இந்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இந்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

உருவ வணக்கம்

உருவ வணக்கம் என்பது

  • கையால் செய்யப் பட்ட கற்சிலைகள்
  • பொன்னால், வெள்ளியால் அல்லது வெண்கலத்தால் செய்யப்பட்ட விக்கிரகங்கள்,
  • வரையப்பட்ட உருவங்கள்
ஆகியவைகளை வணங்குவது ஆகும். இவைகள் மனிதர்களாகவோ, விலங்குகளாகவோ, இரண்டும் கலந்தோ இருக்கலாம்.
 

இந்து மதம்


‘ஜீவனுள்ள தேவனை மறுத்து, கைகளினால் செய்யப்பட்ட, கண்களினால் காணத்தக்கதான உருவங்களை வணங்குபவர்கள் பயங்கரமான நரகத்திற்கு செல்வார்கள்’ (யஜூர்வேதம் 40:8,9)

சிற்றறிவுடையோருக்கும் முட்டாளுக்கும் நான் ஒருபோதும் தோன்றுவதில்லை. நான் எனது அந்தரங்க சக்தியால் கவரப்பட்டுள்ளேன், எனவே நான் பிறப்பற்றவன், அழிவற்றவன் என்பதை இவர்கள் அறிவதில்லை. - (கீதை 7:25)     

தமிழர் சமயம் 


சிவ வாக்கியர் 

செங்கலும் கருங்கலும் சிவந்த சாதி ­ங்கமும்
செம்பிலும் தராவிலும் சிவன் இருப்பன் என்கிறீர்
உம்மதம் அறிந்து நீர் உம்மை நிர் அறிந்த பின்
அம்பலம் நிறைந்தர் ஆடல் பாடல் ஆகுமே!

ஓசை உள்ள கல்லை நீர் உடைத்திரண்டாய் செய்துமே
வாச­ல் பதித்த கல்லை மழுங்கவே மிதிக்கிறீர்
பூசைக்கு வைத்த கல்­ல் பூவும் நீரும் சாத்துகிறீர்
ஈசனுக்கு உகந்த கல் எந்தக்கல்லு சொல்லுமே

நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புட்பஞ்சாத்தியே
சுற்றி வந்த மொணமொணன்று சொல்லு மந்திரம் ஏதடா
நட்டகல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ.

(சிவவாக்கியர் யார், எவ்விடத்தை சார்ந்தவர் என்று தெரியவில்லை. அவர் விட்டு சென்ற பாடல்கள் பெயரால் சிவவாக்கியர் என்று பெயர் வந்ததாக கருதப்படுகிறது. தென்னாகத்தை சேர்ந்த சைவத் துறவிகளாகக் கருதப்படும் சித்தர்களுள் ஒருவராக கொள்ளப் படுகிறார். அவர் வாழ்ந்த காலம் தெரியவில்லை.)  
 

குதம்பைச் சித்தர் 


கல்­னைச் செம்பினைக் கட்டையைக் கும்மிடல்
புல்லறிவாகு மேடிலி குதம்பாய்லி புல்லறிவாகுமேடி
மெய்த்தேவனொன்றென்று வேண்டாத பன்மதம்
பொய் தேவைய்ப் போற்று மேடி குதம்பாய்
பொய்த் தேவைப் போற்றும் 

என்று கற்சிலைகளின் வணக்கத்தைக் கண்டித்து குதம்பைச் சித்தர் பாடியுள்ளார். 

அகஸ்தியர் ஞானம் 

அண்டராண்டம் கடந்து நின்ற சோதி தானு
மவனிதனிலுடைந்த கல்­லமருமோ சொல்
எண்டிசையு மெவ்வுயிரு மான சோதி
இனமரங் கல்லு களியிருப் பாரோதான்

 என்று அகஸ்தியர் ஞானம் 56வது பாடல் அறுவிக்கிறது.

(அகத்தியர் ஒருவரல்ல பலர் என்று ஆய்வுகள் சொல்லுகிறது, இதில் சில ஆரியர்களும் அடங்குவர்)

குறள் 

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது - (குறள் 7.)

பொழிப்பு: தனக்கு ஒப்புமை இல்லாதவனுடைய திருவடியைப் பொருந்தி நினைக்கின்றவர்க்கு அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது.

ஔவையாரின் ஞானக்குறள்

தனக்கோ ருருவில்லை தானெங்கு மாகி
மனத்தகமாய் நிற்கு மது. - (154)

உருவற்ற முத்தியானது, உடலில் எங்கும் பரவி, மனமுதிக்கும் இடத்தில் நிலைபெற்று நிற்கும்.

