அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அரசியலில் மதம் தலையிட வேண்டிய அவசியம் என்ன?

அரசியலும் மதமும் பிரிந்தது எப்போது? Quora 

திருக்குறள் அரசியல் பேசவில்லையா?

“அறனிழுக்கா தல்லவை நீக்கி மறன்இழுக்கா
மானம் உடையது அரசு” (குறள் 384)

பொருள்: சமுதாயத்திலுள்ள குடிமக்கள் வாழ்க்கை நன்னிலை பெற செம்மையான நெறிகளை வகுத்து ஆட்சிபுரிதல் அரசின் கடமையாகும். மக்களின் இயல்பையும், தேவைகளையும் உணர்ந்து செயல்படும் செங்கோன்மையாக அறம் தவறாது, அல்லவை நீக்கி அரசானது சமுதாயத்தினை மேன்மையுறச் செய்தல் வேண்டும் என்கிறது கீழ்வரும் குறள்.

முதுமொழிக் காஞ்சி அரசியல் பேசவில்லையா? 

முறை இல் அரசன் நாடு நல்கூர்ந்தன்று. -  (நல்கூர்ந்த பத்து 9:1)
பதவுரை: முறையில் - முறைமையில்லாத; நல்கூர்ந்தன்று - வறுமையுறும் 
பொருளுரை: முறை செய்யாத அரசனுடைய நாடு எந்நாளும் வறுமையுடையதாகும். 

திருமந்திரம் அரசியல் பேசவில்லையா?

நாடொறும் மன்னவன் நாட்டில் தவநெறி
நாடொறும் நாடி அவன்நெறி நாடானேல்
நாடொறும் நாடு கெடுமுட னண்ணுமால்
நாடொறும் செல்வம் நரபதி குன்றுமே. - (பாடல் 239: முதல் தந்திரம் 13. இராசதோடம் (அரசாட்சி முறை)) 
 

விளக்கம்ஒரு நாட்டுக்கு அரசனாக இருக்கின்றவன் அந்த நாடு முழுவதிலும் தினந்தோறும் தவ வழியில் வாழ்பவர்களுக்கு எந்தவொரு துன்பமும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அரசனுக்கு என்று விதிக்கப்பட்ட நீதியிலும் தர்மத்திலும் சிறிதளவும் பிழை வந்துவிடாமல் தினந்தோறும் நடந்துகொள்ள வேண்டும். இதில் எதை செய்யத் தவறிவிட்டாலும் அவனுடைய நாட்டின் வளம் குன்றும். மக்களிடையே அறியாமை தோன்றும். அந்த நாட்டில் இருக்கும் செல்வங்கள் எல்லாம் தினந்தோறும் குறைந்து கொண்டே வந்து அரசனும் விரைவில் இறந்து போவான்.

திருக்குர்ஆன் அரசியல் பேசவில்லையா?

அமானிதங்களை அதற்குரியோரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், மக்கள் மத்தியில் தீர்ப்பளிக்கும் போது நீதியாக நீங்கள் தீர்ப்பளிக்க வேண்டும் எனவும் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான்.அல்லாஹ்வின் இந்த அறிவுரை உங்களுக்கு மிகவும் நல்லது. அல்லாஹ் செவியுறுபவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கிறான். (குர்ஆன் 4:58)

திருவிவிலியம் அரசியல் பேசவில்லையா?

அரசன் நேர்மையுள்ளவனாக இருந்தால், நாடு பலமுடையதாக இருக்கும். ஆனால் அரசன் சுயநலக்காரனாக இருந்தால் எல்லாவற்றுக்கும் மக்கள் அரசனுக்குப் பணம் செலுத்தவேண்டியதாக இருந்தால், நாடு பலவீனமடையும். - (நீதிமொழிகள் 29:4)  

இவைகள் கூறும் அரசின் மாண்பும், அரசனின் மாண்பும், குடிமக்கள் மாண்பும் பேணப்பட்டால் அதுதான் பொற்காலம். இவைகள் கூறும் அரசியலின் கூறுகளை தனித்தனியாக பிரித்தது இன்று குடியரசு என்றும் பொதுவுடைமை என்றும், சோசியலிசம் என்றும், கேப்பிடலிசம் என்றும் தனித்தனியே முழுமைபெறா சிக்கலான உருக்களாக உலாவருகிறது. இவை அனைத்தின் பண்புகளும் சரியான விகிதத்தில் ஒருங்கே அமையப்பெறும் பொழுதுதான் பொற்கால ஆட்சி நடைபெறும்.

