ஊணன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஊணன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஊணன் - foodie (அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு)

தமிழர் சமயம்

மிகுதியாய் உண்ணக் கூடாது 

புலன்கள் பொருட்டாகப் பொச்சாந்து நெஞ்சே!
சலங்களைச் சாரா ஒழுகல் - புலன்கள்
ஒறுக்கும் பருவத்து உசாத் துணையும் ஆகா
வெறுத்துநீ உண்டல் கடன். - அறநெறிச்சாரம் பாடல் - 135

விளக்கவுரை உள்ளமே! பின்னால் துன்பம் வரும் என்பதை மறந்து ஐம்பொறிகளாலும் அனுபவிக்கப்படும் இன்பத்தின் பொருட்டுத் தீவினைக்குரிய செயல்களைச் செய்யாதே! அத் தீவினைகள் உன்னை ஒறுக்கும்போது அப்பொறிகள் ஐந்தும் உனக்கு அறிவுரை கூறுதற்கேற்ற துணையும் ஆகா. ஆதலால் புலன் நுகர்ச்சி காரணமாக மிக்க உணவை விரும்பாது அளவுடன் உண்பது கடமையாகும்.

மிக்க உணவால் வரும் கேடு 

புகாப்பெருக ஊட்டின் புலன்கள் மிக்கூறி
அவாப்பெருகி அற்றம்தருமால் - புகாவும்ஓர்
பெற்றியான் ஊட்டிப் பெரும்பயன் கொள்வதே
கற்றறிந்த மாந்தர் கடன். - அறநெறிச்சாரம் பாடல் - 136

விளக்கவுரை வயிற்றுக்கு உணவை மிகுதியாக ஊட்டினால் ஐம்பொறிகள் அடங்காமல் ஆசை மிகப்பெற்று அழிவை அளிக்கும்; ஆகவே உணவைக் கரணங்கள் தொழிப்படுவதற்கு ஏற்ற நிலையில் சிறிதளவே உண்டு இந்த உடலால் வீடு பேற்றுக்கு உரிய செயல்களைச் செய்துகொள்வதே அற நூல்களைக் கற்றுத் தெளிந்தோர் கடமையாகும்.

 உண்டி வெய்யோர்க்கு உறு பிணி எளிது. - (முதுமொழிக் காஞ்சி 8. எளிய பத்து 7)


பதவுரை: உண்டி - மிக்க உணவை, உறு பிணி - மிகுந்த நோய்


பொருள்: உணவினை மிகுதியாக விரும்புபவர்களுக்கு நோய் உண்டாகும்.

 மீதூண் விரும்பேல்” (ஆத்திச்சூடி 91)  

பொருள்: மிகுதியாக உண்ணுதலை விரும்பாதே. 

இஸ்லாம்

இருக்கின்ற உணவை பங்கிட்டுச் சாப்பிட வேண்டும்!

இருவருடைய உணவு மூவருக்குப் போதுமானதாகும். மூவரின் உணவு நால்வருக்குப் போதுமானதாகும்.” என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி), (ஆதாரம்: புகாரி.)

வயிறு முட்ட சாப்பிடுவது உண்மையான முஃமினுக்கு அழகல்ல!

(உண்மையான) முஸ்லிம் ஒரே குடலில் சாப்பிடுவார். இறைமறுப்பாளனோ ஏழு குடல்களில் சாப்பிடுவான்.’ என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி), (ஆதாரம்: புகாரி.)

“இப்னு உமர் (ரலி) தம்முடன் சாப்பிட ஓர் ஏழையேனும் அழைத்து வரப்படாமல் உணவு உண்ணமாட்டார்கள். எனவே, (ஒரு நாள்) அவர்களுடன் சாப்பிட ஒருவரை நான் அழைத்துச் சென்றேன். அம்மனிதர் நிறைய உண்டார். இப்னு உமர் (ரலி) ‘நாஃபிஉ! இவரை (இனிமேல்) என்னிடம் அழைத்து வராதீர்கள். நபி (ஸல்) அவர்கள் ‘இறைநம்பிக்கையாளர் ஒரே குடலில் சாப்பிடுவார். இறைமறுப்பாளனோ ஏழு குடல்களில் சாப்பிடுவான்’ எனக் கூறுவதை கேட்டிருக்கிறேன்’ என்று கூறினார்கள். அறிவிப்பவர்: நாஃபிஉ (ரஹ்), (ஆதாரம்: புகாரி.)

கிறிஸ்தவம்

...எவ்வளவுதான் பசியோடு இருந்தாலும் அளவுக்கு மீறி உண்ணாதே.. - (நீதிமொழிகள் 23:1-3)

19 என் மகனே கவனி. அறிவுள்ளவனாக இரு. சரியான வழியில் வாழ்வதில் எச்சரிக்கையாக இரு. 20 மிகுதியான இறைச்சியை உண்பவர்களோடும் மிகுதியான மதுவைக் குடிப்பவர்களோடும் நட்பாக இருக்காதே! 21 மிகுதியாக உண்பவனும் குடிப்பவனும் ஏழையாகிவிடுகிறான். அவர்கள் செய்பவையெல்லாம் உண்பது, குடிப்பது மற்றும் தூங்குவது மட்டுமே. விரைவில் அவர்கள் ஒன்றும் இல்லாமல் போகிறார்கள். - (நீதிமொழிகள் 23:19-21)