உருவ மொன்றில்லை யுணர்வில்லை யோதும்
அருவமுந் தானதுவே யாம். - (153) 
 
 
திருமந்திரம் 
 
"மாடத்துளான் அலன் மண்டபத்தான் அலன்
கூடத்துளான் அலன் கோயில் உள்ளான் அலன்
வேடத்துளான் அலன் வேட்கை விட்டார் நெஞ்சில்
மூடத்துளே நின்று முத்தி தந்தானே  (திருமந்திரம் 2614)

மாடத்தில் இல்லை, மண்டபத்தில் இலை, கூடத்தில் இல்லை, கோவிலில் இல்லை, வேடத்தில் (உருவம்,  இன்று சொல்லப்படும் சிவன் என்னும் கதா பாத்திரம், லிங்கம், அல்லது ருத்ராட்சை போன்ற பொருள்களில்) இல்லை. அவன் ஆசை இல்லாதவர் நெஞ்சில் இருக்கின்றான், அவனே முக்தி தருகிறான்.

கிறிஸ்தவம் & யூத மதம் 


 விக்கிரகங்களுக்குப் படைத்த அசுசியானவைகளுக்கும், வேசித்தனத்திற்கும், நெருக்குண்டு செத்ததிற்கும், இரத்தத்திற்கும், விலகியிருக்கும்படி அவர்களுக்கு நாம் எழுதவேண்டுமென்றும் நான் தீர்மானிக்கிறேன். (அப்போஸ்தலர் 15:20)

எவையெனில், விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளுக்கும், இரத்தத்திற்கும், நெருக்குண்டு செத்ததிற்கும், வேசித்தனத்திற்கும், நீங்கள் விலகியிருக்க வேண்டுமென்பதே. (அப்போஸ்தலர் 15:28)

 விசுவாசிகளான புறஜாதியார் இப்படிப்பட்டவைகளைக் கைக்கொள்ளாமல், விக்கிரகங்களுக்குப் படைத்ததிற்கும், இரத்தத்திற்கும், நெருக்குண்டு செத்ததிற்கும், வேசித்தனத்திற்கும், விலகியிருக்கவேண்டுமென்று நாங்கள் தீர்மானம்பண்ணி, அவர்களுக்கு எழுதியனுப்பினோமே என்றார்கள். (அப்போஸ்தலர் 21:25)

 விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைப் புசிக்கிற விஷயத்தைப்பற்றி, உலகத்திலே விக்கிரகமானது ஒன்றுமில்லையென்றும் ஒருவரேயன்றி வேறொரு தேவன் இல்லையென்றும் அறிந்திருக்கிறோம். 9. அநியாயக்காரர் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா? வஞ்சிக்கப்படாதிருங்கள்; வேசிமார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும், 10. திருடரும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்காரரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை. (I கொரிந்தியர் 8:4)

 ஆகிலும், இந்த அறிவு எல்லாரிடத்திலும் இல்லை. சிலர் இன்றையவரைக்கும் விக்கிரகத்தை ஒரு பொருளென்று எண்ணி விக்கிரகத்துக்குப் படைக்கப்பட்டதைப் புசிக்கிறார்கள்; அவர்களுடைய மனச்சாட்சி பலவீனமாயிருப்பதால் அசுசிப்படுகிறது. (I கொரிந்தியர் 8:7)

 ஜனங்கள் புசிக்கவும் குடிக்கவும் உட்கார்ந்து விளையாடவும் எழுந்திருந்தார்களென்று எழுதியிருக்கிறபடி, அவர்களில் சிலர் விக்கிரகாராதனைக்காரர் ஆனதுபோல நீங்களும் ஆகாதிருங்கள். (I கொரிந்தியர் 10:7)

 ஆகையால் எனக்குப் பிரியமானவர்களே, விக்கிரகாராதனைக்கு விலகி ஓடுங்கள். (I கொரிந்தியர் 10:14)

 இப்படியிருக்க, விக்கிரகம் ஒருபொருளென்றும், விக்கிரகத்துக்குப் படைக்கப்பட்டது ஒரு பொருளென்றும் நான் சொல்லுகிறேனோ? (I கொரிந்தியர் 10:19)

 ஆயினும் இது விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டதென்று ஒருவன் உங்களுக்குச் சொன்னால், அப்படி அறிவித்தவனிமித்தமும் மனச்சாட்சியினிமித்தமும் புசியாதிருங்கள், பூமியும் அதின் நிறைவும் கர்த்தருடையது. (I கொரிந்தியர் 10:28)

நீங்கள் அஞ்ஞானிகளாயிருந்தபோது ஏவப்பட்டபடியே, ஊமையான விக்கிரகங்களிடத்தில் மனதைச் செலுத்தினீர்களென்று உங்களுக்குத் தெரியுமே. (I கொரிந்தியர் 12:2)

 தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது? நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே. (II கொரிந்தியர் 6:16)

19. பாவ இயல்புக்குரிய செயல்கள் வெளிப்படையாகத் தெரிகின்றன. அவை பாலியல் முறைகேடு, அசுத்தமான நடத்தை, வெட்கங்கெட்ட நடத்தை, 20  சிலை வழிபாடு, ஆவியுலகத் தொடர்பு, பகை, சண்டை சச்சரவு, பொறாமை, கோப வெறி, கருத்துவேறுபாடு, பிரிவினை, மதப்பிரிவு, 21  மற்றவர்களைப் பார்த்து வயிறெரிதல், குடிவெறி, குடித்துக் கும்மாளம் போடுதல் போன்றவையாகும் - (கலாத்தியர் 5 அதிகாரம் 19-21)

