திருக்குறளும் திருக்குர்ஆனும்

இறைவனின் திருப்பெயரால்...

குறளும் குர்ஆனும்

முன்னுரை

இதற்குமுன் பலமுறை திருக்குறளை படித்து இருக்கிறேன், சமீபமாக இஸ்லாமிய கொள்கைகளை எனது நெறியாக நான் எடுத்துக்கொண்ட பிறகு திருக்குறளை மற்றும் ஒருமுறை வாசிக்க நேர்ந்தது, அதிசயிக்க நேர்ந்தது.

ஆம் குறளின் கடவுள் கொள்கைக்கும் குரானின் கடவுள் கொள்கைக்கும் அணு அளவோ அதைவிட சிறிய அளவோ வேறுபாடு இல்லை.

எனவே இரண்டையும் ஒப்பிடு பார்க்க நினைத்தோம். இதைப்பற்றி புத்தகங்கள் ஏதும் வந்துள்ளதா என்று இணயத்தளத்தில் துழவும்பொழுது முருகன் என்பவர் எழுதிய புத்தகம் கண்ணில் பட்டது. ஆனால் அவர் முஸ்லிம் அல்லாதவர் என்பதால் இஸ்லாத்தை பற்றிய புரிதல் எந்த அளவு இருக்குமோ என்ற அச்சத்தினால் அதனை வாசிக்கும் எண்ணம் தோன்றவில்லை. மேலும் தமிழக முதல்அமைச்சராக திரு மு.கருணாநிதி அவர்கள் இருந்தபொழுது இந்த தலைப்பிலான ஆராய்ச்சிக்கு நிதி ஒதிக்கியதாக படித்தேன், அவற்றின் ஆராய்ச்சி முடிவுகளும் வெளிவந்ததாக என் அறிவுக்கு புலப்படவில்லை.

எனவே ஒப்பீடு செய்து படிக்க நாமே தொடங்கிவிட்டோம். மேலும் இரண்டு காரணங்களுக்காக நான் கற்பதை தொடராக பதிவிட முடிவு செய்து உள்ளேன், ஒன்று செய்தி பரிமாற்றதிக்காக, இரண்டு என் புரிதல் தவறாக இருந்தால் தெரிந்தவர்கள், அறிஞர்பெருமக்கள் தெளிவுபடுத்தும் வாய்ப்பு உண்டு என்பதால்.

முன்னால் முதல் அமைச்சர் கலஞர் அவர்கள் நிதி ஒதுக்கிய செய்தியின் பினூட்டத்தில் "நிச்சயமாக இது சரியான மோசடி வேலையாகத்தான் இருக்க வேண்டும். எந்த முகமதியனும் குரானை விட்டுக் கொடுக்கமாட்டான். ஆகவே இப்படி போலித்தனமாக “திருக்குறளும், திருக்குர்ஆனும்”, ஒரு தலைப்பை வைத்துக் கொண்டு, ரூ, 2, 50, 000/- (இரண்டரை லட்சம் ரூபாய்) பணம் வேறு கொடுப்பது என்ன நியாயம்?", யார் பணத்த ஆருக்கு செலவழிக்குது இந்த அரசு போன்றவைகள் இடம் பெற்று இருந்தது.

அவர் அறிந்து கொள்ள வேண்டிய உண்மை பல உள்ளது,
1) இஸ்லாத்தை ஏற்காதவரை நாமும் அவர்களில் ஒருவராக இருந்தோம்,
2) நாமும் விடுதலை போராட்டத்தில் பங்கெடுத்துள்ளோம்,
3) தமிழர்களுக்கு பிரச்னை என்ற பொழுது நாமும் மொழிப்பற்றொடு போராட்டங்களில் கலந்துகொண்டோம்,
4) நாமும் வரி கட்டுகிறோம்,
5) நாமும் இந்த சமுதாய வளர்ச்சியில் பங்கெடுத்துள்ளோம்,
6) நம்மால் அந்நிய செலவாணி பல ஆயிரம் கோடி நாம் நாட்டிற்கு இலாபம் எய்தி தருகிறோம்,
7) வட்டி-யை வாங்காததால் பெறப்படாத பணம் 75-ஆயிரம் கோடிக்கு மேல் RBI-கு லாபம், என எண்ணிலடங்கா சேவைகள் தமிழுக்கும் இந்தியாவுக்கும் எங்களால் தொடரும்..

குறளும் குர்ஆனும் 001


அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு. குறள் - 01:01

விளக்கம்: அகரம் எழுத்துகளுக்கு முதன்மை, ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை.

தமிழ் : அ, (அ - அகரம் )
ஆங்கிலம் : A, (அ - அகரம்)
ஹிந்தி : अ, (அ - அகரம் )
தெலுகு : అ, (அ - அகரம்)
அரபிக் : ا, (அலீஃப் - அகரம்)
சீனமொழி : 诶, (அ - அகரம்)
எபிரேயமொழி : א, (அலீஃப் - அகரம்)
சம்ஸ்கிருதம் : अ, (அ - அகரம்)
கிரேக்கம் : α (ஆல்ஃபா - அகரம்)

மேலும் எத்தனை மொழிகளை ஆராய்ந்தாலும் அதன் முதல் எழுத்து அகரமாகவே இருக்கிறது. எனவே அடுத்த வரியும் நிதர்சனமான உண்மையாகத்தான் இருக்க முடியும்,எனவே முழு உலகமும் ஒரே இறைவனிடம் இருந்து தோன்றியதே.

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. (அவன்) அகிலத்தைப் (படைத்துப்) பராமரிப்பவன்குர்ஆன் : 01:01

விளக்கம் : உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மயான அதாவது படைத்த இறைவனுக்கே புகழ் அனைத்தும்.

குறிப்பு : ஆதிபகவனே வணங்க தகுதியானவன் மேலும் அவனது குணங்களாக திருக்குறளில் குறிப்பிடுவதும் அல்லாஹ்வின் குணங்களாக இஸ்லாத்தில் குறிப்பிடுவதும் ஒரு வார்த்தையை இரு மொழிகளில் எழுதியது போல் உள்ளது. மேலும் விரிவான பதிவுக்கு குரல் 9-ஐ வாசிக்கவும்

குறளும் குர்ஆனும் 002


கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்குறள் - 01:02

விளக்கம்: நூல்களை கற்றவர்க்கு அக்கல்வி அறிவின் பயன் யாது? மெய்யுணர்வினை உடையானது நல்ல தாள்களைத் தொழாராயின்?

எனினும், கல்வியறிவும் நம்பிக்கையும் கொடுக்கப் பட்டவர்கள் (அதனை மறுத்து) "அல்லாஹ் எழுதியவாறு நீங்கள் உயிர் பெற்றெழும் இந்நாள் வரையில் (பூமியில்) இருந்தீர்கள். இது (மரணித்தவர்கள்) உயிர் பெற்றெழும் நாள். நிச்சயமாக நீங்கள் இதனை உறுதி கொள்ளாதவர்களாகவே இருந்தீர்கள்" என்றும், "ஆனால், அந்நாளில் (இறைவனை தொழாது) அநியாயம் செய்தவர்கள் கூறும் சாக்குப்போக்கு அவர்களுக்குப் பலனளிக்காது. அன்றி, அவர்கள் இறைவனைத் திருப்தி செய்து வைக்கவும் வழியிராது" குர்ஆன் : 30:56-57

விளக்கம் கல்வியறிவு பெற்றவர்கள் தூய இறைவனை தொழாது இருந்ததனால் மறுமையில் தீர்ப்பளிக்கப்படுவர்

குறளும் குர்ஆனும் 003


மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார் - குறள் - 01:03 

விளக்கம் அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்த நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்.

அல்லாஹ்வின் (திருப்) பொருத்தத்தைப் பெறுவதற்காகத் தன்னுடைய உயிரையே தியாகம் செய்யக்கூடியவர்களும் மனிதர்களில் உண்டு. அல்லாஹ் (இத்தகைய) அடியார்கள்மீது மிகவும் கருணையுடையவன். குர்ஆன் : 2:207
இத்தகையவர்களுக்குப் பிரதிபலன், அவர்கள் இறைவனுடைய மன்னிப்பும், நீரருவிகள் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் சுவனபதிகளும் ஆகும். அவர்கள் அங்கு என்றென்றும் தங்கிவிடுவார்கள். நன்மை செய்தவர்களின் கூலியும் நன்றே! - குர்ஆன் 3:136.

விளக்கம் இறைவனின் பொருத்தத்தை நாடி உயிரைக்கூட விட துணிந்தவர், இறைவனின் கருணையால் சுவர்கத்தில் நிலைத்து வாழ்வார்.


குறளும் குர்ஆனும் 004


வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல. - குறள் - 01:04

விளக்கம் : விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.

எவன் (இறைவனுக்கு) நன்றி செலுத்துகிறானோ அவன் தனக்கே நன்மை செய்து கொள்கிறான். எவன் நன்றியை நிராகரிக்கின்றானோ (அதனால் என் இறைவனுக்கு யாதொரு நஷ்டமுமில்லை.) நிச்சயமாக என் இறைவன் (எவருடைய) தேவையற்றவனும், மிக்க கண்ணியமானவனாகவும் இருக்கிறான்" என்று கூறுவீராக. - குர்ஆன் : 27:40.

விளக்கம் : எந்த தேவைகளுமற்ற இறைவனை பொருந்த எண்ணி நன்றி செலுத்துபவர் அவருக்கு அவரே நன்மை செய்துக்கொள்கிறார் எனவே அவருக்கு எப்பொழுதும் எங்கும் அவருக்கு துன்பம் இல்லை.

குறளும் குர்ஆனும் 005


இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. - குறள் - 01:05

விளக்கம் : இறைவனுடைய கீர்த்தியை விரும்பி அருஞ்செயல் புரிந்தவருக்கு, துனபம் சேர்க்ககூடிய இருவினைகளும் சேராது.

"... எவர்கள் அல்லாஹ்வுடைய திருப்பொருத்தத்தை விரும்புகின்றார்களோ அவர்களுக்கு இதுவே (அறஞ்செயல்களே) மிக்க நன்றாகும். இத்தகையவர்கள் நிச்சயமாக வெற்றி பெறுவார்கள்". - குர்ஆன் : 30:38
- "...அவர்களின் இறைவனிடம் அவர்களுக்குண்டு. மேலும் அவர்களுக்கு யாதொரு பயமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்". -  & 2:262.

விளக்கம் : எவர்கள் அல்லாஹ்வுடைய கீர்த்தியை விரும்புகின்றார்களோ அவர்கள் புரிவதற்கு அறஞ்செயல்கள் மிக்க நன்றாகும். இத்தகையவர்கள் நிச்சயமாக வெற்றி பெறுவார்கள், அவர்களை துன்பம் தீண்டாது.

குறளும் குர்ஆனும் 006


பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார் - குறள் - 01:06.

