நபி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நபி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

முகமது நபி ﷺ அவர்களின் மீது கிறிஸ்தவர்கள் கூறும் முக்கிய குற்றச்சாட்டு!

இரண்டு முரணான குற்றச்சாட்டுகளை கிறிஸ்தவர்கள் முகமது நபி அவர்கள் மீது காலம் காலமாக கூறிவருகின்றனர். அவைகளாவன, 

1) தங்களுக்கு என்று எதுவும் சொந்தமாக கொண்டிராமல் பைபிளை காப்பி அடித்து உள்ளார் முகமது

உபாகமத்த்தில் மோசஸ் இவ்வாறு கூறுகிறார்:

“ஆனால் நான் உங்களிடம் சொல்லும்படி சொல்லாத சிலவற்றை ஒரு தீர்க்கதரிசி கூறலாம். அதுமட்டுமின்றி, அந்தத் தீர்க்கதரிசி நான் தேவனுக்காகப் பேசுகிறேன் என்று சொல்லலாம். அப்படி ஏதும் நடந்தால் பின் அந்தத் தீர்க்கதரிசி கொல்லப்பட வேண்டும். - (உபகாமம் 18:20

மோசேவின் போதனைக்கு எதிரான எந்தவொரு போதனையும் முகமது நபி ﷺ அவர்களால் செய்யப் படவில்லை. உதாரணமாக மோசேயின் பத்து கட்டளைகளைக்கு முகமது நபியின் உபதேசங்கள் எங்கும் வேறுபடவில்லை. வாசிக்க பத்துக்கட்டளை.

மேலும் மோசே கூறியுள்ளார்: 

கர்த்தருக்காக நான் பேசுகிறேன், என்று கூறும் தீர்க்கதரிசியின் வார்த்தைகள் நடக்காமல் போனால், பின் நீங்கள் கர்த்தர் இவற்றை கூறவில்லையென்று அறிந்து கொள்ளலாம். அந்தத் தீர்க்கதரிசி பேசியது, அவனது சொந்தக் கருத்துக்களே என்று நீங்கள் அறிந்து கொண்டால், நீங்கள் அவனைப் பார்த்துப் பயப்படத் தேவையில்லை. (உபகாமம் 8:22)

முகமது நபி  கூறிய 1000-க்கும் மேற்பட்ட முன்னறிவிப்புகள் அவர் வாழ்ந்த சமகாலத்திலும் இப்பொழுதும் நடந்துவந்து உள்ளது. அவற்றில் சில,

