யார் பிராமணன்?
“சாதுர் வர்ணம் மயா சிருஷ்டம் குண கர்ம விபாகச” (கீதை 18:41-44)
கருத்து: வர்ண அமைப்பினைப் பேசும் எந்த இடத்திலும் குலத்தையோ குல தர்மத்தையோ கீதை குறிப்பிடவே இல்லை. மாறாக குணமும் செயலும் ஒருவரது வர்ணத்தை (தரத்தை) முடிவு செய்கிறது.
வர்ணம் என்பது “வ்ரு” என்ற சம்ஸ்கிருத வேர்ச்சொல்லில் இருந்து வந்தது. “வ்ரு” என்றால் “தேர்ந்தெடு” என்று பொருள்.
எனவே, வர்ணம் என்பதற்கு தன்மை, வகை, தரம் அல்லது பிரிவு எனப் பொருள்படுகிறது.
சோவின் எங்கே பிராமணன்?
ஜாதிப் பெயரால் பிராமணன் என்று சொல்வதில் உயர்வென்ன தாழ்வென்ன? பிறப்பால் ஒரு ஜாதியில் பிறந்துவிட்டதாலேயே தம்மை உயர்த்திக்கொள்வது பேதைமை. போன்றவை இவர் பேசிய எங்கே பிராமணன் தொடரின் சுருக்கம். இந்த தொடரின் ஆதார செய்திகள் பெரும்பாலும் கீதை, இதிகாசம் மற்றும் வேதங்களை அடிப்படையாக கொண்டது. (எங்கே பிராமணனை வாசிக்க, to download)
ப்ராமணன் எனும் தன்மை இறைவனை உணரும் தண்மையை குறிக்கிறது. பொருள்சார்ந்த உலகத்திலேயே கரைந்து விடாமல், விழிப்புணர்வுடன் இறைவனை உணர்பவன் ப்ராம்மணன். இருப்பதிலேயே இதுதான் உயர்ந்த நிலை. தர்மத்தை பரிபாலிப்பது, எது தர்மம் என்பதை வேதாந்த ஆராய்சியால் எடுத்துரைப்பது இவர்கள் கடமை. விழிப்புணர்வை குறிக்கும் சத்வ குணத்தை இது குறிக்கிறது.
சத்ரீயன் என்று சொல்லப்படுகிற தன்மை. ஆளுமையை மற்றும் நிர்வாகத்தை குறிக்கிறது. தர்மத்தை காப்பாற்றுவதும், அதர்மத்தை எதிர்ப்பதும் இவர்களின் தலையாயக் கடமை. சத்வ குணம் கலந்த ரஜோ குணம் அதிகம் உள்ளவர்களை இது குறிக்கிறது.
வைசிய தண்மை நாட்டுக்கும், சமூகத்துக்கும் பொருள் ஈட்டுவதை குறிக்கிறது. இது தமோ குணம் கலந்த ரஜோ குனம் அதிகம் உள்ளவர்களை இது குறிக்கிறது.
சூத்திரன் எனும் தண்மை அடிப்படை வேலைகளை குறிக்கிறது. சூத்திரதாரி என்றால் ஒன்றிற்கு அடிப்படையாய், ஆதாரமாய் இருப்பவன் என்பது பொருள். ஆக சூத்திரன் ஆதாரமான பல வேலைகளை செய்கிறான். மற்ற மூன்று வர்ணத்தாருக்கும் இவன் ஆதாரமாய் இருந்து உதவுகிறான். ரஜோ குணம் கலந்த தமோ குணத்தை அதிகம் உள்ளவர்களை இது குறிக்கிறது.
குறிப்பு: எனவே வர்ணம் பிறப்பால் ஏற்படுவது அல்ல, ஒவ்வொரு தனி மனிதனின் குணத்தாலும் செயலாலும் ஏற்படுகிறது.