விளக்கம் : மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் பொறிகளை வழியாக உடைய ஐந்து அவாவினையும் அறுத்தானது மெய்யான ஒழுக்க நெறியின்கண் நின்றார் எக்காலத்தும் வாழ்வார்
 
உள்ளத்தின் மீதும் அதை வடிவமைத்ததன் மீதும் சத்தியமாக! அதன் நன்மையையும், தீமையையும் அதற்கு அவன் அறிவித்தான். அதைத் தூய்மைப்படுத்துகிறவர் வெற்றி பெற்றார். - குர்ஆன் : 91:7-10

விளக்கம் : நன்மை தீமை பிரித்து அறிவிக்க பட்ட உள்ளதை நன்மை மட்டுமே செய்து தூய்மை படுத்துகிறவர் வெற்றிபெற்றவர் முடிவில்லா சுவர்க வாழ்க்கை வாழ்வார்.

குறளும் குர்ஆனும் 007


தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது. - குறள் - 01:07.

விளக்கம் : தனக்கு ஒப்புமை இல்லாத இறைவனுடய திருவடிகளை அன்றி மற்றவைகளை பொருந்த நினைக்கின்றவர், மனக்கவலையை மாற்ற முடியாது.

(மனிதர்களே!) ஈடேற்றம் அளிக்கக்கூடிய வீட்டிற்கே இணையற்ற இறைவனான அல்லாஹ் அழைக்கிறான். (அவனுக்கு வழிப்பட்டு நடக்கும்) அவன் விரும்புகின்றவர்களை அதற்குரிய நேரான வழியிலும் செலுத்துகிறான்.. நன்மை செய்தவர்களுக்கு நன்மைதான். அதிகமாகவும் கிடைக்கும். அவர்கள் முகங்களை கவலையோ அல்லது இழிவோ சூழ்ந்துகொள்ளாது. நிச்சயமாக அவர்கள் சுவனவாசிகளே. அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.. - குர்ஆன் : 10:25 & 26

விளக்கம் : இணையற்ற இறைவனான அல்லாஹ்வை வழிபடுபவர்களை கவலை சூழ்ந்து கொள்ளாது.

குறளும் குர்ஆனும் 008


அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது. - குறள் - 01:08

விளக்கம் : அறமாகிய கடலையுடைய அந்தணனது (இறைவனுக்கு அடிபணிந்தவனது) இடம் சேர்ந்தவனல்லாது, மற்றவர்க்கு பிறவி கடலை நீந்துவது கடினமாகும்.

குறிப்பு : அந்தணன் என்பது சாதி அல்ல, பண்புப்பெயர் ஆகும், மேலும் குறள் 30 இவ்வாறு விளக்குகிறது "எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால், அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர்". மற்றும் இக்குறள் அந்தணணோடு சேர்ந்து இருப்பதை மட்டும் பொருளாக எடுத்து கொள்ளமுடியாது, மேலும் அவனது குணங்களை தன்னுள்ளே எடுத்து கொள்ளுவதையும் குறிக்கும் எனவே அந்தணணுடன் சேர்ந்து அந்தணனாக மாறுவதே முதல் பத்தியின் பொருள்

"இவர்கள் நம்பிக்கையாளர்களை (முஸ்லிம்களை) விடுத்து நிராகரிப்பவர்களையே நண்பர்களாகவும் எடுத்துக் கொண்டார்கள். இவர்கள் அவர்களிடத்தில் கண்ணியத்தை விரும்புகின்றார்களா? .." குர்ஆன் 4:139.
"நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்பட வேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாக அன்றி நீங்கள் இறந்துவிட வேண்டாம்." குர்ஆன் 3:102.
"இவ்வுலக வாழ்க்கை மயக்கக் கூடிய (அற்ப) இன்பத்தைத் தவிர வேறில்லை" - குர்ஆன் 3:185.

விளக்கம் : முஸ்லிம்களையே நண்பர்களாக எடுத்துக்கொண்டு இறைவனுக்கு வழிபட்டவர்களாக முஸ்லிம்களாகவே மரணியுங்கள். இல்லயேல் மயக்கும் இவுலக வாழ்க்கையை கடப்பது கடினமாகும்

குறிப்பு : இங்கு முஸ்லிம் என்பது சாதியல்ல, பிறப்பால் முஸ்லிமாக இருந்தும் பாழிப்பாவத்திற்கு அஞ்சாது இறைவனின் கட்டளையான அறத்தை பேணாது இருக்கும் முஸ்லிம்கள் இதில் அடக்கம் இல்லை. அந்தணன் முஸ்லிம் இரண்டுமே படைத்த உவமையற்ற ஒரே இறைவனுக்கு அடிபணிந்தவன் என்னும் ஒரே பொருள் தரக்கூடியது.

குறளும் குர்ஆனும் 009


கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை. - குறள் - 01:09

விளக்கம் : குறையுள்ள உறுப்புகளில் அதன் குணம் இருப்பதில்லை அதுபோலத்தான் எண்குணத்தை உடைய இறைவனை வணங்காத தலையும்.

(அறியாமையில் தங்களுடைய மூதாதைகளைப் பின்பற்றும்) அந்தக் இறை மறுப்பாளர்களின் உதாரணம். (அர்த்தத்தை உணராது) கூச்சலையும் ஓசையையும் மட்டும் கேட்கக் கூடியதின் (அதாவது கால்நடைகளின்) உதாரணத்தை ஒத்திருக்கின்றது. (மேலும், அவர்கள் புலன்கள் இருந்தும்) செவிடர்களாகவும், ஊமையர்களாகவும், குருடர்களாகவும் இருக்கின்றனர். ஆதலால், அவர்கள் (எதனையும்) அறிந்து கொள்ளவே மாட்டார்கள். - குர்ஆன் - 2:171
நம்பிக்கையாளர்களே! நீங்கள் குனிந்து சிரம் பணிந்து உங்கள் இறைவனை வணங்குங்கள். - குர்ஆன் 22:77

விளக்கம் : இறைவனை வணங்காது இருப்பவர்கள் உறுப்புகள் இருந்தும் அதன் குணம் அற்றவர்கள்போல், இறைவனை சிரம் தாழ்த்தி வணங்குபவர்கள் நம்பிக்கையாளர்கள் மேலும் வெற்றியாளர்கள்.

குறிப்பு : * கோளில் என்றால் மதிப்பற்ற அல்லது குறையுள்ள. 
எண்குணத்தோன் என்பதற்கு பரிமேலழகர் போன்ற சமணர் ஒருவகையிலும் பாரதி ஒருவகையிலும் பொருள் தந்து உள்ளனர் மேலும் பலரும் பலவகை பொருள் தருகின்றனர்.. "எண்குணத்தோன்" என்ற சொல்லுக்கு விளக்கம் தருபவர்களை விட வள்ளுவரே என்ன சொல்லி இருக்கிறார் என்று அறிவதே பொருத்தமாக இருக்கும். இதற்கு முன்உள்ள 8 குறல்களில் ஒவ்வொன்றிலு ஒவ்வொரு பண்புப்பெயர்களை குறிப்பிட்டே வந்துள்ளார். இஸ்லாத்தில் யாரும் கண்டிராத இறைவனை உருவமாக இஸ்லாமியர்கள் வழிபடாமல் மாறாக அவனின் பண்புபெயர்களை கொண்டு அவனை புகழ்ந்து வாங்குகிறவர்களாக இருக்கின்றனர், இவை இரண்டிர்குமான வேற்றுமை என்பது மொழி மட்டுமே.  

1. இறைவன் உலகிற்கு முதலானவன் (தலைமைக் குணம்) - ஆதிபகவன் (First cause) (அல்-அவல் : ஆதியானவன்).

 2. இறைவன் மாசற்ற அறிவுடையவன் (நுண்மைக் குணம்) - வாலறிவன் (Know-er of everything) (அல்-ஹக்கீம் : ஞானமுடையவன்).

3. இறைவன் அந்தரங்கமானவன் (பெருமைக் குணம்) - மலர்(அகம்)மிசை ஏகினான் (know-er of hidden) (அல்-பட்டின் : அந்தரங்கமானவன்).

4. இறைவன் விருப்பு வெறுப்பு அற்றவன் (சாராமைக் குணம்) வேண்டுதல் வேண்டாமை இலான் (One who is unbiased) (அஸ்-சமது : தேவையற்றவன்).

5. இறைவன் நல்வினை தீவினை அற்றவன் (மாறாமைக் குணம்) இறைவன் (Almighty) (அல்லாஹ்).

6. இறைவன் ஐம்பொறிகளையும் அடக்குபவன் (வலிமைக் குணம்) -பொறிவாயில் ஐந்தவித்தான் (Controller of the five senses) (அல்-ஹாதி : மனதை நேர்வழி செலுத்துபவன்).

7. இறைவன் உவமை இல்லாதவன் (ஒப்பின்மைக் குணம்) - தனக்குவமை இல்லாதான் (One who has no parallel) (அல்-அஹது : நிகரில்லா ஒருவன்).

8. இறைவன் அறக் கடல் ஆனவன் (எளிமைக் குணம்) - அறவாழி அந்தணன் (Sea of Virtue) (அல்-முக்கிசித் : நீதமாக அறத்தோடு நடப்பவன்) 

குறளும் குர்ஆனும் 010


பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார். - குறள் - 01:10

 விளக்கம் : பிறவியாகிய பெரிய கடலை நீந்தியேறுவர், இறைவனது அடியைச் சேருவார்; நீந்தாததவர் இறைவனடியை சேரமாட்டார்.

(இவர்களை நோக்கி) "நீங்கள் (உங்கள் வாழ்க்கையில் கஷ்டங்களைப்) பொறுமையுடன் சகித்துக் கொண்டதன் காரணமாக உங்களுக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்! (இறைவனிடமுள்ள) இறுதி வீடு மிக்க நல்லதாயிற்று" (என்று கூறுவார்கள்.).. குர்ஆன் - 13:24.

விளக்கம் : இப்பிறவியில் நேர்ந்த கஷ்டங்களையெல்லாம் பொறுமையுடன் இறைவனுக்காக பொறுத்துக்கொண்டு கடந்து சென்றவர் ஈடேற்றம் அதாவது இறைவனிடம் உள்ள அழகிய தங்குமிடம் செல்கிறார். மற்றவர் சேர்வதில்லை. - 


35 கருத்துகள்:

  1. https://thamizhkudi.in/archives/1004 வள்ளுவர் மற்றும் குறள் பற்றிய ஆய்வு செய்திகள்

    பதிலளிநீக்கு
  2. விதிப்பற்றி திருக்குரானும், திருக்குறளும்

    இறைவன் கொடுத்ததை தடுப்பவன் எவனுமில்லை.
    இறைவன் தடுத்ததை கொடுப்பவன் யாருமில்லை.
    இறைவனின் அனுமதியின்றி எதுவும் நடப்பதில்லை.
    இதை திருக்குர்ஆன்( 15 145 ) தெளிவு படக் கூறுகிறது.