ஆனால் அறநூல்கள் கூறும் நல்ல அரசாட்சியின் பண்புகளை கூறுபோட்டு பிரித்தவர்களின் வாக்குமூலம் இதோ!

முழுமையாக வாசிக்க : Must_Readable.pdf 


தி.மு.க ஏன் குடும்ப கட்சியாக மாறியது? அந்த அரசியல் கட்சியில் இருக்கும் மற்ற மூத்த அரசியல்வாதிகள் அல்லது தொண்டர்களின் எதிர்காலம் என்ன?

குலத்தொழிலை ஆதரிக்கும் பிஜேபி காரர்களுக்கு இதில் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை.

  • Dr மகன் Dr
  • வக்கீல் மகன் வக்கீல்
  • கோயிலில் மந்திரம் சொல்பவர் மகன் மந்திரம் சொல்பவர்
  • அரசியல்வாதி மகன் அரசியல்வாதி

Bjp, பிரமானர்களின் கொள்கைப்படி இதில் பிழை ஏதும் இல்லையே!

உண்மையில் இவர்களின் கொள்கைப்படி

  • துவைப்பவன் மகன் துவைக்கணும்
  • முடி வெடுபவன் மகன் முடி வெட்டனும்
  • வெட்டியான் மகன் வெட்டியான் ஆகணும்
  • மலம் அல்லுபவன் மகன் மலம் அல்லனும்

அவ்வளவுதான். கீழுள்ள வேலைக்கெல்லாம் குலத்தொழில் okay. ஆனால் அதிகாரம் செல்வாக்கு நிறைந்த தொழில்கள் பிராமனாலுக்கு அல்லது அவர்களை அண்டி பிழைப்போருக்கு. அதில் குறை ஏற்படும் பொழுது இப்படி ஏதாவது கொளுத்தி போடுவது.

வாரிசு அரசியல் சரி என்று நாமும் சொல்லவில்லை, என்றாலும் knowledge inheritance-ஐ தவிர்க்க முடியாது. ஒரு அரசியல்வாதியின் அனைத்து பிள்ளைகளும் அரசியலில் ஜொலித்துவிட முடியாது. யார் அந்த அறிவையும் திறமையையும் தத்துவத்தையும் உள்வாங்கி கொண்டாரா அவரால் தான் நிலைக்க முடியும். இது அனைத்து துறைக்கும் பொருந்தும்.

ஆனால் அதிகாரம் மிக்க தொழிலை செய்பவரின் மகன் கீழுள்ள தொழிலை செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டால் செய்ய வேண்டும். கீழுள்ள தொழிலை செய்பவரின் மகனுக்கு அரசியலில் அல்லது மந்திரம் சொல்வதில் அதீத அறிவு இருந்தால் அவர் அந்த தொழிலில் அனுமதிக்கப் பட வேண்டும். கொலை, கொள்ளை, திருட்டு & வட்டி தொழில் இவைகளை தவிர இழிந்த தொழில் ஏதும் இல்லை என்பதை நம்மில் உணர்ந்தவர் எத்தனை பேர்?

இன்று திமுக குடும்ப கட்சி என்று கூவும் ஒருவர் CM ஆனால், நாளை அவரின் கட்சியும் குடும்பமும் திமுக போலத்தான் மாறி நிற்கும். இதுதான் எதார்த்தம். எனவே மக்களுக்கு நன்மை நடக்கிறதா என்று பார்த்தால் போதும்.

