மெய்யியல்

 தத்துவம் என்ற சொல்லுக்கு தமிழில் "மெய்யியல்" என்று கூறலாம்.

மெய்யியல் = மெய் + இயல்: மெய்-யான விடயங்களை அதாவது மக்களால் தமது கண்களை கொண்டோ தொட்டு உணர்ந்தோ ஆய்வு செய்து விளங்க முடியாத ஆனால் மெய்யாகவும் உள்ள  விடயங்களை மக்களுக்கு விளக்கி கூறுவதே "மெய்யியல்" என்று கூறலாம்.

பொறாமை ஒருவனை அழிக்கும் என்பதை எதைக்கொண்டு ஆய்வு செய்ய முடியும்?

ஒரு தனி மனிதனை ஆய்வுக்கு அழைத்து நீ "பொறாமை படு" - அதன் விளைவை நான் குறிப்பெடுக்க விரும்புகிறேன் என்று சொல்ல முடியுமா?

இது போல கடவுள், வேதம், பாவம், புண்ணியம், சொர்கம், நரகம் போன்ற எண்ணிலடங்கா தலைப்புகள் மனிதனின் சிந்தனைக்கும் ஆற்றலுக்கும் அப்பால் உள்ளது. இதன் உண்மை தன்மையை விளக்குவதுதான் மெய்யியல் என்று அழைக்கிறோம்.

இது போன்ற மனித சிந்தனைக்கு அப்பால் உள்ள மெய்யான செய்திகள் மக்களுக்கு எப்படி வருகிறதென்பதை "மறைநூல்கள்" பகுதியில் விளக்கமாக விவரிக்கப்பட்டுள்ளது.

இதை இந்துமதம் "அசரீரி" என்றும், இஸ்லாம் "வஹீ" என்றும், கிறிஸ்துவும் "நான் என் விருப்பப்படி அல்லாமல் என் இறைவனின் விருப்பப்படி சொல்கிறேன் செய்கிறான்" என்றும் கூறுகின்றார். இதைத்தான் புத்தரும் போதி மரத்தடியில் பெற்றார். (அவர் நாத்திக கருத்தை சொன்னார் என்பது பிழை, அது விவாதத்துக்கு உரிய வேறு ஒரு தலைப்பு).

அனைத்தையும் படைத்த ஒரே கடவுளிடம் இந்த அனைவரும் கட்டளைகளைப் பெற்று மக்களுக்கு செய்த உபதேசங்களே தத்துவம் அல்லது மெய்யியல் ஆகும். 

    • தமிழர் சமயங்கள் 

    • இந்து மதம்

    • யூதமதம் 

    • இஸ்லாம் 

    • கிறிஸ்தவம் 

    • பௌத்தம் 


1 கருத்து: