போர் நெறி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
போர் நெறி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

முஷ்ரிக்குகளைக் கண்ட இடங்களில் வெட்டுங்கள் - குர்ஆன்

 குர்ஆன் 9:5 "...முஷ்ரிக்குகளைக் கண்ட இடங்களில் வெட்டுங்கள், அவர்களைப் பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள்..." - இப்படி பிற மதத்தினருக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் இஸ்லாம் அமைதி மார்க்கமா?


குர்ஆன் 9:5 செய்தியின் முழு வரிகளை வாசிப்போம்.

9:4. ஆனால், நீங்கள் உடன்படிக்கை செய்து கொண்ட இந்த முஷ்ரிக்குகளில், எதையும் குறைத்துவிடாமலும், உங்களுக்கு விரோதமாக எவருக்கும் உதவி செய்யாமலும் இருக்கின்றார்களோ அவர்களைத் தவிர: அவர்களுக்கு அவர்களின் உடன்படிக்கையை அவர்களின் காலக் கெடுவரையில் பூரணமாக நிறைவேற்றுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோரை நேசிக்கின்றான்.

9:5. (போர் விலக்கப்பட்ட துல்கஃதா, துல்ஹஜ்ஜு, முஹர்ரம், ரஜபு ஆகிய நான்கு) சங்ககைமிக்க மாதங்கள் கழிந்து விட்டால் முஷ்ரிக்குகளைக் கண்ட இடங்களில் வெட்டுங்கள், அவர்களைப் பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள், ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறிவைத்து உட்கார்ந்திருங்கள் - ஆனால் அவர்கள் (மனத்திருந்தி தம் பாவங்களிலிருந்து) தவ்பா செய்து மீண்டு, தொழுகையையும் கடைப்பிடித்து (ஏழைவரியாகிய) ஜகாத்தும் (முறைப்படிக்) கொடுத்து வருவார்களானால் (அவர்களை) அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.

9:6. (நபியே!) முஷ்ரிக்குகளில் யாரேனும் உம்மிடம் புகலிடம் தேடி வந்தால், அல்லாஹ்வுடைய வசனங்களை அவர் செவியேற்கும் வரையில் அவருக்கு அபயமளிப்பீராக; அதன் பின் அவரை அவருக்குப் பாதுகாப்புக் கிடைக்கும் வேறு இடத்திற்கு (பத்திரமாக) அனுப்புவீராக - ஏனென்றால் அவர்கள் நிச்சயமாக அறியாத சமூகத்தினராக இருக்கிறார்கள்.

ஒப்பந்தம் போட்டு அதன் படி நடக்காத அதை மீறும் மக்களை பற்றி பேசுகிறது இந்த வசனம். அவர்களையும் புனிதமான மாதங்களில் ஒன்றும் செய்யக்கூடாது அவைகள் முடிந்த பின்பு போர் புரிய சொல்கிறது. அவர்கள் மனம் திருந்தினாலும் ஒன்றும் செய்யக்கூடாது என்கிறது. அவர்களில் கூட யாராவது அடைக்கலம் என்று வந்துவிட்டால் அவர்களை பாதுகாக்க சொல்கிறது இஸ்லாம்.

சமகாலத்தில் ஒரு அரசு எதிரிகளின் யாரேனும் அடைக்கலம் தேடி வந்தால் சிறையில் அடைத்து கொடுமை செய்யுமா? அல்லது பாதுகாத்து பத்திரமாக அனுப்பி வைக்குமா? எதிரிகளில் யாரேனும் மணம் திருந்தினால் அவர்களை மண்ணிக்குமா அல்லது தண்டனையை நிறைவேற்றுமா?

முஸ்லீம் அலலத்தவர் எல்லோருடனும் போரா?

உங்களிடம் போருக்கு வருவோருடன் அல்லாஹ்வின் பாதையில் நீங்களும் போர் செய்யுங்கள்! வரம்பு மீறாதீர்கள்! வரம்பு மீறியோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான். (திருக்குர்ஆன் 2:190)

(களத்தில்) சந்திக்கும் போது அவர்களைக் கொல்லுங்கள்! அவர்கள் உங்களை வெளியேற்றியவாறு நீங்களும் அவர்களை வெளியேற்றுங்கள்! கலகம், கொலையை விடக் கடுமையானது. மஸ்ஜிதுல் ஹராமில் அவர்கள் உங்களுடன் போருக்கு வராத வரை அங்கே அவர்களுடன் போர் செய்யாதீர்கள்! அவர்கள் உங்களுடன் போருக்கு வந்தால் அவர்களைக் கொல்லுங்கள்! (ஏக இறைவனை) மறுப்போருக்கு இதுவே தண்டனை (குர்ஆன் 2:191)

மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடாதோருக்கும், உங்கள் வீடுகளிலிருந்து உங்களை வெளியேற்றாதோருக்கும் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்யவில்லை. நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான். (திருக்குர்ஆன் 60:8)

மேலும் இது ஒரு தனி மனிதனுக்கு வழங்கப்பட்ட உரிமைகளோ சட்டங்களோ அல்ல. இது ஒரு நாடு, அதன் அரசாங்கம், அதன் அதிகாரிகள், அதன் படைகளுக்கு வழங்கப்பட்ட சட்டங்கள்.