பிஜேபி, பாமக, அதிமுக, தேமுதிக, காங்கிரஸ், இன்னும் விடுபட்ட அனைத்து கட்சியையும் எடுத்து கொள்ளுங்கள். இவைகளில் எது வாரிசு அரசியல் இல்லாத கட்சி? நாம் தமிழர் போன்ற அதிகாரத்தை சுவைக்காத கட்சியை சொல்ல வேண்டாம், கட்சியின் அதிகார பங்கீட்டில் வளரும் முன்னேயே அடிக்கடி உடைந்த கட்சி நாம் தமிழர். ஒருவேளை ஆட்சி கட்டிலில் அமர்ந்தால் அவர்களின் நேர்மை வெளிப்படும்.

சரி நான் ஒருமுறை CM ஆக இருந்துவிட்டேன், போதும். உங்களில் சிறந்தவர் யாராவது பொறுப்பெடுத்துக் கொள்ளுங்கள் என்று ஒரு தலைவர் சொல்வதை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். நான் CM-ஆக இருந்துவிட்டேன் என்பதற்காக என் மகனுக்கு யாரும் அந்த பதவியை கொடுக்க வேண்டாம் என்று கூறும் தலைவரை கற்பனை செய்து பாருங்கள். பதவிக்காக ஆண்டாண்டு காலமாக காத்திருந்து போராடி இழந்து அவமானப்பட்டு பிடித்த இடத்தை இன்னொருவருக்கு இலவசமாக கொடுக்க எவர் முன்வருவர்.

எனக்கு பதிவி வேண்டாம் என்று ஒதுங்கி செல்லும் நபரை கட்டாயப்படுத்தி காமராஜருக்கு கொடுத்தது போல பதவி கொடுத்தால் அவர் இதை சொல்ல சாத்திய முண்டு.

"பதவியை கேட்பவருக்கு நாம் அதை வழங்க மாட்டோம்" என்று நபிகள் நாயகம் சொன்னதாக நாம் படித்து உள்ளோம். அதில் உள்ள ஞானம் குடியாட்சி தத்துவத்தில் புரிகிறது.

முடிவுரை:

மக்களின், மக்களாட்சி தத்துவத்தின் பண்பு இதுதான். வாரிசு அரசியலை தவிர்க்க முடியாது. வாரிசு அரசியலுக்கு எதிராக நம்மை தூண்டி விடுபவன் நாளை ஆட்சி கட்டிலில் அமர்ந்தால் அவன் முதலில் ஒடுக்குவது வாரிசு அரசியலுக்கு எதிராக பேசும் நம்மைதான். அவனும் வாரிசு அரசியல் தான் செய்வான்.

தொண்டர்கள் இலட்ச கணக்கில் இருந்தால் தான் ஒரு கட்சி நிலைபெறும். அதற்காக தொண்டர்கள் எல்லோருக்கும் பெரும் பதவிகள் வழங்க முடியாது ஏனென்றால் பெரும் பதவிகளில் எண்ணிக்கை குறைவு. அவர்களுக்கு அவரவர் தகுத்திக்கு ஏற்ப வாய்ப்புகளும் பதவிகளும் வழங்க முடியும். இது திமுக-வில் மட்டுமல்ல ஒவ்வொரு கட்சியிலும் இதுதான் நிதர்சனம்.

சுருக்கமாக சொன்னால் நமது விருப்பம் வேறு அதன் பண்பு வேறு. நெருப்பு குளிர வேண்டும் என்று நாம் விரும்பலாம் ஆனால் சுடுவதும் எரிப்பதும் தான் அதன் பண்பு.

குடியாட்சியில் வெறிகொண்டு ஓடி ஒவ்வொருவரையும் எரிமிதித்து ஒழித்து துரோகம் செய்து கொலை செய்து மிரட்டி அநியாயம் செய்து ஒருவன் பதவியில் அமர்கிறான் அவனை நேர்மையாக ஒழுக்கமாக இல்லை என்று கூறுவது நகைப்புக்குறியது. இதுதான் குடியாட்சியின் பண்பு. 

https://ta.quora.com/குடும்ப-கட்சி

அகண்ட பாரதத்திற்கான தருணம் வந்துவிட்டதா? இலங்கை, நேபாளம் மாற்றங்கள் திவால்கள் இதனை உணர்த்துகின்றனவா?