    • முசுலிம்களின் நம்பிக்கையின் படி குர்ஆனே மிகப்பெரும் அற்புதமாகும். ஏனெனில் மற்ற இறைத்தூதர்கள் நிகழ்த்திய அற்புதங்கள் போலல்லாமல் குர்ஆன் முகம்மது நபியின் வாழ்நாளைக் கடந்தும் நிலைபெற்றுள்ளது.
    • முகம்மது நபி நிலவை பிளந்த நிகழ்வு
    • இஸ்ரா மற்றும் மிஃராஜ் பயணம்
    • அலி இபின் சகல் ரப்பான் அல் தபரி அவர்கள் கூற்றுப் படி முகம்மது நபி தனது எதிரிகள் அனைவரையும் வென்றது அற்புதங்களில் ஒன்றாகும். இதைப் போன்ற பல நவீன முசுலிம் வரலாற்றாசிரியர்கள், முகம்மது நபி குறுகிய காலத்தில் மதம், சமூகம், அரசியல், இராணுவம் மற்றும் இலக்கியம் போன்ற பல்வேறு உலகியல் துறைகளில் மாற்றங்களை நிகழ்த்தியதும், "நாடோடி குழுக்களாகவும் கல்வியறிவற்றவர்களாவும் இருந்த அரேபியர்களை உலகை வென்றவர்களாக மாற்றியதும் அற்புதமாகக் கருதப்படுகின்றது.
    • பல சந்தர்ப்பங்களில் இறைவன் அருளால் உணவு மற்றும் தண்ணீர் வழங்கியது.
    • அழுத ஈச்ச மரம் முகம்மது நபி(ஸல்) உரை நிகழ்த்தும் போது அதன் மீது சாய்ந்ததால் ஆறுதல் அடைந்தது.
    • அவரது கட்டளையை ஏற்று இரண்டு மரங்கள் நகர்ந்தது.
    • அவரது முன்னறிவுப்புகள்: எய்ட்ஸ், ஹெட் போன், பூகம்பங்கள், ஜெருசலேம் வெற்றிகொள்ளப் படும், அரபு தேசம் உயரமான கட்டிடங்களை போட்டிப் போட்டு கட்டும்.  
    • மக்காவிலிருந்து மதீனா சென்ற ஹிஜ்ரா பயணம் செய்தது.
    • முகம்மது நபி தபுக் யுத்தத்தின் ஆயிரக்கணக்கான வீரர்களின் தாகம் தணிக்கவும் உளூச் செய்யவும் நீர் சுரக்கச் செய்த நிகழ்வு.
    • முகம்மது நபி ஹுதைபியா உடன்படிக்கை போது மக்களின் தாகம் தணிக்கவும் உளூச் செய்யவும் வறண்ட கிணற்றை ஊற்றெடுக்கச் செய்தது.
    • பத்ர் யுத்தம் போது அவர் கையினால் எறிந்த தூசியினால் சில எதிரிகளைக் குருடாக்கினார். இந்நிகழ்வு குர்ஆனில் சூரா அல்-அன்ஃபால், வசனம் 17 (8:17) இல் கூறப்பட்டுள்ளது.
    • முகம்மது நபியின் தோழர் உஸ்மானுக்கு பிற்காலத்தில் பேராபத்து ஏற்படும் எனக் கூறினார். அதே போல் உஸ்மான் அவர்கள் கலிபா பதவி ஏற்றபின் அவருக்கு பேராபத்து ஏற்பட்டது.
    • முகம்மது நபியின் தோழர் அம்மார் இப்னு யாசிர் பிற்காலத்தில் நீதியில்லா குழுவால் கொல்லப்பட நேரும் எனக் கூறினார். அதே போல் அம்மார் இப்னு யாசிர் பிற்காலத்தில் கொல்லப்பட்டார்.
    • முகம்மது நபி, பிற்காலத்தில் இறைவன் அவரது பேரன் ஹசன் மூலம் இரண்டு பெரிய முஸ்லீம் குழுக்கள் இடையே சமாதானம் ஏற்படச் செய்வார் என முன்னறிவிப்புக் கூறினார். பிற்காலத்தில் ஹசன்-முஆவியா குழுக்களுக்கிடையே ஒப்பந்தம் நடைபெற்றது.
    • அவர் முஸ்லிம்களின் எதிரிகளின் பிரபலமான ஒருவரை கொல்வேன் என்று கூறினார். அதே போல் உஹது போரில் உபை இப்னு கலப் கொல்லப்பட்டார்.
    • பத்ரு போர் ஆரம்பிக்கும் முன்பே எதிரிப்படையின் தலைவன் எவ்விடத்தில் கொல்லப்படுவான் என சுட்டிக்காட்டினார். அதேபோல அவர் சுட்டிக்காட்டிய இடத்தில் எதிரிப்படையின் தலைவர் கொல்லப்பட்டார்.
    • அரேபிய பாலைவனத்தில் வாழ்ந்த அவர் பிற்காலத்தில் தமது நாட்டில் கடல் பகுதியும் இருக்கும் எனக்கூறினார். அதே போல் கலிபாக்கள் ஆட்சியில் நாட்டின் எல்லைகள் விரிந்து கடல் பகுதியும் நாட்டின் எல்லையில் வந்தது.
    • அவர் தமது மனைவிகளிடம் தாம் இறந்த பிறகு மனைவிகளில் அதிகத் தொண்டு செய்யும் ஒருவரே விரைவில் இறப்பார் எனக்கூறினார். அதே போல் அவர் இறந்த பிறகு அதிக தொண்டுள்ளம் கொண்ட அவரது மனைவியான ஜைனப் இறந்தார்.
    • அப்துல்லா இப்னு மஸ்ஊத் அவர்களின் பால் வற்றிய ஆடு முகம்மது நபி நிகழ்த்திய அற்புதத்தால் அதிகமாக பால் கொடுத்தது.
    • கைபர் போரில் நோயுற்ற அலீயின் கண்ணைக் குணப்படுத்தினார்.
    • வறண்டு கிடந்த மதீனா நகரில் மழை பொழிய காரணமாக இருந்தார்.
    • அவரது விரல்களுக்கு இடையே இருந்து தண்ணீர் வரச் செய்தது அற்புதமாகக் கருதப்படுகிறது.
    • முகம்மது நபி தபுக் போரில் கையளவு பேரித்தம் பழங்கள் மூலம் பல வீரர்களின் பசியைத் தணிக்க வைத்தார்.
    • முகம்மது நபி அவர்கள் தான் இறந்த பிறகு எனது குடும்ப உறவினர்களில் தனது மகள் பாத்திமா தான் முதலில் இறப்பார் எனக்கூறினார். அதே போல் முகம்மது நபி இறந்த பிறகு அவரது மகள் பாத்திமா தான் முதலில் இறந்தார்.
    • ஹுனைன் போரில் அயத் பின் அம்ரு என்பவருக்கு தலையில் காயம் ஏற்பட்டு இரத்தம் வழிந்தது முகம்மது நபி அவர்கள் தன் கையால் இரத்தத்தைத் துடைத்து இறைவனிடம் பிரார்த்தனை செய்ய அவர் காயம் ஆறி நெற்றி பளபளப்பாக மாறியது.
மேலும் முன்னறிவிப்பு தொடர்பான தகவலுக்கு  