எந்த நாட்டில் இதுபோன்ற சட்டங்கள் இல்லை? இந்திய அரசாங்கம் சீனாவோ பாக்கிஸ்தானோ போருக்கு வரும்பொழுது நாங்கள் அமைதியான நாட்டை சேர்ந்தவர்கள் எனவே நீங்கள்

  • எங்களை அடித்தாலும்,
  • கொலை செய்தாலும்,
  • எங்களது சொத்துக்களை பிடுங்கினாலும்,
  • எங்களது பெண்களை கற்பழித்தலும்,
  • எங்களை நாட்டை விட்டு வெளியேற்றினாலும்

நாங்கள் அமைதியாக இருப்போம் என்று கூற வேண்டும் என்று எதிர்பார்க்க முடியுமா? அந்த எதிர்பார்ப்பு சரியா?

இவ்வாறு அத்து மீரும் எதிரிகளிடம் செய்யும் போரிலும் பல கட்டுப்பாடுகளை வைத்துள்ளது இஸ்லாம்.

  • கொல்லப்பட்ட எதிரிகளின் உடலை சிதைக்க கூடாது
  • பெண்களை, குழந்தைகளை, வயதானவர்களை, அவர்களின் மதகுருமார்களை கொல்லாக்கூடாது
  • மரங்களை, சொத்துகளை நாசம் செய்ய கூடாது
  • போருக்கு வராத பெண்களை சிறைபிடிக்கப்பட்ட கூடாது, வருவோர்களை கர்ப்பழிக்க கூடாது, விரும்பினால் அவரின் அனுமதியோடு மணமுடிக்கலாம்.

இவ்வாறு இந்திய இராணுவம் கற்பனை கூட செய்யாத பல ஆச்சரியமிக்க கட்டுப்பாடுகளை விதித்ததுடன் அதை நடைமுறை படுத்தியும் காட்டியது.

மேலும் இது இஸ்லாத்தில் மட்டுமில்லை. இஸ்லாம் உலக வேதங்கள் அனைத்தும் ஏக இறைவனிடத்தில் இருந்து வந்தது என்று சொல்கிறது. அந்த அடிப்படையில் பார்த்தால் எல்லா சமயங்களிலும் இந்த கருத்து உள்ளது.

கிறிஸ்தவம் & யூதம்:

16 ஆனால், தேசங்களின் நகரங்களில் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குச் சுதந்தரமாகக் கொடுக்கிறார், சுவாசிக்கும் எதையும் உயிருடன் விடாதீர்கள். 17 உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கட்டளையிட்டபடியே, ஏத்தியர்கள் , எமோரியர்கள், கானானியர்கள், பெரிசியர்கள், ஏவியர்கள் மற்றும் எபூசியர்களை முற்றிலும் அழித்துவிடுங்கள். 18 இல்லையேல், தங்கள் தெய்வங்களை வணங்குவதில் அவர்கள் செய்யும் எல்லா அருவருப்பான செயல்களையும் பின்பற்றும்படி அவர்கள் உங்களுக்குக் கற்பிப்பார்கள், உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு எதிராக நீங்கள் பாவம் செய்வீர்கள். - (உபாகமம் 20:16-18)

தமிழர் சமயங்கள்

இன்னும் தமிழர் சமயங்களில் புறநானூறு, குறள் உள்ளிட்ட நூல்கள் அரசு மற்றும் போர் பற்றி என்ன சொல்கிறது என்று வாசித்து அறியவும். அந்த அரசர்கள் அறத்தின்கண் நின்று அறத்துக்காக மற்றவர்களை பகைத்தவர்கள் ஆவார்கள் . ஆறாம் என்பது அக்கலாத்தில் சமயமே .

வேதத்தை விட்ட அறமில்லை - திருமந்திரம்.

நாஅல் வேத நெறி திரியினும்
திரியாச் சுற்றமொடு முழுதுசேண் விளங்கி - 
புறநானூறு

வடநாட்டார் தூங்கார்!

சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும்

அறத்து வழிப்படூஉம் தோற்றம் போல

இரு குடை பின்பட ஓங்கி ஒருகுடை

உருகெழு மதியின் நிவந்துசேண் விளங்க,

5 நல்லிசை வேட்டம் வேண்டி வெல்போர்ப்

பாசறை யல்லது நீயல் லாயே;

நுதிமுகம் மழுங்க மண்டி ஒன்னார்

கடிமதில் பாயும்நின் களிறுஅடங் கலவே;

போர்எனில் புகலும் புனைகழல் மறவர்

10 காடிடைக் கிடந்த நாடுநனி சேய;