RSS இன் அகண்ட பாரத கனவு Zionist-இன் Greater Isreal-லிருந்து உருவானது.

Zionism இறை நம்பிக்கை அற்ற தங்களை உலகின் மிக உயர்ந்த இனமாக கருதிய மெத்தப் படித்த யூத இன வாதிகளால் உருவாக்கப்பட்டது. அவர்கள் Greater Isreal இலக்கை அடைய எந்த அறத்தையும் பின்பற்ற தேவையில்லை ஏனென்றால் யூதர்களை தவிர அனைவரும் கோயிம்கள் - அதாவது கால்நடைகள் என்று நம்புபவர்கள். (யூத பயங்கரவாதிகளின் இரகசிய அறிக்கை நூலிலிருந்து)

RSS உம் இறைநம்பிக்கையற்ற இனவாதம் பேசும் ஓரளவு படித்த பார்ப்பன கூட்டத்தால் விதையிடப்பட்டது. சாவர்க்கர் zionist-ஐ ஆதரித்தவர் அவர்களுடன் தொடர்பு கொண்டவர் என்பது வரலாற்று உண்மை. பிராமணர்களை விட மற்ற அனைவரும் தாழ்ந்தவர்கள் என்பது அவர்கள் கோட்பாடு.

இப்படி இரு குழுவினருக்கும் ஒற்றுமைகள் பல. ஆனால் கவனிக்கப் பட வேண்டிய விடயம் என்னவென்றால், பிராமணர்களுக்கு எப்படி அவர்களை தவிர இந்த தேசத்தில் உள்ள அனைவரும் தாழ்ந்தவர்களோ அதேபோல யூதர்களுக்கு அவர்களை தவிர உலகில் உள்ள, பிராமணர்கள் உட்பட அனைவரும் கோயிம்களே.

RSS அகண்ட பாரத கனவை நனவாக்கினால் உலகை ஆளும் கனவுடன் நடைபோடும் யூதர்களளின் திட்டத்துக்கு உதவுமே தவிர இவர்களுக்கு உதவாது. இந்த பிராமணர்கள் அந்த சமயத்தில் யூதர்களால் கடுமையான ஒடுக்குமுறைக்கு உள்ளாவர்.

யூதர்கள் நேரடியாக உலகனைத்தையும் கட்டுக்குள் கொண்டு வர முடியாது என்பதால் ஒவ்வொரு பிராந்தியத்திலும் இது போல ஓர் குழுவினரை முடக்கிவிட்டுள்ளனர். வல்லவனுக்கு வல்லவனாக தான் யூதன் செயல்படுவான். பல கோடி மக்களை கட்டுப்படுத்துவதை விட, பல சிறு குழுக்களை கொண்டு பல கோடி மக்களை கொன்று கட்டுப்படுத்தி, அவர்களை இந்த சியோனிச குழு கட்டுபடுத்தும் படி திட்டம் வடிவமைக்கப் பட்டுள்ளது.

இன்று உள்ள அனைத்து வகையான முரணான அரசியல் தத்துவங்களும் பெரும்பாலான நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தின் மூலமும் அவர்கள்தான் என்றால் உங்களால் நம்ப முடியுமா இல்லையா என்று தெரியவில்லை.

அம்பேத்கார் 60-க்கும் மேற்பட்ட நாட்டின் அரசியலமைப்பை படித்து அதில் சிறந்ததை தேர்ந்தெடுத்ததாக நாம் அறிவோம். அவற்றில் பெரும்பாலானவை யூதர்களால் வடிக்கப்பட்டது. அம்பேத்காரின் இந்த பணியில் அவருடன் உடன் இருந்த உதவியாளர் ஒரு யூத பெண்மணி. இது தற்செயலானது அல்ல.

