கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்

தமிழர் சமயம்


மாயனை நாடி மனநெடுந் தேர்ஏறிப்
போயின நாடறி யாதே புலம்புவர்
தேயமும் நாடும் திரிந்தெங்கள் நாதனைக்
காயமின் நாட்டிடைக் கண்டுகொண் டேனே. - திருமந்திரம் ஒன்பதாம் தந்திரம் - 28.1

பொருள்: கண்ணால் காண இயலாத இறைவனை மனம் என்னும் தேர் ஏறி பொய் தேடி ஆவான் நாடு  இடம் அறியாமல் புலம்புவர் தேகம் என்னும் நாட்டுக்குள் தேடி திரிந்து ஊன் என்னும் நாட்டிடை கண்டுகொண்டேன் என்ப்று கூறுவதன் மூலம் இறைவனை உணரத்தான் முடியும் என்கிறார்.

உரையற்றது ஒன்றை உரை செய்யும் ஊமர்காள்
கரையற்றது ஒன்றைக் கரைகாணல் ஆகுமோ
திரையற்ற நீர்போல் சிந்தை தெளிவார்க்குப்
புரையற்றிருந்தான் புரிசடையோனே (2915)

பொருள்: கடவுளை வருணிக்க முடியாது. கரை காண முடியாத கடல் போல அவன் எங்கும் நிறந்தவன். அவனைச் சொல்லுக்குள் அடக்க முயன்றவர்கள் எல்லாம் திணறிப் போய் ஊமையர் போல நிற்கின்றனர். கண்டவர் விண்டிலர். விண்டவர் கண்டிலர். ஆனால் தெளிந்த மனது உடையோருக்கு அவன் எளிதில் புரிபடுவான் [தெரிபட மாட்டன்]  

இஸ்லாம் 


பார்வைகள் அவனை அடைய முடியா ஆனால் அவனே எல்லோருடைய (எல்லாப்) பார்வைகளையும் (சூழ்ந்து) அடைகிறான். அவன் நுட்பமானவன்; தெளிவான ஞானமுடையவன்.(குர்ஆன் 6:103)

"நீங்கள் உங்கள் இறைவனைப் பார்த்ததுண்டா?'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டபோது, "அவனோ ஒளிமயமானவன்; நான் எப்படி அவனைப் பார்க்க முடியும்?'' எனக் கூறினார்கள். (நூல் : முஸ்லிம் 291)

கிறிஸ்தவம் 


தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை. (யோவான் 1:18) 

 தேவன் ஒருவரே, அவரையன்று வேறு தேவனல்ல, அவர் ஒருவரே பாத்திரர் (உபா. 6:4) 

9 கருத்துகள்:

  1. #55. சிவனை அறிந்தவர் எவர்?

    ஆறு அங்கமாய் வரு மாமறை ஓதியைக்
    கூறு அங்கம் ஆகக் குணம் பயில்வார் இல்லை,
    வேறு அங்கம் ஆக விளைவு செய்து அப்புறம் ,
    பேறு அங்கம் ஆகப் பெருக்குகின்றாரே.

    ஆறு அங்கங்கள் கொண்ட வேதத்தைத் தந்தவன் ஈசன். அந்த இறைவனின் இயல்பினை, உடல் அங்கங்களைக் கொண்டு அறிந்து கொண்டவர் எவரும் இல்லை. இறைவனைத் தம்மிலும் வேறுபட்டவனாக எண்ணிக்கொண்டு தம் விருப்பங்களை பெருக்கித் துன்பம் அடைகின்றார்களே!

    பதிலளிநீக்கு
  2. கடவுள் பார்க்க முடியாத உருவத்தில்* இருக்கிறார்.n அவரை வணங்குகிறவர்கள் அவருடைய சக்தியின் வழிநடத்துதலோடும் சத்தியத்தோடும் வணங்க வேண்டும்”o என்று சொன்னார்.
    யோவான் 4:24

    பதிலளிநீக்கு
  3. கொலோசெயர் 1:15 ESV / 2 பயனுள்ள வாக்குகள் உதவிகரமானது உதவியாக இல்லை
    அவர் கண்ணுக்குத் தெரியாத கடவுளின் உருவம், எல்லா படைப்புகளுக்கும் முதற்பேறானவர்.