செல்வேம் அல்லேம் என்னார்; கல்லென்

விழவுடை ஆங்கண் வேற்றுப்புலத்து இறுத்துக்

குணகடல் பின்ன தாகக் குடகடல்

வெண்தலைப் புணரிநின் மான்குளம்பு அலைப்ப

15 வலமுறை வருதலும் உண்டுஎன்று அலமந்து

நெஞ்சுநடுங்கு அவலம் பாயத்

துஞ்சாக் கண்ண வடபுலத்து அரசே. - புறநானூறு

உரை: அறத்தின் சிறப்பினால், பொருளும் இன்பமும் அறத்தின் பின்னதாகக் கருதப்படுவதுபோல், சேர பாண்டியருடைய கொற்றக்குடைகள் பின் வர உன் கொற்றக்குடை அழகிய திங்களைப்போல் வெகு தொலைவில் உயர்ந்து விளங்குகிறது. நல்ல புகழை விரும்பி, உன் தலைநகராகிய பூம்புகாரில் இல்லாமல், நீ வெற்றிதரும் போர்ப்பாசறையிலேயே உள்ளாய். உன் யானைகள், அவற்றின் தந்தங்களின் நுனிகள் மழுங்குமாறு பகைவர்களின் காவலுடைய மதில்களைக் குத்தித் தாக்கியும் அடங்காமல் உள்ளன. போர் என்று கேள்விப்பட்டவுடன் உன் படை வீரர்கள், வீரக்கழல்கள் அணிந்து, போருக்குப் புறப்படுகிறார்கள். பகைவர்களின் நாடு காட்டுக்கு நடுவே, மிகவும் தொலைவில் இருந்தாலும் அங்கே செல்லமாட்டோம் என்று அவர்கள் சொல்லமாட்டார்கள். பகைவர்களின் நாட்டில் ஆரவாரமாக வெற்றிவிழா கொண்டாடிக், கிழக்குக் கடற்கரையிலிருந்து கிளம்பிய உன் குதிரைகளின் குளம்புகளை மேற்குக் கடலின் வெண்ணிற அலைகள் அலம்ப, நீ நாடுகளை வலம் வருவாயோ என்று வடநாட்டு மன்னர்கள் வருந்தி, நெஞ்சம் நடுங்கி உறக்கமின்றி உள்ளனர்.

உன் கொள்ளையால் வளநாடும் வற்றிவிடும்!

களிறு கடைஇயதாள்

கழல்உரீஇய திருந்துஅடிக்

கணைபொருது கவிவண்கையால்

கண்ஒளிர்வரூஉம் கவின்சாபத்து

5 மாமறுத்த மலர்மார்பின்

தோல்பெயரிய எறுழ்முன்பின்

எல்லையும் இரவும் எண்ணாய் பகைவர்

ஊர்சுடு விளக்கத்து அழுவிளிக் கம்பலைக்

கொள்ளை மேவலை ஆகலின், நல்ல

10 இல்ல ஆகுபவால், இயல்தேர் வளவ!

தண்புனல் பரந்த பூசல் மண்மறுத்து

மீனின் செறுக்கும் யாணர்ப்

பயன்திகழ் வைப்பின்பிறர் அகன்றலை நாடே. - புறநானூறு

உரை: யானையைச் செலுத்திய கால்களும் வீரக்கழல்கள் உராய்ந்த அடிகளும், அம்பு தொடுத்துக் குவிந்த கையும், கண்ணைக் கவரும் ஒளியுடன் கூடிய வில்லும், திருமகள் விரும்பும் அகன்ற மார்பும், யானையை வெல்லும் வலிமையும் உடையவனே! இரவு பகல் என்று கருதாமல் பகவரின் ஊரைச் சுடும் தீயின் ஒளியில், அங்குள்ளவர்கள் கதறி அழுது ஒலி யெழுப்பமாறு அவர்கள் நாட்டைக் கொள்ளை அடிப்பதில் நீ விருப்பமுடையவன். ஆகவே, குளிர்ந்த நீர் பெருகியோடும் உடைப்புகளை மண்ணால் அடைக்காமல் மீனால் அடைக்கும் புதிய வருவாயினையுடைய பயனுள்ள ஊர்களையுடைய அகன்ற இடங்களுடன் கூடிய உன் பகவர்களின் நாட்டில் நல்ல பொருள்கள் இல்லாமல் போயின. நன்கு செய்யப்பட்ட தேர்களையுடைய வளவனே!

தண்டனை யாருக்கு ?

வழிபடு வோரை வல்லறி தீயே;

பிறர்பழி கூறுவோர் மொழிதே றலையே;

நீமெய் கண்ட தீமை காணின்

ஒப்ப நாடி அத்தக ஒறுத்தி;

5 வந்து, அடி பொருந்தி முந்தை நிற்பின்

தண்டமும் தணிதிநீ பண்டையிற் பெரிதே;

அமிழ்துஅட்டு ஆனாக் கமழ்குய் அடிசில்

வருநர்க்கு வரையா வசையில் வாழ்க்கை

மகளிர் மலைத்தல் அல்லது மள்ளர்

10 மலைத்தல் போகிய சிலைத்தார் மார்ப;

செய்து இரங்காவினைச் சேண்விளங் கும்புகழ்

நெய்தலங் கானல் நெடியோய்!

எய்த வந்தனம்யாம் ஏத்துகம் பலவே. - புறநானூறு

உரை: உன்னை வழிபடுவோரை (கட்டுப்படுவோரை) நீ விரைவில் அறிவாய். பிறர்மீது குற்றம் கூறுவோர் சொல்லை நீ ஏற்றுக் கொள்ள மாட்டாய். உண்மையிலே ஒருவன் செய்தது தவறு (தீமை) என்று நீ கண்டால் நீதி நூலுக்கு ஏற்ப ஆராய்ந்து தகுந்த முறையில் அவனைத் தண்டிப்பாய். தவறு செய்தவர்கள், உன் முன்னர் வந்து அடிபணிந்து நின்றால் நீ முன்பு அளித்த தண்டனையைப் பெரிதும் குறைப்பாய். அமிழ்தத்தைச் சேர்த்துச் சமைத்தது போல் உண்ணத் தெவிட்டாத மணம் கமழும் தாளிதத்தோடு கூடிய உணவை வருவோர்க்கு குறைவின்றி வழங்கும் பழியற்ற இல்வாழ்க்கை நடத்தும் உன் மகளிர் ஊடல் செய்வதன்றி, பகை வேந்தர் உன்னோடு போர் செய்வதில்லை. வானவில் போன்ற மாலையை அணிந்த மார்பையுடையவனே! வருந்தத்தக்க செயலைச் செய்யாத தன்மையும், பரந்த புகழும் உடையவனே! நெய்தலங்கானம் என்னும் ஊரைச் சார்ந்த பெரியோனே! யாம் உன்னை அணுகி வந்தோம். உன்னைப் பலவாறாகப் புகழ்கிறோம்.

