சோதனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சோதனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சோதனை

சோதனை ஏன் ?


தமிழர் சமயம் 


பெம்மான் பெருநந்தி பேச்சற்ற பேரின்பத்து
அம்மா னடிதந் தருட்கடல் ஆடினோம்
எம்மாய மும்விடுத் தெம்மைக் கரந்திட்டுச்
சும்மா திருந்திடஞ் சோதனை யாகுமே.திருமந்திரம் 8ம் தந்திரம் - 33. சோதனை  2589.

பெம்மான் - உயர்ந்தவன்
பெருநந்தி - பெரிய நந்தி (அ) பெருமைக்கு உரிய நந்தி
பேச்சற்ற - விளக்குதற்கு அப்பாற்பட்ட
பேரின்பத்து - உயர்ந்த இன்பத்து  
அம்மானடி - கடவுள் அடி 
தந்த - கொடுத்த 
அருட் கடல் - பேரருள் 
ஆடினோம் - சுட்டினோம்  
எம்மாயமும் - அனைத்து மாயங்களையும் 
விடுத்து - விட்டு 
எம்மை - என்னை 
கரந்திட்டு - மறைத்துவிட்டு, தடுத்துவிட்டு 
சும்மா - மீண்டும் மீண்டும்  
திருந்திடச் - திருந்துவதற்க்காக 
சோதனை - சோதனை 
ஆகுமே - உண்டாகிறது 

(பொருள்) எல்லோரினும் பெரியவனாகிய நந்தி தேவராலும் விவரிக்க முடியாத பெரிய இன்பத்தைத் கடவுளை அடிபணிந்தவர்க்கு வழங்கிய பேரருளை சுட்டினோம். அனைத்து மாயங்களையும் விட்டு என்னை தடுத்து மீண்டும் மீண்டும் திருந்துவதற்க்காக சோதனை உண்டாகிறது.

இஸ்லாம் 


அவர்களை நாம் பூமியில் பல பிரிவினராகச் (சிதறித்திரியுமாறு) ஆக்கி விட்டோம்; அவர்களில் நல்லவர்களுமிருக்கிறார்கள். அதுவல்லாத கெட்டவர்களும் இருக்கின்றார்கள் - அவர்கள் (நன்மையின் பால்) திரும்பும் பொருட்டு அவர்களை நன்மைகளைக் கொண்டும், தீமைகளைக் கொண்டும் சோதித்தோம். 7:168

உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன். - குர்ஆன்  67:2

கிறிஸ்தவம் 


நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடும் அன்பு கூறுகிறீர்களோ இல்லையோ என்று அறியும்படிக்கு உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைச் சோதிக்கிறார். (உபாகமம் 13:3)

சோதனையின் அளவு?


கிறிஸ்தவம்


மனிதர்களுக்குப் பொதுவாக வருகிற சோதனையைத் தவிர வேறெந்தச் சோதனையும் உங்களுக்கு வரவில்லை. ஆனால், கடவுள் நம்பகமானவர்; உங்களால் தாங்கிக்கொள்ள முடியாதளவுக்கு எந்தச் சோதனையையும் அவர் அனுமதிக்க மாட்டார். அதைச் சகித்துக் கொள்வதற்கும் அதிலிருந்து விடுபடுவதற்கும் அவர் வழிசெய்வார். - 1 கொரிந்தியர் 10:13

இஸ்லாம்  


நாம் எந்த ஆத்மாவையும், அதன் சக்திக்கு ஏற்றவாறு அல்லாமல் (அதிகம் செய்யுமாறு) நிர்ப்பந்திக்க மாட்டோம் 23:62

சோதனையை பழிக்காதே


தமிழர் சமயம் 


நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன். குறள் 379

விளக்கம்நல்வினை விளையும் போது நல்லவை எனக் கருதி மகிழ்கின்றனர், தீவினை விளையும் போது துன்பப்பட்டுக் கலங்குவது ஏனோ?.

இஸ்லாம்

ஆனால், இறைவன் மனிதனுக்கு கண்ணியப்படுத்தி, பாக்கியம் அளித்து அவனைச் சோதிக்கும் போது அவன்: “என் இறைவன் என்னை கண்ணியப்படுத்தியுள்ளான்” என்று கூறுகிறான். எனினும் அவனுடைய உணவு வசதிகளைக் குறைத்து, அவனை (இறைவன்) சோதித்தாலோ, அவன், “என் இறைவன் என்னைச் சிறுமைப் படுத்தி விட்டான்” எனக் கூறுகின்றான்.  (அல்குர்ஆன் 89:15 &16) 


குறளும் குர்ஆனும் கூறுவதென்ன? நன்மையால் மகிழ்ச்சியுரவோ. தீமையால் வருந்தவோ தேவையில்லை  இரண்டும் இறைவனிடமிருந்து வருகிறது என்பத உணர்ந்தால், அதன் மூலம் இறைவன் நம்மிடம் எதிர்பார்ப்பதென்ன என்று அறிந்து செயல் படுவோம்..!  

சோதனையை பொறுத்துக்கொண்டால் !


இஸ்லாம் 

(நம்பிக்கையாளர்களே!) பயம், பசி மேலும் பொருள்கள், உயிர்கள், கனிவர்க்கங்கள் ஆகியவைகளைக் கொண்டு நிச்சயமாக நாம் உங்களைச் சோதிப்போம். (நபியே! இச்சோதனைகளால் ஏற்படும் கஷ்டங்களைச்) சகித்துக் கொண்டிருப்பவர்களுக்கு நீங்கள் நற்செய்தி கூறுங்கள். (பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்” என்று கூறுவார்கள். இத்தகையோர் மீது தான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், நற்கிருபையும் உண்டாகின்றன, இன்னும் இவர்கள் தாம் நேர் வழியை அடைந்தவர்கள். (குர்ஆன் 2:155-517) 

என் அருமை மகனே! தொழுகையை நிலைநாட்டு. மேலும், நன்மை புரியும்படி ஏவு; தீமையைத் தடு! மேலும், எந்தத் துன்பம் உனக்கு நேர்ந்தாலும் அதனைப் பொறுத்துக்கொள்! நிச்சயம் இவையெல்லாம் மிகவும் வலியுறுத்தப்பட்டுள்ள விஷயங்களாகும். - (குர்ஆன் 31:17)

கிறிஸ்தவம் 


சோதிக்கப்படும்போது உறுதியாய் இருக்கிற மனிதன் மிகுந்த பாக்கியவான் ஆகிறான். ஏனெனில் தான் நேசிக்கிறவர்களுக்குத் தருவதாக தேவன் வாக்களித்த வாழ்வு என்னும் பரிசை, சோதனையில் தேறிவிடும்போது அவன் பெறுவான். யாக்கோபு 1:12