வாக்குறுதி மீறுதல்

தமிழர் சமயம்

சூது உவவான், பேரான், சுலா உரையான், யார்திறத்தும்
வாது உவவான், மாதரார் சொல் தேறான், - காது தாழ்
வான் மகர வார் குழையாய்! - மா தவர்க்கு ஊண் ஈந்தான்-
தான் மகர வாய் மாடத்தான். ஏலாதி 43

சூதினைக் காதலியாது, ஒன்றினான் மறைந்து வஞ்சியாது, பயனில்லாவற்றைப் பரக்கவுரையாது, ஒருவரிடம் மாறுபட்டு உரைத்தலைக் விரும்பாது, மாதரார் சொல்லு மின் சொல்லைத் தேறாது, காது தாழச்செய்யா நின்ற வாபரணங்களார் குழையாய்! மாதவர்க் கூணீந்தவன்றான் மகரத் தொழிலையுடைய வாயின் மாடத்து வாழ்வான்.

இஸ்லாம் 

நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்றாகும். அவன் பேசும்போது பொய்பேசுவான்; வாக்களித்தால் அதற்கு மாறுசெய்வான்; அவனிடம் நம்பி (ஏதேனுமொன்றை) ஒப்படைத்தால் (அதில்) மோசடி செய்வான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் :புகாரி (33))

(ரோம மன்னர்) ஹெர்குலஸ் என்னைப் பார்த்து, “உம்மிடம்,  “அவர் (முஹம்மது நபி) எதையெல்லாம் கட்டளையிடுகின்றார்?’ என்று நான் கேட்டேன். அதற்கு நீர், “அவர் தொழுகை தொழும்படியும், வாய்மையையும், நல்லொழுக்கத்தையும் கைக்கொள்ளும் படியும், ஒப்பந்தத்தையும், வாக்குறுதியையும் நிறைவேற்றும்படியும், நம்பி ஒப்படைக்கப்பட்ட அடைக்கலப் பொருளைச் சரிவரப் பாதுகாத்துத் திரும்பத் தரும்படியும் கட்டளையிடுகிறார்’ என்று சொன்னீர். இதுதான் ஓர் இறைத்தூதரின் பண்பாகும்’’ என்று கூறினார். (ஆதாரம்: புகாரி-2681) 

யூதம் 

ஒருவன் கர்த்தருக்குச் சபதம் செய்தாலோ, அல்லது உறுதிமொழியால் தன்னைக் கட்டிக்கொள்வதாகச் சத்தியம் செய்தாலோ, அவன் தன் வார்த்தையை மீறமாட்டான். அவன் வாயிலிருந்து வருகிறபடியெல்லாம் செய்வான். (எண்கள் 30:2

மேலும் எண்ணாகமம் 30 முழுவதும் வாக்குறுதி பற்றியே அமைந்துள்ளது  

கிறிஸ்தவம்  

வாக்குறுதிகளைப்பற்றிய போதனை

33 ,“‘நீ ஒரு சத்தியம் செய்தால், அதை மீறக் கூடாது என்றும், கர்த்தருக்குச் செய்வதாகச் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றுவாயாக’ [e] என்றும், வெகு காலத்திற்கு முன்னரே நமது மக்களுக்குச் சொல்லப்பட்டிருப்பதை அறிவீர்கள். 34 ஆனால் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஒருபோதும் சத்தியம் செய்யாதீர்கள். பரலோக இராஜ்யத்தின் பெயரால் சத்தியம் செய்யாதீர்கள். ஏனென்றால், பரலோக இராஜ்யம் தேவனின் அரியாசனம். 35 பூமியின் பெயராலும் சத்தியம் செய்யாதீர்கள். ஏனென்றால், பூமி தேவனுக்குச் சொந்தமானது. எருசலேம் நகரத்தின் பெயராலும் சத்தியம் செய்யாதீர்கள். ஏனென்றால், எருசலேம் மகா இராஜாவின் நகரம். 36 உங்கள் தலை மீதும் சத்தியம் செய்யாதீர்கள். உங்கள் தலையின் ஒரு முடியைக் கூட உங்களால் வெள்ளையாக்கவோ கறுப்பாக்கவோ இயலாது. 37 ‘ஆம்’ அல்லது ‘இல்லை’ என்று மட்டுமே கூறுங்கள். ‘ஆம்’ அல்லது ‘இல்லை’ என்பதற்கு மேலாக ஏதும் நீங்கள் கூறினால் அது பொல்லாங்கனாகிய பிசாசின் வார்த்தைகளாயிருக்கும்.” (மத்தேயு 5:33-37)