மஹாபாரதத்தில் பல இடங்களில்"யார் பிராமணன்"? என்ற கேள்வி எழுகிறது.அதற்கு யுதிஷ்டிரனும்"எவன் ஒருவன் ஒழுக்கம் தவறாது இருக்கிறானோ, இந்த்ரியங்களை அடக்கி ஆள்பவனாய் இருக்கிறானோ, அவனுடைய ஆர்வம் பிரம்ம ஞானத்தில் நிலையாய் இருக்கிறதோ அவன் பிராமணன், அவன் பிறப்பினால் அறியப்படுபவன் அல்ல"
அதே போல் நகுஷன் என்பவன் மலைப்பாம்பின் வடிவில் பீமனை பற்றிவிடுகிறான். அவனிடம் கேட்கப்படும் கேள்வி "பிராமணனை எப்படி அறிவாய்" பீமனும் சொல்வதாவது:"எவனிடம் பொறுமை, ஒழுக்கம், இரக்கம், தவம், உண்மை, தயாள குணம் இருக்கிறதோ அவனை பிராமணனாக அறியலாம்"
பிராமணன் என்றால் இவ்வகை குணங்களை கொண்டவர் மட்டுமே, அது சாதி அல்ல, பிறப்பால் வருவது அல்ல. ஆனால் பிராஹ்மின் என்ற கூட்டம் அதை ஒரு சாதியாகவும் மற்றவர்கள் தீண்ட தகாதவர்கள் என்றும் வேதம் அவர்களுக்கே சொந்தம் என்றும் மாற்றி விட்டது.
யார் அந்தணன்?
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்செந்தண்மை பூண்டொழுக லான் (நீத்தார் பெருமை குறள் 30)
பொழிப்பு: எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால் அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர்.
மணக்குடவர் உரை: எல்லாவுயிர்க்குஞ் செவ்விய தட்பஞ்செய்தலை மேற்கொண்டொழுகலானே, அந்தணரென்போரும் துறந்தாராகக் கொள்ளப்படுவர். மேல் துறந்தவர்களினுஞ் சிறியாருளரென்று கூறினார். இதனானே துறவாதாரினும் பெரியாருளரென்று கூறினார். இவை யெட்டானும் துறவறத்தின் பெருமை கூறப்பட்டது
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வாசெய்தொழில் வேற்றுமை யான். (குறள் 972)
மணக்குடவர் உரை: எல்லா வுயிர்க்கும் பிறப்பால் ஒரு வேறுபாடில்லை; ஆயினும், தான் செய் தொழிலினது (அதாவது செயலால்) ஏற்றச் சுருக்கத்தினாலே பெருமை ஒவ்வாது . எனவே, இது பெருமையாவது குலத்தினால் அறியப்படா தென்பதூஉம் அதற்குக் காரணமும் கூறிற்று.
யார் இஸ்லாமியன்?
உங்கள் முகங்களை கிழக்கு நோக்கியோ, மேற்கு நோக்கியோ திருப்புவது நன்மையன்று. மாறாக அல்லாஹ், இறுதி நாள், வானவர்கள்(தேவர்கள் ), வேதம், மற்றும் நபிமார்களை நம்புவோரும் உறவினர்கள், அனாதைகள், ஏழைகள், நாடோடிகள், யாசிப்போருக்கும், மற்றும் அடிமைகளை விடுதலை செய்வதற்கு விருப்பத்துடன் செல்வத்தை வழங்குவோரும் (தயாள குணத்துடன்), தொழுகையை (தவம்) நிலை நாட்டுவோரும், ஸகாத்தை வழங்குவோரும், வாக்களித்தால் தமது வாக்கை நிறைவேற்றுவோரும் (உண்மை), வறுமை, நோய், மற்றும் போர்க்களத்தில் சகித்துக் கொள்வோருமே (பொறுமை) நன்மை செய்பவர்கள். அவர்களே உண்மை கூறியவர்கள். அவர்களே (இறைவனை) அஞ்சுபவர்கள் (இஸ்லாமியன்). - அல் குர்ஆன் 2:177
வரையறை அடிப்படையில் இஸ்லாமியன் = அந்தணன் = பிராமணன் ஆகும்.