எதிரி நாட்டினருக்கு எச்சரிக்கை

ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்

பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்

தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்

பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்

5 எம்அம்பு கடிவிடுதும் நும்அரண் சேர்மின்என

அறத்துஆறு நுவலும் பூட்கை மறத்தின்

கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும்

எங்கோ வாழிய குடுமி; தங்கோச்

செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த

10 முந்நீர் விழவின் நெடியோன்

நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே. - புறநானூறு

உரை: ”பசுக்களும், பசுபோன்ற இயல்புடைய பார்ப்பன மக்களும், பெண்டிரும், பிணியுடையோரும், இறந்தவர்களுக்கு இறுதிக் கடன் செய்வதற்கு நல்ல புதல்வர்கள் இல்லாத ஆண்களும் பாதுகாவலான இடத்தைச் சென்றடையுங்கள். விரைவில் எங்கள் அம்புகளை ஏவப் போகிறோம் என்று அறநெறி கூறும் கொள்கை உடையவனே! கொல்கின்ற வலிய யானையின் மேல் உள்ள உன் கொடி வானில் நிழல் பரவச் செய்கிறது. எங்கள் அரசே! குடுமி! நீ வாழ்க! செம்மையான உயர்ந்த பொன்னைக் கூத்தர்க்கு அளித்துக் கடல் விழா எடுத்த உன் முன்னோன் நெடியோனால் உண்டாக்கப்பட்ட பஃறுளி ஆற்று மணலினும் பல காலம் நீ வாழ்க!

சனாதன மதம்

சனாதன நூல்களான கீதையும் ரிக் வேதங்கள் எல்லாம் போரை பிரதானமாக பேசும் நூல்கள் ஆகும்.

போர் புரிய மனம் வராமல் திகைத்துத் தன்னைச் சரணடைந்த அர்ஜுனனை நோக்கிக் கண்ணன் உரைக்கின்றான்:- “அர்ஜுனா, நீ வருந்துவது முற்றிலும் தவறு. எதிரிகளின் ஆன்மாவைப் பற்றி வருந்துகின்றாயா? அல்லது அவர்களின் உடலைப் பற்றி வருந்துகின்றாயா? இரண்டும் சரியல்ல. ஆன்மா என்றும் அழிவற்றது. அதைக் கத்தியால் வெட்டவும், தீயினால் எரிக்கவும் முடியாது. உடலோ அழியும் இயல்பு வாய்ந்தது. நீ அழிக்காவிடினும் அது தானே அழிய வேண்டியதுதான். ஆன்மாவுக்கு ஓருடல் அழிந்ததும், மற்றோருடல் தானே வந்து சேரும். ஆன்மாவின் இயற்கையை எண்ணி உனக்கு ஏற்படுத்தப்பட்ட செயல்களை நீ செய்தே தீரவேண்டும். அச்செயல்களைச் செய்யுங்கால், நாம் செய்ய வேண்டியதைச் செய்கிறோம். அதுவும் ஈசுவரப் பிரீதிக்காகவே என்று எண்ணிச் செய். இதனால் ஆத்மஞானம் பெருகி, அதில் நிலைபெற்று நற்கதியடைவாய். ஈசுவர பிரீதியைத் தவிர மற்ற பலனைக் கோரினால் சம்சாரக்கட்டிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முடியாது.” சஞ்ஜயன் சொல்லுகிறான்: - கீதை

ஸஞ்ஜய உவாச
தம் ததா² க்ரிபயாவிஷ்டமஸ்²ருபூர்ணாகுலேக்ஷணம்|
விஷீத³ந்தமித³ம் வாக்யமுவாச மது⁴ஸூத³ந: ||2-1||

பொருள்: அவ்வண்ணம் இரக்க மிஞ்சியவனாய் நீர் நிரம்பிய சோக விழிகளுடன் வருந்திய அர்ஜுனனை நோக்கி மதுசூதனன் சொல்லுகிறான்

ஸ்ரீப⁴க³வாநுவாச
குதஸ்த்வா கஸ்²மலமித³ம் விஷமே ஸமுபஸ்தி²தம்|
அநார்யஜுஷ்டமஸ்வர்க்³யமகீர்திகரமர்ஜுந ||2-2||

பொருள்: ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: இந்த முட்டுதலில் இவ்வுள்ளச் சோர்வை நீ எங்கிருந்து பெற்றாய்? இஃது ஆரியருக்குத் தகாது. வானுலகைத் தடுப்பது; அபகீர்த்தி தருவது அர்ஜுனா!

