மார்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மார்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

நேர்வழி

தமிழர் சமயம் 

இயங்கும் உலகினில் ஈசன் அடியார்
மயங்கா வழிசெல்வர் வானுல காள்வர்
புயங்களு மெண்டிசை போதுபா தாள
மயங்காப் பகிரண்ட மாமுடி தானே. திருமந்திரம் 1836.

(ப. இ.) ஓவாது சுழலும் இவ்வுலகினில் சிவபெருமானின் திருவடியுணர்வு கைவரப்பெற்ற சிவனடியார்கள் செந்நெறியிற் செல்வர்; வான் உலகை ஆள்வர். அச் சிவபெருமான் திருத்தோள்கள் புலம் எட்டிலும் நலம்புரிய எட்டாயின. போதாகிய அவன் திருவடித் தாமரை பாதாளம் ஏழினுக்கும் அப்பால்; திருமுடி. வெளியில் திகழும் புறவண்டங்களுக்கும் அப்பாலாம்.

இஸ்லாம் 

நிச்சயமாக எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்கிறார்களோ, அவர்களுக்கு அவர்களுடைய இறைவன் அவர்கள் நம்பிக்கை கொண்ட காரணத்தினால் நேர்வழி காட்டுவான்; இன்பமயமான சுவர்க்கபதிகளில் அவர்களுக்குக் கீழ் நதிகள் ஓடிக்கொண்டிருக்கும். (குர்ஆன் 10:9)

(பின்பு) நாம் சொன்னோம்: "நீங்கள் அனைவரும் இங்கிருந்து இறங்கிவிடுங்கள்; என்னிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக நேர்வழி வரும்போது, யார் என்னுடைய (அவ்)வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எத்தகைய பயமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்." - (குர்ஆன் 2:38)

மனிதர்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக இதற்கு முன்னரும் (வேதங்களை இறக்கினான்); (நன்மை, தீமைகளைப்) பிரித்துக் காட்டுகிறதையும் இறக்கிவைத்தான்; ஆகவே, எவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரிக்கின்றார்களோ அவர்களுக்குக் கடும் தண்டனையுண்டு; அல்லாஹ் யாவரையும் மிகைத்தோனாகவும், தண்டிப்போனாகவும் இருக்கின்றான். (குர்ஆன்  3:4)

இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாகப் பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்: அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த அருட்கொடையை நினைத்துப் பாருங்கள்; நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள்: உங்கள் இதயங்களுக்கிடையே அன்பை ஏற்படுத்தினான்; அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்; இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக்குழியின் விளிம்பின் மீது இருந்தீர்கள்; அதிலிருந்தும் அவன் உங்களைக் காப்பாற்றினான்; நீங்கள் நேர்வழி பெறும் பொருட்டு, அல்லாஹ் இவ்வாறு தன் வசனங்களை உங்களுக்குத் தெளிவாக்குகின்றான். (குர்ஆன் 3:103)

நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும், நேர்வழியையும் - அதனை நாம் வேதத்தில் மனிதர்களுக்கு விளக்கிய பின்னரும் - யார் மறைக்கின்றார்களோ, அவர்களை அல்லாஹ் சபிக்கிறான்; மேலும், அவர்களைச் சபிப்ப(தற்கு உரிமை உடைய)வர்களும் சபிக்கிறார்கள். (குர்ஆன் 2:159)

 நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக! (அல்குர்ஆன் : 1:6)

மேலும், (உலகில் அவர்களுக்கு மத்தியில்) அவர்களுடைய நெஞ்சங்களிலிருந்த குரோதத்தையும் நாம் நீக்கிவிடுவோம்; அவர்களுக்குக் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்: இன்னும், அவர்கள் கூறுவார்கள்: "இ(ந்தப் பாக்கியத்தைப் பெறுவ)தற்குரிய நேர்வழியை எங்களுக்குக் காட்டிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரியதாகும்; அல்லாஹ் எங்களுக்கு நேர்வழி காட்டியிராவிட்டால், ஒருக்காலும் நாங்கள் நேர்வழி அடைந்திருக்கமாட்டோம்; எங்கள் இறைவனுடைய தூதர்கள் சத்தியத்தையே நிச்சயமாகக் கொண்டுவந்தார்கள்:" (அப்பொழுது) "இந்தச் சொர்க்கம் - (உலகில்) நீங்கள் செய்துகொண்டிருந்த (நன்மையான)வற்றின் காரணமாக, இதன் வாரிசுகளாக நீங்கள் ஆக்கப்பட்டிருக்கிறீர்கள்" என்று அழைக்கப்படுவார்கள். (குர்ஆன் 7:43)