இந்த வரையறை கொண்ட இஸ்லாத்தை பின் தொடர விரும்புகின்ற எவரையும் இஸ்லாமியனாக அங்கீகரிக்கலாம் ஆனால் இந்து சமயத்தில் பிராமினாக ஆக முடியுமா?
முடிவுரை :
பிராமணன் என்பதற்கும் இஸ்லாமியன் என்பதற்கும் குறிக்க படும் வரையறை ஒன்றே.
சரி இதுபோல் நடைமுறயில் உள்ள வேற்றுமையாக கருத்தப்படும் அனேக விஷயங்கள் ஒற்றுமையாகவே இருக்க, எதுதான் உண்மையான வேற்றுமை?
இஸ்லாமிற்கு முன் இருந்த எல்லா மதத்தினரும் அது முடியும் தருவாயில் செய்த அதே தவறுதான். படைத்தவனை அன்றி ஒன்றுக்கும் மேற்பட்ட கடவுள்களை வணங்குவது.. சரி இதனை ஏன் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டும்?
அவரவருக்குரிய மரியாதையும், வெகுமதியும், அங்கீகாரமும் அவரவருக்கே சென்றடைய வேண்டும் என்பது எதார்த்த உண்மை.. படிக்காதவனுக்கு சம்பளம் குறைச்சல், படித்த திறமையானவனுக்கு அவனுக்கு உரிய அங்கீகாரமும் சம்பளமும் கொடுக்க படவேண்டும், அம்மாவை அத்தை என்று அழைக்க முடியாது, அப்பாவை மாமா என்று அழைக்க கூடாது.. பிச்சைகாரனை அரசே என்று அழைக்க முடியாது, அரசனை பிச்சைக்காரன் என்று கூறமுடியாது. அது ஏன் கடவுள் விஷயத்தில் மட்டும் இதனை அலட்சியம்? கண்ணில் பட்டவனெல்லாம் கடவுள், காசு குடுத்தா அவன் சாமி, செத்துபோனா அவன் தெய்வம், அழகான சிலை இருந்த அதுவும் கடவுள்!
சரி இறைவன் இந்த வழக்கத்தை ஏறுக்கொள்கிறானா?
இல்லை, இறைவன் நம்மோடு வேதத்தின் மூலமாக பேசுகிறான். நாம் என்ன செய்யவேண்டும் என்று அறிவிக்கிறான். செய்தால் என்ன நன்மை? இல்லை என்றால் என்ன தீமை? என்றும் விளக்குகிறான். அவன் எவ்வளவு அன்பு கொண்டவன் பாருங்கள், அவன்தான் இறைவன் என்று பல குறிப்புகள், அத்தாட்சிகள், அதிசயங்கள், முன்னறிவிப்பு, நமக்குத் தெரியாத அறிவியல் உண்மைகள் சொல்வதன் மூலம் நிரூபிக்கிறான். இதனை அவன் செய்வதற்கு எந்த அவசியமும் கட்டாயமும் அவனுக்கு கிடயாது, நம் மீது கொண்ட கருணை மட்டுமே காரணம். வேதங்கள் என்று எஞ்சி இருப்பவை வெகு சிலவே, அதை படிப்பதில் அல்லது அறிஞர்கள் மூலம் அறிவதில் என்ன சிரமம்? வேதங்களின் அறிவு நமக்கு விளக்கம் கொடுக்கும் என்பது உண்மை, அனைத்து வேதங்களையும் ஒப்பீடு செய்தல் அதிக விளக்கத்தை கொடுத்து ஞானமும் முக்தியும் பெற வழிவகுக்கும்.