    மேலும் எந்த ஆன்மாவும் ( முன்னரே ) எழுதப்பட்டிருக்கும் தவணைக்கு இணங்க அல்லாஹ்வின் அனுமதியின்றி மரணிப்பதில்லை. எவரேனும் இந்த உலகத்தின் நற்பலனை ( மட்டும் ) விரும்பினால் நாம் அவருக்கு அதிலிருந்தே வழங்கிவிடுவோம். இன்னும் எவர் மறுமையினையும், நன்மையையும் விரும்புகிறானோ அவருக்கு அதிலிருந்து வழங்குவோம். நன்றியுடையோருக்கு அதி சீக்கிரமாய் நற்கூலி கொடுக்கிறோம்.

    இதையே வள்ளுவர் தமது வான்மறையில் ஒரு கோடி பொருளை சேர்த்து ஒழுங்குப்படுத்தி வைத்திருந்தாலும் இறைவன் விதித்த வகையால் அல்லாமல் அவற்றை அனுபவிக்க முடியாது என்ற கருத்தை –

    வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
    கொடுத்தார்க்கும் துய்த்தல் அரிது

    என்ற குறளால் விளக்கப்படுகிறது.

    பதிலளிநீக்கு
  3. கஞ்சத்தனமும், ஊதாரித்தனமும்

    திருக்குர் ஆனில் ‘கஞ்சத்தனமுமாக உம்முடைய கையைக் கழுத்தில் மாட்டிக் கொள்ளாதீர். உம்முடைய வாயை முற்றிலும் விரித்து விடாதீர் ( 17 : 29 ) இதனை வள்ளுவர் கஞ்சத்தனமிக்கவன் இந்த பூமிக்கு பாரம் என்பதை –

    ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
    தோற்றம் நிலக்குப் பொறை

    என்ற குறளிலும் ஊதாரித்தனம் இல்லாமல் முறையாக செலவு செய்வது பற்றி

    ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள்
    போற்றி வழங்கும் நெறி

    என்ற குறளிலும் தெளிவாக விளக்குகிறார்.

    பதிலளிநீக்கு
  4. தீயசெயல் பற்றி திருக்குரானும், திருக்குறளும்

    மனிதர்களே : உங்களுடைய அடாத செயல்கள் ( தீய செயல்கள் ) உங்களுக்கே கேடாக முடியும் குரான் ( 10 : 23 ) இதனை வள்ளுவர்

    தீயவை தீய பயத்தலால் தீயவை
    தீயினும் அஞ்சப் படும்

    என்ற குறளில் தீயைக் காட்டிலும் தீயவை கொடுமையானது என்று கூறுகிறார்.

    பதிலளிநீக்கு
  5. புறங்கூறுதல் பற்றி குரானும், குறளும்

    பிறர் குறைகளை நீங்கள் துருவித் துருவி கொண்டிராதீர். அன்றியும் சிலர் சிலரைப் பற்றியும் புறம் பேச வேண்டாம் 50 : 2(16) இது பற்றி திருக்குறள் கீழ்வரும் குறள்களில் தெளிவாக விளக்குகிறது. பிறர் குறைகளைக் காண்பதுபோல் தம் குறைகளைக் கண்டு உணர்ந்தால் இந்த மண்ணுலகில் தீதில்லை என்பதை –

    ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
    தீதுண்டா மன்னும் உயிர்க்கு ?

    என்ற குறளிலும், ஒருவன் தர்மம் என்னும் சொல்லைக்கூட சொல்லாமல் தீயவை செய்து ஒழுகினாலும் அவன் புறங்கூறமாட்டான் என்று நற்பெயர் எடுப்பதே நல்லது என்பதை –

    அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
    புறங்கூறான் என்றல் இனிது

    இக்குறளிலும் விளக்குகிறார்.

    பதிலளிநீக்கு
  6. இன்னா செய்யாமை பற்றி இறைமறையும் இனிய குறளும் :

    இறைமறையில், நன்மையும், தீமையும் சம்மாகமாட்டா. நீங்கள் ( தீமையை ) தன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்ளுங்கள். அப்பொழுது யாருக்கும் உமக்கும் இடையே பகைமை இருந்ததோ அவர் நண்பரே போல் ஆகிவிடுவார். 41:5(34) இதை திருக்குறள் நமக்கு தீங்கு செய்பவரை தண்டிப்பது அவர் வெட்கம் அடையும்படி அவருக்கு நல்லதைச் செய்தலே ஆகும். இதனால் அவர் தாம் செய்த செயலுக்கு வருந்தி வெட்கப்பட்டு திருந்துவார் என்பதை –

    இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
    நன்னயம் செய்து விடல்

    என்ற குறளில் விளக்குகிறார்.

    பதிலளிநீக்கு
  7. சக்கராத்’ பற்றி திருக்குறள்

    எல்லா மனிதருக்கும், இறக்கும் தருவாயில் ‘சக்கராத்’ என்ற நிலை ஏற்படும். அந்த நிலை வருவதற்கு முன்பாக எல்லாம் வல்ல இறைவன்பால் ஈமான் கொண்டு நல்வினை ஆற்றிட வேண்டும் என்று அறிவுறுத்துகிறது திருக்குரான். இதனையே திருவள்ளுவார் நாக்கு பேசமுடியாமல் செத்துவிக்கும் முன்பே நல்ல செயல்களை செய்திடல் வேண்டும் என்ற கருத்து மேலோங்கி கீழ்வரும் குறளில் சொல்லுகிறார்.

    நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
    மேற்சென்று செய்யப் படும்

    பதிலளிநீக்கு
  8. எல்லாப்புகழும் இறைவனுக்கே :

    எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று திருக்குர்ஆன் ‘அல்ஹம்துலில்லாஹ்’ என்ற வாக்கியத்தின் மூலம் இயம்புகிறது. இதனை திருவள்ளுவர் தலைமைக் குணங்களுடைய இறைவனின் மெய்யான புகழை இடைவிடாது அன்போடு சொல்லுபவர்பால் ‘இருள்சேர் இருவினையும் சேரா’என்பதை சொல்லுவது மூலம் எல்லாப் புகழும் இறைவனுக்கே என்பதை வலியுறுத்துகிறது.

    இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
    பொருள்சேர் புகழ்பரிந்தோர் மாட்டு

    என்ற குறளில் தெளிவுபடக் கூறுகிறார்.

    பதிலளிநீக்கு
  9. குறளும் குரானும் ஒப்பீடு ஆய்வு https://www.seu.ac.lk/researchandpublications/symposium_fia/2016/Kural-kuran.pdf

    பதிலளிநீக்கு
  10. திருக்குறள் & பைபிள் - கடவுள் வாழ்த்துhttps://charlesmsk.blogspot.com/2018/05/blog-post_18.html

    பதிலளிநீக்கு
  11. திருக்குறள் & பைபிள் - கடவுள் வாழ்த்து
    திருக்குறளின் முதல் அதிகாரமான கடவுள் வாழ்த்து இறைவனை போற்றி புகழ்கிறது. இந்த பத்து குறள்களோடு பொருந்தும் பைபிள் வசனங்களை இந்த பதிவில் காணலாம். வள்ளுவர் இறைவனை கண்ணோக்கும் விதமும் அதற்கு இணையான பைபிள் வசனங்களும் நிச்சயமாக மெய் சிலிர்க்கச் செய்கின்றன. குறள்களின் விளக்கத்திற்கு சாலமன் பாப்பையா உரையும், மு.வரதராசனார் உரையும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
    அதிகாரம் 1: கடவுள் வாழ்த்து
    (அறத்துப்பால், பாயிரவியல்)

    குறள் 1:
    அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
    பகவன் முதற்றே உலகு.

    சாலமன் பாப்பையா உரை:
    எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; அது போல உலகம் கடவுளில் தொடங்குகிறது.

    பைபிள் வசனம்:
    நான் அல்பாவும், ஓமெகாவும் ஆதியும் அந்தமுமாய் இருக்கிறேன் - வெளிப்படுத்தின விசேசம் 1:8

    விளக்கம்:
    பைபிளின் இறுதி நூலான வெளிப்படுத்தின விசேசம் கிரேக்க மொழியில் எழுதப்பட்டது. கிரேக்க மொழியின் முதல் எழுத்து அல்பா, இறுதி எழுத்து ஒமெகா. இயேசு தன்னை அல்பா ஒமெகாவோடு ஒப்பிட்டு சிருஷ்டியின் முதலும் முடிவுமாய் தான் இருப்பதை நினைவு கூறுகிறார்.

    குறள் 2:
    கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
    நற்றாள் தொழாஅர் எனின்.

    சாலமன் பாப்பையா உரை:
    தூய அறிவு வடிவானவனின் திருவடிகளை வணங்காதவர், படித்ததனால் பெற்ற பயன்தான் என்ன?

    பைபிள் வசனம்:
    கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம் - நீதிமொழிகள் 9:10

    பதிலளிநீக்கு
  12. குறள் 3:
    மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
    நிலமிசை நீடுவாழ் வார்.

    சாலமன் பாப்பையா உரை:
    மனமாகிய மலர்மீது சென்று இருப்பவனாகிய கடவுளின் சிறந்த திருவடிகளை எப்போதும் நினைப்பவர் இப்பூமியில் நெடுங்காலம் வாழ்வர்.

    பைபிள் வசனம்:
    கர்த்தருக்கு பயப்படுதல் ஆயுசுநாட்களை பெருகப்பண்ணும் - நீதிமொழிகள் 10:27

    குறள் 4:
    வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
    யாண்டும் இடும்பை இல.

    சாலமன் பாப்பையா உரை:
    எதிலும் விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை மனத்தால் எப்போதும் நினைப்பவருக்கு உலகத் துன்பம் ஒருபோதும் இல்லை.

    பைபிள் வசனம்:
    கர்த்தரை தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது - நீதிமொழிகள் 34:10

    பதிலளிநீக்கு
  13. குறள் 5:
    இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
    பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

    சாலமன் பாப்பையா உரை:
    கடவுளின் மெய்மைப் புகழையே விரும்புபவரிடம் அறியாமை இருளால் வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டும் சேருவதில்லை.

    பைபிள் வசனம்:
    நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் - யோவான் 8:12

    குறள் 6:
    பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
    நெறிநின்றார் நீடுவாழ் வார்.

    மு.வரதராசனார் உரை:
    ஐம்பொறி வாயிலாக பிறக்கும் வேட்கைகளை அவித்து இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்.

    பைபிள் வசனம்:
    மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள்; ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள் - ரோமர் 8:13

    விளக்கம்:
    பரிசுத்த ஆவியான இறைவனின் துணை கொண்டு சரீரத்தின் இச்சையான செயல்களை அழித்தால் பிழைப்போம். அவ்வாறன்றி, மாம்ச இச்சைகளில் நிலைத்திருந்தால் மரணம் உண்டாகும் என இவ்வசனம் கூறுகிறது.

    பதிலளிநீக்கு
  14. குறள் 7:
    தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
    மனக்கவலை மாற்றல் அரிது.

    சாலமன் பாப்பையா உரை:
    தனக்கு இணையில்லாத கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர்க்கே அன்றி, மற்றவர்களுக்கு மனக்கவலையைப் போக்குவது கடினம்.

