ஆன்முலை அறுத்த அறனிலோர்க்கும்மாண் இழை மகளிர் கருச்சிதைவோர்க்கும்பார்ப்பார் தப்பிய கொடுமையோர்க்கும்வழுவாய் மருங்கஇல் கழுவாயும் உள எனநிலம் புடை பெயர்வது ஆயினும், ஒருவன்செய்இ கொன்றோர்க்கு உய்தி இல்லெனஅறம்பாடிற்றே ஆயிழை கணவ - (புறநானூறு பாடல்-34)
பசுவின் காம்பினை அறுத்தவன் கெடுங்கோலாளன். மகளிர் கருவினைச் இதைத்தவன் மனிதநேயம் அற்றவன். அந்தணர்களுக்குக் கொடுமை இழைத்தவன் என இம்மூன்று பேரை மன்னிக்கலாம். ஆனால், தவறான செய்தி சொல்லி பெரும் கேடுவிளைவிப்பவனுக்கு மன்னிப்பே இல்லை. அவனுக்கு மேலுலகத்திலும் உய்தி இல்லென என்று கூறி இதுவே அறநெறி போற்றும் வழியாகும் என உவமை கூறுஇறது.
இஸ்லாம்
(உங்களை வெட்டிய) அவர்கள் எங்கே காணக்கிடைப்பினும், அவர்களைக் கொல்லுங்கள்; இன்னும், அவர்கள் உங்களை எங்கிருந்து வெளியேற்றினார்களோ, அங்கிருந்து அவர்களை வெளியேற்றுங்கள்; ஏனெனில் ஃபித்னா (குழப்பமும், கலகமும் உண்டாக்குதல்) கொலை செய்வதை விடக் கொடியதாகும். இருப்பினும், மஸ்ஜிதுல் ஹராமில் அவர்கள் (முதலில்) உங்களிடம் சண்டையிடாத வரையில், நீங்கள் அவர்களுடன் சண்டையிடாதீர்கள்; ஆனால் (அங்கும்) அவர்கள் உங்களுடன் சண்டையிட்டால் நீங்கள் அவர்களைக் கொல்லுங்கள் - இதுதான் நிராகரிப்போருக்கு உரிய கூலியாகும் (குர்ஆன் 2:191)
கிறிஸ்தவம் & யூதம்
தாவீதைப் பின்தொடந்தவர்களில் சிலர் கெட்டவர்களாகவும், குழப்பம் செய்வபவர்களாகவும் இருந்தனர். - (1 சாமுவேல் 30:22)