    பதிலளிநீக்கு
  4. எபிரேயர் 4:13 ESV / 18 பயனுள்ள வாக்குகள்
    எந்த ஒரு உயிரினமும் அவன் பார்வைக்கு மறைந்திருக்கவில்லை, ஆனால் அவனுடைய கண்களுக்கு எல்லாமே நிர்வாணமாகவும் வெளிப்படும்.

    பதிலளிநீக்கு
  5. யாவர்காண வல்லரே?

    சிவாயம்என்ற அட்சரம் சிவன்இருக்கும் அட்சரம்
    உபாயம்என்று நம்புதற்கு உண்மையான அட்சரம்
    கபாடமற்ற வாசலைக் கடந்துபோன வாயுவை
    உபாயம்இட்டு அழைக்குமே சிவாயஅஞ் செழுத்துமே. 72

    உருவம்அல்ல, வெளியும்அல்ல, ஒன்றைமேவி நின்றதல்ல
    மருவும்வாசல் சொந்தம்அல்ல மற்றதல்ல அற்றதல்ல
    பெரியதல்ல சிறியதல்ல பேசலான தானும்அல்ல
    அரியதாகி நின்றநேர்மை யாவர்காண வல்லரே? 73

    https://shaivam.org/scripture/Tamil/1184/civavakkiyam-of-civavakkiyar

    பதிலளிநீக்கு
  6. முஹம்மத் (ஸல்) அவர்கள் தம் இறைவனைப் பார்த்தார்கள் என்று கூறுபவன் பெரிய தவறு புரிந்து விட்டான். எனினும் அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்களை அவர்களுடைய இயல்பான உருவிலும், அமைப்பிலும் வான விளிம்பு முழுவதையும் அடைத்தபடி கண்டார்கள் என்று ஆயிஷா (ரலி) கூறுகிறார்கள்.

    நூல் : புகாரீ 3234

    https://onlinepj.in/index.php/policy/policy3/believing-in-allah/nabiukal-allahvai-paartththarkala

    பதிலளிநீக்கு
  7. 18 அப்போது மோசே, “இப்போது உமது மகிமையை எனக்குக் காட்டும்” என்றான்.

    19 கர்த்தர், “என் பரிபூரண நன்மை உனக்கு முன் செல்லும்படி செய்வேன். நானே கர்த்தர், நீ கேட்கும்படி என் பெயரை அறிவிப்பேன். நான் விரும்பும் யாருக்கும் எனது இரக்கத்தையும், அன்பையும் காட்டுவேன். 20 ஆனால் நீ என் முகத்தைப் பார்க்க முடியாது. எந்த மனிதனும் என்னைப் பார்த்து பின்பு உயிரோடு இருக்க முடியாது.

    21 “எனக்கருகிலுள்ள ஒரு இடத்தில் ஒரு பாறை உள்ளது. நீ அப்பாறையின் மேல் ஏறி நில். 22 எனது மகிமை அவ்விடத்தைக் கடந்து செல்லும். நான் உன்னைத் தாண்டும்போது உன்னை அந்தப் பாறையின் வெடிப்பில் வைத்து என் கரங்களால் உன்னை மூடுவேன். 23 பின் எனது கைகளை விலக்குவேன். நீ என் முதுகைக் காண்பாய், ஆனால் நீ என் முகத்தைக் காணமாட்டாய்” என்றார்.

    https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D%2033&version=ERV-TA

    பதிலளிநீக்கு
  8. கண்டு " என்பதனை பார்த்து என்ற பொருளில் கொள்ளலாம்.
    விண்டு என்பதற்கு அநாதி விளக்கங்கங்கள் குவிந்துள்ளது.
    திருமூலர் விண்டலர் என்ற பதத்தை எவ்வாறு உபயோகிக்கிறார் என்று பார்க்கலாம்.
    "விண்டலர் கூபமும் விஞ்சத் தடவியுங்-
    கண்டுணர் வாகக் கருதி யிருப்பர்கள்
    செண்டு வௌiயிற் செழுங்கிரி யத்திடை
    கொண்டு குதிரை குசைசெறுத் தாரே"
    விண்டு அலர் கூபமும் விஞ்ச்சத்து அடவியும் – பிளந்து வெளிப்படும் ஒளியாகிய நீர் ஊற்றையும் அதில் சிவமாகிய அறிவுக்காட்டையும் கண்டு உணர்வாக கருதியிருப்பார்கள் – தரிசித்து உணர்வுமயாமே எண்ணியிருப்பவர்கள் யிருப்பவர்கள் ....... என்று குறிப்பிடுகிறார்.
    .
    இங்கு விண்டலர் என்பதை – விண்டு+அலர் - பிளந்து வெளிப்படும் மலர் என்ற அர்த்தத்தில் வருகிறது.
    இதைக்கொண்டு விளக்க முற்பட்டால் இந்தப் பதத்தை
    "கண்டவர் விண்டலர், விண்டவர் கண்டிலர் என்று சொல்லலாம்"