    பைபிள் வசனம்:
    நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாயிருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக் கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் - மத்தேயு 11:29

    குறள் 8:
    அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
    பிறவாழி நீந்தல் அரிது.

    சாலமன் பாப்பையா உரை:
    அறக்கடலான கடவுளின் திருவடிகளை சேர்ந்தவரே அல்லாமல் மற்றவர் பிறவியாக கடலை நீந்திக் கடப்பது கடினம்.

    பைபிள் வசனம்:
    நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலே அல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான் - யோவான் 14:6

    குறள் 9:
    கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
    தாளை வணங்காத் தலை.

    மு.வரதராசனார் உரை:
    கேட்காதசெவி, பார்க்காத கண் போன்ற எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம்.

    பைபிள் வசனம்:
    கண்களிருந்தும் குருடராயிருக்கிற ஜனத்தையும் காதுகளிருந்தும் செவிடராய் இருக்கிறவர்களையும் புறப்பட்டு வரப்பண்ணுங்கள் - ஏசாயா 43:8

    விளக்கம்:
    கடவுளை அறியாத மக்கள் கண்களுள்ள குருடராகவும், காதுகளுள்ள செவிடராகவும் உள்ளனர் என இவ்வசனம் குறிப்பிடுகிறது.

    பதிலளிநீக்கு
  15. குறள் 10:
    பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
    இறைவன் அடிசேரா தார்.

    மு.வரதராசனார் உரை:
    இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது.

    பைபிள் வசனம்:
    நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலே அல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான் - யோவான் 14:6

    ------------------------------------------------------

    குறிப்பு: திருக்குறள் கிறிஸ்தவஞ் சார்ந்த இலக்கியம் என எடுத்துக்கூற இயற்றப்பட்ட பதிவு அல்ல இது. மாறாக, திருக்குறளுக்கும் பைபிளுக்கும் உள்ள ஒரு சில ஒற்றுமைகளே இந்த பதிவில் பதிக்கப்பட்டுள்ளன.

    https://charlesmsk.blogspot.com/2018/05/blog-post_18.html

    பதிலளிநீக்கு
  16. எபிரேய சாலமோன் vs தமிழ் வள்ளுவர் https://xavi.wordpress.com/2008/02/22/valluvar_solomon/

    பதிலளிநீக்கு
  17. இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
    நன்னயம் செய்து விடல்.

    நீதி மொழி : 25 : 21,22 ல் சாலமோன் இதையே, எதிரி பசியோடிருந்தால் அவனுக்கு உண்ணக் கொடு, தாகத்தோடு இருந்தால் குடிக்கத் தண்ணீர் கொடு. என்கிறார். இவ்வாறு செய்வதால் நீ அவன் தலையில் எரி தழலைக் குவிப்பாய்.

    புறம் தூய்மை நீரான் அமையும், அகம்தூய்மை
    வாய்மையால் காணப் படும்.

    இந்தக் குறளும், நீ.மொ 27: 19 – ல் சாலமோன் குறிப்பிடும்,
    ” நீரில் ஒருவர் தம் முகத்தைக் காண்பார், தம் உள்ளத்தில் ஒருவர் தம்மைக் காண்பார் ”
    என்பதும் ஒத்த சிந்தனையைச் சொல்கின்றன.

    படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்
    மாண்பயன் எய்தல் அரிது.

    – தகுதிடையவரின் அன்புக்குப் பாத்திரமாக இருப்பினும், சோம்பலுடையவர்கள் பெருமை எனும் பயனை அடைவது அரிதாகும். எனும் குறளும்

    நீ.மொ. 10 :4 , வேலை செய்யாத கை வறுமையை வருவிக்கும், விடாமுயற்சியோரின் கையோ செல்வத்தை உண்டாக்கும்.
    நீ.மொ. 13 :14 , சோம்பேறிகள் உண்ண விரும்புகிறார்கள் உணவோ இல்லை
    நீ.மொ 20.4 , சோம்பேறி பருவத்தில் உழுது பயிரிட மாட்டார், அவர் அறுவடைக்காலத்தில் விளைவை எதிர் பார்த்து ஏமாறுவார்.
    என்றெல்லாம் சோம்பேறிகளின் நிலையை அழகாக வெளிப்படுத்துகிறார். அதிலும் குறிப்பாக நீ.மொ. 19:24 ல், சோம்பேறி உண்கலத்தில் கையை இடுவார், ஆனால் அதை வாய்க்குக் கொண்டு போக சோம்பலடைவார். என்று மிகைப்படுத்தி முத்தாய்ப்புக் கருத்துக்களை வைக்கிறார்.

    பதிலளிநீக்கு
  18. வேலொடு நின்றான் இடுவென் றுதுபோலும்
    கோலோடி நின்றான் இரவு.

    ஆட்சிக்கோல் ஏந்தியிருப்பவர்கள் தமது குடிமக்களிடம் அதிகாரத்தைக் காட்டிப் பொருளைப் பறிப்பது, வேல் ஏந்திய கொள்ளைக் காரனின் மிரட்டலைப் போன்றது.

    வள்ளுவரின் இதே கருத்து ,

    (நீ. மொ 28:15) கொடுங்கோல் மன்னன் ஏழைக்குடிமக்களுக்கு முழக்கமிடும் சிங்கமும், இரைதேடி அலையும் கரடியும் போலாவான்.

    (நீ.மொ. 28:16 ) அறிவில்லாத ஆட்சியாளன் குடிமக்களை வதைத்துக் கொடுமைப் படுத்துவான்.

    ( நீ.மொ. 29:4 ) நியாயம் வழங்குவதில் அரசர் அக்கறை காட்டினால் நாடு செழிக்கும். அவர் வரி சுமத்துவதில் அக்கறை காட்டினால் நாடு பாழாய்ப் போகும்.

    என்றெல்லாம் சாலமோன் வாயால் கூறப்பட்டிருக்கிறது.

    தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
    மன்னுயிர்க் கெல்லாம் இனிது

    – பெற்றோரைக் காட்டிலும் பிள்ளைகள் அறிவில் சிறந்து விளங்கினால், அது பெற்றோருக்கு மட்டுமேயன்றி உலகில் வாழும் அனைவருக்கும் அக மகிழ்ச்சி தருவதாகும்.

    இதை சாலமோன் மிகச் சுருக்கமாக, (நீ.மொ. 10:1) – ஞானமுள்ள பிள்ளைகள் தம் தந்தையை மகிழ்விக்கின்றனர். அறிவற்ற மக்களோ தம் தாய்க்குத் துயரம் வருவிக்கின்றனர் எனக்குறிப்பிட்டு, பின்

    (நீ.மொ 23 : 25 ) – இல், நீ உன் தந்தையையும் தாயையும் மகிழ்விப்பாயாக, உன்னைப் பெற்றவளைக் களிகூரச் செய்வாயாக என்று அறிவுரையும் வழங்குகிறார்.

    பதிலளிநீக்கு
  19. மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை
    என்நோற்றான் கொல்எனும் சொல்.( 70 )

    – ஆஹா, இவனைப் பிள்ளையாகப் பெற்றது இவன் தந்தை பெற்ற பேறு என்று ஒரு மகன் புகழப்படுவது தான், அவன் தன்னுடைய தந்தைக்குச் செய்யக் கூடிய கைம்மாறு எனப்படும்.

    ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகனை
    சான்றோன் எனக்கேட்ட தாய்
    – நல்ல மகனைப் பெற்றெடுத்தவள் என்று ஊரார் பாராட்டும் பொழுது அவனைப் பெற்றபொழுது அடைந்த மகிழ்ச்சியைவிட அதிக மகிழ்ச்சியை அந்தத் தாய் அடைகிறாள்

    போன்ற குறள்களைக் கூட இங்கே குறிப்பிடலாம்.
    அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
    அவாவுண்டேல் உண்டாம் சிறிது.
    ( 1075 )

    – தாங்கள் விரும்புவது கிடைக்கும் என்ற நிலையேற்படும் போது கீழ்மக்கள், தங்களை ஒழுக்கமுடையவர் போல காட்டிக் கொள்வார்கள். மற்ற சமயங்களில் அவர்கள் பயத்தில் காரணமாக மட்டுமே ஓரளவு ஒழுக்கமுள்ளவர்களாக நடந்து கொள்வார்கள்.

    நீ.மொ. 10 :13 இதே கருத்தைச் சொல்கிறது.
    அந்தனர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
    நின்றது மன்னவன் கோல் ( 543 )

    பதிலளிநீக்கு
  20. ஓர் அரசின் செங்கோன்மை தான் அறவோன் நூல்களுக்கும் அறவழிச் செயல்களுக்கும் அடிப்படையாக அமையும்

    (நீ. மொ. 20.8 ) மன்னன் நீதி வழங்கும் இருக்கையில் வீற்றிருக்கும் போது, தன் பார்வையாலேயே தீமையான யாவற்றையும் சலித்துப் பிரித்து விடுவான் என்கிறார் சாலமோன்.
    களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
    வீயா விழுமம் தரும் (284 )

    களவு செய்வதில் ஒருவனுக்கு ஏற்படும் தணியாத தாகம், அதனால் உருவாகும் விளைவுகளால் தீராத துன்மத்தை உண்டாக்கும்.

    ( நீ.மொ. 21 :7 ) பொல்லார் நேர்மையானதைச் செய்ய மறுப்பதால், அவர்களது கொடுமை அவர்களை பாழடித்து விடும்.

    அளவறிந்தார் நெஞ்சத்து அறம்போல நிற்கும்
    களவறிந்தார் நெஞ்சில் கரவு ( 288 )

    நேர்மையுள்ளவன் நெஞ்சம் அறவழியில் செல்லும்; கொள்ளையடிப்போர் நெஞ்சமோ குறுக்கு வழியான வஞ்சக வழியில் செல்லும்.

    (நீ.மொ. 12 : 20 ) சதித்திட்டம் வகுப்போர் தம்மையே ஏமாற்றிக் கொள்வர்; பொது நலத்தை நாடுவோர் மகிழ்ச்சியோடிருப்பர்.
    (நீ.மொ 12 : 17 ) உண்மை பேசுவோர் நீதியை நிலை நாட்டுவர், பொய்யுரைப்போரோ வஞ்சகம் நிறைந்தோர்.

    இனிய உளவாக இன்னாத கூறல்
    கனியிருப்பக் காய்கவர்ந் தற்று. ( 100 )

    -இனிய சொற்கள் இருக்கும் போது அவற்றை விடுத்து கடுமையாகப் பேசுவது, கனிகளை ஒதுக்கி விட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் சமமாகும்.

    (நீ.மொ : 15:1 ) கனிவான மறுமொழி கடுஞ்சினத்தையும் ஆற்றிவிடும்; கடுஞ்சொல்லோ சினத்தை எழுப்பும்.