ஸஞ்ஜய உவாச
ஏவமுக்த்வா ஹ்ருஷீகேஸ²ம் கு³டா³கேஸ²: பரந்தப:|
ந யோத்ஸ்ய இதி கோ³விந்த³முக்த்வா தூஷ்ணீம் ப³பூ⁴வ ஹ ||2-9||

பொருள்: சஞ்ஜயன் சொல்லுகிறான்: “பகைவரைக் கொளுத்தும் பார்த்தனங்கு பசுநிரை காக்கும் பகவனை நோக்கிப் போரினிப் புரியேன்’ என்று வாய்புதைத்திருந்தான்.”

அந்தவந்த இமே தே³ஹா நித்யஸ்யோக்தா: ஸ²ரீரிண:|
அநாஸி²நோऽப்ரமேயஸ்ய தஸ்மாத்³யுத்⁴யஸ்வ பா⁴ரத ||2-18||

பொருள்: ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: “ஆத்மா நித்தியன்; அழிவற்றான்; அளவிடத்தகாதான். எனினும் அவனுடைய வடிவங்கள் இறுதியுடையன என்பர். ஆதலால் பாரதா, போர் செய்.

முடிவுரை:

எனவே போரை நியாயப்படுத்தாத, எதிரிகளை கொல்ல சொல்லாத எந்த வேதமும் இல்லை எனலாம். அதற்க்கெல்லாம் தக்க காரணமும் சூழ்நிலையும் உள்ளது. மேலும் போருக்கென்று நெறியையும் வகுத்து தந்துள்ளது. ஆனால் இதுவெல்லாம் சும்மா வீட்டில் இருக்கும் அலல்து தவறு செய்யாத மக்கள் மீது பிரயோக படுத்த சொல்லவில்லை. மேலும் சமகாலத்த்தில் தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்பது போல வேத அறிவில்லாத அப்பாவிகளை தூண்டிவிட்டு கும்பலாய் சேர்ந்து இன்னொரு அபபவியை அடித்து கொலை செய்யும் நிலைக்கு வெறுப்புகளை விதைக்க தவறாக பயன்படுத்தப்பட்ட வசனங்கள் இவைகள். இது அரசாங்கங்களுக்கு படைகளுக்கு கொடுக்கப்பட்ட கட்டளைகள் ஆகும்.

அனைத்து வேதமும் ஒரே இறைவனிடத்தில் இருந்து வந்தது, அனைத்து வேதமும் ஒரே இறைவனைப்பற்றி தான் பேசுகிறது. எனவே வெறுப்பை விடுத்து உண்மை ஆன்மீகத்தை பற்றிய சில அடிப்படைகளை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அதற்க்கு வாசிக்க வாய்மை

புறமுதுகிட்டு ஓடுதல்

தமிழர் சமயம் 

எருது இல் உழவர்க்குப் போகு ஈரம் இன்னா;
கருவிகள் மாறிப் புறங்கொடுத்தல் இன்னா;
திருவுடையாரைச் செறல் இன்னா; இன்னா,
பெரு வலியார்க்கு இன்னா செயல். - (இன்னா நாற்பது 4)

புறங்கொடுத்தல் - முதுகுகாட்டுதல்

எருது இல்லாத உழவர்க்கு அருகிய ஈரம் துன்பமாம். கருவிகளை இழந்து போரில் புறமுதுகிடுதல் துன்பமாம். செல்வம் உடையவர்களிடம் கோபம் கொள்ளுதலும், திறனுடையவர்களுக்குத் தீங்கு செய்தலும் துன்பமாம்.

வெஞ்சமரில் புறம் கொடுத்து மீள வேண்டாம் (உலக நீதி 36)

பொருள்: கொடிய போரில் புறமுதுகு காட்டி திரும்பிவாராதே 
 
இஸ்லாம்  

''என் சமூகத்தாரே! உங்களுக்கு அல்லாஹ் விதித்துள்ள புண்ணிய பூமியில் நுழையுங்கள்; இன்னும் நீங்கள் புறமுதுகு காட்டித் திரும்பி விடாதீர்கள்; (அப்படிச் செய்தால்) நீங்கள் நட்டமடைந்தவர்களாகத் திரும்புவீர்கள்.'' (அல்குர்ஆன் 5:21)

கிறிஸ்தவம் & யூதம் 

ஆயுதமணிந்த வில்வீரரான எப்பிராயீம் புத்திரர் யுத்தநாளிலே முதுகு காட்டினார்கள். அவர்கள் தேவனுடைய உடன்படிக்கையைக் கைக்கொள்ளாமலும், அவருடைய கட்டளைகளின்படி நடக்கச் சம்மதியாமலும், அவருடைய செயல்களையும், அவர் தங்களுக்குக் காண்பித்த அதிசயங்களையும் மறந்தார்கள். (சங்கீதம் 78:9-11)