யூதம் 

என்னைப் பொறுத்த வரை உங்களுக்காக நான் ஜெபிப்பதை என்றும் நிறுத்தமாட்டேன். நிறுத்தினால், கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்தவனாவேன். நல்வாழ்க்கைக்கான சரியான வழியை போதித்துக்கொண்டே இருப்பேன். (1 சாமுவேல் 12:23)

கர்த்தரைப் பின்பற்றுவதை ஒருவன் தெரிந்துகொண்டால் அவன் வாழ்வதற்குரிய நல் வழியை தேவன் காட்டுவார். -  (சங்கீதம் 25:12)

கர்த்தர், “நீ வாழவேண்டிய வழியை உனக்கு போதித்து வழிநடத்துவேன். உன்னைக் காத்து உனக்கு வழிகாட்டியாயிருப்பேன் என்று கூறுகிறார். - (சங்கீதம் 32:8)

கிறிஸ்தவம் 

ஆனால் உண்மை வழியைப் பின்தொடர்ந்து செல்கிறவர்கள் ஒளியிடம் வந்தடைகிறார்கள். பிறகு, அந்த ஒளி அவர்கள் செய்த செயல்கள் தேவன் மூலமாகச் செய்த நற்செயல்கள் எனக் காட்டும் என்று இயேசு கூறினார். -  (யோவான் 3:21)

அக்கிருபை நமக்குத் தெளிவானது. நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்து வந்தபோதுதான் அக்கிருபை நமக்குப் புலப்படுத்தப்பட்டது. இயேசு மரணத்தை அழித்து நமக்கெல்லாம் நித்திய வாழ்வுக்குரிய வழியைக் காட்டினார். நற்செய்தியின் மூலமாகவே நமக்கு அவர் நித்திய வாழ்வைப் பெறுவதற்கான வழியைக் காட்டினார். -  (2 தீமோத்தேயு 1:10)


எது உண்மையாக இறைவனின் மதம், சமயம் [அ] மார்க்கம் !


மதங்கள் இரண்டு வகை வகைப்படும் 

  • உண்மை சமயம் - கறைபடா அல்லது முடிவுறா மறைநூலை கொண்டது.
  • பொய் சமயம் - கறைபட்ட, முடிவுற்ற அல்லது மனிதன் எழுதிய மறைநூலை கொண்டது. 
"கறைபடா" என்றால், அது எவ்வாறு வழங்கப் பட்டதோ அவ்வாறே இன்றுவரை மாறாது முதல் நூலுக்கான அல்லது வழிநூலுக்கான இலக்கணத்தோடு இருத்தல் என்று பொருள். 
 
"முடிவுறா" என்றால், இன்றும் அது நடைமுறைப் படுத்த வேண்டிய சட்டமாக இருத்தல் என்று பொருள். அதாவது அதற்குப் பிறகு எந்த வழிநூலும் வழங்கப் படவில்லை என்றும், அந்த சொற்களில் திரிபு ஏதும் ஏற்படுத்தவில்லை என்றும் பொருள். 
 
"கறைபட்ட" என்றால், அதில் புது செய்திகள் உரிமையில்லா ஆசிரியர் மூலம் இணைக்கப்பட்டோ, நீக்கப்பட்டோ இருத்தல் என்று பொருள். தீர்க்கதரிசனம் சொல்லப்பட்ட நபர்தான் அந்த குறிப்பிட்ட மறைநூலில் சேர்க்கவோ நீக்கவோ உரிமையுள்ளவர். 
 