    பதிலளிநீக்கு
  21. பேராண்மை என்பதறுகண் ஒன்றுற்றக் கால்
    ஊராணமை மற்றதன் எஃகு ( 773 )

    – பகைவர்க்கு அஞ்சாத வீரம் பெரும் ஆன்மை என்று போற்றப்படும். அந்தப் பகைவர்க்கு ஒரு துன்பம் வரும்போது அதைத் தீர்க்க உதவிடுவது ஆண்மையின் உச்சம் எனப் போற்றப்படும்.

    ( நீ.மொ. 25 : 21 ) – எதிரி பசியாய் இருந்தால் அவனுக்கு உணவு கொடு, தாகமாயிருந்தால் குடிக்கக் கொடு.

    பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
    வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல். ( 44 )

    – பழிக்கு அஞ்சாமல் சேர்த்த பொருள் கணக்கின்றி இருப்பினும் அதைவிட, பழிக்கு அஞ்சிச் சேர்த்த பொருளைப் பகுத்து உண்ணும் பண்பிலே தேன் வாழ்க்கையின் ஒழுக்கமே இருக்கிறது.

    ( நீ.மொ. 22:9 ) கருணை உள்ளவன் தம் உணவை ஏழைகளோடு பகிர்ந்து உண்பான், அவரே ஆசி பெற்றவர்.

    பதிலளிநீக்கு
  22. அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
    உயிர்செகுத்து உண்ணாமை நன்று ( 259 )

    – நெய் போன்ற பொருட்களைத் தீயிலிட்டு ஆயிரம் வேள்விகளை நடத்துவதை விட உண்பதற்காக ஓர் உயிரப் போக்காமலிருப்பது உயர்ந்தது.

    ( நீ.மொ. 21:3 ) – பலி செலுத்துவதை விட நேர்மையும் நியாயமுமாக இருப்பதே ஆண்டவருக்குப் உவப்பளிக்கும்.

    இந்தக் குறள் அப்படியே அதன் பொருளை பிரதிபலிக்காவிட்டாலும், பலி செலுத்துவதை விடச் சிறந்தது நேர்மை நியாயம் என்று சாலமோன் குறிப்பிடுகிறார், வள்ளுவர் அதை மிருக வதைக்காக பயன் படுத்துகிறார்.

    கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
    மாடல்ல மற்றை யவை ( 400 )

    – கல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும், அதற்கொப்பான சிறப்பான செல்வம் வேறு எதுவும் இல்லை.

    ( நீ.மொ .16:16 ) பொன்னை விட ஞானத்தைப் பெறுவதே மேல், வெள்ளியை விட உணர்வைப் பெறுதலே மேல்.
    ( நீ.மொ 3 : 13 ) – இலும், மேற்கூறிய பொருளே கூறப்படுகிறது.
    (நீ.மொ : 8 : 11 ) பவளத்திலும் ஞானமே சிறந்தது, நீங்கள் விரும்புவது எதுவும் அதற்கு நிகராகாது.

    இந்தக் குறள் சாலமோனின் செய்தியை அப்படியே சுமக்கிறது, தரம் குறையாமல்.

    பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற
    சிலசொல்லல் தேற்றாதவர் ( 649 )

    – குறையில்லாத சில சொற்களைக் கொண்டு தெளிவான விளக்கம் தந்திட இயலாதவர்கள், பல சொற்களைத் திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருப்பார்கள்.

    ( நீ. மொ : 17: 27 ) தம் நாவைக் காத்துக் கொள்பவரே அறிவாளி, தம் உணர்ச்சிகளை அடக்குபவரே மெய்யறிவாளர்.

    நாவடக்கம் பற்றி சாலமோன் மேலும் நிறைய விளக்கங்கள் தருகிறார்,

    (நீ.மொ 17 : 28 ) பேசாதிருந்தால் மூடனும் ஞானமுள்ளவனாய் கருதப் படுவான், தன் வாயை மூடிக் கொள்பவன் அறிவுள்ளவன் எனப்படுவான்.

    (நீ.மொ 17 : 14 ) வாக்குவாதத்தைத் தொடங்குவது மதகைத் திறந்து விடுதல் போலாகும்: வாக்குவாதம் மேலும் வளரும் முன் அதை நிறுத்திவிடு.
    ( நீ. மொ 18 : 7 ) மதிகேடர் பேசத்துவங்கினால் வாக்குவாதம் பிறக்கும், அவரது பேச்சு அவருக்கு அடி வாங்கித் தரும்.
    ( நீ. மொ 18 : 20 ) ஒருவர் நாவினால் எதை விதைக்கிறாரோ அதையே உண்பர் : தம் பேச்சின் விளைவை அவர் துய்த்தாக வேண்டும்.
    (நீ.மொ 18 : 21 ) வாழ்வதும் நாவாலே, சாவதும் நாவாலே; வாயாடுவோர் பேச்சின் பயனைத் துய்ப்பர்.

    பதிலளிநீக்கு
  23. வகையறிந்து வல்லமை வாய்சேரார் சொல்லின்
    தொகையறிந்த தூய்மை யவர் ( 721 )

    – சொற்களை அளவறிந்து உரைத்திடும் தூயவர்கள் அவையிலிருப்போரின் வகையறியும் ஆற்றல் உடையவராயிருப்பின் பிழை நேருமாறு பேச மாட்டார்கள்

    எனும் குறளும் இங்கே ஒப்பிடத் தக்கதே.

    செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை
    உள்ளறிவான் உள்ளம் கொளல்


    ( நீ.மொ : 15 :22 ) எண்ணிப் பாராமல் செய்யும் செயல் தோல்வியடையும், பலர் திட்டமிட்டுச் செய்யும் செயல் வெற்றியடையும்.
    ( நீ.மொ 19 : 2 ) எண்ணிப் பாராமல் செயலில் இரங்குவதால் பயனில்லை, பொறுமையின்றி நடப்பவர் இடறி விழுவார்.

    வான்உயர் தோற்றம் எவன்செய்யும் தன்நெஞ்சம்
    தான்அறி குற்றப் படின் ( 272 )

    – தன் மனத்திற்குக் குற்றம் என்று தெரிந்தும்கூட அதைச் செய்பவன், துறவுக் கோலத்தால் அடையும் பயன் ஒன்றுமில்லை

    ( நீ.மொ 19 :1 ) முறைகேடாய் நடக்கும் செல்வரை விட மாசற்றவராய் இருக்கும் ஏழையே மேல்.

    காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றும்
    நாமம் கெடக்கெடும் நோய் ( 360 )


    – விருப்பு வெறுப்பு, அறியாமை இவை இல்லாதவர்களை துன்பம் அண்டாது

    நாள்தொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
    நாள்தொறும் நாடு கெடும் ( 553 )

    – ஆட்சியினால் விளையும் நன்மை தீமைகளை நாள்தோறும் ஆராய்ந்து அவற்றிற்குத் தக்கவாறு நடந்துகொள்ளாத அரசு அமைந்த நாடு சீர்குலைந்து போய்விடும்.
    ( நீ.மொ : 29: 4 ) நேர்மையானவன் ஆட்சி அமைத்தால் மக்கள் மகிழ்ச்சியோடிருப்பர், பொல்லார் ஆட்சி செலுத்தினால் அவர்கள் புலம்பிக் கொண்டிருப்பர்.
    ( நீ. மொ 29 :12 ) ஆட்சி செலுத்துகிறவன் பொய்யான செய்திகளுக்கு செவிகொடுக்கிறவராயின், அவருடைய ஊழியரெல்லாம் தீயவர் ஆவார்.
    ( நீ.மொ 14 : 34 ) நேர்மையுள்ள நாடு மேன்மை அடையும்.

    புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்
    நன்கு செலச் சொல்லுவார் ( 719 )

    – நல்லோர் நிறந்த அவையில் மனதில் பதியும்படி கருத்துக்களை சொல்லும் வல்லமை பெற்றோர், அறிவற்ற பொல்லாதோர் உள்ள அவையில் அறவே பேசாமலிருப்பதே நலம்.

    ( நீ. மொ : 16 :19 ) – மேட்டிமையானவர்களோடு கொள்ளையடித்த பொடுளை பகிர்ந்து கொள்வதை விட, மனத் தாழ்ச்சியோடு சிறுமைப்பட்டவர்களோடு கூடி இருப்பது நலம்.

    பதிலளிநீக்கு
  24. இந்த குறளும், நேரடியான பொருளைச் சொல்லவில்லை எனினும், இதுவும் அதனை ஒத்த ஒரு நேர் சிந்தனையே.

    பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
    பெருமிதம் ஊர்ந்து விடல் ( 979 )

    – ஆணவமின்றி அடக்கமாக இருப்பது பெருமை எனப்படும், ஆணவத்தின் எல்லைக்கே சென்றுவிடுவது சிறுமை எனப்படும்

    ( நீ. மொ : 22:9 ) – கருணை நிறைந்தவர் தம் உணவை ஏழைகளோடு பகிர்ந்து உண்பர், அவரே ஆசி பெற்றவர்.

    தகுதி எனவொன்று நன்றே பகுதியால்
    பாற்பட்டு ஒழுகப் பெறின் ( 111 )

    – பகைவர், அயலோர், நண்பர் எனப்பகுத்துப் பார்த்து ஒரு தலைச் சார்பாக நிற்காமல் இருத்தலே நன்மை தரக்கூடிய நடுவு நிலமை எனும் தகுதியாகும்.

    ( நீ.மொ: 28 : 21 ) – ஓரவஞ்சனை காட்டுவது நல்லதல்ல.

    அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்
    இன்சொல் இழுக்குத் தரும் ( 911 )

    – அன்பே இல்லாமல் பொருள் திரட்டுவதையே குறிக்கோளாகக் கொண்ட பொதுமகளிர் இனிமையாகப் பேசுவதை நம்பி ஏமாறுபவர்களுக்கு இறுதியில் துன்பமே வந்து சேரும்.

    (நீ.மொ : 2:16) ஞானம் உன்னை கற்பு நெறி தவறிவளிடமிருந்தும், தேனொழுகப் பேசும் விலைமகளிடமிருந்தும் விலகியிருக்கச் செய்யும்
    (நீ.மொ : 2:18) அவளது வீடு சாவுக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கிறது, அவளின் வழிகள் இறந்தோரிடத்துக்குச் செல்கின்றன.
    (நீ.மொ : 2:19) அவளிடம் செல்லும் எவனும் திரும்பி வருவதேயில்லை; வாழ்வெனும் பாதையை அவர்கள் மீண்டும் அடைவதேயில்லை.
    (நீ.மொ : 6:24) (அறிவுரை, ) உன்னை விலைமகளிடமிருந்தும், தேனொழுகப் பேசும் பரத்தையிடமிருந்தும் விலகியிருக்கச் செய்யும்.