சென்ற வாழ்நாட் காலத்திலே நாம் புறஜாதிகளுடைய இஷ்டத்தின்படி நடந்துகொண்டது போதும்; அப்பொழுது நாம் காம விகாரத்தையும் துர்இச்சைகளையும் நடப்பித்து, மதுபானம்பண்ணி, களியாட்டுச்செய்து, வெறிகொண்டு, அருவருப்பான விக்கிரகாராதனையைச் செய்துவந்தோம். (I பேதுரு 4:3)

பிள்ளைகளே, நீங்கள் விக்கிரகங்களுக்கு விலகி, உங்களைக் காத்துக்கொள்வீர்களாக. ஆமென். (I யோவான் 5:21)

ஆகிலும், சில காரியங்களைக்குறித்து உன்பேரில் எனக்குக் குறை உண்டு; விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிப்பதற்கும் வேசித்தனம் பண்ணுவதற்கும் ஏதுவான இடறலை இஸ்ரவேல் புத்திரர்முன்பாகப் போடும்படி பாலாக் என்பவனுக்குப் போதனை செய்த பிலேயாமுடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்கள் உன்னிடத்திலுண்டு. (வெளி 2:14

 வேசித்தனம்பண்ணவும் விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிக்கவும் அவர்களுக்குப் போதித்து, அவர்களை வஞ்சிக்கும்படி நீ அவளுக்கு இடங்கொடுக்கிறாய். (வெளி 2:20

அப்படியிருந்தும், அந்த வாதைகளால் கொல்லப்படாத மற்ற மனுஷர்கள் பேய்களையும், பொன் வெள்ளி செம்பு கல்மரம் என்பவைகளால் செய்யப்பட்டவைகளாயும் காணவும் கேட்கவும் நடக்கவுமாட்டா தவைகளாயுமிருக்கிற விக்கிரகங்களையும் வணங்காதபடிக்குத் தங்கள் கைகளின் கிரியைகளை விட்டு மனந்திரும்பவுமில்லை; (வெளி 9:20)

பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார். (வெளி 21:8)

நாய்களும், சூனியக்காரரும், விபசாரக்காரரும், கொலைபாதகரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யை விரும்பி அதின்படி செய்கிற யாவரும் புறம்பே இருப்பார்கள். (வெளி 22:15)

அவர்களுடைய விக்கிரகங்கள் வெள்ளியும், பொன்னும், மனுஷருடைய கை வேலையுமாயிருக்கிறது. அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது; அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது. அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது. அவைகளுக்கு மூக்கிருந்தும் முகராது. அவைகளுக்குக் கைகளிருந்தும் தொடாது; அவைகளுக்குக் கால்களிருந்தும் நடவாது; தங்கள் தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது. அவைகளைப் பண்ணுகிறவர்களும் அவைகளை நம்புகிறவர்கள் யாவரும், அவைகளைப் போலவே இருக்கிறார்கள். - (சங்கீதம்115:4-8; 135:15-18)

விக்கிரங்களை உருவாக்குகிற யாவரும் வீணர். அவர்களால் இச்சிக்கப்பட்டவைகள் ஒன்றுக்கும் உதவாது: அவைகள் ஒன்றும் காணாமலும், ஒன்றும் அறியாமலும் இருக்கிறதென்று தங்களுக்கு வெட்கமுண்டாக அவைகளுக்குதாங்களே சாட்சிகளாயிருக்கிறார்கள் - (ஏசாயா44:9-19)

விக்கிரகங்கள் நன்மையோ, தீமையோ செய்ய சக்தியற்றவைகள்.அவைகளுக்குப்பயப்பட வேண்டாம். - (எரேமியா 10:3-5)

அநியாயக்காரர் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா? வஞ்சிக்கப்படாதிருங்கள்; வேசிமார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும் - (1கொரிந்தியர். 6:9,10)

யாதொரு விக்கிரஹத்தை உருவாக்கி நமஸ்கரிக்க வேண்டாம்! [பைபிள் யாத்திராகமம் 20:14]

 தங்கள் விக்கிரகமாகிய மரத்தைச் சுமந்து, இரட்சிக்கமாட்டாத தேவனைத் தொழுது கொள்கிறவர்கள் அறிவில்லாதவர்கள். - (ஏசாயா 45:20)

இஸ்லாம் 


அவர்களுக்கு நடக்கக்கூடிய கால்கள் உண்டா? அல்லது அவர்களுக்கு பிடிப்பதற்குரிய கைகள் உண்டா? அல்லது அவர்களுக்குப் பார்க்கக் கூடிய கண்கள் உண்டா? அல்லது அவர்களுக்குக் கேட்கக் கூடிய காதுகள் உண்டா? (நபியே!) நீர் கூறும்; ”நீங்கள் இணை வைத்து வணங்கும் (உங்கள்) தெய்வங்களை (எல்லாம்) அழைத்து, எனக்கு(த் தீங்கு செய்திட) சூழ்ச்சி செய்து பாருங்கள் – (இதில்) எனக்குச் சிறிதும் அவகாசம் கொடுக்காதீர்கள்”” என்று (அல்குர்ஆன் 7:195)

ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதல் அம்புகள் எறிந்து குறி கேட்பதும் ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களில் உள்ளவையாகும்(அல்குர்ஆன் 5-90)

அல்லாஹ்வையன்றி, சிலைகளை வணங்குகிறீர்கள் – மேலும், நீங்கள் பொய்யைச் சிருஷ்டித்துக் கொண்டீர்கள்; நிச்சயமாக, அல்லாஹ்வைத் தவிர நீங்கள் வணங்கி வரும் இவை உங்களுக்கு ஆகார வசதிகள் அளிக்கச் சக்தியற்றவை; ஆதலால், நீங்கள் அல்லாஹ்விடமே ஆகார வசதிகளைத் தேடுங்கள்; அவனையே வணங்குங்கள்; அவனுக்கே நன்றி செலுத்துங்கள்; அவனிடத்திலேயே நீங்கள் திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள். (அல்குர்ஆன் 29:17)

முடிவுரை 

விக்கிரகங்களை வணங்குவதை வெறுக்காத ஒரே ஒரு மறை நூல் கிடையாது. பின்னூட்டத்தில் மேலும் பல நூறு வசனங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. 

 

 

"நான் இந்துவாக இருக்க விரும்பும் காரணம்" என்ற VIRAL பதிவிற்கு இந்து புத்தகங்களின் பதில்கள்

இந்துவாக பெருமை கொள்ளுங்கள்!
அதோடு கொஞ்சம் அதன் உண்மை நிலையை வாசியுங்கள், ஆய்வு செய்யுங்கள்.


இஸ்லாமியனாய் இரு என குரான் சொல்கிறது...
கிறிஸ்துவனாய் இரு என பைபிள் சொல்கிறது...
மனிதனாய் இரு என கீதை சொல்கிறது...

கடவுள் ஏழாவது வானத்தில் இருக்கிறார் என குரான் சொல்கிறது...
நாலாவது வானத்தில் இருக்கிறார் என பைபிள் சொல்கிறது...
கடவுள் உன்னுள்ளே தான் இருக்கிறார் என கீதை சொல்கிறது...

காபிர்களை (இசுலாமியர்கள் அல்லாதவர்களை) கொல் என குரான் சொல்கிறது...
சிலை வழிபாடு செய்பவர்களை தண்டி என பைபிள் சொல்கிறது....

உலகமே உன் குடும்பம் தான் என கீதை சொல்கிறது.....




1. கடவுள் இல்லை என்று சொன்னாலும் குற்றவாளி என்று சொல்லாத மதம்?

அக்ஞஷ் சாஷ்ரத்ததானஷ் சஸம்ஷயாத்மா வினஷ்யதி நாயம் லோகோ (அ)ஸ்தி ந பரோ ந ஸுகம் ஸம்ஷயாத்மன - கீதை 4:40

பொருள்: ஆனால், சாஸ்திரங்களை சந்தேகிக்கும் நம்பிக்கையற்ற முட்டாள் மனிதர்கள், இறையுணர்வை அடைவதில்லை; அவர்கள் வீழ்ச்சியடைகின்றனர். சந்தேகம் கொள்ளும் ஆத்மாவிற்கு இவ்வுலகிலோ மறு உலகிலோ இன்பம் இல்லை. - பகவத் கீதை 4.40

பதில் : இறை உணர்வை அடையாதவர்களுக்கு இன்பம் இல்லை எனவே குற்றம் என்றுதானே இந்துமதம் சொல்கிறது.

2. இன்றைய தினத்தில் இத்தனை மணிக்கோ அல்லது தினமுமோ கோயிலுக்கு சென்றே ஆகவேண்டும் என்று வரையறுக்காத மதம்?


பதில்: கோவில் இல்லாத ஊரில் குடியிருக்கக் கூடாது 
என்பது இந்துமத மக்களிடையே புழக்கத்தில் இருக்கும் பழமொழி. - கோவில் எதற்கு? 

ஆலயம் தொழுவது சாலமும் நன்று - ஆத்திச்சூடி 
என்பதற்கு என்ன பொருள்?

3. காசிக்கோ, ராமேஸ்வரதுக்கோ சென்றே ஆக வேண்டும் என்று கட்டளை இடாத மதம்?

பதில்: மற்ற மதமும் கட்டாய படுத்துவதில்லை, எல்லாமே வசதி வாய்ப்பை பொறுத்துதான். மேலும் தமிழர்களை அவர்கள் கட்டயப் படுத்த முடியாது ஏனென்றால் இந்து வேறு சைவம் வேறு.

4. இந்து மதத்தின் புத்தகத்தின் படி வாழ்கையை நடத்த வேண்டும் என்று கூறாத மதம்?

