கூலி

கிறிஸ்தவம் 

 “உங்கள் அண்டை வீட்டுக்காரனுக்குத் தீமை செய்யாதீர்கள். அவனிடம் திருடாதீர்கள். வேலைக்காரனின் கூலியை விடியும்வரை இரவு முழுக்க நிறுத்தி வைக்காதீர்கள்." - (லேவியராகமம் 19:13)

இஸ்லாம் 

உழைப்பவர்களின் கூலியை அவர்களது வியர்வை உலரும் முன்பே கொடுத்து விடுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) நூல்: இப்னுமாஜா 2443)

4 கருத்துகள்:

  1. ”மூவருக்கெதிராக கியாமத் நாளில் நான் வழக்குரைப்பேன்! என் பெயரால் சத்தியம் செய்து மோசடி செய்தவன் சுதந்திரமானவனை (அடிமையாக) விற்று அந்தக் கிரயத்தைச் சாப்பிட்டவன் கூலிக்கு ஒருவரை அமர்த்தி, அவரிடம் வேலை வாங்கிக் கொண்டு கூலி கொடுக்காமல் இருந்தவன் (ஆகிய இவர்கள்தான் அந்த மூவர்)!’ என்று அல்லாஹ் கூறினான். என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
    புகாரி: 2270.

    பதிலளிநீக்கு
  2. ஒருவரின் சகோதரர் அவரின் அதிகாரத்தின் கீழ் இருந்தால் அவர், தாம் உண்பதிலிருந்து அவருக்கும் புசிக்கக் கொடுக்கட்டும். தாம் உடுத்துவதிலிருந்து அவருக்கும் உடுத்தக் கொடுக்கட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய பணிகளைக் கொடுத்து அவர்களைச் சிரமப்படுத்த வேண்டாம். அவ்வாறு அவர்களை நீங்கள் சிரமமான பணியில் ஈடுபடுத்தினால் நீங்கள் அவர்களுக்கு உதவியாயிருங்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (இதனால்தான் நான் அணிவது போல் என் அடிமைக்கும் உடை அளித்தேன்” என அபூதர் கூறினார்” என மஃரூர் கூறினார்.
    புகாரி: 30.

    பதிலளிநீக்கு
  3. உங்களில் ஒருவரிடம் அவரின் பணியாள் அவரின் உணவைக்கொண்டு வந்தால், அவர் அப்பணியாளைத் தம்முடன் (அமர வைத்துக் கொள்ளட்டும். அவ்வாறு) அமர வைத்துக் கொள்ளவில்லையென்றாலும் அவருக்கு ‘ஒரு பிடி அல்லது இருபிடிகள்’ அல்லது ‘ஒரு கவளம் அல்லது இரண்டு கவளங்கள்’ உணவு கொடுக்கட்டும். ஏனெனில், அவர் (அதை சமைத்தபோது) அதன் வெப்பத்தையும் அதன் சிரமத்தையும் சகித்துக் கொண்டார். ‘ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்”என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
    புகாரி: 5460.

    பதிலளிநீக்கு
  4. உபாகமம் 24:14-21
    “உன் நாட்டவரில் ஒருவனாக இருந்தாலும் சரி, உன் ஊரில் இருக்கிற உன் ஊரில் இருக்கிற உன் அந்நியரில் ஒருவனாக இருந்தாலும் சரி, ஏழையும் ஏழையுமான கூலி வேலைக்காரனை நீ ஒடுக்காதே. சூரியன் மறையும் முன்னே அவனுடைய கூலியை அவனுக்குக் கொடுப்பாய்; அவன் ஏழையாய் இருக்கிறான்; அதனால் அவன் உனக்கு விரோதமாக கர்த்தரை நோக்கிக் கூப்பிடமாட்டான் , அது உனக்குள் பாவமாகிவிடும். “தந்தையர் தங்கள் மகன்களுக்காகக் கொல்லப்பட மாட்டார்கள், மகன்கள் தங்கள் தந்தைகளுக்காகக் கொல்லப்பட மாட்டார்கள்; அவனவன் தன் பாவத்தினிமித்தம் கொல்லப்படுவான்.

    Source: https://bible.knowing-jesus.com/topics/Strangers

    பதிலளிநீக்கு