    பதிலளிநீக்கு
  25. பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர்
    நயந்தூக்கி நள்ளா விடல்.( 912 )

    பொருள்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
    ஏதில் பிணந்தழீஇ அற்று ( 913 )

    பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள்
    ஆயும் அறிவி நவர் ( 914 )

    பொது நலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின்
    மாண்ட அறிவி நவர் ( 915 )

    தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்
    புன்னலம் பாரிப்பார் தோள் ( 916 )

    நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வார் பிறநெஞ்சிற்
    பேணிப் புணர்பவர் ( 917 )

    ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப
    மாய மகளிர் முயக்கு ( 918 )

    வரைவிலா மாணிழையார் மெந்தோள் புரையிலாப்
    பூரியர்கள் ஆழும் அளறு ( 919 )

    இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
    திருநீக்கப் பட்டார் தொடர்பு. ( 920 )

    0

    உட்கப் படாஅர் ஒளியிழப்பார் எஞ்ஞான்றும்
    கட்காதல் கண்டொழுகுவார் ( 921 )

    – மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர்கள் தமது சிறப்பை இழப்பது மட்டுமல்ல, மாற்றாரும் அவர்களைக் கண்டு அஞ்ச மாட்டார்.

    உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்
    எண்ணப் படவேண்டா தார் ( 922 )

    – மது அருந்தக் கூடாது, சான்றோரின் நன்மதிப்பு தேவையில்லை என்போர் மட்டும் அருந்தலாம்.

    நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்
    பேணாப் பெருங்குற்றத் தார்க்கு ( 924 )

    – மது மயக்கம் எனும் வெறுக்கத்தக்க பெருங்குற்றத்திற்கு ஆளாகியிருப்போரின் முன்னால் நாணம் என்று சொல்லப்படும் நற்பண்பு நிற்காமல் ஓடிவிடும்.

    ( கள்ளுண்ணாமையில் வள்ளுவர் – குறள்கள் 930 வரை )

    பெரும்பாலான அறிவுரைகள் நீதிமொழிகளில் காணப்படுகின்றன.

    சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
    வெல்லுவாஞ்சொல் இன்மை அறிந்து ( 645 )

    – இந்தச் சொல்லை இன்னொரு சொல் வெல்லாது என உணர்ந்த பிறகே அந்தச் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்

    ( நீ.மொ : 25 :8 ) ஏதோ ஒன்றைப் பார்த்தவுடன் வழக்கு மன்றத்துக்குப் போகாதே : நீ கூறுவது தவறென்று வேறொருவர் காட்டிவிட்டால் அப்போது நீ என்ன செய்வாய் ?
    ( நீ. மொ 25 : 11 ) தக்க வேளையில் சொன்ன ஒரு சொல், வெள்ளித் தட்டில் வைத்த பொற்கனிக்குச் சமம்.

    அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
    அஃதறி கல்லா தவர்.( 427 )

    – ஒரு விளைவுக்கு எதிர்விளைவு எப்படி இருக்குமென அறிவுடையவர்கள் தான் சிந்திப்பார்கள்; அறிவில்லாதவர்கள் சிந்திக்க மாட்டார்கள்.

    ( நீ.மொ: 27:12 ) எதிரில் வரும் இடரைக் கண்டதும் விவேகி மறைந்து கொள்வான், அறிவற்றோர் அதன் எதிரே சென்று கேட்டுக்கு ஆளாவர்.

    எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
    எண்ணுவம் என்பது இழுக்கு ( 467 )

    – நன்றாக சிந்தித்த பின்பே செயலில் இறங்க வேண்டும், இறங்கியபின் சிந்திக்கலாம் என்பது தவறு.

    என்னும் குறள் கூட இந்த நீதி மொழியோடு ஒப்பிடத் தகுந்ததே.

    தக்கார் தகவிலர் என்பது அவரவர்
    எச்சத்தாற் காணப் படும் (114 )

    – ஒருவர் நேர்மையானவரா இல்லையா என்பதை அவருக்குப் பின் எஞ்சி நிற்கப் போகும் புகழ்சொல்லைக் கொண்டோ அல்லது பழிச் சொல்லைக் கொண்டோ தான் நிர்ணயிக்கப்படும்.

    ( நீ.மொ : 20 :7 ) எவர் களங்கமற்ற நேர் வாழ்க்கை நடத்துகிறாரோ, அவருடைய பிள்ளைகள் அவர் காலத்துக்குப் பின் நல்ல பெயர் பெறுவார்கள்.

    அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
    என்னுடைய ரேனும் இலர் ( 430 )

    – அறிவு இல்லாதவர்களுக்கு வேறு எது இருந்தாலும் பெருமையில்லை; அறிவு உள்ளவர்களுக்கு வேறு எது இல்லாவிட்டாலும் சிறுமை இல்லை.

    ( நீ.மொ: 3 : 35 ) ஞானமுள்ளோர் தங்களுக்குள்ள பெரும் மதிப்பைப் பெறுவார்கள், அறிவிலிகளோ இழப்பார்கள்.

    பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
    சுருக்கத்து வேண்டும் உயர்வு ( 963 )

    – உயர்ந்த நிலை வரும்போது அடக்க உணர்வும் அந்த நிலை மாறிவிட்ட சூழலில் யாருக்கும் அடிமையாக அடங்கி நடக்காத மான உணர்வும் வேண்டும்.

    களவினால் ஆகிய ஆக்கம் அளவுஇறந்து
    ஆவது போலக் கெடும் ( 283 )

    கொள்ளையடித்துப் பொருள் குவிப்பது, முதலில் பெரிதாகத் தோன்றினாலும், அந்தச் செயல் ஏற்கனவே இருந்த செல்வத்தையும் அடித்துக் கொண்டு போய்விடும்.

    ( நீ. மொ ; 20 :17 ) வஞ்சித்துப் பெறும் உணவு முதலில் சுவையாய் இருக்கும் பின் அது வாயில் மணல் கொட்டியது போலாகும்.

    குன்றேறி யானைப் போர் கண்டற்றால் தன்கைத்தொன்று
    உண்டாகச் செய்வான் வினை ( 758 )

    – தன் கைப்பொருளைக்கொண்டு ஒரு தொழில் செய்வது என்பது யானைகள் ஒன்றோடொன்று போரிடும் போது இடையில் சிக்காமல் அந்தப் போரை ஒரு குன்றின் மீது நின்றுக் காண்பதைப் போன்றதாகும்.

    ( நீ.மொ : 18 : 11 ) செல்வர் தம் செல்வத்தை அரண் என்றும், உயர்வான மதில் என்றும் சொல்லிக் கொள்ளலாம்.

    இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
    எல்லோரும் செய்வர் சிறப்பு ( 752 )

    – பொருள் உள்ளவர்களை புகழ்வதும், பொருள் இல்லாதவரை இகழ்வதும் தான் இந்த உலக நடப்பாக உள்ளது.

    ( நீ.மொ : 14 : 20 ) ஓர் ஏழையை அடுத்திருப்போர் அவரை அருவருப்பானவர் எனக் கருதுவர், செல்வர்க்கோ நண்பர் பலர் இருப்பர்.

    பதிலளிநீக்கு


  26. தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
    வாய்மை வழியுரைப்பான் பண்பு ( 688 )

    – துணிவு, துணை , தூய ஒழுக்கம் ஆகிய இம்மூன்றும் தூதுவர்க்குத் தேவையானவைகளாகும்.

    ( நீ.மொ : 13 : 17 ) தீய தூதர் தொல்லையில் ஆழ்த்துவார், நல்லதூதரோ அமைதி நிலவச் செய்வார்.

    காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்
    கண்டானாம் தான்கண்ட வாறு ( 849 )

    – அறிவற்ற ஒருவன், தான் அறிந்ததை மட்டும் வைத்துக் கொண்டு, தன்னை அறிவுடையவனாகக் காட்டிக் கொள்வான், அவனை உண்மையிலேயே அறிவுடையவனாக்க முயற்சி செய்பவன் தன்னையே அறிவற்ற நிலைக்கு ஆளாக்கிக் கொள்வான்

    ( நீ.மொ : 18 :2 ) மதிகேடர் எதையும் அறிந்துகொள்ள விரும்ப மாட்டார், தம் மனதிலுள்ளதை வெளியிடவே விரும்புவார்.

    கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
    முன்னின்று பின்னோக்காச் சொல்.( 184 )

    – நேருக்கு நேராக ஒருவரது குறைகளைக் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம், ஆனால் பின் விளைவுகளை எண்ணிப் பாராமல் நேரில் இல்லாத ஒருவரைப் பற்றிக் குறை கூறுதல் தவறு
    ( நீ.மொ : 18 : 8 ) புறணி கேட்பது பலருக்கு அறுசுவை உணவை உண்பது போல, அதை அவர்கள் பேராவலோடு விழுங்குவார்கள்.

    அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
    பெற்றான் பொருள்வைப் புழி ( 226 )

    – பசியைப் பொறுத்துக் கொள்ளும் நோன்பைக் கடைபிடிப்பதை விட ஒருவருக்கு உணவு அளிப்பதே சிறந்ததாகும்.

    ( நீ. மொ : 22 :9 ) கருணை உள்ளவர் தம் உணவை ஏழைகளோடு பகிர்ந்து உண்பார்.
    ( நீ. மொ: 28 : 27 ) ஏழைகளுக்குக் கொடுப்பவர்களுக்கு குறைவு ஏதும் ஏற்படாது, அவர்களைக் கண்டும் காணாதது போல இருப்போர் சாபங்களுக்கு ஆளாவார்.

    உடம்போடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
    பாம்போடு உடனுறைந் தற்று ( 890 )

    – உள்ளத்தால் ஒன்றுபடாதவர்கள் கூடி வாழ்வது ஒவ்வொரு நொடியும் அச்சம் கொள்ளத்தக்க விதமாய், ஒரு சிறு குடிலினுள் பாம்புடன் வாழ்தல் போன்றதாகும்.
    ( நீ. மொ : 21 : 9 ) மாடிவீட்டில் நச்சரிக்கும் மனைவியோடு வாழ்வதை விட சிறு கிடிசை வாழ்க்கையே மேல்.

    யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
    சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு ( 127 )

    – ஒருவர் எதைக் காத்திட முடியாவிட்டாலும் நாவையாவது அடக்கிக் காத்திட வேண்டும், இல்லையேல் அவர் சொன்ன சொல்லே அவர் துன்பத்துக்குக் காரணமாகி விடும்

    ( நீ.மொ : 12:13 ) தீயோர் தம் பொய்யுரையில் தாமே சிக்கிக் கொள்வர், நேர்மையாளர் நெருக்கடியான நிலையிலிருந்தும் தப்புவர்.

    பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்
    கழிநல் குரவே தலை ( 657 )

    பழிக்கு அஞ்சாமல் இழிவான செயல்களைப் புரிந்து செல்வந்தராக வாழ்வதை விட, கொடிய வறுமை தாக்கினாலும் கவலைப்படாமல் நேர்மையாளராக வாழ்வதே மேலானதாகும்.

    ( நீ. மொ : 16 : 8 ) தீய வழியில் சம்பாதிக்கும் பெரும் பொருளை விட, நேர்மையோடு ஈட்டும் சிறு தொகையே மேல்.

