இன்பம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இன்பம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சிற்றின்பம் பேரின்பம்

தமிழர் சமயம் 

சொல்தளர்ந்து கோல்ஊன்றிச் சோர்ந்த நடையினராய்ப்
பல்கழன்று பண்டம் பழிகாறும் - இல்செறிந்து
காம நெறிபடரும் கண்ணினார்க்கு இல்லையே
ஏம நெறிபடரும் ஆறு.
நாலடியார் 13

 விளக்கவுரைபேச முடியாது சொல் தடுமாறி, கோல் ஊன்றித் தள்ளாடும் நடையினராய்ப் பற்களும் வீழ்ந்துபட, தமது உடலைப் பிறர் பார்த்து எள்ளி நகையாடுமாறு இல்வாழ்க்கையில் பொரிதும் ஈடுபாடு கொண்டு, சிற்றின்ப ஆசையிலே மூழ்கிக் கிடக்கும் அற்ப அறிவீனர்க்குப் போரின்பமாகிய வீட்டு நெறியிலே செல்லும் வகை இல்லை.

இஸ்லாம் 


..அவர்கள் இவ்வுலக வாழ்க்கையின் மூலம் மகிழ்ச்சியடைகின்றனர். மறுமையுடன் ஒப்பிடும் போது இவ்வுலக வாழ்க்கை அற்ப சுகம் தவிர வேறில்லை - (திருக்குர்ஆன்:13:26)

எவர் வரம்பு மீறி இவ்வுலக வாழ்க்கையைத் தேர்ந்தெடுத் துக் கொண்டாரோ, நிச்சயமாக அவர் ஒதுங்குமிடம் நரகமாகும். மேலும், எவர் தன் இறைவனின் சந்நிதியைப் பயந்து, மனோ இச்சையிலிருந்து தன்னைத் தடுத்துக் கொண்டாரோ, நிச்சயமாக அவர் ஒதுங்குமிடம் சுவனமாகும். - (குர்ஆன் 80: 37-41)

“உங்களுக்கு வழங்கப்பட்ட எதுவானாலும், அது இவ்வுலக வாழ்வின் இன்பமும் அதன் அலங்காரமுமேயாகும். அல்லாஹ்விடம் இருப்பதோ மிகச்சிறந்ததும், நிலையானதுமாகும். நீங்கள் விளங்கிக்கொள்ளமாட்டீர்களா? (அல்குர்ஆன், 28:60)

இவர்கள் மறுமையைவிட இவ்வுலக வாழ்க்கையையே (அதிகமாக) நேசிக்கின்றார்கள்; அல்லாஹ்வின் வழியை விட்டும் (மற்றவர்களையும்) தடுக்கின்றார்கள்; அது கோணலாக (இருக்க வேண்டுமென) விரும்புகிறார்கள் – இவர்கள் மிகவும் தூரமான வழிகேட்டிலேயே இருக்கின்றார்கள். (அல்குர்ஆன்:14:3)


கிறிஸ்தவம் 

15  உலகத்தையோ உலகத்தில் உள்ளவற்றையோ நேசிக்காதீர்கள். ஒருவன் உலகத்தை நேசித்தால், தந்தையின் அன்பு அவனில் இல்லை. 16  மாம்சத்தின் இச்சைகளும், கண்களின் இச்சைகளும், ஜீவனத்தின் பெருமையும், உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினால் உண்டானவைகளல்ல, அவைகள் உலகத்திலிருந்து வந்தவைகள். 17  உலகம் தன் இச்சைகளோடு அழிந்து போகிறது; - (1 யோவான் 2:15-17)