்சொல்பவன் அழிக்கப்படுவான். (நீதிமொழிகள் 19:9)
நீ எவரையும் கொலை செய்யாமல் இருப்பாயாக; விபச்சாரம் செய்யாமல் இருப்பாயாக, களவு செய்யாமல் இருப்பாயாக; பொய்சாட்சி சொல்லாமல் இருப்பாயாக; நீ உன் தந்தையையும் தாயையும் மரியாதை செய்வாயாக என்று கட்டளைகள் சொல்வது உனக்குத் தெரியுமா?” என்று கேட்டார். (மாற்கு 10:19)
19.18 அவர்,"எவற்றை?" என்று கேட்டார். இயேசு," கொலை செய்யாதே விபசாரம் செய்யாதே களவு செய்யாதே பொய்ச்சான்று சொல்லாதே
பதிலளிநீக்கு26.58 தலைமைக் குருக்களும், தலைமைச் சங்கத்தார் அனைவரும் இயேசுவுக்கு மரண தண்டனை விதிக்க அவருக்கு எதிராகப் பொய்ச் சாட்சி தேடினர்.
26.59 பல பொய்ச் சாட்சிகள் முன்வந்தும் ஏற்ற சாட்சி கிடைக்கவில்லை. இறுதியாக இருவர் முன்வந்தனர்.
11.19 உமக்குக் கட்டளைகள் தெரியும் அல்லவா? " கொலை செய்யாதே, விபசாரம் செய்யாதே, களவு செய்யாதே, பொய்ச்சான்று சொல்லாதே, வஞ்சித்துப் பறிக்காதே, உன் தாய் தந்தையை மதித்து நட" என்றார்.
14.56.பலர் அவருக்கு எதிராகப் பொய்ச்சான்று சொன்னார்கள். ஆனால் அச்சான்றுகள் ஒன்றுக்கொன்று முரண்பட்டிருந்தன.
14.57.சிலர் எழுந்து,"மனித கையால் கட்டப்பட்ட இந்தத் திருக்கோவிலை இடித்து விட்டுக் கையால் கட்டப்படாத வேறொன்றை
14.58.முன்று நாளில் நான் கட்டி எழுப்புவேன் என்று இவன் சொல்லக் கேட்டோ ம்" என்று அவருக்கு எதிராகப் பொய்ச் சான்று கூறினர்.
18.20 உமக்குக் கட்டளைகள் தெரியும் அல்லவா விபசாரம் செய்யாதே. கொலை செய்யாதே. களவு செய்யாதே. பொய்ச் சான்று சொல்லாதே. உன் தாய் தந்தையை மதித்து நட" என்றார்
1 கொரி. 15.15 நாங்களும் கடவுளின் சார்பில் பொய்ச்சான்று பகர்வோர் ஆவோம். ஏனெனில் இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுவதில்லை என்றால் கடவுள் உயிர்த்தெழச் செய்யாத கிறிஸ்துவை கடவுள்தான் உயிர்த்தெழச் செய்தார் என்று சான்று பகரும்போது கடவுளுக்கு எதிராகச் சான்று கூறியவர்கள் ஆவோம் அல்லவா?
https://zenodo.org/record/4074735#.Yw8NsOxBwfE
உபாகமம் 5:20 இல்
பதிலளிநீக்கு" உன் அண்டை வீட்டாருக்கு எதிராக பொய் சாட்சி சொல்லாதே "
நீதிமொழிகள் 19:5
பதிலளிநீக்கு5 பொய் சாட்சி தண்டிக்கப்படாமல் போவதில்லை,
பொய்யை சுவாசிப்பவன் தப்பமாட்டான்.
நன்றிப் பயன் தூக்கா நாண் இலியும், சான்றார் முன்
பதிலளிநீக்குமன்றில் கொடும்பாடு உரைப்பானும், நன்று இன்றி
வைத்த அடைக்கலம் கொள்வானும், - இம் மூவர்
எச்சம் இழந்து வாழ்வார். திரிகடுகம் 62
நன்றியறிதல் இல்லாதவனும், பொய் சாட்சி சொல்பவனும், தன்னிடம் அடைக்கலமாக வந்த பொருளை விரும்பியவனும், தம் மக்களை இழந்து வருந்துவார்.
கொன்று உண்பான் நாச் சாம்; கொடுங் கரி போவான் நாச் சாம்;
பதிலளிநீக்குநன்று உணர்வார் முன் கல்லான் நாவும் சாம்; ஒன்றானைக்
கண்டுழி, நாச் சாம்; கடவான் குடிப் பிறந்தான்
உண்டுழி, நாச் சாம், உணர்ந்து. 8
கொடுங்கரி - பொய்ச் சான்று
உயிர்களைக் கொன்று உண்பானுடைய நாக்கு, பொய்ச்சான்று சொல்வானுடைய நாக்கு அற்றுப்போகும். கற்றுணர்ந்தவர் முன் கல்லாதானுடைய நாக்கு அடங்கும். தான் சொல்லிய சொல்லைக் கேட்காதவன் முன் சொன்னவன் நாக்கு எழாது. உதவி செய்தவன் செய்த தீமையைச் சொல்லாத சான்றோன் நாக்கு பிறருக்கு அதனைக் கூறும்.
https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
பதிலளிநீக்குபண்டைய தமிழ் நாட்டின் சட்ட அமைப்பு
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள் :
பதிலளிநீக்குபெரும் பாவங்களில் முதலாவதாக, அல்லாஹ்விற்கு சமமாக படைப்புகளை இணையாக ஆக்குதல்.
இரண்டாவது, பெற்றோருக்கு மாறுபாடு செய்தல்.
மூன்றாவதை கூற வரும்போது சார்ந்து அமர்ந்திருந்தவர்கள் நேராக உட்காருகிறார்கள்.
கவனமாக கேளுங்கள். பொய் பேசுதல் பொய் சாட்சி சொல்லுதல், பொய் பேசுதல் பொய் சாட்சி சொல்லுதல் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லிக் கொண்டே இருந்தார்கள்.
தோழர்கள் பயந்து நடுங்கி தங்களுக்குள் சொன்னார்கள்; அல்லாஹ்வின் தூதர் அமைதி ஆக வேண்டுமே என்று.
அறிவிப்பாளர் : அபூபக்ராரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 5976.
https://www.muftiomar.com/videodetails/621
24:4. எவர்கள் கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி (அதை நிரூபிக்க) நான்கு சாட்சிகளைக் கொண்டு வரவில்லையோ, அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள்; பின்னர் அவர்களது சாட்சியத்தை எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அவர்கள்தான் தீயவர்கள்.
பதிலளிநீக்கு