"முடிவுற்ற" என்றால், அந்த நூல் பல காரணங்களளால் ஓதி உணர தகுதியற்றதாக மாறியிருப்பதாகும். பொருள் திரிதல், மறுவுதல், பாரம்பரியமாக கற்றுத்தரும் ஆசிரியர் அற்றுப் போதல், அதன் அடுத்த வழி நூல் தோன்றி இருத்தல் போன்றவைகள் சில காரணங்களாம். முடிவுற்ற மறைநூல்களிலேயே மக்களால் கறைபடுத்த முடியும் என்பது கூடுதல் தகவல். 
 
"மனிதன் எழுதிய" மறைநூல் என்றால், பல்வேறு மொழியில் உள்ள வேதங்களை கற்று, தனது மொழி அறிவைக்கொண்டு நூல் ஒன்றை எழுதி அதை இறைவனிடமிருந்து வந்ததாக அல்லது புனிதமானதாக கூறி ஒரு சமயத்தை துவங்குவது. 
 
ஒரு நூலின் தன்மையை மறைநூல்களின் வரையறையினையோடு ஒப்பிட்டு அதன் முழு வடிவமைப்பை ஆய்வு செய்யும் பொழுதும், அந்த நூலை எழுதிய குருவின் தன்மையை ஆய்வு செய்யும் பொழுதும் உண்மை சமயம் எது? பொய் சமயம் எது? என்று கண்டறியலாம்.

இறைவனின் ஒவ்வொரு நூலும் அது பேசும் சமயம் தான் உண்மை மார்க்கம் என்று கூறுவதை பார்க்கலாம். உதாரணங்கள்,

தமிழர் சமயம்


சிவம்அல்லது இல்லை இறையே; சிவம்ஆம்
தவம்அல்லது இல்லை; தலைப்படு வார்க்குஇங்கு
அவம்அல்லது இல்லை அறுசம யங்கள்;
தவம்அல்ல; நந்திதாள் சேர்ந்துஉய்யும் நீரே (திருமந்திரம் 1534)

பொருள்: சிவத்தை விட்டால் வேறு கடவுள் யாரும் கிடையாது; சிவமாகவே ஆகிவிடுகிற தவத்தை விட்டால் வேறு தவம் ஏதும் கிடையாது; பிற மதங்களின் வழியாகக் கடவுளைக் கண்டுகொள்வோம் என்று முயல்கிறவர்களின் முயற்சி வீண் முயற்சியே அல்லாமல் வேறில்லை. ஆகவே வேண்டாத வேலைகள் செய்வதைவிட்டு, நல்லபடியாகச் சிவத்தின் திருவடி சேர்ந்து விடுதலை பெறத் தலைப்படுங்கள். 
 
வந்த மடம்ஏழு மன்னும்சன் மார்க்கத்தின்
முந்தி உதிக்கின்ற மூலன் மடவரைத்
தந்திரம் ஒன்பது சார்வுமூ வாயிரம்
சுந்தர ஆகமச் சொல்மொழிந் தானே. (திருமந்திரம்: 38) 
 

இஸ்லாம்


‘….இன்னும் இஸ்லாத்தை மார்க்கமாக நான் பொருந்திக் கொண்டேன்….” (குர்ஆன் 5:3
 
‘...நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் (ஏற்றுக்கொள்ளப்பட்ட) மார்க்கம் இஸ்லாமாகும்.” (குர்ஆன் 3:19) 
 
‘இஸ்லாம் அல்லாததை அல்லாஹ் ஒப்புக் கொள்ள மாட்டான்” (அல்குர்ஆன் 3:85) 

கிறிஸ்தவம்

அதற்கு இயேசு: “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” (யோவான் 14:6).

சத்தியத்தின் மூலம் இவர்களைப் புனிதப்படுத்துங்கள்; உங்களுடைய வார்த்தைதான் சத்தியம். - (யோவான் 17:17)

முடிவுரை

உண்மை மதமும் இறைவனும் உண்மை குரு மூலம் வழங்கப்பட்ட உண்மை மறைநூல் வழியாகவே அறியப் படுகின்றனர். அந்த வழிமுறை வேதங்கள் தலைப்பில் ஒவ்வொன்றாக கொடுக்கப்பட்டுள்ளது.