பதில்: வேதத்தை விட்ட அறமில்லை – வேதத்தில் ஓதத்தகும் அறம் எல்லாம் உள – தருக்க வாதத்தை விட்டு மதிஞர் வளமுற்ற வேதத்தை ஓதியே வீடுபெற்றார்களே! (திருமந்திரம் 51)

5. மத குறியீடுகளை அணிந்தாக வேண்டும் என்று வரையறை செய்யாத மதம்?

பதில்: திருநீர் இடுவதும், ராமம் போடுவதும், கையிலும் கழுத்திலும் கயிறு காட்டுவதும், காது குத்துவதும், தாலி கட்டுவதும், தலையில் சிண்டு வைப்பதும், பூணூல் போடுவதும் தாழ்ந்த சாதிகளை தவிர அனைவரும் கட்டாயம். தாழ்ந்த சாதிகள் எதுவும் அணியததே இங்கு அடையாளம் தான்.

6. ஒட்டு மொத்த இந்து சமுகத்தை கட்டுபடுத்தும் மதத்தலைவர் என்று யாரும் இல்லை.

பதில்: இந்தியாவிற்கு வாரணாசியிலும், தமிழகத்திற்கு காஞ்சியிலும் இருக்கும் சங்கராச்சாரிகள் காதில் விழாமல் பேசுங்க சகோ. இப்பொழுது ஆர்.எஸ்.எஸ் அதை கையில் எடுக்க முயற்சிப்பது அனைவரும் அறிந்தது.

7. தவறு செய்தவன் சாமியாராக இருந்தாலும் முகத்தில் காரி உமிழும் தெளிவு உண்டு இந்துகளுக்கு.

பதில்: பிறகும் நித்தியானந்தா போன்றவர்கள் பின்னே செல்பவரும் இந்துக்களே. உண்மையில் இது போன்றவர்களை தலையை துண்டிக்கும் தைரியம் கொண்ட மதங்களும் உண்டு. தமிழர்களுக்கு இதுபோன்ற சாமியார்ளும் தேவையில்லை, ஏமாற்றமும் தேவையில்லை.

8. இயற்கையாய் தோன்றியவற்றில் இழி பிறவி என்று ஏதுமில்லை.?

👉மரமும் கடவுள், 👉கல்லும் கடவுள், 👉நீரும் கடவுள்(கங்கை), 👉காற்றும் கடவுள் (வாயு), 👉குரங்கும் கடவுள் அனுமன், 👉நாயும் கடவுள் (பைரவர்), 👉பன்றியும் கடவுள் (வராகம்).

பதில்: என்ன? இழி பிறவி என்று ஏதுமில்லையா?

‘‘ப்ராஹ்மனோஷ்ய முஹமாஸீத் பாஹு ராஜ்ன்யூ க்ரூதஹ் ஊரு ததஸ்ய்ய யதைவஷ்யஹ் பத்பியாம் ஸுரூத்ரோ அஜாயத’’ (ரிக் வேதம் 10:90:12)

பொருள்: கடவுளின் முகத்திலிருந்து பிராமணர்களும் அவனின் கரங்களிலிருந்து சத்திரியர்களும் முதுகிலிருந்து வைஷ்யர்களும் பாதங்களிலிருந்து சூத்திரர்களும் பிறந்தனர்.

இயற்கையாக தோன்றியது என்று ஏதுமில்லை, அனைத்தும் படைக்கப் பட்டது என்பது இந்து வேதேங்களின் கூற்று.

இயற்கை கடவுளா?

'அந்தாத்மா பிரவிசந்தி யே அஸ்ஸாம்புதி முபஸ்தே' - யஜீர்வேதா அதிகாரம் 40 :9 
'இயற்கை பொருட்களை வணங்கியவர்கள் இருளில் நுழைந்து விட்டனர்.'

9. நீயும் கடவுள், நானும் கடவுள்... பார்க்கும் ஒவ்வொன்றிலும் பரமாத்மா.

பதில்: நீயும் நானும் கடவுள் என்றால்,

"எல்லாக் கடமைகளையும் பரித்யாகம் பண்ணிவிட்டு என்னையே சரண் புகு. நான் உன்னை எல்லாப் பாவங்களினின்றும் விடுவிக் கிறேன். துயரப் படாதே.” (கீதை 18-ஆம் அத்தியாயம், 66-ஆம் சுலோகம்) என்பது கடவுளுக்கு கடவுள் இட்ட கட்டளையா?

10. எண்ணிலடங்கா வேதங்களை கொடுக்கும் மதம். பண்ணிருதிருமறை?

பதில்: என்னிடம் 12 வீடு உள்ளது ஆனால் நடைபாதயில் உறங்குகிறேன் என்பது போல் உள்ளது. மக்களிடம் போதிக்க படாத மக்களை பண்படுத்த பயன்படாத நூல்கள் 1000 இருந்து என்ன பயன். பண்ணிருதிருமறை சைவ சமய நூல்.. சைவத்திற்கும் வைணவத்திற்கும் வரலாற்றில் யுத்தம் நடந்தது ஏன்?

