தமிழர் சமயம்
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தைஎன்நோற்றான் கொல்எனும் சொல். (குறள் 70)
விளக்கம்: மகன் தன் தந்தைக்குச் செய்யத் தக்க கைம்மாறு, இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும்.
குறிப்பு: குழந்தைகள் கடவுளின் வரம் என்பதால் அவன் என்ன தவம் செய்தானோ என்று கருத வேண்டி இருந்தது.
கிறிஸ்தவம்
"குழந்தைகள் ஆண்டவரிடமிருந்து பெற்ற சொத்து, சந்ததி அவரிடமிருந்து வெகுமதி." - (சங்கீதம் 127:3)
“தந்தையர்களே, உங்கள் பிள்ளைகளை கோபப்படுத்தாதீர்கள்; மாறாக, அவர்களை இறைவனின் பயிற்சியிலும் போதனையிலும் வளர்த்து விடுங்கள்.” - (எபேசியர் 6:4)
இஸ்லாம்
மனிதன் இறந்துவிட்டால் மூன்று விஷயங்களைத் தவிர அவனுடைய அனைத்து அமல்களும் அவனைவிட்டு துண்டிக்கப்பட்டு விடுகிறது. (அவை) நிரந்தர தர்மம், பயன்தரும் கல்வி, அவருக்காக துஆச் செய்யும் சாலிஹான குழந்தை’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
"ஏராளமான பொருள்களையும் புதல்வர்களையும் (தந்து) கொண்டு உங்களுக்கு உதவி செய்து, உங்களைத் திரளான கூட்டத்தினராகவும் ஆக்கினோம்." (ஸூரதுல் இஸ்ரா: 06)
வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைக்கிறான். தான் நாடியோருக்குப் பெண்(குழந்தை)களை வழங்குகிறான். தான் நாடியோருக்கு ஆண்(குழந்தை)களை வழங்குகிறான். அல்லது ஆண்களையும், பெண்களையும் சேர்த்து அவர்களுக்கு வழங்குகிறான். தான் நாடியோரை மலடாக ஆக்குகிறான். அவன் அறிந்தவன்; ஆற்றலுடையவன். (அல்குர்ஆன் 42 : 49)