தூய்மை

தமிழர் சமயம் 

தூய்மை உடைமை துணிவு ஆம்; தொழில் அகற்று
வாய்மை உடைமை வனப்பு ஆகும்; தீமை
மனத்தினும் வாயினும் சொல்லாமை; - மூன்றும்
தவத்தின் தருக்கினார் கோள். (திரிகடுகம் 78)

பொருள்: தூய்மையுடையவராய் இருத்தலும், உண்மையுடையவராயிருத்தலும், தீமையைத் தருவதனை நினையாமலும், சொல்லாமலும் இருத்தலும், தவத்தார் மேற்கொண்ட கொள்கைகளாகும்.

புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும் (அதிகாரம்:வாய்மை குறள் எண்:298)

பொழிப்பு (மு வரதராசன்): புறத்தே தூய்மையாக விளங்குதல் நீரினால் ஏற்படும்; அதுபோல அகத்தே தூய்மையாக விளங்குதல் வாய்மையால் உண்டாகும்.இஸ்லாம் 

இஸ்லாம் 

தூய்மை இறைநம்பிக்கையில் பாதியாகும். அல்ஹம்து லில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!) என்(று இறைவனைத் துதிப்)பது, (நன்மை மற்றும் தீமைகளை நிறுக்கக்கூடிய) தராசை நிரப்பக்கூடியதாகும்…. நூல்: புகாரி-381

அங்கத் தூய்மை (உளூ) செய்யாமல் எந்தத் தொழுகையும் ஏற்கப்படாது; மோசடி செய்த பொருளால் செய்யப்படும் எந்த தானதர்மமும் ஏற்கப்படாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  நூல் : புகாரி-382 கிறிஸ்தவம் 

கிறிஸ்தவம் 

சுத்தமுள்ளவர்களுக்குச் சகலமும் சுத்தமாயிருக்கும்; அசுத்தமுள்ளவர்களுக்கும் அவிசுவாசமுள்ளவர்களுக்கும் ஒன்றும் சுத்தமாயிராது; அவர்களுடைய புத்தியும் மனச்சாட்சியும் அசுத்தமாயிருக்கும். -தீத்து 1:15

4 கருத்துகள்:

  1. இறை நம்பிக்கையாளர்களே நீங்கள் தொழுகைக்கு தயாரானால் உங்கள் முகங்களையும் கைகளை மூழங்கை வரைக்கும் கழுவிக் கொள்ளுங்கள். உங்களுடைய தலைகளை நீரால் தடவுங்கள். உங்கள் கால்களை கரண்டை வரை கழுவிக் கொள்ளுங்கள். (அல் குர்ஆன் 5:6)

    உங்களில் ஒருவர் தூங்கி விழித்தெழுந்தால் மூன்று முறை தன் கையை கழுவுகின்ற வரை பாத்திரத்தில் கையை நுழைக்க வேண்டாம். [முஸ்லி­ம் 468]

    உங்களில் ஒருவர் தூங்கி எழுந்தால் அவருடைய மூக்கி மூன்று முறை தண்ணீரை செலுத்தி அதை சிந்தட்டும். ஏனென்றால் ஷைத்தான் அவருடைய மூக்குத் துவாரத்தில் இருக்கிறான்.முஸ்லி­ம் 403

    A. வழி-பாதையில், B. மரத்தடியில் அசுத்தம் செய்வது சாபத்துக்குறிய செயல் . (ஸஹீஹ் முஸ்லிம் (397

    எனது உம்மத்துக்கு சிரமம் ஏற்படும் என்ற அச்சம் மட்டும் எனக்கு இல்லையென்றால், ஒவ்வொரு நேரத் தொழுகைக்கும் பல் துலக்க (மிஸ்வாக் செய்ய) அவர்களுக்கு உத்தரவிட்டிருப்பேன்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள். (முஸ்லிம்)

    நான்கு காரியங்கள் நபிமார்களின் வழிமுறையைச் சார்ந்தது வெட்கம், நறுமணம் பூசுவது, மிஸ்வாக் செய்வது. திருமணம் செய்வது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஅய்யூப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் (திர்மிதீ)