இயேசு கூறினார்:  “நான் உங்களோடு இருக்கையில் இவற்றை எல்லாம் உங்களுக்குச் சொல்லிவிட்டேன். ஆனால் உதவியாளர் எல்லாவற்றையும் உங்களுக்குப் போதிப்பார். நான் உங்களுக்குச் சொன்னவற்றையெல்லாம் உங்களுக்கு அவர் நினைவுபடுத்துவார்அவரே பரிசுத்த ஆவியானவர். பிதா எனது நாமத்தினால் அவரை அனுப்புவார். (யோவான் 14:15-16) 
 
எனவே பைபிளை முகமது காப்பி அடித்தார் என்று சுருக்குவது பிழை. மோசேயின் மற்றும் இயேசுவின் போதனைகளை கூறவே அவர் வந்துள்ளார் என்கிற பொழுது அவைகள் ஒன்றுபோல அல்லாமல் வேறெப்படி இருக்கும்?  
 

 2) இன்றைய தோராவுக்கும், பைபிளுக்கும் எதிராக முகமது நபி சில செய்திகளை கூறுவதால் அவர் பொய் தீர்க்க தரிசி ஆவார். 

“ஆனாலும், நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன்; நான் போவது உங்களுக்கு உகந்தது, ஏனென்றால் நான் போகவில்லை என்றால் தேற்றரவாளன் உங்களிடம் வரமாட்டார். ஆனால் நான் புறப்பட்டால், நான் அவரை உங்களிடம் அனுப்புவேன். (யோவான் 16:7)

12 “உங்களிடம் சொல்வதற்கு என்னிடம் ஏராளமான செய்திகள் இருக்கின்றன. ஆனால் இப்பொழுது நீங்கள் தாங்கிக்கொள்ள முடியாதபடி அந்தச் செய்திகள் அதிகப்படியானவை. 13 ஆனால் உண்மையின் ஆவியானவர் வரும்போது அனைத்து உண்மைகளிலும் உங்களை வழிநடத்திச் செல்வார். ஆவியானவர் அவரது சொந்த வார்த்தைகளைக் கூறுவதில்லை. அவர் என்ன கேட்டிருக்கிறாரோ அவற்றையே பேசுவார். 14 நடக்கப்போகிறவற்றைப்பற்றி மட்டுமே அவர் பேசுவார். உண்மையின் ஆவியானவர் எனக்கு மகிமையைக் கொண்டுவருவார். எப்படி என்றால் அவர் என்னிடம் கருத்துக்களைப் பெற்று உங்களுக்குச் சொல்லுவார். 15 பிதாவினுடையவைகள் எல்லாம் என்னுடையவைகள். அதனால்தான் ஆவியானர் என்னிடமிருந்து கருத்துக்களைப் பெற்று உங்களுக்குச் சொல்லுவார் என்றேன்.” (யோவான் 16:12-15)