4 கருத்துகள்:

  1. ரோமர் 13:8
    8 ஒருவரிலொருவர் அன்புகூருகிற கடனைத் தவிர வேறெந்தக் கடனும் நிலுவையில் இருக்கக்கூடாது; ஏனென்றால், பிறரை நேசிக்கிறவன் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றினான்.

    பதிலளிநீக்கு
  2. விசுவாசிகளே! நீங்கள் (உங்கள்) உடன்படிக்கைகளைப் பூரணமாக நிறைவேற்றுங்கள் (5:1)

    நயவஞ்சகனின் அடையாளம் மூன்று: அவன் தொழுதாலும், நோன்பு பிடித்தாலும் தான், ஒரு முஸ்லிம் என எண்ணிக் கொண்டாலும் சரியே (நயவஞ்சகனேயாவான்)
    1. பேசினால் பொய்யுரைப்பான்
    2. வாக்களித்தால் மாறு செய்வான்
    3. நம்பினால் மோசடி செய்வான் என நபி அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

    பதிலளிநீக்கு
  3. “விசுவாசிகளே! நீங்கள் (உங்கள்) உடன்படிக்கைகளைப் பூரணமாக நிறைவேற்றுங்கள்.” (அல்குர்அன் 5:1)

    “நீங்கள் அல்லாஹ்வின் பெயரால் செய்யும் உடன்படிக்கையைப் பரிபூரணமாக நிறைவேற்றுங்கள்.” (அல்குர்அன் 16:91)

    “இறை நம்பிக்கையாளர்களில் சிலர் உள்ளனர். அவர்கள் இறைவனிடம் தாம் அளித்த வாக்குறுதியில் உண்மையாக நடந்து கொண்டார்கள்.” (அல்குர்ஆன் 33:23)

    “இன்னும், அவர்கள் தங்கள் (வசம் நம்பி ஒப்படைக்கப்பட்ட) அமானிதங்களையும், வாக்குறுதிகளையும் காப்பாற்றுவார்கள்”. (அல்குர்ஆன் 23:8)

    “இத்தகையோரே பிர்தவ்ஸ் எனும் சொர்க்கத்திற்கு உரிமையாளர்கள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்”. (அல்குர்ஆன் 23:10,11)

    “உங்கள் வாக்குறுதியை நீங்கள் பரிபூரணமாக நிறைவேற்றுங்கள். ஏனென்றால், (மறுமையில்) வாக்குறுதியைப் பற்றி (உங்களிடம்) நிச்சயமாகக் கேட்கப்படும்.” (அல்குர்அன் 17:34)

    “விசுவாசிகளே! நீங்கள் செய்யாத காரியங்களை(ச் செய்வேன் என்று அல்லது செய்ததாக) ஏன் கூறுகிறீர்கள்? நீங்கள் செய்யாத காரியங்களைச் (செய்வேன் என்று அல்லது) செய்ததாகக் கூறுவது அல்லாஹ்விடத்தில் மிகப்பெரும் பாவமாக இருக்கின்றது.” ( அல்குர்அன் 61:2,3)

    https://www.vidivelli.lk/article/1626

    பதிலளிநீக்கு