நவீன கால நாத்தீகத்துக்கு காரணமாக இருக்கும் பொதுவுடமை தத்துவத்தை வடிவமைத்த மார்க்ஸ் ஒரு யூதர் - இப்படி இனத்தை காரணமாக சொல்வது சிலருக்கு ஏற்புடையதாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் இதனை இங்கே குறிப்பிட காரணம் கார்ல் மார்க்ஸ் மீது தத்துவ ஆதிக்கம் செலுத்தியவர்களில் மிக முக்கியமானவர் மோசஸ் ஹெஸ் என்கிற ஆரம்ப கால ஜியோனிச வடிவமைப்பாளர். நான் வாசித்தவரை மார்க்ஸ் தனது வர்த்தைகளுக்கு நேர்மையாக நடந்து கொண்டவர் என்று நம்புகிறேன் ஏனென்றால் ஒருவரின் உள்ளத்தை யாராலும் அறிய முடியாது. மேலும் யூதர்களிலும் நல்லோரும் உள்ளனர் என்பது என் கருத்து. ஆனால் நஞ்சு எண்ணம் கொண்ட ஹெஸ் போன்றவர்களால் தூண்டிவிடப்பட்ட நெருப்பு மார்க்ஸ் என்று கருதாமல் இருக்க முடியவில்லை.


போதுவுடமைக்கு எதிராக தமிழ் சமூகத்தில் இருந்து சங்கி அல்லாத ஒரு குரல் வருவது ஆச்சரியமாக இருக்கலாம். அது ஆண்ட (சீனா, ரஷ்யா, கொரியா) நாடுகளின் வரலாற்றையும் சமகால செய்திகளையும் வாசித்து இருக்கிறோமே.



மக்களாட்சியும் குறையுள்ளதுதான், இன்றுவரை காமராசரைத்தான் உதாரணத்துக்கு அழைக்கிறோம். ஆனால் அவர் ஒரு விதிவிலக்கு. மக்களாட்சியின் பண்பு இன்று உள்ளது போலத்தான் என்றும் இருக்கும்.

இவர்கள் சில நியதிகளை நாம் அறிவது அவசியம்.

    • உலகில் ஆதிக்க பீடத்தில் ஒருசில நூறாண்டுகளை தாண்டி எவரும் இருந்ததில்லை
    • இன்றைய அடிமை நாளைய அரசன்
    • இன்றைய அரசன் நாளைய அடிமை
    • வரலாற்று காலம் மிகச் சிறியது, நம் காலமும் பிற்காலத்தில் வரலாற்றுக்கு முந்தைய காலமாக கருதப்பட வாய்ப்புள்ளது - மாயன் கல்வெட்டுகளும், அரேபிய பள்ளத்தாக்குகளும், மெசப்பட்டோமியாவும், சிந்து சமவெளியும், கீழடியும் அதைத்தான் நமக்கு சொல்கிறது.
    • நமது ஒவ்வொரு செயலுக்கும் நமக்கு கூலி வழங்கப்படும்
    • மீளா நரகமும் சொர்கமும் அனைத்து சமயங்களும் சொல்லும் உண்மை.

எனவே அந்த நியதிகளை கருத்தில் கொண்டு நாம் செயல்பட வேண்டும்.

முடிவுரை:

RSS-இன் திட்டமும் வழிமுறையும் ஒன்று zionism-மிடமிருந்து காப்பியடித்தது அல்லது அவர்களால் வடித்து தரப்பட்டது. அகண்ட பாரத்துக்கு நேரம் வந்ததா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால் உயரம் செல்ல செல்ல வீழும் நேரம் அருகில் உள்ளது. அழிவதுக்கு ஏன் இவ்வளவு அவசரம்?

source : https://ta.quora.com/அகண்ட பாரத கனவு

புனித குரானின் எந்த ஒரு சுராவிலும் (அத்தியாயத்திலும்) பசுக்களையோ, காளைகளையோ கொல்ல அனுமதிக்கவில்லை?