 10 கர்த்தர் யோசுவாவை நோக்கி, “உன் முகத்தைத் தரையில் கவிழ்த்து ஏன் விழுந்துகிடக்கிறாய்? எழுந்து நில்! 11 இஸ்ரவேல் ஜனங்கள் எனக்கு எதிராகப் பாவம் செய்தார்கள். அவர்கள் கீழ்ப்படியுமாறு கட்டளையிட்ட உடன்படிக்கையை மீறினார்கள். அழித்துவிடும்படி நான் கட்டளையிட்ட பொருட்களை எடுத்து வைத்திருக்கிறார்கள். அவர்கள் அதை திருடிவிட்டனர். அவர்கள் பொய் கூறிவிட்டனர். அப்பொருட்களை அவர்களுக்காக எடுத்துள்ளனர். 12 அதனால்தான் இஸ்ரவேல் படை போரிலிருந்து புறமுதுகு காட்டித் திரும்பிவிட்டது. அவர்கள் தவறு செய்ததாலேயே அவ்விதம் நடந்தது. நான் உங்களுக்கு உதவமாட்டேன். நீங்கள் அழிக்கவேண்டுமென நான் கட்டளையிட்டவற்றை அழிக்காவிட்டால் நான் உங்களோடு இருக்கமாட்டேன். 13 “இப்போதும் போய், ஜனங்களை பரிசுத்தப்படுத்து. ஜனங்களிடம், ‘உங்களை பரிசுத்தப்படுத்திக்கொள்ளுங்கள், நாளைக்குத் தயாராகுங்கள். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் இங்கு சிலர், கர்த்தர் அழிக்குமாறு கட்டளையிட்ட பொருட்களை வைத்துக்கொண்டிருப்பதாகக் கூறுகிறார். நீங்கள் அவற்றை அப்புறப்படுத்தாவிட்டால் உங்கள் பகைவர்களை ஒருபோதும் வெல்ல முடியாமல் போகலாம். (யோசுவா 7:12)

போர் நெறி


ஒரு மனிதன் எல்லா நேரத்திலும் எப்படி இருக்க வேண்டும் என்ற தெளிவான சட்டதிட்டங்களைச் சொல்லும் மார்க்கம் இஸ்லாம்.

போர் தொடர்பான சட்டங்களுள் ஒன்றாக, எப்போது போர் செய்ய வேண்டும்? என்பது குறித்தும் இஸ்லாம் தெளிவுபடுத்தி இருக்கிறது. முஸ்லிம்கள் போர் செய்ய வேண்டும் எனில் முதலில் அவர்களைக் கட்டுப்படுத்தும் ஒரு இஸ்லாமிய அரசு, அரசாங்கம் இருக்க வேண்டும். அந்த அரசு நியமித்த படைத் தலைவரின் தலைமையில் முஸ்லிம்கள் அணிதிரண்டு ஒரு படையாக இருந்து போர் செய்ய வேண்டும். இவ்வாறு இல்லாமல், முஸ்லிம்கள் தங்களது சுய முடிவின் அடிப்படையில் தனியாகவோ, குழுக்களாகவோ, கூட்டங்களாகவோ, இயக்கங்களாகவோ இருந்து முடிவெடுத்து கொண்டு போர் செய்யப் புறப்பட்டுச் செல்வதற்கு மார்க்கத்தில் அனுமதியில்லை.

போருக்கு வருவோருடன் மட்டுமே போர்

உங்களிடம் போருக்கு வருவோருடன் அல்லாஹ்வின் பாதையில் நீங்களும் போர் செய்யுங்கள்! வரம்பு மீறாதீர்கள்! வரம்பு மீறியோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான். (திருக்குர்ஆன் 2:190)

தமது உடன்படிக்கைகளை முறித்து, இத்தூதரை (முஹம்மதை) வெளியேற்றவும் திட்டமிட்டார்களே அக்கூட்டத்தினர் தாங்களாக உங்களுடன் (யுத்தத்தைத்) துவக்கியுள்ள நிலையில் அவர்களுடன் போர் செய்ய வேண்டாமா? அவர்களுக்கு அஞ்சுகிறீர்களா? நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் நீங்கள் அஞ்சுவதற்கு அல்லாஹ்வே அதிகத் தகுதியுள்ளவன்.
(திருக்குர்ஆன் 9:13)

பாதிக்கப்படும் போது போர்

"எங்கள் இறைவா! அநீதி இழைத்தோர் உள்ள இவ்வூரிலிருந்து எங்களை வெளியேற்றுவாயாக! உன்னிடமிருந்து பொறுப்பாளரை எங்களுக்கு ஏற்படுத்துவாயாக! உன்னிடமிருந்து உதவியாளரையும் எங்களுக்கு ஏற்படுத்துவாயாக!'' என்று கூறிக் கொண்டிருக்கின்ற பலவீனமான ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்காக அல்லாஹ்வின் பாதையில் போரிடாமலிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது? (திருக்குர்ஆன் 4:75)

"எங்கள் இறைவன் அல்லாஹ்வே'' என்று அவர்கள் கூறியதற்காகவே நியாயமின்றி அவர்களின் இல்லங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மனிதர்களில் ஒருவர் மூலம் மற்றவரை அல்லாஹ் தடுத்திருக்காவிட்டால் மடங்களும், ஆலயங்களும், வழிபாட்டுத்தலங்களும், அல்லாஹ்வின் பெயர் அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளிவாசல்களும் இடிக்கப்பட்டிருக்கும். தனக்கு உதவி செய்வோருக்கு அல்லாஹ்வும் உதவுகிறான். அல்லாஹ் வலிமையுள்ளவன்; மிகைத்தவன் (திருக்குர்ஆன் 22:39, 40)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில், தங்களை உயந்த குலம் என்று கருதும் மக்கள், பிற குலத்தைச் சேர்ந்த மக்கள் மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டார்கள்; அவர்களின் உரிமைகளைப் பறித்தார்கள். அடுத்தவர்கள் தங்களுக்கு அடிபணிந்து நடக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். இந்த இழிநிலையில் இருந்து மீட்பதற்காக பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக, அட்டூழியம் செய்பவர்களுக்கு எதிராக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போர்க்களத்தில் இறங்கினார்கள். உண்மைக்கும் உரிமைக்கும் உழைத்தார்கள்.
இவ்வாறு வரம்பு மீறும் ஒரு பெரும் கூட்டத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்தி, களத்தில் இறங்கிப் போர் செய்வதற்கும் இஸ்லாமிய அரசும், எதிரிகளின் எண்ணிக்கையில் பாதியளவு ஆட்பலமும் கட்டாயம் இருக்க வேண்டும் என்பதை ம
இவ்வாறு வரம்பு மீறும் ஒரு பெரும் கூட்டத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்தி, களத்தில் இறங்கிப் போர் செய்வதற்கும் இஸ்லாமிய அரசும், எதிரிகளின் எண்ணிக்கையில் பாதியளவு ஆட்பலமும் கட்டாயம் இருக்க வேண்டும் என்பதை மறந்துவிடக் கூடாது.