இனி நான் உங்களுடனே அதிகமாய் பேசுவதில்லை. இந்த உலகத்தின் அதிபதி வருகிறான். அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை.’ (யோவான் 14:30)

இயேசுவுக்கு பிறகு அவர் வருவார் என்பதும், இயேசு கூறிய செய்திகள் அனைத்தையும் மேலும் அதோடு சேர்த்து மேலதிகமான செய்திகளையும் அவர் மக்களுக்கு வழங்குவார் என்பதும் மேலும் அவர் அவைகளை தனது சொந்த விருப்பப்படி அல்லாமல் கர்த்தரின் விருப்பப்படியே சொல்லுவார் என்பது இவ்வசனத்தின் மூலம் அறியப்படுகிறது. 

மேலும் கள்ள தீர்க்க தரிசிகள் இயேசுவை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

22 எனவே யார் பொய்யன்? இயேசுவை கிறிஸ்துவல்ல என்று கூறுபவனே பொய்யன். அவனே போலிக் கிறிஸ்து. அம்மனிதன் பிதாவிலோ அல்லது குமாரனிலோ நம்பிக்கை வைப்பதில்லை. 23 ஒருவன் குமாரனில் நம்பிக்கை வைக்காமலிருந்தால் அவன் பிதாவை உடையவனல்ல. குமாரனை ஏற்கிற ஒருவனுக்கு பிதாவும்கூட இருக்கிறார். (1 யோவான் 2) 

மெசாயா எனும் எபிரேய சொல்லை மொழி பெயர்க்க பயன்படுத்தப்பட்ட கிரேக்க சொல் கிறிஸ்து (Christ - chrīstós - Χριστός ) ஆகும். மெசாயா என்றால் அபிஷேகம் செய்யப்பட்ட அரசன் என்று பொருள். எதிர்காலத்தில் இயேசு மீண்டும் வரும் பொழுது ஆட்சி செய்வார் என்று நம்புவதால் அவர் மெசாயா என்று அழைக்கப்படுகிறார். இயேசுவை பின்பற்ற விரும்புவோர் இயேசுவுக்கே தெரியாத வார்த்தையை (கிறிஸ்து - கிறிஸ்தவம்) கொண்டு ஒரு புது மதம் தோற்றுவித்து இருப்பது விந்தை. 

சரி முகமது அவர்கள் இயேசு பற்றி என்ன கூறி உள்ளார் என்று பார்ப்போம். 

  • முகமது அவர்களும் குர்ஆனும் இயேசுவை பின்பற்றியவர்களை கிறிஸ்தவர்கள் என்று அழைக்காமல் நஸ்ரானி என்று அழைத்தார். காரணம் இயேசு அவர்கள் நசரேத் (Nazareth) நகரில் பிறந்தவர்.  

 யூதர்களும், நஸ்ராக்களும் அவர்கள் வழியை நீர் பின்பற்றாதவரையில் உம்மைப்பற்றி திருப்தியடைய மாட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ்வின் வழி - அதுவே நேர்வழி என்று சொல்லும்;. அன்றி ஞானம் உம்மை வந்தடைந்த பின்னரும் அவர்களுடைய இச்சைகளைப் பின்பற்றுவீரேயானால், அல்லாஹ்விடமிருந்து உம்மைக் காப்பாற்றுபவனும், உமக்கு உதவி செய்பவனும் இல்லை. (அல்குர்ஆன் 2:120)

  • இயேசு மீண்டும் வந்து ஆட்சி செய்வார் என்று நபி அவர்கள் கூறி உள்ளார்கள்.