.
அருமையான பதிவு சகோதரரே.. தங்கள் மத நல்லிணக்க என்னத்தை பாராட்ட வார்த்தைகளே இல்லை. யார் மனமும் புண்படாமல் எழுதி இருப்பது சிறப்பு.
  • இஸ்லாமிய அறிஞர்கள், இஸ்லாமிய தலைவர்கள், மன்னர்கள் என சிலர் பசு பற்றி சொன்ன விஷயங்களை ஆதாரத்தோடு பதிவு செய்து உள்ளீர்கள்.. மகிழ்ச்சி.. அதில் மாற்று கருத்தும் இல்லை, கவலையும் இல்லை, ஏனென்றால் நாம் இறைவன் குரான்-மூலம் இட்ட கட்டளைகளையும் முகம்மது ஸல் அவர்கள் ஹதீஸ் மூலம் அறிவித்த வரைமுறைகளையும் பின்பற்றுபவர்கள், அறிஞர்கள் குரானையும் ஹதீசையும் ஆதாரமாக கொண்டு பேசும் வரைதான் அவர்கள் பேச்சுக்கு மதிப்பு, அரசர்களுக்கு அதுவும் இல்லை அவர்களுக்கு மார்க கல்வி இல்லாத வரை..
  • அதோடு குரானும் முகம்மதுவும் ஸல் பசு இறைச்சி உண்பதை தடை செய்து உள்ளார்கள் என்று கூறி இருந்தீர்கள், அதற்கான ஆதாரம் குறிப்பிடவில்லை, அதாவது எந்த பகுதியில் எந்த வசனத்தில் வருகிறது என்று குறிப்பிட்டீர்கள் என்றால் நாம் மட்டுமல்ல நம்முடன் சேர்த்து பல லட்ச இஸ்லாமியர்கள் மாட்டிறைச்சி உண்பதை நிறுத்துவர், கொஞ்சம் கொஞ்சமாக இல்லை, உடனடியாக...
  • நீங்கள் பேசிய இஸ்லாமிய அறிஞர்களின் பெயர்கள் எங்களுக்கு தேவை இல்லை, ஆனால் அவர்களிடம் சென்று குரான் அல்லது ஹதீஸ்-இல் எந்த வசனம் இந்த தடையை தெளிவாக சொல்லுகிறது என்று கேட்டு பதிவு இடுங்கள் எங்களுக்கு உதவியாக இருக்கும்.. அல்லாஹ்வும் அவனது தூதரும் சொல்லி இருந்தால் இரண்டாம் கேள்விக்கு இடமே இல்லை, நிரூபித்தால் உடனே இஸ்லாமிய சமுதாயம் நிறுத்திவிடும்.. வேறு யாருடய விளக்கமும் அறிவுரையும் தேவயே இல்லை... ஃபத்துவாவும் வெளியிடபட்டு இருப்பதாக எழுதி இருக்குறீர்கள்.. குரான் ஹதிஸ்-இல் தெளிவாக குறிப்பிட்டு இருந்தால் ஃபத்துவாவிற்கு அவசியமே இல்லை என்பது தங்களுக்கு தெரிந்த விஷயம் என்று நினைக்கிறேன்..
  • மேலும் எனக்கு தெரிந்த வரை எந்த இஸ்லாமியரும் பால் கொடுக்கும் பசுவை இறைச்சிக்காக கொள்வதை நான் கண்டதும் இல்லை கேட்டதும் இல்லை.
  • மேலும் மன்னர் பாபர் பற்றிய வரிகளுக்கு தங்களுக்கு நன்றி கூறுவது ஒவ்வொரு இந்தியனுக்கும் இஸ்லாமியானுக்கும் கடமை என்று நினைக்கிறேன், நன்றிகள் பல.. மேலும் ஹுமயுன் செய்து இருக்கலாம், என்ற யூகத்தை தவிர்த்து இருக்கலாம், உறுதியாக தெரியதாவரை சர்ச்சைக்கு உரியவைகளை வெளியிடாமல் இருப்பது ஒற்றுமைக்கு வழி..
  • பசுவதை-யை இஸ்லாமியர்கள் மட்டுமே செய்கிறார்கள் என்ற வாதம் கேள்விக்கு உரியது.. பல சான்றுகளை தர முடியும் இதன் மேல்.. மேலும் சில வேத புராண வரிகள் என்ன சொல்லுகிறது பசு இறைச்சி உண்பதை பற்றி என்பதை பின் வரும் இணைப்புகலை படித்து எமது புரிதல் தவறாக இருந்தால் விளக்கவும்..    

சான்றுகள் 

  and etc etc ...