தூக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தூக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அதிக தூக்கம்

தமிழர் சமயம்

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன் (அதிகாரம்:மடிஇன்மை குறள் எண்:605)

பொழிப்பு (மு வரதராசன்): காலம் நீட்டித்தல், மறதி, சோம்பல், அளவு மீறிய தூக்கம் ஆகிய இந் நான்கும் கெடுகின்ற இயல்புடையவர் விரும்பி ஏறும் மரக்கலமாம். 
 

வாழ்நாளில் பாகம் துயில் நீக்கி மற்றவற்றுள்

வீழ்நாள் இடர்மூப்பு மெய்கொள்ளும் - வாழ்நாளுள்

பல்நோய் கவற்றப் பரிந்து குறைஎன்னை

அன்னோ அளித்துஇவ் வுலகு. - (அறநெறிசாரம் பாடல் - 127)

விளக்கவுரை ஆயுள் காலத்தில் பாதியைத் தூக்கத்தில் கழித்து, மறு பாதியில் தளரும் காலத்தில் துன்பத்துக்குக் காரணமான முதுமையை உடம்பு அடையும். உறக்கமும் முதுமையும் போக எஞ்சிய வாழ்நாளில், பல துன்பங்கள் வருத்த, வணங்கிவழிபடாது வாழ்நாள் வீணாயிற்றே என்று வருத்தப்படுவதனால் என்ன பயன்?  

கிறிஸ்தவம் : சோம்பேறியாக இருப்பதில் உள்ள ஆபத்து

சோம்பேறியே! எவ்வளவு நாட்கள் அங்கேயே படுத்துக்கொண்டு கிடப்பாய். உனது ஓய்வை முடித்துக்கொண்டு நீ எப்போது எழப்போகிறாய்? 1அந்தச் சோம்பேறி, “எனக்கு சிறிது தூக்கம் வேண்டும். நான் இங்கே சிறிதுநேரம் படுத்து ஓய்வு எடுப்பேன்” என்பான். ஆனால் அவன் மீண்டும் மீண்டும் தூங்கிக்கொண்டிருக்கிறான்வன் மேலும் மேலும் வறுமைக்குள்ளாவான். விரைவில் அவனிடம் ஒன்றுமேயில்லாமற்போகும். ஒரு திருடன் வந்து அனைத்தையும் அபகரித்துக் கொண்டு போனது போல இருக்கும். (நீதிமொழிகள் 6 : 6-11)

இஸ்லாம் 

அல்-ஃபுதைல் இப்னு இயாத் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 
இதயத்தை கடினமாக்கும் இரண்டு குணங்கள் உள்ளன: அதிகமாக தூங்குவது மற்றும் அதிகமாக சாப்பிடுவது. 
 
இப்னுல்-கயீம் (அல்லாஹ் அவர் மீது கருணை காட்டட்டும்) கூறினார்:  
மக்களுடன் அதிக நேரத்தை செலவிடுவது, அதிக ஆசை, அதிகமாக அல்லாஹ்வைத் தவிர வேறு எதனுடனும் இணைந்திருத்தல், அதிகமாகி சாப்பிடுதல், அதிகமாக தூங்குதல். இந்த ஐந்தும் இதயத்தைக் கெடுக்க கூடியவைகள். (மதாரிஜ் அல்-சாலிக்கீன்)

தூக்கமும் இறப்பும்

தமிழர் சமயம் 


உறங்கு வதுபோலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு (அதிகாரம்: நிலையாமை குறள் எண்:339)

பரிமேலழகர் உரை: சாக்காடு உறங்குவது போலும் - ஒருவனுக்குச் சாக்காடு வருதல் உறக்கம் வருதலோடு ஒக்கும், பிறப்பு உறங்கி விழிப்பது போலும் - அதன்பின் பிறப்பு வருதல் உறங்கி விழித்தல் வருதலோடு ஒக்கும்(உறங்குதலும் விழித்தலும் உயிர்கட்கு இயல்பாய்க் கடிதின் மாறிமாறி வருகின்றாற் போலச் சாக்காடும் பிறப்பும் இயல்பாய்க் கடிதின் மாறிமாறி வரும் என்பது கருத்து. நிலையாமையே நிலைபெற்றவாறு அறிவித்தற்குப் பிறப்பும் உடன் கூறப்பட்டது.)

இஸ்லாம் 


அல்லாஹ் உயிர்களை அவை மரணிக்கும்போதும், மரணிக்காதவற்றை அவற்றின் தூக்கத்திலும் கைப்பற்றி, பின்பு எதன் மீது மரணத்தை விதித்து விட்டானோ அதை {தன்னிடத்தில் } நிறுத்திக்  கொள்கிறான். மீதிள்ளவற்றை ஒரு குறிப்பிட்ட தவணை வரை {வாழ}அனுப்பி விடுகிறான். - (திருக்குர்ஆன் 39:42)

 

கிறிஸ்தவம்  


இவைகளைச் சொன்னபின், அவர் அவர்களிடம், "நம்முடைய நண்பன் லாசரு தூங்கிவிட்டான், ஆனால் நான் அவனை எழுப்பப் போகிறேன்" என்றார். சீடர்கள் அவரிடம், "ஆண்டவரே, அவர் தூங்கிவிட்டால், அவர் குணமடைவார்" என்றார்கள். இப்போது இயேசு அவருடைய மரணத்தைப் பற்றிப் பேசினார், ஆனால் அவர் தூக்கத்தில் ஓய்வெடுக்கிறார் என்று அவர்கள் நினைத்தார்கள். அப்போது இயேசு அவர்களிடம் தெளிவாக, “லாசரு இறந்துவிட்டார். (ஜான் 11:11-14 )