'எனது உயிர் எவனது கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக! மர்யமுடைய மகன் உங்களிடம் நீதி செலுத்துபவராக, தீர்ப்பு வழங்குபவராக இறங்குவார். சிலுவையை முறிப்பார். பன்றியைக் கொல்வார். ஜிஸ்யா வரியை நீக்குவார். வாங்குவதற்கு யாருமில்லாத அளவுக்கு செல்வம் கொழிக்கும்'. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)

 அவர்கள் (ஏக இறைவனை) மறுத்ததாலும், மர்யமின் மீது மிகப் பெரும் அவதூறை அவர்கள் கூறியதாலும், “அல்லாஹ்வின் தூதரான மர்யமின் மகன் மஸீஹ் எனும் ஈஸாவை நாங்களே கொன்றோம்” என்று அவர்கள் கூறியதாலும் (இறைவன் முத்திரையிட்டான்.) அவரை அவர்கள் கொல்லவில்லை. அவரைச் சிலுவையிலும் அவர்கள் அறையவில்லை. மாறாக அவர்களுக்கு ஆள் மாறாட்டம் செய்யப்பட்டது. இதில் முரண்பட்டோர் சந்தேகத்திலேயே உள்ளனர். ஊகத்தைப் பின்பற்றுவதைத் தவிர அவர்களுக்கு இது குறித்து அறிவு இல்லை. அவர்கள் அவரை உறுதியாகக் கொல்லவே இல்லை. மாறாக அவரை அல்லாஹ் தன்னளவில் உயர்த்திக் கொண்டான். அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கிறான். வேதமுடையோரில் ஒவ்வொருவரும் அவர் (ஈஸா, மீண்டும் வந்து) மரணிப்பதற்கு முன் அவரை நம்பாமல் இருக்க மாட்டார்கள். கியாமத் நாளில் அவர் அவர்களுக்கு எதிரான சாட்சியாக இருப்பார். (குர்ஆன் 4:156-159)

எனவே கிறிஸ்தவர்களின் இந்த முரண்பாடான குற்றச்சாட்டுகளை அவர்கள் மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.  

விரும்புவோர் தீர்க்கதரிசியாக மாறமுடியுமா?

இல்லை, இறைவன் மட்டுமே அவர்களை தேர்ந்தெடுக்கிறான்

இந்து மதம்


அனைத்து செல்வங்களுக்கும் அதிபதியான தூதர், அக்னியை நாங்கள் தேர்ந்தெடுக்கிறோம். இந்த எங்கள் தியாகத்தில் திறமையானவர். (RIG 1.1.12 மந்திரம் 12:1)

தமிழர் சமயம்


நந்தி அருளாலே நாதன் ஆம் பேர் பெற்றோம்
நந்தி அருளாலே மூலனை நாடினோம் - திருமந்திரம் 130

பொருள்: திருமூலர் ஆசிரியராக நந்தியின் மூலம் இறைவனால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்

இஸ்லாம்

உனக்குக் கிடைக்கும் எந்த நன்மையும் அல்லாஹ்விடமிருந்தே கிடைக்கிறது; இன்னும், உனக்கு ஏதாவது ஒரு தீங்கு ஏற்பட்டால் அது உன்னால் தான் வந்தது; (நபியே!) நாம் உம்மை மனிதர்களுக்கு (இவற்றை எடுத்துக் கூறுவதற்காகத்) தூதராகவே அனுப்பியுள்ளோம் - (இதற்கு) அல்லாஹ்வே போதுமான சாட்சியாக இருக்கின்றான். 4:79