பெண் ஆசையை ஒழிக்க 👉இராமாயணம், -
மண் ஆசையை ஒழிக்க 👉மகாபாரதம்,

பதில்: ராமயாணம் மற்றும் மகாபாரதங்கள் வேதங்கள் இல்லை, இதிகாசங்கள் இரண்டுக்கும் மாபெரும் வேறுபாடு உள்ளது. நான் சொல்லல, வேதாந்திகள் சொல்வது.

கடமையின் முக்கியத்துவத்தை உணர்த்த 👉பகவதம்,
அரசியலுக்கு 👉அர்த்தசாஸ்த்திரம்,
தாம்பத்தியத்திற்கு 👉காம சாஸ்திரம்,
மருத்துவத்திற்கு 👉சித்தா, ஆயுர்வேதம்,
கல்விக்கு 👉வேதக் கணிதம்,
உடல் நன்மைக்கு 👉யோகா சாஸ்த்திரம்,
கட்டுமானத்திற்கு 👉வாஸ்து சாஸ்திரம்,
விண்ணியலுக்கு 👉கோள்கணிதம்.

பதில்: இவை அனைத்தும் வெவ்வேறு கொள்கை மற்றும் வெவ்வேறு பிராந்திய பண்பாடு மற்றும் கலாச்சார நூல்களின் தொகுப்பு, ஒன்றுக்கும் மற்றொன்றுக்கும் அடிப்படை கொள்கையில் முரண்கள் பல.

11. யாரையும் கட்டாயபடுத்தியோ அல்லது போர்தொடுத்தோ பரப்பப்படாத மதம்...?

பதில்: தமிழகத்தல் சமண மதம் அழிந்த வரலாறும் சைவ வைணவ மதங்களுக்கான இடையில் நடந்த யுத்தங்களும் பதியபடாமல் இல்லை. ரிக் யசுர் வேதங்களே மத யுத்தத்தின் வரலாற்று பதிவுகளே..

12. எதையும் கொன்று உண்ணலாம் என்ற உணவு முறையிலிருந்து "கொல்லாமை " "புலால் மறுத்தல்", ஜீவகாருண்ய ஒழுக்கம் மற்றும் சைவம் என்ற வரையறையை கொடுத்த மதம்?

புலால்புலால் புலால் அதென்று பேதமைகள் பேசுகிறீர்?
புலாலைவிட்டு எம்பிரான் பிரிந்திருந்தது எங்ஙனே?
புலாலுமாய்ப் பிதற்றுமாய் பேருலாவும் தானுமாய்ப்
புலாலிலே முளைத்தெழுந்த பித்தன்காணும் அத்தனே! - சிவ வாக்கியர் பாடல் 147

13. இந்துக்களின் புனிதநூல் என்று ஒரு நூலை குறிப்பிடுவது மிகவும் கடினம் ஏனெனில் பெரியோர்கள் அளித்த அனைத்து நூல்களும் புனிதமாகவே கருதப்படுகிறது?

பதில்: வேதங்களே புனிதமானவை என்று கீதை சொல்கிறது 

முக்தி எனப்படும் மரமில்லா பெருவாழ்விற்க்கு வழிகாட்டும் மதம்?

பதில்: அனைத்து மதத்தினரும் முயற்சிப்பது இதற்காகவே.. யார் வழி சரி என்பது ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய ஒன்று..

14. சகிப்புதன்மையையும், சமாதானத்தையும் போதிக்கும் மதம்.?


பதில்: சகிப்புத்தன்மைக்கும் முறையான வரையறை அற்ற தன்மைக்கும் வேறுபாடுகள் உண்டு.

15. கோயில் என்ற ஒன்றை கட்டி அதில் வாழ்க்கையின் தத்துவத்தையும், உலக இயக்கத்தின் இரகசியத்தையும் உலகிற்கு அளித்த புனிதமதம்?

எந்த மதம் இதற்கு விதி விலக்கு ?

இன்னுமும் சொல்லிகொண்டே போகலாம்......

எல்லாவற்றையும் தக்க முறையான காரணத்துடனும் ஆதரத்துடனும் மறுத்து கொண்டேயும் போகலாம்

இந்துவாக (இயற்கையாளனாக) வாழ்வதில் பெருமைகொள்வோம்?

இந்து இயற்க்கையாலன் அல்ல..! ஓர் இறைவன் மேலே இருக்கிறான் என்பது இயற்கையாக எல்லோர் மனதிலும் உள்ள ஓர் கருத்துக்கு முரணான பல கடவுள் கொள்கை கொண்டவன் எப்படி இயற்கையாலனாவான்? அவரவரின் நம்பிக்கையை புகழ்வது பிழையில்லை, மற்றவரை இழிப்பது பிழை..

முடிவுரை

இந்த பதிவு சொல்லும் அனைத்து காரணங்களும் புரிதல்களும் அறியாமையின் வெளிப்பாடு ஆகும் அல்லது தெரிந்தே மறைக்கும் செயலாகும். மேலும் எதிர்மறை கருத்துக்களை நேர்மறையாக சித்தரிக்கும் முயற்ச்சி.. இவை அனைத்தும் தமிழன் ஏன் இந்துவாக இருக்க கூடாது என்பதற்கான பட்டியல்.

