எடை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எடை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

எடையில் குறைக்காதே

கிறிஸ்தவம் 

பொருள்களைச் சரியாக எடை போடாத தராசுகளைச் சிலர் பயன்படுத்துகின்றனர். அவர்கள் அவற்றை ஜனங்களை ஏமாற்றவே பயன்படுத்துகின்றனர். கர்த்தர் அப்பொய் அளவுகளை வெறுக்கிறார். கர்த்தருக்கு விருப்பமானது சரியான அளவுகளே. - நீதிமொழிகள் 11:1

தமிழர் சமயம் 

அஃகஞ் சுருக்கேல்  - ஆத்திச்சூடி 13

பொருள்: அஃகம் என்றால் தானியம், சுருக்கேல் என்றால் குறைக்காதே. அதாவது தானியத்தைக் குறைவாக அளந்து கொடுக்காதே என்பது பொருள்.

இஸ்லாம் 

அவன் வானத்தை உயர்த்தினான், நிறுப்பதில் வரம்பு மீறாதீர்கள்! என்று தராசையும் நிறுவினான்! நியாயமாக எடையை நிலை நாட்டுங்கள்! எடையில் குறைத்துவிடாதீர்கள்!  (குர்ஆன் 55:7-9)