    இந்த பதத்திற்கு நெருக்கமாக பட்டினத்தார் தனது அருள் புலம்பல் பகுதியில் இவ்வாறு கேட்கிறார்.
    "கொண்டவர்கள் கொண்டதெல்லாம் கொள்ளாதார்
    கொள்ளுவரோ?
    விண்டவர்கள் கண்டவரோ? கண்டவர்கள் விண்டவரோ?"
    இந்த வரிசையில் விண்டவர் என்பதற்கு – பிளந்து என்ற பொருள் கொண்டால், தன்னுள் அகழ்ந்து ஆத்மனை உணர்ந்தவர்கள் இறையை கண்டவரோ, இல்லை புறத்தே காட்சியாக கண்டவர்கள் தன்னுள் அகழ்ந்து ஆத்மனை உணர்ந்தவர்களோ என்று பொருள் கொள்ள வேண்டும்.
    மொத்தத்தில் அகமும் புறமும் ஒன்றாய் இருக்கும் ஆத்மனை கண்டு தரிசிக்கும் பேறு பெற்றவர்களே தன்னுள் மலர்ந்தவர்களோ என்று கொள்ளலாம்.
    இல்லை நாங்கள் சொற்கள் மாறுபடுவதற்கு ஒவ்வாதவர்கள் என்று சொல்லி அதே பதத்தில்
    "கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்" – என்று நின்றால் நாம் தாயுமானவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்பதும் தேவை.


    இன்னமும் பார்த்தால் பிங்கல நிகண்டு முதல் பல அகராதிகள் "விண்டு" எனும் சொல்லுக்கு திருமால், அறநூல் பதினெட்டனுள் ஒன்று, வானம், மேலுலகம், மேகம், மலை, மூங்கில், காற்று, தாமரை, செடிவகை. என்று மட்டுமே பொருள் சொல்கிறது.
    இதன் படி பார்த்தால் விண்டவர் என்பதற்கு தேவர்கள் என்றும், விண்டிலர் என்பதற்கு காற்று இலாதார் அதாவது தனது வாசியை உச்சியில் செலுத்தியவர் என்றும் பொருள் கொள்ளலாம்.
    மீண்டும் திருமந்திரத்தையே நான் துணைக்கழைப்பேன்.
    "செண்டு வெளியிற் செழுங்கிரி யத்திடை
    கொண்டு குதிரை குசைசெறுத் தாரே"
    செழுமையான சிரசாகிய மலையில் கொண்டு குதிரை குசை செறுத்தார் – பிராணனாகிய குதிரையை செலுத்தி மனமாகிய கயிற்றை கொண்டு கட்டிவிடுவார்கள். அதாவது, சிரசில் உணர்வினை கருதியிருப்பவர்களுக்குப் பிராணன் (மூச்சு , காற்று) அடங்கி இருக்கும்.
    திருநெல்வேலி பக்கம் விண்டு கொடு என்பதை உடைத்துக் கொடு என்ற பொருளில் பயன் படுத்துவதுண்டு.
    சோ ... மக்களே.. இனிமே யாராவது கடவுளைக் கண்டவர் விண்டிலை என்று ஆரம்பித்தால் கொஞ்சம் யோசித்துப் பார்க்கலாம்
    https://authoor.blogspot.com/2017/10/blog-post_30.html?m=1

    பதிலளிநீக்கு
  9. கண்டவர்கள் ஒருகாலும் விண்டிலர்
    விண்டவர் ஒருகாலும் கண்டிலர்’ (105)

    https://www.tamilvu.org/slet/l7100/l7100pd1.jsp?bookid=140&pno=186

    பதிலளிநீக்கு