நடைமுறைக்கு ஏற்ற எதார்த்தமான சாதிய ஏற்ற தாழ்வற்ற முரண்பாடற்ற நெறியை பின்பற்றுவதில் தெளிவு பெறுவோம்.

இந்துமதம் இறைவனை பற்றி என்ன சொல்கிறது??


 பகவத் கீதை 7:207வது அத்தியாயத்தின் 20 வது வசனம் இவ்வாறு கூறுகிறது: ''எவரெருவர் பரம்பொருளை தாமாக உண்டாக்கி வணங்குகிறாரோ அவர் பொய்யானவற்றையே வணங்குகிறார்".
1. இறைவன் ஒருவனே
 சந்தோக்ய உபநிஷத்தில், பிரபாதக அத்தியாயத்தில் (Chapter-6) இரண்டாவது காண்டத்தில் (Section-2) வசனம் ஒன்று (Verse No.1) இவ்வாறு கூறுகிறது. "ஏகம் எவதித்யம்" (இரண்டல்லாத அவன் ஒருவனே - ஒருவன் மட்டுமே)'. reference :உபநிஷங்களின் தொகுப்பு - எஸ்.ராதாகிருஷ்ணன் எழுதிய புத்தகத்தின் முதல் பாகம், பக்கம் 447, 448.
குர்ஆன் கூறுகிறது : நபியே?!) நீர் கூறுவீராக அல்லாஹ் அவன் ஒருவனே. (குர்ஆன் 112:1)
2. இறைவன் பிறப்பற்றவன் 
ஸ்வேதாஸ்வதார உபநிஷம் (6:9)''நகஸ்ய கஸ்ஜிஜ் ஜானித நகதிப்பா" (அவனுக்கு பெற்றோர்கள் இல்லை. அவனுக்கு அதிபதி யாருமில்லை). நதஸ்ய கஸ்ஜித் பாதிர் அஸ்திலோகே ந செஸித நைவ க தஸ்ய லிங்கம் நகரணம் கரணதி பதியே" (அவனுக்கு உலகில் எந்த அதிபதியும் இல்லை அவனை ஆள்பவர் எவருமில்லை. அவனுக்கு எந்த வரையறையுமில்லை. அவனே காரணி. அதிபதி, அவனுக்கு இணையான எவரும் இல்லை.) ref: (எஸ். ராதாகிருஷ்ணனின் உபநிஷங்களில் பாம்-15ல் பக்கம் 745)
குர்ஆன் கூறுகிறது:அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை. (குர்ஆன் 112:3)
3. இறைவன் இணையற்றவன் 
ஸ்வேதாஸ்வதார உபநிஷம் (4:19)நதஸ்ய பரதிமா அஸ்தி (அவனுக்கு ஒப்பாக யாருமில்லை)னநனம் உர்தவம் நதிரியாங்கம் நமத்யே நபரிஜ்யகரபாத்நதஸ்ய ப்ரதிமா அஸ்தி யஸ்ய நாம மஹத் யஸாஹ் (அவனுக்கு ஒப்பாக யாருமில்லை அவன் புகழும் கீர்த்தியும் மிகப்பெரிது)
குர்ஆன் கூறுகிறது:"அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை". (குர்ஆன் 112:4)"..அவனைப் போன்று எப்பொருளும் இல்லை. அவன் தான் (யாவற்றையும்) செவியேற்பவன், பார்ப்பவன்.(குர்ஆன் 42:11)
4. இறைவனை பார்க்க இயலாது :
ஸ்வேதாஸ்வதார உபநிஷம் (4:20)ந சம்த்ர்ஸே திஸ்கதி ரூபம் அஸ்யா ந சக்சுஸா பஸ்யத்தி கஸ் கனய்னம் (அவனின் தோற்றத்தை நம்மால் காணவியலாது. அவனை எவரும் கண்ணால் கண்டதில்லை ) ஹிர்த ஹிர்திஸ்தம் மானஸ ஏனம் ஏவம் விதுர் அமர்தஸ் தெ பவன்ந்தி (அவனை இதயத்தால் உள்ளத்தால் நெருங்குவோர், அவனை அறிவர்.)
குர்ஆன் கூறுகிறதுபார்வைகள் அவனை அடைய முடியா ஆனால் அவனே எல்லோருடைய (எல்லாப்) பார்வைகளையும் (சூழ்ந்து) அடைகிறான். அவன் நுட்பமானவன்; தெளிவான ஞானமுடையவன்.(குர்ஆன் 6:103)
  நாம் பழய வேதங்களை ஒப்பீட்டிற்க்காகவும், அதில் சொல்லப்பட்ட முன்னறிவிப்புகளை கொண்டு புதிதாக வேதம் என்று வந்தது உண்மையா என்பதை அறிய மட்டுமே பயன்படுத்த வேண்டும்.. பழய வேதமே போதுமானதாக இருந்தால் புதிதாக ஒருவேதத்தை இறைவன் இறக்க வேண்டிய அவசியம் இல்லை.. அவன் முற்றும் அறிந்தவன்.
  இறைவனால் கொண்டுவரபட்ட அனைத்து மதங்களிலும் அனைத்து வேதங்களிலும் முன்னறிவிப்பு செய்யப்பட்ட இறைவனின் தூதர் முகமது நபி அவர்களையும் புனித நூல் குரானையும் அறிய தொடங்கினால் அவருக்கு இறைவன் நாடினால் புரியும் இறைவன் ஒருவனே என்று..
  அப்படியானால் இஸ்லாமின் கடவுள் ஏன் இதற்கு முன் இங்கு தமிழில் மக்களை வழி நடத்தவில்லை?
"எந்தத் தூதரையும் நாம் அனுப்பவில்லை அவருடைய சமுதாயத்தின் மொழியைக் கொண்டே தவிர அவர்களுக்கு விளக்கம் அளிப்பதற்காக"(14 :4 ) 
"..தன்னில் ஒரு இறைத்தூதர் வாழ்ந்திராத சமூகம் ஏதுமில்லை."(35 :24 )
  இறைவன் அவரது தூதர்களை அனுப்பாத சமுதாயமே இல்லை என்கிறான், நான் கற்பிதத்தை தவிர உனக்கு எதுவும் தெரியாது என்கிறான். அந்த அடிப்படையில்திருக்குறள்ஆத்திசூடி மற்றும் நாலடியார் இவைகளை புனித குர்ஆனோடு ஒப்பீடு செய்ய தொடங்கியுள்ளோம். அனைத்து வேதங்களும் அவனது தூதர்கள் மூலமே அவரவர் மொழியில் கொடுக்கப்பட்டது. இதில் என் மொழி பெரிது என் வேதங்கள் பெரிது என் கலாச்சாரம் பெரிது என் கடவுள் பெரிது என்பது வீண் பெருமையே அன்றி வேறில்லை. ஒரு நிமிடம் நினைத்து பாருங்கள் இந்துக்களின் கடவுள் இந்தியாவை மட்டும் தான் படைத்தாரா? இல்லை மற்ற நாட்டு மனிதர்களை அவர் படைக்கவில்லயா? இல்லை வேறு மொழி அவருக்கு தெரியாதா?