    பதிலளிநீக்கு

  27. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
    பகவன் முதற்றே உலகு ( 1 )

    – அகரம் எழுத்துக்களுக்கும், ஆதி பகவன் உயிர்களுக்கும் முதன்மை.

    ( நீ. மொ : ) தெய்வ பயமே ஞானத்தின் ஆரம்பம்.

    கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
    சொல்லா திருக்கப் பெறின் ( 403 )

    – கற்றவர்களின் முன்னிலையில் எதுவும் பேசாமல் இருக்கக் கற்றிருந்தால் கல்வி கற்காதவர்கள் கூட நல்லவர்களாகவே கருதப்படுவார்கள்
    ( நீ. மொ : 17 : 28 ) பேசாதிருந்தால் மூடனும் ஞானி என்றே கருதப்படுவான், தன் வாயை மூடிக் கொள்பவன் அறிவுள்ளவன்.

    சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
    கோடாமை சான்றோர்க் கணி ( 118 )

    – ஒருபக்கம் சாய்ந்து விடாமல் நாணயமான தராசு முள் போல இருந்து நியாயம் வழங்குதலே சிறந்தது.

    ( நீ.மொ 11 :1 ) கள்ளத் துலாக்கோல் ஆண்டவருக்கு அருவருப்பானது, முத்திரைப் படிக்கல்லே அவர் விரும்புவது.
    (நீ. மொ : 20 :10 ) பொய்யான எடைக் கற்களையும், பொய்யான அளவைகளையும் பயன்படுத்துகிறவர்களை ஆண்டவர் வெறுக்கிறார்.

    செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதிவின்றி
    எச்சத்திற் கேமாப்பு உடைத்து ( 112 )

    – நடுவு நிலையாளன் செல்வத்துக்கு அழிவில்லை. அது வழி வழித் தலை முறியினருக்கும் பயன் அளிக்கும்.

    ( நீ. மொ 13 :22 ) நல்லவருடைய சொத்து அவருடைய மரபினரைச் சேரும் !

    நீதியாய் இருக்கவேண்டும் என்று மேலும் நிறைய இடங்களில் சாலமோன் குறிப்பிடுகிறார்.

    அவற்றில் சில :-

    ( நீ.மொ . 11 : 31 ) நீதியாளன் இவ் வுலகிலேயே கைம்மாறு பெறுவான்.
    ( நீ.மொ 12 : 28 ) நேர்மையாளனின் வழி வாழ்வு தரும். முரணானவனின் வழி சாவில் தள்ளும்.

    நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
    அன்றே ஒழிய விடல். ( 113 )

    நடுவு நிலமை தவறுவதால் ஏற்படக்கூடிய பயன் நன்மை தரக் கூடியதாக இருப்பினும் அந்தப் பயனை கைவிட்டு நடுவு நிலமையைத் தான் கடைபிடிக்க வேண்டும்.

    கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
    கோடாமை சான்றோர்க் கணி ( 115 )

    ஒருவர் வாழ்வும், தாழ்வும் உலக இயற்கை. அந்த இரு நிலைமையிலும் நடுவு நிலையாக இருப்பதே பெரியோற்க்கு அழகாகும்.

    கற்றதனால் ஆயபயன் கொல் வாலறிவான்
    நற்றான் தொழார் எனில் ( 2 )

    – தன்னைவிட அறிவில் பெரியவர் முன் பணிவோடு நிற்காதவற்கள் கற்ற கல்வியினால் பயன் இல்லை .

    பதிலளிநீக்கு
  28. கன்பூஷியஸின் சிந்தனைகளுக்கும் குறளும்

    “கற்க கசடற கற்பவை, கற்றபின் நிற்க அதற்குத் தக”
    (Kural 391) என்று உரைத்தார் வள்ளுவர்.
    கன்பூசியசோ,
    “கற்றுணர்ந்து அவற்றை நினைந்து பின்னர்
    அவற்றின்படி நடப்பது மனமகிழ்ச்சி தரக்கூடியதல்லவா?”
    (Lun Yu, 1:1) என்று கேட்கிறார்!
    “நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்
    நாண்துறவார் நாண்ஆள் பவர்”
    என்றார் வள்ளுவர்.
    கன்பூசியசும்
    “எழுச்சியும் மேன்மை குணமுமுள்ள மனிதர்கள் உயிரோடு
    இருக்கத் தங்களின் மேன்மை குணத்தைத் தியாகம் செய்வதில்லை.
    மாறாக மேண்மைக்குணத்திற்காக தங்களை தியாகம் செய்வர்”
    (Lun Yu, 15:8) என்கிறார்.
    “எற்றுஎன்று இரங்குவ செய்யற்க செய்வானேல்
    மற்றுஅன்ன செய்யாமை நன்று”
    என்கிறார் வள்ளுவர்.
    “தவறு செய்தபின், அவற்றை திருத்திக் கொள்ளாததும் தவறுதான்”
    (Lun Yu, 15:29) என்கிறார் கன்பூசியஸ்.

    https://literature-comp.blogspot.com/2011/03/

    பதிலளிநீக்கு
  29. குறளும் குர்ஆனும் book https://www.commonfolks.in/books/d/kuralum-quraanum-katrutharum-vaazhviyal

    பதிலளிநீக்கு

  30. மனிதன் இறைவழியை விட்டுத் திசைமாறிச் சென்றபோதெல்லாம் அவனைச் சரியான வழியில் செலுத்த அவ்வப்போது இறைத்தூதர்கள் இத்தரைக்கு அனுப்பப்பட்டுக்கொண்டே இருந்தனர். ஒவ்வொரு சமூகத்தாருக்கும் ஒவ்வோர் இறைத்தூதரை அல்லாஹ் அனுப்பிவைத்தான். அந்த இறைத்தூதர்கள் அந்தந்த சமூகத்தைச் சார்ந்தவர்களாகவும் அவர்களின் மொழியைப் பேசுபவர்களாகவும் இருந்துள்ளனர். அவரவர்களுக்கெனத் தனிப்பட்ட வேதங்களையும், ஆகமங்களையும் இறைவன் வழங்கியே வந்துள்ளான்.

    அனைத்துச் சமுதாய மக்களுக்கும் இறைவன் தன் தூதர்கள் மூலம் அனுப்பிய செய்தி, வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்பதேயாகும். கொள்கையளவில் அனைத்துச் சமுதாயத்தாருக்கும் ஒரே செய்திதான். ஆனால் சட்டதிட்டங்களோ ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும் ஒவ்வொருவிதமாகவே இருந்தன. ஒரு சமுதாயத்துக்குத் தடைசெய்யப்பட்டவை மற்றொரு சமுதாயத்திற்கு ஆகுமாக்கப்பட்டன. ஒரு சமுதாயத்திற்கு ஆகாதவை வேறொரு சமுதாயத்திற்கு ஆகுமானவையாக இருந்தன. குறிப்பாக, வணக்க வழிபாட்டு முறைகளிலும், புனித நாள் என்பதிலும் மாற்றங்கள் இருந்தன.

    ஒவ்வொரு மொழி பேசுபவருக்கும் அவர்தம் மொழியைப் பேசக்கூடிய தூதரை நாம் அனுப்பிவைத்தோம் என்று அல்லாஹ் கூறுகின்றான். அந்த அடிப்படையில், தமிழ் பேசும் மக்களுக்கு ஓர் இறைத்தூதர் வந்திருக்கலாம்தானே? அவருக்கென ஒரு வேதம் வழங்கப்பட்டிருக்கலாம்தானே? அந்த இறைத்தூதர் திருவள்ளுவராக இருக்க வாய்ப்புண்டா? அந்த மறை திருக்குறளாக இருக்கலாமா? இது பற்றிய ஆராய்ச்சியை அறிஞர்கள் பலர் மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்தத் தூதர் எந்தக் காலத்தில் வந்திருப்பார்? இந்த மறையை யார் எழுதியிருப்பார்? திருக்குறளைப் பொறுத்தவரை இஸ்லாமியக் கொள்கைக்கு முரணான கருத்துகள் என்று எதையும் குறிப்பிட்டுக் கூற இயலாது. அதேநேரத்தில் இறைமறையின் மூலமும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மூலமும் கூறப்பட்டுள்ள கருத்துகள் சிலவற்றிற்கு முரணாக இருந்தாலும் பல்வேறு கருத்துகள் முஹம்மது (ஸல்) அவர்களின் கருத்துகளுக்கு ஏற்பவே இருப்பதைக் காணமுடிகின்றது.

    இது ஓர் இறைவேதம் என்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. அவற்றுள் முக்கியமானவை. 1. சுருங்கக் கூறி நிறைந்த பொருளைத் தருவது 2. சிந்தனைக்கேற்ற பொருள்கொள்ளத்தக்க முறையில் விரிந்துகொடுத்தல், 3. ஈராயிரம் ஆண்டுகளாகப் பாதுகாக்கப்பட்டு வருதல், 4. இலக்கிய நயமான முறையில் அமைந்திருத்தல்-இவை போன்ற காரணங்களால் திருக்குறள் தமிழர்களுக்கு வழங்கப்பட்ட ஓர் இறைவேதமாக இருக்கலாம் என்ற எண்ணம் மேலோங்குவதில் வியப்பில்லை.

    அது மட்டுமின்றி முஹம்மது (ஸல்) அவர்களைப் பற்றி முந்தைய வேதங்களில் கூறப்பட்டுள்ளது என்பதை நாம் அறிவோம். கல்கி புராணம், தவ்ராத், இஞ்சீல் போன்ற வேதங்களிலும் முஹம்மது நபியைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. அந்த வரிசையில் திருக்குறளும் இடம்பெறுகிறது. இதிலும் முஹம்மது நபியைப் பற்றிக் கூறியுள்ளார் வள்ளுவர்.

    தோன்றின் புகழொடு தோன்றுக -அஃதிலார், தோன்றலின் தோன்றாமை நன்று. (பொருள்: இவ்வுலகில் பிறந்தால் முஹம்மது நபியின் சமுதாயத்தில் தோன்றுக. அவ்வாறில்லையெனில் இவ்வுலகில் தோன்றாமல் இருப்பதே மேல்). இதிலுள்ள புகழ் எனும் பதம் புகழுக்குரியவர் எனும் பொருள்கொண்ட முஹம்மது நபியைக் குறிக்கிறது என்று கூறலாம்.


    source :
    1)http://hadi-baquavi.blogspot.in/2012/11/blog-post_21.html

    பதிலளிநீக்கு
  31. குர்ஆனும்-குறளும்

    இஸ்லாத்தின் அடிப்படையே ஏகத்துவம்தான். அல்குர்ஆனுக்கு முன்னர் வழங்கப்பட்ட வேதங்களிலும், முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு முன்னர் ஏகத்துவப் பரப்புரை செய்த இறைத்தூதர்கள் வலியுறுத்தியதும் ஏகத்துவம்தான். அதுபோல் திருக்குறளில் உள்ள முதல் குறளும் ஏகத்துவம் பற்றியதுதான்.

