இந்து சாமானியன்: ஐயா சித்தரே, சாமி, சிலை, வழிபாட்டு தளங்கள் பெயரால் சண்டை சச்சரவு நாளுக்கு நாள் அதிகமாக பெருகி கொண்டே போகிறதே.. பூ போன்ற காணிக்கைகளை செய்து மந்திரங்கள் சொல்லி தெய்வத்தை குளிர செய்தால் நிலைமை சீரடையுமா?
சிவவாக்கியர்:
நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியேசுற்றி வந்து முணுமுணுத்துச் சொல்லும் மந்திரம் ஏதடாநட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ - 494
இந்து சாமானியன்: ஐயா, லிங்கம், சிவன் சிலை போன்றவைகள் ஈசன் இல்லையா? வெறும் கல்லா? அப்போ ஈசன் யாருங்க? எத்தன இறைவன் தான் இருக்குங்க ஐயா?
சிவவாக்கியர்:
எங்கள்தெய்வம் உங்கள்தெய்வம் என்றிரண்டு பேதமோ?உங்கள்பேதம் அன்றியே உண்மை இரண்டு இல்லையே? - 22உம்பர்(சொர்க்கம்) வானகத்தினும் உலகபாரம் ஏழினும்நம்பர்நாடு தன்னிலும் நாவலென்ற தீவினும்செம்பொன் மாடம் மல்குதில்லை அம்பலத்துள் ஆடுவான்எம்பிரான் அலாதுதெய்வம் இல்லைஇல்லை இல்லையே. - 308
இந்து சாமானியன்: ஐயா சித்தரே தெய்வம் ஒன்றுதான், அவன் ஏழாம் சொர்க்கத்தில் உள்ளான் என்கிற உண்மை ஆச்சரியமாக உள்ளது. எனவே இங்கு உள்ள சிலைகள், மிருகங்கள், படங்கள் எல்லாம் வழிபட தகுதி அற்றவைகள் என தங்கள் வாயிலாக அறிகிறேன்..
சாதி சண்டை தீர வழி சொல்லுங்க..!
சிவவாக்கியர்:
பறைச்சியாவது ஏதடா? பணத்தியாவது ஏதடா?இறைச்சிதோல் எலும்பினும் இலக்கமிட்டு இருக்குதோ?பறைச்சிபோகம் வேறதோ பணத்திபோகம் வேறதோ?பறைச்சியும் பணத்தியும் பகுத்துபாரும் உம்முளே. - 39சாதியாவது ஏதடா? சலம் திரண்ட நீரெலாம்பூத வாசல் ஒன்றலோ, பூத ஐந்தும் ஒன்றலோ?காதில் வாளி , காரை, கம்பி, பாடகம் பொன் ஒன்றலோ?சாதி பேதம் ஓதுகின்ற தன்மை என்ன தன்மையோ? - 46சித்தம்ஏது, சிந்தைஏது சீவன்ஏது! சித்தரேசத்திஏது? சம்புஏது சாதிபேத அற்றதுமுத்திஏது? மூலம்ஏது மூலமந் திரங்கள்ஏது?வித்தில்லாத வித்திலே இதினெனதென்று இயம்புமே. - 44சித்தமற்றுச் சிந்தையற்றுச் சீவனற்று நின்றிடம்சத்தியற்றுச் சம்புவற்றுச் சாதிபேத மற்றுநல்மூத்தியற்று மூலமற்று மூலமந்தி ரங்களும்வித்தைஇத்தை ஈன்றவித்தில் விலைந்ததே சிவாயமே. - 45
இந்து சாமானியன்: சாதியே இல்லையா? அப்போ தாழ்ந்த சாதியில் பிறந்வர்கள் மீண்டும் பிறப்பெடுத்து பிராமணர்களானால் தான் பிறப்பு முடியும் என்கிறார்களே..!
சிவவாக்கியர்:
சிவவாக்கியர்:
கறந்த பால் முலைப் புகா, கடைந்த வெண்ணெய் மோர் புகாஉடைந்து போன சங்கின் ஓசை உயிர்களும் உடல் புகா;விரிந்த பூ உதிர்ந்த காயும் மீண்டும் போய் மரம் புகா;இறந்தவர் பிறப்பதில்லை இல்லை இல்லை இல்லையே - 47
இந்து சாமானியன்: செத்தவன் பிறப்பதே இல்லையா? அப்போ முன்பிறவி, அடுத்தபிறவி, ஏழுபிறவி--னுல்லாம் சொல்லி குறி, சோதிடம் சொல்லுவதெல்லாம் பொய்யா? பேய் பிசாசு பற்றி ?
சிவவாக்கியர்:
பேய்கள்பேய்கள் என்கிறீர் பிதற்குகின்ற பேயர்காள்,பேய்கள்பூசை கொள்ளுமோ பிடாரிபூசை கொள்ளுமோஆதிபூசை கொள்ளுமோ அனாதி பூசை கொள்ளுமோகாயமான பேயலோ கணக்கறிந்து கொண்டதே. - 252
இந்து சாமானியன்: ஐயா சித்தரே உங்கள் கொள்கை விளக்கப்படி ஒருவன் இந்துவாக இருத்தல் இயலாது. உங்கள் கொள்கைகளை ஆப்படியே அச்சு பிசகாமல் சொல்வதோடு அதை அப்படியே பின்பற்றச் செய்யும் இஸ்லாம் தான் ஒரே வழி..!
குறிப்பு : மற்ற வேதங்களை போலவே சிவவாகியர் பாடல்களிலும் இதற்கு முரணான கருத்துக்கள் திணிக்க பட்டும் இருக்கிறது.. ஒரே நபர் இருவேறு முரண்பட்ட கருத்துகளை ஒரே நூலில் சொல்ல இயலாது என்பது எதார்த்தம். எனவே கருத்து முரண் இல்லாத வேதமான திருக்குர்ஆனே பின்பற்ற தகுதியானது. சகோதரர்கள் இறைவனை மத ரீதியாக அணுகுவதை விடுத்தது கொள்கை ரீதியாக அதாவது இறைவனுக்கான வரையறை மற்றும் இலக்கண அடிப்படையிலும் வேதாந்த அடிப்படையில் அணுகுவதே உண்மை அறிய உதவும்.