  இறைவன் ஒருவனே இருக்கிறான், அவனே அனைத்தையும் படைத்தான், அவன் அருள் எந்த நாட்டு மூலமாகவும் மொழிமூலமாகவும் வரும், கண்மூடி தனமாக நம்பாமல் உண்மையை அறியும் நோக்கில் படித்து அறிய முனைவோருக்கு இறைவன் காரியத்தை எளிதாக்கி வைப்பான். 

  இத்தனை வேதங்கள், மதங்கள் அவரவர் மொழியில் இருக்க ஏன் அந்நிய மொழியிலிருந்து வந்த இஸ்லாமை கற்கவேண்டும், பின் தொடரவேண்டும்..? ஒவ்வொரு சமுதாயத்திற்கு ரிஷிகளை அனுப்பினாலும், இறுதி ரிஷியாக இருப்பவர் முகமது அவர்கள், மேலும் அவர் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு மட்டும் அனுப்ப பட்டவர் அல்ல, ஒரே கடவுளை வணங்க உலகம் முழுவதற்கும் உபதேசம் செய்ய அனுப்பப்பட்ட தூதர் ஆவார். இவை அனைத்திற்கும் ஆதாரங்கள் பல வேதங்களிலும் குரானிலும் கொடுக்கபட்டு உள்ளது.. அறிவோர் அவருக்கே நன்மை செய்கிறார்,இல்லையேல் அவருக்கே கேடு..

  உலகமயமாதல் மனிதனின் திறமை என்று நினைத்தால் பரிதாபம் மட்டுமே படமுடியும், உலகம் முழுவதும் உலகதிற்கான தூதர் அவர்களின் இறை போதனை சென்றடைய இறைவன் ஏற்படுத்திய வழிவகை. இதற்குமுன் உலகமயமாதல் தேவையில்லை ஏனெனில் ஒவ்வொரு சமுதாயத்திலும் ஒரு தூதர் இருந்தார் ஆனால் இப்பொழுது அப்படி இல்லை, ஒரே கடைசி தூதர், அவரும் இல்லை, குரான் மட்டுமே தூது வேலையை செய்து கொண்டு இருக்கிறது, ஒவ்வொரு இஸ்லாமியர்களின் மூலமாக.. எனவே உலகமயமாதலை, தொலைத்தொடர்பு துறை வளர்ச்சியை இறைவன் சாத்தியப்படுத்தினான்.. இறைவனின் நுணுக்கமான செயல் சிந்திப்பவர்களுக்கு இறைவன் தெளிவுபடுத்துவான்.. இன் ஷா அல்லாஹ்... இறைவன் நாம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக..  
மேலும் ஆழமான ஆய்வுக்கு வாசிக்க வாய்மை