சமாதானத்தை ஏற்க வேண்டும்

(போரிலிருந்து) அவர்கள் விலகிக் கொள்வார்களானால் அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். கலகம் இல்லாதொழிந்து அதிகாரம் அல்லாஹ்வுக்குரியதாக ஆகும் வரை அவர்களுடன் போர் செய்யுங்கள்! அவர்கள் விலகிக் கொள்வார்களானால் அநீதி இழைத்தோர் மீதே தவிர (மற்றவர்கள் மீது) எந்த வரம்பு மீறலும் கூடாது. (திருக்குர்ஆன் 2:192, 193)

அவர்கள் சமாதானத்தை நோக்கிச் சாய்ந்தால் நீரும் அதை நோக்கிச் சாய்வீராக! அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக! அவனே செவியுறுபவன்; அறிந்தவன். (திருக்குர்ஆன் 8:61)

கொள்கையைப் பரப்புவதற்காகப் போர் இல்லை

இந்த மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை. வழி கேட்டிலிருந்து நேர் வழி தெளிவாகி விட்டது. தீய சக்திகளை மறுத்து அல்லாஹ்வை நம்புபவர் அறுந்து போகாத பலமான கயிற்றைப் பிடித்துக் கொண்டார். அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன். (திருக்குர்ஆன் 2:256)

(முஹம்மதே!) உமது இறைவன் நாடியிருந்தால் பூமியில் உள்ள அனைவரும் ஒட்டு மொத்தமாக நம்பிக்கை கொண்டிருப்பார்கள். நம்பிக்கை கொண்டவர்களாக ஆவதற்காக மக்களை நீர் நிர்பந்திக்கிறீரா? (திருக்குர்ஆன் 10:99)

"(ஏக இறைவனை) மறுப்பவர்களே! நீங்கள் வணங்குவதை நான் வணங்க மாட்டேன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோரில்லை. நீங்கள் வணங்குவதை நான் வணங்குபவன் அல்லன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோரில்லை. உங்கள் மார்க்கம் உங்களுக்கு. என் மார்க்கம் எனக்கு'' எனக் கூறுவீராக! (திருக்குர்ஆன் 109; 1-6)

போரில் வரம்பு மீறக் கூடாது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கலந்துகொண்ட அறப்போர்கள் ஒன்றில் பெண்ணொருத்தி கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டாள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதைக் கண்டித்தார்கள். (நூல்கள்: புகாரி, 3014. முஸ்லிம், 3587)

"பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்'' (புகாரி, 3015. முஸ்லிம், 3588. திர்மிதீ, அபுதாவூத், அஹ்மத், இப்னுமாஜா)

போர்க்களத்தில் போரிடுங்கள்! வரம்பு மீறாதீர்கள்! சிறுவர்களையும் மத குருமார்களையும் கொல்லாதீர்கள் என்பது நபிமொழி. அறிவிப்பவர்: புரைதா (ரலி), (நூல்: முஸ்லிம்.)

அப்துல்லாஹ் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
கொள்ளையடிப்பதை (பிறர் பொருளை அவரது அனுமதியின்றி பலவந்தமாக, பகிரங்கமாக அபகரித்துக் கொள்வதை)யும் (போரின் போது அல்லது பகைமையின் காரணத்தால்) ஒருவரின் அங்கங்களைச் சிதைப்பதையும் நபி (ஸல்) அவர்கள்  தடை செய்தார்கள். (நூல்: புஹாரி 2474)

இறைவனின் பெயரால், இறைவனின் பாதையில் போரிடுங்கள். இறைவனை மறு(த்து உண்மைக்கு எதிராக நட)ப்பவர்களுடன் போராடுங்கள்; அறப்போர் புரியுங்கள்; போர்ச் செல்வங்களில் கையாடல் செய்யாதீர்கள்; ஒப்பந்தங்களை முறிக்காதீர்கள்; அங்ககீனம் செய்யாதீர்கள்; குழந்தைகளைக் கொல்லாதீர்கள். (நூல்: முஸ்லிம் 3566)

போரின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குழந்தைகளைக் கொல்ல மாட்டார்கள். எனவே, நீரும் குழந்தைகளைக் கொல்லாதீர். (நூல்: முஸ்லிம் 3700)

அமைதியை விரும்பிய அகிலத்தின் தூதர்

இஸ்லாமிய வரலாற்றில் ஹுதைபிய்யா உடன்படிக்கை ஓர் உன்னத நிகழ்வாகும். முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரி 6ஆம் ஆண்டு உம்ரா எனும் வணக்கத்தை நிறைவேற்றுவதற்காகத் தமது தோழர்களுடன் மக்காவிற்கு வருகின்றார்கள். மக்கா மீது போர் தொடுக்க வேண்டும் என்ற நோக்கம் அவர்களுக்கு அறவே கிடையாது. ஆனால் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் புனிதப் பயணத்தை மக்காவாசிகள் ஒரு போர்ப்பயணமாகவே பார்த்தனர். 