 முகமது நபி ஸல் அவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்ட நிகழ்வு: நபி(ஸல்)அவர்களுக்குத் துவக்கத்தில் இறைச்செய்தி தூக்கத்தில் தோன்றும் நல்ல கனவுகளிலேயே வந்தது. அப்போது அவர்கள் எந்தக் கனவு கண்டாலும் அது அதிகாலைப் பொழுதின் விடியலைப் போலத் தெளிவாக இருக்கும். பின்னர் தனிமையில் இருப்பது அவர்களின் விருப்பமாயிற்று. ஹிரா குகையில் அவர்கள் தனித்திருந்தனர், தமது குடும்பத்தாரிடம் திரும்பி வருவதற்கு முன் பல இரவுகள் (அங்கே தங்கி இருந்து) வணக்கவழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். அந்த நாட்களுக்கான உணவை தம்மோடு கொண்டு செல்வார்கள். (அந்த உணவு முடிந்ததும்) மீண்டும் (தமது துணைவியார்) கதீஜா (ரலி) அவர்களிடம் திரும்பி வருவார்கள். அதேப் போன்று பல நாட்களுக்குறிய உணவைக் கொண்டு செல்வார்கள். இந்த நிலை ஹிராக் குகையில் அவர்களுக்கு சத்தியம் வரும் வரை நீடித்தது.

(ஒருநாள்) ஒரு வானவர் ஓதுவீராக என்றார். அதற்கவர்கள் நான் ஓதத் தெரிந்தவனில்லையே என்றார்கள். அல்லாஹ்வின் நபி (ஸல்) அவர்கள் இந்நிலையை பின்வருமாறு விளக்கினார்கள்: ‘அவர் என்னைப் பிடித்து நான் சிரமப்படும் அளவிற்கு இறுகக் கட்டியணைத்தார். பிறகு என்னை விட்டு விட்டு மீண்டும், ஓதுவீராக என்றார். (அப்போது) நான் ஓதத் தெரிந்தவனில்லையே! என்றேன். இரண்டாவது முறையும் அவர் என்னைப் பிடித்து நான் சிரமப்படும் அளவிற்கு இறுக கட்டியணைத்து என்னை விட்டு விட்டு மீண்டும் ஓதுவீராக, என்றார் (அப்போதும்) நான் ஓதத் தெரிந்தவனில்லையே! என்றேன். அவர் என்னைப் பிடித்து மூன்றாவது முறையும் கட்டியணைத்து விட்டுவிட்டு, படைத்தவனாகிய உம்முடைய இரட்சகனின் திருப்பெயரால் ஓதுவீராக! அவன் தான் மனிதனை அலக்கில் (கருவளர்ச்சியின் ஆரம்ப நிலை) இருந்து படைத்தான். ஓதுவீராக! உமது இரட்சகன் கண்ணியம் மிக்கவன் என்றார்; மேலும் ஆயிஷா (ரலி) கூறியதாவது, பிறகு இதயம் படபடத்தவர்களாக- அந்த வசனங்களுடன் (தமது துணைவியார்) குவைலிதின் மகள் கதீஜா (ரலி)விடம் வந்து என்னைப் போர்த்துங்கள் என்றார்கள். கதீஜா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களைப் போர்த்தினார்கள். (நடுக்கம் தீர்ந்ததும்) கதீஜா (ரலி)விடம் நடந்த செய்தியைத் தெரிவித்து விட்டுத் தமக்கு ஏதும் நேர்ந்து விடுமோ எனத் தாம் உறுதியாக அஞ்சுவதாகவும் கூறினார்கள். அப்போது கதீஜா (ரலி) அவர்கள்; அவ்வாறு கூறாதீர்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக உங்களை ஒரு போதும் அல்லாஹ் இழிவுபடுத்த மாட்டான். (ஏனெனில்) தாங்கள் உறவினர்களுடன் இணங்கி இருக்கின்றீர்கள். (சிரமப்படுவோரின்) சுமைகளைத் தாங்கள் சுமந்து கொள்கிறீர்கள். வறியவர்களுக்காக உழைக்கிறீர்கள், விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள். உண்மையான சோதனைகளில் (ஆட்பட்டோருக்கு) உதவிபுரிகின்றீர்கள் என்றார்கள்.