    ஹஜ்ரத் ஷுரைஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள், நான் உம்முல் முஃமினீன் ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்களிடம், நபி (ஸல்) அவர்கள் வீட்டிற்கு வந்ததும் முதன் முதலில் என்ன செய்வார்கள்?” என்று கேட்டேன், முதன் முதலில் மிஸ்வாக் செய்வார்கள்” என்று பதிலளித்தார்கள். (முஸ்லிம்)

    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘(வானவர் ஜிப்ரீல் அவர்கள் முதன் முதலாக ஹிரா குகையில் எனக்கு வஹீ (இறைச்செய்தி) கொண்டு வந்தார்.).. பிறகு சிறிது காலத்திற்கு (மூன்றாண்டுகளுக்கு) எனக்கு வஹீ (இறைச்செய்தி) வருவது நின்று போய்விட்டது. (அந்தக் கால கட்டத்தில் ஒரு முறை) நான் (பாதையில்) நடந்து சென்று கொண்டிருந்தபோது வானத்திலிருந்து ஒரு சப்தத்தைக் கேட்டேன். உடனே, என் பார்வையை வானத்தை நோக்கி உயர்த்தினேன். அங்கே ‘ஹிரா’ குகையில் என்னிடம் வந்த அதே வானவர் வானத்திற்கும் பூமிக்குமிடையே (இருந்த பிரமாண்டமான) ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டிருந்தார். அவரைக் கண்டு நான் பீதிக்குள்ளாகி விட்டேன். அதன் விளைவாக (மூர்ச்சையுற்றுத்) தரையில் விழுந்து விட்டேன். பிறகு, (மயக்கம் தெளிந்தவுடன்) என் வீட்டாரிடம் சென்று, ‘எனக்குப் போர்த்துங்கள். எனக்குப் போர்த்துங்கள்’ என்று (நடுக்கத்துடன்) கூறினேன். அவ்வாறே போர்வை போர்த்தப்பட்டது. அப்போது அல்லாஹு தஆலா,

    ‘(போர்வை) போர்த்திக் கொண்டிருப்பவரே! எழுந்திருங்கள். பிறகு (அல்லாஹ்வின் தண்டனை குறித்து, மக்களை) அச்சுறுத்தி எச்சரியுங்கள். மேலும், உங்களுடைய இறைவனின் பெருமையை எடுத்துரையுங்கள். மேலும், உங்கள் ஆடைகளைத் தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள். மேலும், அசுத்தத்தை வெறுத்து விடுங்கள்’ என்னும் (திருக்குர்ஆன் 74: 1-5)
    வசனங்களை அருளினான். புஹாரி 3238

    https://vellimedaikal.wordpress.com/2016/11/22/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A/

    பதிலளிநீக்கு
  2. அவர்களிடம் செல்லுங்கள்! திருந்திக் கொள்வோரை அல்லாஹ் விரும்புகிறான். தூய்மையாக இருப்போரையும் விரும்புகிறான்'' எனக் கூறுவீராக!}
    .[ஸூரதுல் பகரா 222],

    பதிலளிநீக்கு
  3. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு “முஸ்லிமான’ அல்லது “முஃமினான’ (இறைநம்பிக்கை கொண்ட) அடியார் உளூ செய்யும்போது முகத்தைக் கழுவினால், கண்களால் பார்த்துச் செய்த பாவங்கள் அனைத்தும் (முகத்தைக் கழுவிய) “நீருடன்’ அல்லது “நீரின் கடைசித் துளியுடன்’ முகத்திலிருந்து வெளியேறுகின்றன. அவர் கைகளைக் கழுவும்போது கைகளால் பற்றிச் செய்திருந்த பாவங்கள் அனைத்தும் (கைகளைக் கழுவிய) “தண்ணீருடன்’ அல்லது “தண்ணீரின் கடைசித் துளியுடன்” வெளியேறுகின்றன. அவர் கால்களைக் கழுவும்போது, கால்களால் நடந்து செய்த பாவங்கள் அனைத்தும் (கால்களைக் கழுவிய) “நீரோடு” அல்லது “நீரின் கடைசித் துளியோடு” வெளியேறுகின்றன. இறுதியில், அவர் பாவங்களிலிருந்து தூய்மை அடைந்தவராக (அந்த இடத்திலிருந்து) செல்கிறார்.
    அறி: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்-412