    அகர முதல எழுத்தெல்லாம் ஆதி-பகவன் முதற்றே உலகு (1) (பொருள்: எல்லா மொழி எழுத்துகளும் அ எனும் ஓசையுடைய எழுத்தையே முதலாகக் கொண்டுள்ளது. அதுபோல் இவ்வுலகத்தின் தொடக்கம் இறைவன் ஆவான்.)
    அல்லாஹ் ஒருவன்; அவன் தேவையற்றவன்; அவன் (யாரையும்) பெற்றெடுக்கவுமில்லை; அவனை (யாரும்) பெறவுமில்லை; அவனுக்கு நிகராக யாரும் இல்லை என்று நபியே நீர் கூறுவீராக!-என்பதுதான் ஞாபகம் வருகிறது.

    மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்-நிலமிசை நீடுவாழ் வார் (2) (பொருள்: அடியாரின் உள்ளத் தாமரையில் உறையும் இறைவன் திருவடிகளை இடையறாது நினைப்போர் இவ்வுலகிலேயே பேரின்ப வாழ்வு பெற்றவராவார்.)
    அல்லாஹ்வின் நினைவைக்கொண்டே உள்ளங்கள் அமைதியடைகின்றன (13: 28)


    எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்-மெய்ப்பொருள் காண்ப தறிவு (423) (பொருள்: எச்செய்தியை எவரிடமிருந்து கேட்டாலும் அது உண்மையா, பொய்யா என ஆராய்ந்தறிவதுதான் அறிவுடைமையாகும்.)
    இறைநம்பிக்கைகொண்டோரே! தீயவன் உங்களிடம் ஏதேனும் செய்தியைக் கொண்டுவந்தால் (அதை உடனே அங்கீகரித்து) அறியாமையால் (குற்றமற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கிழைத்துவிடாமல் இருப்பதற்காக (அதன் உண்மையை அறிவதற்காக அதைத் தீர விசாரித்துத்) தெளிவுபடுத்திக்கொள்ளுங்கள் (49: 06)

    இடுக்கண் வருங்கால் நகுக அதனை-அடுத்தூர்வது அஃதொப்பது இல். (621) (பொருள்: துன்பம் வரும்போது துவண்டுவிடாமல் புன்முறுவல் செய்துவிடு; ஏனென்றால் அதனை அடுத்து வருவது இன்பமே ஆகும்.)
    திண்ணமாகத் துன்பத்திற்குப்பின் இன்பமே. திண்ணமாகத் துன்பத்திற்குப்பின் இன்பமே (94: 5-6)

    புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்-அறங்கூறும் ஆக்கம் தரும். (183) (பொருள்: பிறரைப் பற்றிப் புறங்கூறி, பொய்சொல்- வாழ்வதைவிடத் தற்கொலை செய்துகொண்டு இறந்துபோவது மேல்)
    உங்களுள் ஒருவர் மற்றொருவரைப் புறம்பேச வேண்டாம். உங்களுள் ஒருவர் தம் சகோதரரின் இறைச்சியை, அவர் இறந்துபோன நிலையில் (அதிலிருந்து பிய்த்து) உண்ண விரும்புவாரா? அதை நீங்கள் வெறுப்பீர்கள் (49: 12)

    வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்-உள்ளத் தனைய துயர்வு (595). (பொருள்: நீர்ப்பூக்களின் தண்டுகள் நீரின் ஆழத்தைப் பொறுத்து நீளும். அதுபோல் மக்களின் ஊக்கத்தைப் பொறுத்ததே அவர்களின் உயர்ச்சி).
    ஒவ்வொருவரும் தத்தம் எண்ணப்படியே செயல்படுகிறார்கள் என்று நபியே நீர் கூறுவீர் (17: 84)
    மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து-நோக்கக் குழையும் விருந்து (90). (பொருள்: மிகவும் மெல்லிய அனிச்சம்பூ மோந்து பார்த்தாலே வாடிவிடும். அதுபோல் விருந்தினரோ முகம் மாறிப் பார்த்தாலே வாடிவிடுவர்.) விருந்தோம்பல் எனும் அதிகாரத்தில் உள்ள இக்குறளைப் படிக்கின்றபோது, அல்அஹ்ஸாப் அத்தியாயத்திலுள்ள 53ஆம் இறைவசனம் ஞாபகம் வருகிறது.

    இறைநம்பிக்கைகொண்டோரே! நீங்கள் விருந்துக்கு அழைக்கப்பட்டு, அதற்கு அனுமதிக்கப்பட்டாலே தவிர, அது தயாராவதை எதிர்பார்க்காமல் (முன்னதாகவே) நபியுடைய வீடுகளுக்குள் நுழையாதீர்கள். எனினும் நீங்கள் அழைக்கப்பட்டால், அப்போது நுழையுங்கள். பின்னர் நீங்கள் உணவை உண்டுவிட்டால், (அங்கிருந்துகொண்டே) பேசுவதில் விருப்பம் கொண்டவர்களாக ஆகிவிடாமல் கலைந்து சென்று விடுங்கள். திண்ணமாக இது நபிக்குத் தொந்தரவு கொடுப்பதாக உள்ளது. ஆகவே (அதை) அவர் உங்களிடம் கூற வெட்கப்படுகிறார். உண்மையைச் சொல்ல அல்லாஹ் வெட்கப்படமாட்டான். (33: 53)

    தம் இல்லத்துக்கு விருந்துண்ண வந்தவர்களை, “நீங்கள் உணவுண்டுவிட்டால் செல்ல வேண்டியதுதானே?” என்று முகத்தில் அறைந்தாற்போல் எப்படிக் கூறுவது என்ற கையறு நிலையில் இருந்த நபி (ஸல்) அவர்களைப் பார்த்த இறைவன் விடுத்த கட்டளையே இந்த வசனம். நபியின் அழகிய விருந்தோம்பல் பண்பு இதிலிருந்து வெளிப்படுகிறது.

    அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு-என்புதோல் போர்த்த உடம்பு (80). (பொருள்: அன்புடையோரே உயிர் உடையோராகக் கருதப்படுவர். அஃது அற்றோர் உயிர் இருந்தும் உயிரற்றோரே ஆவார்.)
    (நபியே) அல்லாஹ்வுடைய அருளின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (அன்புள்ளவராக) நடந்துகொள்கிறீர். (3: 159) மேலும், “நாம் உம்மை அகிலத்தாருக்கு ஓர் அன்பாளராகவே அனுப்பியுள்ளோம்” என்ற இறைவசனத்தின் மூலம் நபி (ஸல்) அவர்கள் மக்கள்மீது மிக்க அன்பாளராக இருந்தார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள முடிகிறது.

    சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்-சொல்லிய வண்ணம் செயல் (664).
    இறைநம்பிக்கைகொண்டோரே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கின்றீர்கள்? (61: 2)

    source :
    1)http://hadi-baquavi.blogspot.in/2012/11/blog-post_21.html

    பதிலளிநீக்கு
  32. கடவுள் இல்லை என்கிற கற்பனை அடிப்படியில் சிந்திக்கும் பொழுது இப்படி நிறைய content கிடைக்கும். கடவுள் இருந்தால்? என்று சிந்தித்தால் கொஞ்சம் குறைவுதான்.

    அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு - குறள் ஒன்றே சாட்சியம் மொழி உண்டாகிய முறையினை உரைக்க.

    இதுவரை இருந்த எந்த மொழியினை எடுத்து ஆராய்ந்தாலும் அவைகள் அ, அலிஃப், ஆல்ஃபா போன்ற அகர ஓசைலேயே தொடங்குவதை காண முடியும் (உவைமைக்காக சொல்லப்பட்ட இந்த கருத்தை ஆய்வுக்கு உட்படுத்தினால் மொழி பற்றிய உங்கள் கற்பனை முற்றுபெறும்). அது போல, உலகில் உள்ள மனிதர்கள் அனைவரும் ஆதி பகவன்(மனிதன்) ஒருவனிலேயிருந்து கிளைத்தது தழைத்தவர்கள் என்று உறுதிபட கூறுகிறது இக்குறள்.

    பரிணாம வளர்ச்சி கோட்பாட்டினால் வெவ்வேறு மனிதர்கள் வெவ்வேறு இடங்களில் இந்த நிலையை அடைந்து இருந்தால் வள்ளுவம் கூறும் மொழி கொள்கை சாத்தியமில்லை. எனவே ஒன்றுக்கொன்று தொடர்புடைய இச்செய்தி இங்கே ஒரே குறளில் ஒன்றை ஒன்று நிறுவும் விதத்தில் கொடுக்கப் பட்டுள்ளது.

    முதல் மனிதனை தமிழ் "ஆதி பகவன்(மனிதன்)" என்றும், பைபிள் "ஆதாம்" என்றும், குர்ஆன் "ஆதம்" என்றும், வேதம் "ஆதி புருஷ்(மனிதன்)" என்றும் கூறுகிறது. மேலும் ஆதி "மனிதன்" என்று ஆண்பாலை குறிக்கும் இச்சொற்கள் சமயங்களின் மனித படைப்பு கோட்பாட்டை உறுதி செய்கிறது.

    ஆதி என்கிற சொல்லின் வேர்ச்சொல் தமிழை தவிர வேறு எதிலும் இல்லை என்கிறார்கள் மொழியியல் ஆய்வாளர்கள். பேராசிரியர் மா.சோ.விக்டர் உட்பட உலகின் பல மொழியியல் அறிஞர்கள் கூறுவது உலகின் முதல் மொழி "தமிழ்". முதல் மொழி தமிழ் என்பதை கூறுவதிலுள்ள தயக்கம் என்னவோ?

    Pseudo Science பேசப்பட்டால் அதை பொய் என்று கூறி உண்மை அறிவியலை எடுத்து கூறும் எவரும் Pseudo Sprituality பேசப்பட்டால் மொத்த ஆன்மீகத்தையும் தவறு என்று கூறுவது சரியல்லவே? உண்மை ஆன்மீகத்தை பிரித்து கூறுவதுதானே சரியான நிலைப்பாடு? அதற்கான கல்வியும் அறிவும் வாய்ப்பும் இன்றைய material உலகில் குறைவு என்பதால் இந்த நிலை நிலவுகிறது போலும். https://www.youtube.com/watch?v=-_0cDXrzFFU

    பதிலளிநீக்கு
  33. குறளையுள் நட்பு அளவு தோன்றும்; உறல் இனிய
    சால் பினில் தோன்றும், குடிமையும்; பால் போலும்
    தூய்மையுள் தோன்றும் பிரமாணம்; - இம் மூன்றும்
    வாய்மை உடையார் வழக்கு. . . . .[திரிகடுகம் 37]


    பொருள் சுருக்கத்தினால் நட்பின் எல்லை தோன்றும். இனிய செயல்களினால் குடிப் பிறப்பின் தன்மை தோன்றும். மனத் தூய்மையினால் வாழ்வின் அளவு தோன்றும். எனவே இம்மூன்றும் உண்மையான பெரியோரின் குணங்களாகும்.

    பதிலளிநீக்கு