இஸ்லாமிய நாடுகளில் முஸ்லிம்களுக்கு ஜக்காத் எனும் கட்டாய வரி உண்டு. மேலும் ஈத் உல் பித்ர், பல்வேறு சமயங்களில் குருபானி, வார வாரம் வெள்ளி கிழமை அன்று ஸதக்கா உள்ளிட்ட பல்வேறு மறைமுக வரி முறைகள் மற்றும் தான முறைகள் உண்டு.
அதே போல இஸ்லாம் அலலதவர்கள் செலுத்தும் வரிக்கு பெயர் ஜிஸியா, அவர்களுக்கு வேறு எந்த வரியும் இல்லை. ஒரு அரசு தனது மக்களை பாதுகாக்க அவர்களிடம் இருந்து பெறப்பட்ட வரி அவ்வளவுதான். இன்று வருமானவரி, சொத்து வரி, GST என்று மத சார்பற்ற நாட்டில் எல்லோருக்கும் இருப்பது போல.
சொல்லப்போனால் ஜிசியாதான் குறைவான பணம். முஸ்லிம்கள்தான் அதிக வரி செலுத்துவோராக இருப்பர்.
யூத கிறிஸ்தவர்களில் அவர்களுடைய மத அறங்களை பின்பற்றாதவர்களுக்கு இஸ்லாம் வரி விதித்தது. ஏனென்றால் இறைவனால் வழங்கப்பட்ட வேதங்கள் எல்லாம் ஒரே அறத்தைதான் போதிக்கிறது.
மேலும் இந்த ஜிஸியா வரி இந்துக்கள் செலுத்த வேண்டிய 16.6% விட குறைவு. மேலும் யூதர்களும் கிறிஸ்தவர்களும் அவர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய அதே 10% ஆகும். எனவே ஜிஸியா அடக்குமுறை வரி என்பது பிழை.