நபி (ஸல்) அவர்கள் தம்முடன் புனித ஆலயத்தில் அறுத்துப் பலியிடுகின்ற ஒட்டகங்களை அழைத்து வருகின்றார்கள். அவர்களது எண்ணிக்கை 700 பேர் என அஹ்மத் 18152வது ஹதீஸிலும், 1400 பேர் என புகாரி 4153வது ஹதீஸிலும் பதிவாகியுள்ளது. இந்த எண்ணிக்கை மக்காவாசிகளை மிரட்டும்படியாக இருந்தது.

தோழர்களுடனான நபி (ஸல்) அவர்களது வருகை மண்ணில் புழுதியைக் கிளப்பியது போன்று மக்களிடம் போர்ப் பீதியைக் கிளப்பி விட்டிருந்தது. அந்தப் பீதியைப் போக்கும் விதமாக தமது பயணத்தின் நோக்கத்தைத் தெளிவுபடுத்தும் விதமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், கிராஷ் பின் உமைய்யா அல்குஸாயீயை மக்காவிற்கு ஸஃலப் என்ற ஒட்டகத்தில் ஏற்றி அனுப்பினார்கள். அவர் மக்காவில் நுழைந்ததும் அவரது ஒட்டகத்தைக் குறைஷிகள் அறுத்து விட்டனர். கிராஷையும் கொலை செய்ய முனைந்தனர். அங்கிருந்த பல்வேறு கிளையினர் அவர்களைத் தடுத்து விட்டனர். முடிவில் நபி (ஸல்) அவர்களிடமே அவர் திரும்ப வந்துவிட்டார்.

உடனே நபி (ஸல்) அவர்கள் உமர் (ரலி) அவர்களை மக்காவுக்கு அனுப்புவதற்காக அழைத்தார்கள். அதற்கு உமர் (ரலி), "அல்லாஹ்வின் தூதரே! குறைஷிகள் என்னைத் தாக்கி விடுவார்கள் என்று அஞ்சுகின்றேன். என்னைத் தாக்குவதை விட்டும் தடுத்து எனக்கு உதவுகின்ற பனூ அதீ கிளையார்களில் யாருமே அங்கு இல்லை. நான் குறைஷிகளின் மீது கொண்டிருக்கின்ற விரோதத்தையும் அவர்கள் மீது நான் கொண்டிருக்கும் கடினப் போக்கையும் தாங்கள் அறிந்திருக்கிறீர்கள். என்னை விட குறைஷிகளிடம் மரியாதை மிக்க மனிதரான உஸ்மான் (ரலி) அவர்களை நான் தங்களுக்குக் காட்டுகிறேன்'' என்று கூறினார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உஸ்மான் (ரலி) அவர்களை அழைத்தார். "நாங்கள் போர் செய்வதற்கு வரவில்லை. அல்லாஹ்வின் ஆலயத்தின் கண்ணியத்தை மதித்து அதில் வணங்குவதற்காகத் தான் வருகின்றோம்' என்று குறைஷிகளிடம் தெரிவிக்க வேண்டும் என்று உஸ்மானிடம் சொல்லி அனுப்புகின்றார்கள்.

உஸ்மான் (ரலி) புறப்பட்டு அபூசுஃப்யானையும் குறைஷிகளின் முக்கியத் தலைவர்களையும் சந்தித்து, நபி (ஸல்) அவர்கள் தன்னை அனுப்பி வைத்த செய்தியையும் அவர்களிடம் தெரிவித்தார். அதற்குக் குறைஷிகள், "நீ தவாஃப் செய்ய விரும்பினால் தவாஃப் செய்து கொள்'' என்று உஸ்மான் (ரலி) அவர்களிடம் கூறினார்கள். அதற்கு அவர், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தவாஃப் செய்கின்ற வரை நான் தவாஃப் செய்யப் போவதில்லை'' என்று பதிலளித்தார். குறைஷிகள் உஸ்மான் (ரலி) அவர்களைத் திரும்ப விடாமல் தங்களிடமே நிறுத்தி வைத்துக் கொண்டனர். (நூல்: முஸ்னத் அஹ்மத் 18152)

ஹுதைபிய்யா உடன்படிக்கை ஒரு வரலாற்றுப் பதிவாகும். இஸ்லாமிய மார்க்கம் சாந்தி, சமாதான மார்க்கம் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

 

கிறிஸ்தவம் 


நீர் அற்புதமாகக் காட்சியளிக்கிறீர்! நன்மைக்காகவும், நீதிக்காகவும் சென்று போரில் வெல்லும். அதிசயங்களைச் செய்வதற்கு வல்லமைமிக்க உமது வலக்கரத்தைப் பயன்படுத்தும். (சங்கீதம் 45:4)