    (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(உங்கள்) தவறுகளை அல்லாஹ் மன்னித்து, தகுதிகளை உயர்த்தும் செயல்கள் சிலவற்றை உங்களுக்கு நான் சொல்லட்டுமா?” என்று கேட்டார்கள். மக்கள், “ஆம்; (சொல்லுங்கள்) அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(அவை) சிரமமான சூழ்நிலைகளிலும் அங்கத் தூய்மையை முழுமையாகச் செய்வதும், பள்ளிவாசல்களை நோக்கி அதிகமான காலடிகளை எடுத்துவைத்துச் செல்வதும், ஒரு தொழுகைக்குப் பின் அடுத்த தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருப்பதும் ஆகும். இவைதாம் கட்டுப்பாடுகளாகும்” என்று கூறினார்கள்.
    அறி:அபூஹுரைரா(ரலி), முஸ்லிம்-421

    அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் முறையாக உளூ செய்யும்போது (அவர் செய்திருந்த) அவருடைய (சிறு) பாவங்கள் அவரது உடலிருந்து வெளியேறிவிடுகின்றன. முடிவில், அவருடைய நகக்கண்களுக்குக் கீழேயிருந்தும் (அவருடைய பாவங்கள்) வெளியேறிவிடுகின்றன.
    அறி : உஸ்மான் பின் அஃப்பான் (ரலி), நூல்: முஸ்லிம்-413

    அபூஹுரைரா (ரலி) அவர்கள் உளூ செய்வதை நான் பார்த்தேன். அப்போது அவர்கள் தமது முகத்தையும் கைகளையும் கழுவிக் கொண்டே தோள்பட்டை வரை சென்றார்கள். பிறகு கால்களைக் கழுவிக்கொண்டே கணுக்கால் வரை சென்றார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மறுமை நாளில் என் சமுதாயத்தார் உளூ செய்ததன் அடையாளமாக உறுப்புகள் பிரகாசிப்பவர்களாய் வருவார்கள். ஆகவே, உங்களில் எவருக்கு (உளூவில் தம் பிரதான உறுப்புக்களை நீட்டிக் கழுவி) தமது ஒளியை நீட்டிக்கொள்ள முடியுமோ அவர் அதைச் செய்து கொள்ளட்டும்” என்று கூறியதை நான் கேட்டுள்ளேன் என்றார்கள்.
    அறி: நுஐம் பின் அப்தில்லாஹ், நூல்: முஸ்லிம்-415

    https://www.bayanapp.indiabeeps.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88/

    பதிலளிநீக்கு
  4. உண் பொழுது நீராடி உண்டலும், என் பெறினும்
    பால் பற்றிச் சொல்லா விடுதலும் தோல் வற்றிச்
    சாயினும் சான்றாண்மை குன்றாமை, - இம் மூன்றும்
    தூஉயம் என்பார் தொழில். . . . .[27]

    உண்பொழுது நீராடி உண்டலும் என்பெறினும்
    பால்பற்றிச் சொல்லா விடுதலும் - தோல்வற்றிச்
    சாயினுஞ் சான்றாண்மை குன்றாமை இம்மூன்றும்
    தூஉய மென்பார் தொழில். . . . .[27]

    விளக்கம்:
    குளித்தபின் உண்ணுவதும், பொய் சொல்லாமல் இருத்தலும், தோல் வற்றிச் சுருங்கினாலும் நற்குணங்களில் இருந்து குறையாமையும், ஆகிய இம்மூன்றும் நல்லவர் செயல்களாகும்.

    பதிலளிநீக்கு