பின்னர் நபி (ஸல்) அவர்களைத் தமது தந்தையின் உடன் பிறந்தவரான நவ்ஃபல் என்பவரின் மகன் வராகாவிடம் அழைத்துச் சென்றார்கள். நவ்ஃபல் அசது என்பவரின் மகனும் அசது, அப்துல் உஸ்ஸாவின் மகனுமாவார். வராகா அறியாமைக் காலத்திலேயே கிருஸ்தவ சமயத்தை தழுவியவராக இருந்தார். மேலும் அவர் ஹிப்ரு மொழியில் எழுதத் தெரிந்தவராகவும். இன்ஜீல் வேதத்தை, ஹீப்ரு மொழியில் எழுத வேண்டும் என்று அல்லாஹ் நாடிய அளவுக்கு எழுதுகிறவராகவும் கண் பார்வையற்ற பெரும் வயோதிகராகவும் இருந்தார். அவரிடம் கதீஜா (ரலி), என் தந்தையின் சகோதரன் மகனே! உம் சகோதரன் மகன் கூறுவதைக் கேளுங்கள் என்றார்கள். அப்போது வராகா நபி (ஸல்) அவர்களிடம் , என் சகோதரர் மகனே! நீர் எதைக் கண்டீர்? எனக்கேட்டார். நபி (ஸல்) அவர்கள்; தாம் பார்த்த செய்திகளை அவரிடம் சொன்னார்கள். (அதைக் கேட்டதும்) வராகா (நபி (ஸல்) அவர்களிடம்) இவர் தாம், மூஸாவிடம் இறைவன் அனுப்பிய நாமூஸ் (ஜிப்ரீல்) ஆவார் என்று கூறிவிட்டு உமது சமூகத்தார் உம்மை உமது நாட்டிலிருந்து வெளியேற்றும் சமயத்தில் நான் உயிருடன் திடகாத்திரமான இளைஞனாக இருந்திருக்க வேண்டுமே! என்றும் அங்கலாய்த்துக் கொண்டார். அப்போது நபி (ஸல்)அவர்கள், மக்கள் என்னை வெளியேற்றவா போகிறார்கள்? என்று கேட்டார்கள். அதற்கவர் ஆம்! நீர் கொண்டு வந்திருப்பது போன்ற சத்தியத்தைக் கொண்டு வந்த எந்த மனிதரும் (மக்களால்) பகைத்துக் கொள்ளப்படாமல் இருந்ததில்லை. (நீர் வெளியேற்றப்படும்) அந்நாளை நான் அடைந்தால் உமக்குப் பலமாக உதவி செய்வேன் என்று கூறினார். அதன் பிறகு வராகா நீண்ட நாள் வாழாமல் இறந்து விட்டார். இந்த முதற்செய்தியுடன் வஹீ சிறிது காலம் நின்று போயிற்று. - புகாரி-3: ஆயிஷா (ரலி)

முடிவுரை

இன்றைய கால கட்டத்தில் நம்முடன் வாழும் சிலர் தன்னை சித்தராக, நபியாக, ரிஷியாக பிரகடனப்படுத்துகின்றனர். ஆனால் அவரை ஏற்கும் முன் அவரைப் பற்றிய வேத முன்னறிவுப்புகளை ஆய்ந்து அறிவது அவசியம். ஏனென்றால் மக்கள் எளிதில் அறியும் வண்ணம் அவரைப்பற்றிய பல செய்திகள் முன்னரே அறிவிக்கப் பட்டு இருக்கும். அவ்வாறு நாம் அதை ஆய்ந்து அறிரும் பொழுது பொய்குருக்களிடம் தப்பிக்கும் வாய்ப்பு அதிகம் இருக்கும். குர்ஆனின் வாக்குறுதி படி முகமது நபி-தான் கடைசி தீர்க்கதரிசி குர்ஆன்-தான் கடைசி மறை நூல். எனவே இதன் அடிப்படையில் கிபி 650-க்கு பிறகு எழுதப்பட்ட வேத நூல்களையும் தீர்க்கதரிசிகளையும் எளிதாக நிராகரிக்கலாம். ஆனால் நூல்களின் காலம் சரியாக கண்டறியப் பட்டுள்ளதா என்று சரி பார்த்துக் கொள்ள வேண்டும்.